Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்­பி­ரச்­சினை தீர்வு விட­யத்தில் இந்­தி­யாவின் வகி­பாகம்

Featured Replies

இனப்­பி­ரச்­சினை தீர்வு விட­யத்தில் இந்­தி­யாவின் வகி­பாகம்

 

இலங்­கையின் தமிழ் பேசும் மக்­களின் அர­சியல் அபி­லா­ஷை­களை பூர்த்தி செய்யும் நோக்­கி­லான அர­சியல் தீர்­வுத்­திட்டம் ஒன்று இது­வரை முன்­வைக்­கப்­ப­டாத சூழலில் இந்தப் பிரச்­சி­னைக்கு ஒரு விடிவைக் காண்­ப­தற்­கான முயற்­சிகள் ஸ்தம்­பி­த­ம­டைந்த நிலைமையே நீடிக்­கின்­றது. தமிழ் பேசும் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வை பெற்­றுக்­கொள்ளும் விட­யத்தில் மக்கள் தொடர்ந்து ஏமாற்­றத்­தையே எதிர்­கொண்டு வந்­துள்­ளனர். இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு முயற்­சிகள் கைகூடி வரு­வ­து­போன்று வர­லாற்றில் பல சந்­தர்ப்­பங்­களில் தென்­பட்­டாலும் இறு­தியில் அந்த முயற்­சிகள் கைகூ­டாத நிலைமை ஏற்­பட்டு விடு­கின்­றது.

இந்­த ­நாட்டில் தமிழ் பேசும் மக்கள் சுதந்­திரம் கிடைத்­த­தி­லி­ருந்தே தமக்­கான அர­சியல் அதி­கா­ரத்தை கோரி வரு­கின்­றனர். ஆனால் அதனை சரி­யான முறையில் ஆராய்ந்து அதற்கு ஒரு தீர்­வுத்­திட்­டத்தை முன்­வைப்­ப­தற்கு தென்­னி­லங்­கையின் அர­சியல் தலை­மைகள் தயா­ராக இல்லை என்­ப­தையே வெளிக்­காட்டி வந்­துள்­ளன.

தீர்­வு காணப்­ப­ட­வேண்­டி­யது அவ­சியம் என்­பதை உணர்ந்­தி­ருப்­ப­தாக தென்­னி­லங்கை பிர­தான அர­சியல் கட்­சிகள் தெரி­வித்து வரு­கின்ற போதிலும் அதற்­கான செயல் வடி­வத்தை கொடுப்­ப­தற்கு தயக்கம் காட்­டியே வரு­கின்­றன. அதா­வது இனங்­க­ளுக்­கி­டையே நிரந்­தர சமா­தா­னத்தை ஏற்­ப­டுத்தி இந்த நாட்டை விரை­வாக முன்­னேற்­றப்­பா­தைக்கு கொண்­டு­செல்ல வேண்­டு­மானால் புரை­யோ­டிப்­போ­யி­ருக்­கின்ற இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வைக் காண்­பது அவ­சியம் என்­பது தொடர்ச்­சி­யாக சுட்­டிக்­காட்­டப்­பட்டு வரு­கின்­றது.

தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு ஒரு தீர்வைக் காண்­பதன் மூலமே நாட்டை சுபீட்­ச­மான எதிர்­கா­லத்தை நோக்கி கொண்­டு­செல்ல முடியும் என தொடர்ச்­சி­யாக சுட்­டிக்­காட்­டப்­பட்டு வரு­கின்­ற­போ­திலும் அதற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­பதில் பாரிய தயக்கம் இருக்­கின்­றது. இந்த நிலையில் 1987 ஆம் ஆண்டு இந்­தி­யாவின் தலை­யீட்­டுடன் இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்­வாக 13ஆவது திருத்தச் சட்டம் தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்பில் உள்­ள­டக்­கப்­பட்­டது. இதற்­காக இலங்கை – இந்­திய ஒப்­பந்தம் கைச்­சாத்­திடப்­பட்­ட­துடன் ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­ப­டு­வ­தற்கு முன்­ப­தாக சுமார் ஆறு வரு­டங்கள் இது குறித்து இரண்டு நாடுகள் மத்­தி­யிலும் ஆரா­யப்­பட்டு ­வந்த நிலை­யி­லேயே இவ்­வா­றான ஒரு முடிவு எட்­டப்­பட்­டது.

சில சவால்­க­ளுக்கு மத்­தியில் அப்­போ­தைய இலங்கை ஜனா­தி­பதி ஜே.ஆர். ஜய­வர்த்­த­னவும் இலங்கை – இந்­திய ஒப்­பந்­தத்தின் ஊடாக 13 ஆவது திருத்தச் சட்­டத்­திற்கு இணக்கம் தெரி­வித்தார். அத்­துடன் இலங்கை – இந்­திய ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­படும் போது அது தொடர்பில் தமிழ் பேசும் தலை­மைகள் திருப்தி அடை­யாமல் இருந்­த­போ­திலும் அந்த சந்­தர்ப்­பத்தில் இந்­தியா வழங்­கிய உறு­தி­மொ­ழியின் அடிப்­ப­டையில் அப்­போது மௌன­மாக இருந்­து ­விட்­டன.

