Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிலைமாற்றத்தின் அவசியம்

Featured Replies

நிலைமாற்றத்தின் அவசியம்

 

30வரு­டங்­க­ளாகத் தொடர்ந்த யுத் தம் பல்­வேறு பாதிப்­பு­க்க­ளையும் பல்­வேறு மாற்­றங்­க­ளையும் நாட்டில் ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தன. மக்கள் வலிந்து வேரோடு இடம்­பெ­யரச் செய்­யப்­பட்­ட­மையும், இடம்­பெ­யர நேர்ந்தமையும், சமூக, பொரு­ளா­தார, அர­சியல் ரீதி­யான மாற்­றங்­க­ளுக்கு வித்­திட்­டி­ருந்­தன. பல்­வேறு நெருக்­க­டிகள், பல்­வேறு துன்­பங்கள், துய­ரங்கள், உயி­ரி­ழப்­புக்கள், உடைமை இழப்­புக்கள் என்று இழப்­புக்­களின் பட்­டியல் நீண்­டி­ருந்­தது. யுத்தம் முடி­வ­டைந்­த­தை­ய­டுத்து, அல்­லது யுத்தம் முடி­வுக்குக் கொண்டு வரப்­பட்­ட­தை­ய­டுத்து, இந்த நிலை­மை­களில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்த வேண்­டிய அவ­சியம் இயல்­பா­கவே எழுந்­தி­ருந்­தது.

ஆயுதம் ஏந்திப் போரா­டிய விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட இரா­ணுவ நட­வ­டிக்­கை­க­ளின்­போது முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்த பல்­வேறு கட்­டுப்­பா­டுகள், வரை­மு­றைகள், தடைகள் என்­ப­னவற்­றினால் பொது­மக்­க­ளுக்கு ஏற்­பட்­டி­ருந்த பாதிப்­பு­க்களை இல்­லாமல் செய்­வ­தற்­கான நிலை­மாற்­றத்தை அர­சாங்கம் மேற்­கொள்ள வேண்டியிருந்­தது.

யுத்­த­மோ­தல்கள் இடம்­பெற்ற காலத்தில் இடம்­பெற்ற இயல்­புக்கு மாறாக மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்த நட­வ­டிக்­கை­க­ளுக்கு முற்­றுப்­புள்ளி வைத்து, இயல்பு வாழ்க்­கைக்கு அவ­சி­ய­மான நட­வ­டிக்­கை­களை நியா­ய­மான முறையில் மேற்­கொள்ள வேண்டும் என்­பதே இந்த நிலை­மாற்­றத்தின் முக்­கிய நோக்­க­மாகும். அதேவேளை, நிலை­மா­று­கால நீதியை நிலை­நாட்ட வேண்­டிய கடப்­பாடும் அர­சாங்­கத்தைச் சார்ந்­தி­ருந்­தது. இன்னும் சார்ந்­தி­ருக்­கின்­றது. யுத்தம் முடி­வ­டைந்­த­தை­ய­டுத்து, நாட்டு மக்கள் மத்­தியில் நல்­லி­ணக்­கத்­தையும், சமா­தானம், சக­வாழ்வு, ஐக்­கியம் என்­ப­னவற்­றையும் ஏற்­ப­டுத்தி, அழிவுப் பாதையில் பய­ணித்த நாட்டை முன்­னேற்­ற­க­ர­மான பாதையில் முன் நகர்த்திச் செல்­வ­தற்கு இந்த நிலை­மாற்றம், அடிப்­ப­டை­யா­னது.

உலகில் யுத்தம் நடை­பெற்ற பல இடங்­க­ளிலும், பல நாடு­க­ளிலும் இந்த நிலை­மாற்றம் பல்­வேறு வடி­வங்­களில் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன. மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன என்­பதை ஆய்­வா­ளர்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றார்கள். நிலை­மா­று­கால நீதியை முதன்­மைப்­ப­டுத்­திய இந்த நிலை­மாற்ற நட­வ­டிக்­கை­களின் விளை­வுகள் குறித்து பல்­வேறு விமர்­ச­னங்கள் எழுந்­தி­ருக்­கின்­றன. அவை தொடர்­பாகப் பல்­வேறு ஆய்­வு­களும் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றன. நிலை­மா­று­கால நீதியை நிலை­நாட்டி, மக்கள் மத்­தியில் சக­வாழ்­வையும் சமா­தா­னத்­தையும், ஐக்­கி­யத்­தையும் ஏற்­ப­டுத்­து­கின்ற முயற்­சிகள் பல இடங்­களில் கிணறு வெட்ட பூதம் கிளம்­பிய நிலை­மைக்கு இட்டுச் சென்­றி­ருப்­ப­தையும் இந்த ஆய்­வு­களும் விமர்­ச­னங்­களும் சுட்­டிக்­காட்டத் தவ­ற­வில்லை.

இலங்­கையைப் பொறுத்­த­மட்டில், நிலை­மா­று­கால நீதிக்­கான செயற்­பா­டுகள் 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடி­வ­டைந்­ததிலிருந்து கிட்­டத்­தட்ட ஒரு தசாப்த கால­மாகத் தொடர்­கின்­றன. நிலை­மா­று­கா­லத்தில் நீதியை நிலை­நாட்­டு­வ­தற்­கான பொறி­மு­றை­களை உரு­வாக்கி நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்டும் என்ற பொறுப்பை நிறை­வேற்­று­வதில் அர­சாங்­கங்கள் வெற்­றி­ய­டை­ய­வில்லை. ஐ.நா­.வுக்கும் சர்­வ­தே­சத்­திற்கும் அளிக்­கப்­பட்ட உறு­தி­மொ­ழி­களை நிறை­வேற்­று­வதில் காலம் கடத்­து­கின்ற அர­சியல் உத்­தியே கடைப்­பி­டிக்­கப்­பட்டு வந்­துள்­ளன. இன்னும் தொடர்ந்து கடைப்­பி­டிக்­கப்­ப­டு­கின்­றன என்­பது பொது­வான குற்­றச்­சாட்டு. இதனை மறுக்­கவும் முடி­யாது. மறைக்­கவும் முடி­யாது.

யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்த மஹிந்த ராஜ­பக்பஷ தலை­மை­யி­லான அர­சாங்­கத்தின் மீதும், அதற்குப் பின்னர் 2015 ஆம் ஆண்டில் ஆட்சிப் பொறுப்பை ஏற்­றுள்ள நல்­லாட்சி அர­சாங்­கத்தின் மீதும் இந்தக் குற்­றச்­சாட்டு சர்­வ­தேச அளவில் முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

நிலை­மா­று­ கா­லத்தில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய நிலை­மாற்று நட­வ­டிக்­கைகள் நேர்­மை­யா­கவும், இதய சுத்­தி­யு­டனும், நாட்டின் பொது­வான நன்­மை­களைக் கருத்திற்கொண்­ட­தா­கவும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை என்­பதே இந்தக் குற்­றச்­சாட்டின் ஒட்­டு­மொத்த வெளிப்­பா­டாகும். அர­சியல் ரீதி­யான நலன்­களில் காட்­டப்­ப­டு­கின்ற அக்­க­றையும் ஆர்­வமும், நாட்­டி­னதும் நாட்டு மக்­க­ளி­னதும் ஒட்­டு­மொத்­த­மான நலன்­களில் காட்­டப்­ப­ட­வில்லை என்­பது நீண்­ட­கால குறை­பா­டாகும்.

அரச தரப்பு, தமிழர் தரப்பு அர­சியல் நிலைப்­பா­டுகள்

நிலை­மா­று­கால நீதிச்­செ­யற்­பா­டு­களில் அர­சாங்­கத்தின் நிலை­மைகள் இவ்­வா­றி­ருக்க, யுத்­தத்தில் மோச­மாகப் பாதிக்­கப்­பட்ட தரப்­பி­ன­ரா­கிய தமிழர் தரப்பில் அர­சியல் ரீதி­யான நிலைப்­பாட்டில் நிலை­மாற்­றங்கள் உரிய முறையில் கைக்­கொள்­ளப்­ப­ட­வில்லை. உரிய வகையில் இடம்­பெ­ற­வில்லை என்­பதும் பல்­வேறு தரப்­பி­ன­ராலும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருக்­கின்­றது. இது தொடர்­பாக பல்­வேறு விமர்­ச­னங்கள் எழுந்­தி­ருக்­கின்­றன. பல்­வேறு சர்ச்­சை­களும் தொடர்ந்த வண்ணம் இருக்­கின்­றன.