குறிப்­பாக வடக்கு, கிழக்கு இணைக்கும் விவ­காரம் தொடர்பில் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­ட­வேண்­டு­மென இலங்கை – இந்­திய ஒப்­பந்­தத்தில் குறிப்­பிட்­டி­ருந்த போதிலும் அது தொடர்பில் இந்­தியா வழங்­கிய வாக்­கு­று­தியின் அடிப்­ப­டையில் தமிழ் தலை­மைகள் அன்று மௌன­மாக இருந்­து­விட்­டன.

இந்த நிலையில் இலங்கை–இந்­திய ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்டு 13 ஆவது திருத்த சட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட போதிலும் முப்­பது வரு­டங்கள் கடந்து இன்று வரை அதன் முக்­கிய ஏற்­பா­டுகள் நடை­மு­றைப்­படுத்­தப்­ப­டாத நிலைமை காணப்­ப­டு­கின்­றது. குறிப்­பாக வடக்கு, கிழக்கு இணைப்பு விவ­காரம், பொலிஸ் மற்றும் காணி அதி­கா­ரங்கள் தொடர்­பான விட­யங்கள் இன்னும் நிலு­வை­யி­லேயே உள்­ளன. இவ்­வா­றான நிலைமை நீடிக்­கின்ற சூழலில் இந்த இலங்கை – இந்­திய ஒப்­பந்தம் தொடர்பில் கொழும்பில் நடை­பெற்ற நிகழ்­வொன்றில் எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்தன் சில ­முக்­கி­ய­ வி­ட­யங்­களை வெளி­யிட்­டி­ருக்­கின்றார். அதா­வது இலங்கை – இந்­திய ஒப்­பந்தம் இறந்­து­வி­ட­வில்லை. அது உயி­ரு­ட­னேயே இருக்­கி­றது. அந்த ஒப்­பந்தம் எமக்குத் தேவை. அதன் உள்­ள­டக்­கங்கள் நிறை­வேற்­றப்­பட வேண்டும். இதற்கு இந்­தியா ஆக்­க­பூர்­வ­மான பணி­களை ஆற்­ற­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். இது இந்­தி­யாவின் கட­மை­யாகும். இந்தக் கட­மை­யி­லி­ருந்து இந்­தியா வில­க­மு­டி­யாது என்று எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

அத்­துடன் எமது மக்­க­ளு­டனும் எமது தலை­வர்­க­ளு­டனும் பேசி பிரச்­சி­னைக்குத் தீர்­வைக்­காண நாம் விரும்­பு­கின்றோம். அவ்­விதம் தீர்வை ஏற்­ப­டுத்த முடி­யா­து­விட்டால் நியா­ய­மான தீர்வைப் பெற எதனைச் செய்ய வேண்­டுமோ அதனைச் செய்­வ­தற்கு நாம் தயா­ரா­க­வுள்ளோம். இந்­தியா மூலம்தான் பிரச்­சி­னைக்குத் தீர்­வு­காண முடியும் என்று இந்த நாடு நினைப்­பதை நாம் விரும்­ப­வில்லை. இந்த நாட்டு மக்­களின் சம்­ம­தத்­துடன் அவர்­களின் ஒத்­து­ழைப்­புடன் பிரச்­சி­னைக்கு தீர்­வு­காண வேண்டும் என்றே நாம் விரும்­பு­கின்றோம் எனவும் சம்­பந்தன் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

இதே­வேளை, 1987 ஆம் ஆண்டு ஆடி மாதம் 29 ஆம் திகதி இலங்கை – இந்­திய ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்­டது. இதற்கு முன்­னைய தினம் அமிர்­த­லிங்கம், சிதம்­பரம் மற்றும் நானும் பாரதப் பிர­த­மரை இந்­தி­யாவில் சந்­தித்தோம். இந்த ஒப்­பந்­தத்தை நாங்கள் பார்த்தோம், நாங்கள் கூற­வேண்­டிய விட­யங்­களை கூறினோம், இந்த ஒப்­பந்­தத்தில் வட­கி­ழக்கு இணை­வ­தற்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. ஆனால், ஒரு சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பும் நடை­பெறும் என்று கூறப்­பட்­டி­ருந்­தது. அதனை நாங்கள் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை, அதனை நீக்க வேண்டும் என கூறினோம். இவற்­றினை அடுத்து சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடை­பெ­றாது வடக்கு, கிழக்கு மக்­களின் முழு­மை­யான ஒத்­து­ழைப்­புடன் பிரச்­சி­னை­களை தீர்க்கும் வாக்­கு­றுதி வழங்­கப்­பட்­டது. அதன் அடிப்­ப­டையில் அடுத்த நாள் ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்­டது என்னும் வர­லாற்று விட­யத்­தையும் இந்­தி­யாவின் வாக்­கு­று­தி­யையும் சம்­பந்தன் நினை­வு­கூர்ந்திருக்­கின்றார்.