தமிழர் தரப்பு அர­சி­யலில் நிலை­மாற்றம் ஏற்­பட்­டி­ருக்­கின்­றதா அதற்­கான மன­மாற்­றங்கள் எந்த அளவில் நிகழ்ந்­தி­ருக்­கின்­றன என்­பது நீண்ட ஆய்­வுக்­கு­ரி­யது. அந்த ஆய்­வுக்கு அப்பால், நிலை­மாற்­று­கால நீதியை நிலை­நாட்­டு­வ­திலும், நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­திலும் அர­சினால் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற நட­வ­டிக்­கை­களை முன்­னேற்றி வழி­ந­டத்திச் செல்­லத்­தக்க வகையில் தமிழர் தரப்பின் நிலை­மாற்றச் செயற்­பா­டுகள் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்குப் பய­னுள்ள வகையில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­ற­னவா என்­பது குறித்து பல்­வேறு விமர்­ச­னங்கள் இருக்­கின்­றன. குறிப்­பாக அர­சியல் ரீதி­யான ஒற்­று­மையும், பொது­வான அர­சியல் கொள்­கையை அடிப்­ப­டை­யாகக் கொண்ட வலு­வான கட்­ட­மைப்பும் உரு­வாக்­கப்­ப­ட­வில்லை என்­பது அந்த விமர்­ச­னங்­களில் குறிப்­பிட வேண்­டிய முக்­கிய அம்­ச­மாகும்.

இந்த விமர்­ச­னங்கள் அர­சியல் போக்கை அடிப்­ப­டை­யாகக் கொண்­டவை. பாதிக்­கப்­பட்ட மக்­க­ளு­டைய உரி­மை ­சார்ந்த அரசி­யல் நலன்கள் சார்ந்­தவை. நாட்டின் தேசிய சிறு­பான்மை இன மக்­க­ளா­கிய தமிழ் மக்­களின் அர­சியல் உரி­மைகள் மறுக்­கப்­பட்டு, அவர்­க­ளு­டைய உரி­மைக்­கான கோரிக்­கை­களும் போராட்­டங்­களும் அடக்கி ஒடுக்­கப்­பட்­டதன் விளை­வா­கவே இந்த நாட்டில் மோச­மான யுத்த நிலைமை உரு­வா­கி­யது. அந்த யுத்­தத்தின் முடிவில் உரு­வா­கி­யி­ருப்­பதே நிலை­மா­று­கால நிலை­மை­யாகும்.

இந்த நிலை­மா­று ­கா­லத்தில் இடம்­பெற வேண்­டிய நிலை மாற்­றங்கள் தவிர்க்க முடி­யா­தவை. தடுத்து நிறுத்­தப்­பட முடி­யா­த­வை­யும்­கூட. எனினும், அர­சியல் ரீதி­யான அடிப்­படை இலக்­கிற்குப் பாதகம் ஏற்­ப­டாத வகையில், நிலை மாற்றம் கொள்ள வேண்­டிய தேவை உள்­ளது. யுத்தம் முடி­வுக்கு வந்­ததன் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில், தமிழர் தரப்பில் இந்த மாற்­றங்கள் உரிய முறையில் இடம்­பெ­ற­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

யுத்த காலத்தில் இரா­ணு­வ­ம­ய­மான அர­சியல் தலை­மையே அவ­சி­ய­மாகியிருந்­தது. அந்தத் தலை­மையை விடு­த­லைப்­பு­லிகள் இறுக்­க­மாக முன்­னெ­டுத்­தி­ருந்­தார்கள். ஏனைய குடி­மக்­களைப்போல குறிப்­பாக பெரும்­பான்மை இனத்­த­வ­ரா­கிய சிங்­கள மக்­களைப் போன்று சம உரிமை உடை­ய­வர்­க­ளாக தமிழ் மக்­களும் வாழ வேண்டும் என்­பதே தேசிய சிறு­பான்மை இன மக்­க­ளா­கிய அவர்­க­ளது கோரிக்­கை­யாகும். அந்தக் கோரிக்­கையை நிறை­வேற்­று­வ­தற்கு மாறி மாறி ஆட்சிப் பொறுப்பை ஏற்ற, எந்த அர­சாங்­கமும் தயா­ராக இருக்­க­வில்லை.

இரு கட்சி முறை­யி­லான அர­சாங்க போக்கே இலங்­கையின் அர­சியல் வர­லா­றாகும். ஐக்­கிய தேசிய கட்­சியும், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் பெரும்­பான்மை இனத்­த­வ­ரா­கிய சிங்­கள மக்­களின் இரு­பெரும் கட்­சி­க­ளாகும். ஒரு கட்சி ஆட்சி நடத்­தும்­போது மற்ற கட்சி எதிர்க்­கட்­சி­யாகத் திகழும். எதிர்க்­கட்­சி­யாக இருந்த அர­சியல் கட்­சிக்கு மக்கள் தேர்தல் மூல­மாக ஆட்சி அதி­கா­ரத்தை வழங்­கும்­போது, முன்னர் ஆட்சி நடத்­திய அர­சியல் கட்சி எதிர்க்­கட்­சி­யாக மாறியிருக்கும். இதுவே நாட்டின் ஆட்சி முறைமைப் போக்­காகும். இந்த ஆட்சி முறையில், தமி­ழர்­களின் அர­சியல் உரி­மை­களை உறு­திப்­ப­டுத்தி, அவற்றை நிரந்­த­ர­மாக வழங்­கு­வ­தற்கு முன்­வ­ரு­வது போன்ற பாவ­னை­களே அர­சியல் அரங்கில் அதிகம் இடம்­பெற்று வந்­துள்­ளன.

தமி­ழர்­க­ளுக்­கான அர­சியல் உரி­மை­களை வழங்கி, இனப்­பி­ரச்­சி­னைக்கு ஓர் அர­சியல் தீர்வு காண்­ப­தற்கு அர­சாங்கம் முன்­வ­ரும்­போது, எதிர்க்­கட்­சியில் இருக்­கின்ற அர­சியல் கட்சி அதற்கு தனது முழு எதிர்ப்பை வெளி­யிடும். அவ்­வாறு எதிர்ப்பை வெளி­யி­டு­கின்ற கட்சி ஆட்சிப்பொறுப்பை ஏற்று, அதே முயற்­சியை மேற்­கொள்­ளும்­போது, ஆட்சி அதி­கா­ரத்தில் இருந்த மற்ற கட்சி அதனை எதிர்த்துச் செயற்­படும். இனப்­பி­ரச்­சி­னைக்கு ஓர் அர­சியல் தீர்வு காணும் விட­யத்தில் காலம் கால­மாக இத்­த­கைய நட­வ­டிக்­கை­க­ளையே இரண்டு தேசிய அர­சியல் கட்­சி­களும் முன்­னெ­டுத்து வந்­துள்­ளன.

ஒன்­றி­ணையத் தவ­றி­யுள்ள தலைமைகள்

இந்த ஆட்சி முறைப்போக்கில் கடந்த 2015 ஆம் ஆண்டு நடை­பெற்ற தேர்தல் ஒரு முற்­றுப்­புள்ளி வைத்­தி­ருந்­தது. யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்த மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான அர­சாங்கம் ஊழல்கள் மலிந்­த­தாக, குடும்ப அர­சி­யலை மையப்­ப­டுத்­தி­ய­தாக முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தது. இத்­த­கைய முன்­னெ­டுப்­புக்கு யுத்­தத்தில் அடைந்­தி­ருந்த வெற்றி ஒரு வாய்ப்­பா­கவும், அதே­வேளை, எதேச்­ச­தி­காரப் போக்கில் ஆட்­சியைக் கொண்டு நடத்­து­வ­தற்கு ஒரு கவ­ச­மா­கவும் அமைந்­தி­ருந்­தது. ஆயினும் அந்த ஆட்­சியில் ஒடுக்­கப்­பட்ட ஜன­நா­ய­கத்தை நிலை­நி­றுத்தி, ஊழல்­களை ஒழித்து, நல்­லாட்சி புரி­வ­தற்­காக இரண்டு தேசிய கட்­சி­களும் இரு தரப்பு அர­சியல் முக்­கி­யஸ்­தர்கள் சில­ரு­டைய முயற்­சியின் பய­னாக ஒன்­றி­ணைந்­தன. அந்த ஒன்­றி­ணைவின் விளை­வாக நல்­லாட்சி அர­சாங்கம் உரு­வா­கி­யது.