அதே­போன்று, வடக்கு, கிழக்கு இணைப்பை பொறுத்த வரையில் அது புதிய விடயம் அல்ல. பண்­டா­ர­நா­யக்க – -செல்­வ­நா­யகம் ஒப்­பந்­தத்தில் வடக்கில் ஒரு பிராந்­திய சபை, கிழக்கில் இரண்டு அல்­லது இரண்­டிற்கு மேற்­பட்ட பிராந்­திய சபைகள் என ஒப்­பந்­த­மா­கி­யுள்­ளது. இதனை முஸ்லிம் தலை­மைகள் ஏற்­று­க்கொண்­டன. முஸ்லிம் மக்­களின் ஒத்­து­ழைப்பு இல்­லாது இந்த சிக்­கல்­களை தீர்க்க முடி­யாது. எமது பக்கம் நியாயம் உள்­ளது. ஆனால், அவர்கள் பக்க நியா­யத்­தையும் கருத்தில் கொண்டு செயற்­பட வேண்டும். அவற்­றினை கவ­னத்தில் கொண்டு ஒரு இணக்­கப்­பாடு எட்­டப்­பட வேண்டும். இதில் இந்­தி­யாவின் பங்­க­ளிப்பு தொடர வேண்டும் என்றும் தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

அந்­த­வ­கையில் தமிழ் பேசும் மக்­களின் இனப்­பி­ரச்­சினை தீர்வு விட­யத்தில் இந்­தி­யாவின் முக்­கி­யத்­துவம் தொடர்பில் எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் முக்­கிய சில விட­யங்­களை எடுத்­து­ரைத்­தி­ருக்­கின்றார். அதா­வது 13 ஆவது திருத்தச் சட்­ட­மா­னது தமிழ் மக்­களின் அர­சியல் அபி­லா­ஷை­களை பூர்த்தி செய்­யா­துவி­டினும் கூட அதில் காணப்­ப­டு­கின்ற சாதகத் தன்மை தொடர்­பா­கவும் அவற்றை முழு­மை­யாக நிறை­வேற்­றிக்­கொள்­வ­தற்கு இந்­தியா தொடர்ந்து இலங்­கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்­டி­யதன் அவ­சியம் குறித்தும் சம்­பந்தன் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

எனவே, இலங்­கை தமிழ் மக்­களின் இந்த நிலைப்­பாடு தொடர்பில் இந்­தியா புரிந்­து­கொண்டு புரை­யோ­டிப்­போ­யி­ருக்­கின்ற இந்தப் பிரச்­சி­னைக்கு விரைவில் தீர்வு காண்­ப­தற்கு ஆக்­க­பூர்­வ­மான ஒத்­து­ழைப்பை வழங்­க­வேண்­டி­யது அவ­சி­யாகும். தமிழ் பேசும் மக்கள் தீர்வு விட­யத்தில் தொடர்ந்து நம்­பிக்கை இழந்த நிலை­யி­லேயே காணப்­படு­கின்­றனர். அது­மட்­டு­மன்றி இலங்கை அர­சாங்­கத்­து­டனும் பெரும்­பான்மை மக்­களின் சம்­ம­தத்­து­ட­னேயே இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு பெற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வேண்டும் என்­பதை உணர்ந்­துள்ள இந்த நாட்டின் தமிழ் மக்கள் அதில் இந்­தி­யாவின் பங்­க­ளிப்பு எந்தளவு தூரம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் ஏற்றுக்கொண்டுள்ளனர். எனவே, இந்தியா இந்த விடயம் தொடர்பில் ஆழமாக கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதில் இந்தியா, இலங்கை அரசாங்கத்திற்கு மிக முக்கியமான உதவிகளை வழங்கியதாக கூறப்படுகின்றது. இந்நிலையில், இந்திய அரசாங்கம் இலங்கையின் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினையைத் தீர்க்கும் விடயத்தில் தமக்கு இருக்கின்ற பொறுப்பு தொடர்பில் அக்கறையுடன் செயற்படவேண்டும் என்பதே தமிழ் மக்களின் கோரிக்கையாகும்.

எனவே, இது தொடர்பில் மோடி அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன் தமிழர்கள் தமது அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்க வேண்டுமென வலியுறுத்துவதுடன் இது குறித்து அவசரமாக கவனம் செலுத்துமாறு இரண்டு அரசாங்கங்களுக்கும் சுட்டிக் காட்டுகின்றோம்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-04-27#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.