 அந்த அர­சாங்க உரு­வாக்­கத்­திற்கு தமிழ் மக்­களின் முக்­கிய அர­சியல் தலை­மை­யா­கிய தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு நிபந்­த­னை­யற்ற ஆத­ரவை வழங்­கி­யி­ருந்­தது. நிபந்­த­னை­யற்ற ஆத­ரவை வழங்கிச் செயற்­ப­டு­வதன் ஊடாக ஓர் அர­சியல் தீர்வை நோக்கி நல்­லாட்சி அர­சாங்­கத்தை நகர்த்திச் செல்ல முடியும் என்ற நிபந்­த­னை­யற்ற ஆத­ரவை வழங்க வேண்டும் என்ற நிலைப்­பாட்டைக் கொண்டி­ருந்த தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்புத் தலை­மையின் உறு­தி­யான நம்பிக்கையாக இருந்­தது. தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் அந்த நம்­பிக்­கையைப் பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் வெளிப்­ப­டை­யா­கவே வெளி­யிட்­டி­ருந்தார். அத்­துடன் அந்த நம்­பிக்­கையின் அடிப்­ப­டையில் கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக்­கட்­சி­களும் தமிழ் மக்­களும் செயற்­பட வேண்டும் என்­ப­தையும் வலி­யு­றுத்­தி­யி­ருந்தார்.

ஆனால், நல்­லாட்சி அர­சாங்­கமும், தமிழ் மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண­வில்லை. புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்றை உரு­வாக்கி, அதன் மூலம் ஓர் அர­சியல் தீர்­வைக்­காண முடியும் என்ற கூட்­ட­மைப்பின் நம்­பிக்­கையும் நிறை­வே­ற­வில்லை. தேசிய மட்­டத்தில் நிகழ்ந்த அர­சியல் மாற்­றங்கள் அந்த நம்­பிக்­கையை சுக்­கு­நூ­றாக்­கி­யி­ருக்­கின்­றன.

இத்­த­கைய ஒரு பின்­ன­ணியில் தமிழர் தரப்பின் அர­சியல் தலை­மைகள் ஒன்­றி­ணைந்த ஓர் அர­சியல் செயற்­பாட்டை முன்­னெ­டுக்­கத்­தக்­க­வை­யாக ஒன்­றி­ணை­ய­வில்லை. தமிழ் மக்­களின் அர­சியல் உரி­மை­களை வென்­றெ­டுக்க வேண்டும். இனப்­பி­ரச்­சி­னைக்கு ஓர் அர­சியல் தீர்வு காண வேண்டும் என்ற பொது­வான அர­சியல் கொள்­கையை அந்த அர­சியல் தலை­மைகள் அல்­லது தமிழ் அர­சியல் கட்­சிகள் கொண்­டி­ருந்த போதிலும், நாட்டின் சூழ­லுக்கு ஏற்ற வகையில் தமது இறுக்­க­மான அர­சியல் கொள்கைப் பிடிப்­புக்கு அப்பால், தேசிய அர­சியல் சூழ­லுக்கு ஏற்ற வகையில் நிலை­மாற்­றத்தைக் கடைப்­பி­டித்து, இறுக்­க­மாக ஒன்­றி­ணையத் தவ­றி­விட்­டார்கள். தொடர்ந்தும் தவறி வரு­கின்­றார்கள்.

வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழ் மக்­களின் தாயகப் பிர­தே­சத்தில் சுய­நிர்­ணய உரி­மையும், இறை­மையும் கொண்ட ஆட்சி அதி­காரம் வேண்டும் என்ற தமிழ்த்­தே­சி­யமே தமிழ் அர­சியல் கட்­சி­களின் பொது­வான அர­சியல் இலக்கு. பொது­வான அர­சியல் கொள்கை. ஆயினும் இவற்றில் தூய தமிழ்த்­தே­சிய கொள்­கையில் இருந்து நெறி­பி­றழக் கூடாது என்ற இறுக்­க­மான கொள்கைப் பிடிப்பு கொண்ட கட்­சி­களும் இருக்­கத்தான் செய்­கின்­றன. தமிழ்த்­தே­சியம் என்ற கொள்கைப் பிடிப்­பிலும், அந்த அர­சியல் இலட்­சி­யத்­திலும் விட்டுக்கொடுப்­புக்கு இட­மில்லை என்­பது இந்தக் கட்­சி­களின் இறுக்­க­மான நிலைப்­பா­டாகும்.

நிகழ்ந்­துள்ள நிலை­மாற்­றங்கள்

அர­சியல் போக்­கிற்கும் உலக அர­சியல் ஒழுங்கின் தாக்­கத்­திற்கும் உள்­ளா­கும்­போது, அர­சி­யலில் நிலை­மாற்­றங்கள் அவ­சியம். இந்த நிலை­மாற்றம் என்­பது தமிழ் மக்­க­ளினால் வரித்துக் கொள்­ளப்­பட்­டுள்ள தமிழ்த்­தே­சிய இலட்­சியம் அல்­லது கொள்­கையில் மாற்றம் கொள்­வது மாற்றம் செய்­வது என்­பது அர்த்­த­மல்ல. அந்த இலட்­சி­யத்தைக் கைவி­டு­வது என்றும் அர்த்­த­ப்­ப­ட­மாட்­டாது, தமிழ்த்­தே­சி­யத்தை விட்­டுக்­கொ­டுக்­காத வகை­யி­லான நிலை­மாற்­றங்கள் முன்­னரும் நிகழ்ந்­தி­ருக்­கின்­றன என்­பது குறிப்பிடத்­தக்­கது.

தனி­நாட்டுத் தீர்­மா­னத்தை வரித்துக் கொண்ட வட்­டுக்­கோட்டைத் தீர்­மா­னத்தின் அடிப்­ப­டையில் செயற்­பட்ட தமிழ்த்­த­லை­வர்கள், தனி­நாட்டுக் கோரிக்­கையை அர­சி யல் அமைப்பு ரீதி­யாக நிரா­க­ரித்த ஆறா­வது அர­சியல் திருத்தச் சட்­டத்­திற்கு அமை­வா­கவே தமிழ் மக்­களின் பிர­தி­நி­தி­க­ளாகத் தேர்­தல்­களில் தெரிவு செய்­யப்­பட்டு பாராளு­மன்­றத்தில் அர­சியல் செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­தி­ருந்­தனர். அந்த வகை­யி­லேயே தமிழ் மக்­களும் தமிழ் மக்­க­ளு­டைய அர­சியல் தலை­வர்­களும் தமது நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்டியுள்­ளது.

தனி­நாட்­டுக்­காக ஆயுதம் ஏந்திப் போரா­டிய அமைப்புக்கள் பலவும், இலங்கை–இந்­திய ஒப்­பந்­தத்­­தை­ய­டுத்து, ஜன­நா­யக வழியில் இணைந்து செயற்­ப­டு­வ­தற்­கான நிலை­மாற்­றத்தை எடுத்­தி­ருந்­தன. இலங்கை–இந்­திய ஒப்­பந்­தத்­தின்­போது விடு­தலைப் பு­லி­க­ளும்­கூட ஆயுதப் போராட்­டத்தைக் கைவி­டு­வ­தாகக் கூறி ஆயுதக் கைய­ளிப்பு செய்­ததை மறந்­து­விட முடி­யாது. அன்­றைய அர­சியல் சூழலில் விடு­த­லைப்­பு­லிகள் மேற்­கொண்­டி­ருந்த நிலை­மாற்­றத்தின் வெளிப்­பாடு அது.

ஆயுதப் போராட்­டத்தின் ஊடாக தமிழ் மக்­க­ளுக்­கான தனி­நாட்டை உரு­வாக்க வேண்டுமென்­பதில் விடு­த­லைப்­பு­லிகள் மிகவும் இறுக்­க­மாகச் செயற்­பட்­டி­ருந்­தார்கள். அவர்­க­ளு­டைய இந்த இறுக்­க­மான இலட்­சியப் போக்கு, தமிழ் மக்­களை மட்­டு­மல்ல சர்­வ­தேச இரா­ஜ­தந்­தி­ரி­க­ளையும், சர்­வ­தேச நாடு­க­ளையும் கவர்ந்­தி­ருந்­தது. அத்­த­கைய இறுக்­க­மான கொள்­கைப்­பி­டிப்பில் அவர்கள் முன்­னெ­டுத்­தி­ருந்த ஆயுதப் போராட்டச் செயற்­பா­டு­களைக்கண்டு உல­கமே வியந்து போற்­றி­யது என்­பதை மறுக்க முடி­யாது.

தனி­நாட்­டுக்­கான இறுக்­க­மான ஆயுதப் போராட்­டத்­தின்­போது இடம்­பெற்ற மோச­ மான யுத்த மோதல்­க­ளின்­போது தமிழ் மக் கள் துன்­பங்­க­ளையும், கஷ்­டங்­க­ளையும் அனு­ப­வித்து வந்த ஒரு சூழ­லில்தான் விடு­த­லைப்­பு­லிகள் நோர்­வேயின் மத்­தி­யஸ்­தத்தை ஏற்று இலங்கை அர­சாங்­கத்­துடன் ஒரு போர்­ நி­றுத்­தத்­திற்கும், அதனைத் தொடர்ந்து அரச தரப்­பி­ன­ரு­டனான பேச்­சு­வார்த்­தை­க­ளுக்கும் உடன்­பட்டு அவற்றை முன்­னெ­டுத்­தி­ருந்­தார்கள்.

அர­சியல் தீர்வு காண்­ப­தற்­காகப் போர்­நி­றுத்தம் செய்து பேச்­சு­வார்த்­தையில் ஈடு­பட வேண்டும் என்­பது அவர்கள் அப்­போது மேற்­கொண்­டி­ருந்த ஒரு நிலை­மாற்ற நட­வ­டிக்­கை­யாகும். யுத்தம் நிறுத்­தப்­பட்­டி­ருந்­த­தே­யொ­ழிய, அப்­போது யுத்தம் கைவி­டப்­பட்­டி­ருக்­க­வில்லை. பேச்­சு­வார்த்­தை­களின் மூலம் இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காண வேண்டும் என்­ப­தற்­காக இலங்கை அர­சாங்­கத்­துடன் நடத்­தப்­பட்ட பல சுற்றுப் பேச்­சு­வார்த்­தை­களில் 2002 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி தொடக்கம் 5 ஆம் திகதிவரையில் நடை­பெற்ற இரு தரப்பு பேச்­சு­வார்த்­தைகள் முக்­கி­ய­மா­னவை.

அந்தப் பேச்­சு­வார்த்­தை­களில் விடு­த­லைப்­பு­லிகள் மேற்­கொண்­டி­ருந்த நிலை­மாற்றம் அதி­முக்­கி­யத்­துவம் மிக்­கவை. தனி­நாட்­டுக்­காக ஆயு­த­மேந்தி மிகத் தீவி­ர­மாகப் போரா­டிய விடு­த­லைப்­பு­லிகள் இந்தப் பேச்­சு­வார்த்­தை­க­ளின்­போது ஒன்­றி­ணைந்த இலங்­கைக்குள் உள்­ளக சுய­நிர்­ணய உரி­மையின் அடிப்­ப­டையில் வடக்கு– கிழக்கில் வர­லாற்று ரீதி­யாக வாழ்ந்து வந்த தமிழ்–முஸ்லிம் மக்­களின் தாயகப் பிர­தே­சத்தில் அதி­காரம் வாய்ந்த சமஷ்டி ஆட்சி முறைமை­யொன்­றுக்கு இணக்கம் தெரி­வித்­தி­ருந்­தனர்.

அந்தப் பேச்­சு­வார்த்­தையில் அர­சாங்கத் தரப்பு குழு­விற்குத் தலைமை ஏற்­றி­ருந்த பேரா­சி­ரியர் பீரிஸ் இந்த நிலை­மாற்­றத்தை விடு­த­லைப்­பு­லிகள் தரப்பில் முன்­னெ­டுக்­கப்­பட்ட முன்னுதா­ர­ண­மான செயற்­பாடு என்று குறிப்­பிட்­டி­ருந்தார். விடு­த­லைப்­பு­லி­களின் குழு­விற்குத் தலை­மை­யேற்­றி­ருந்த விடு­த­லைப்­பு­லி­களின் அர­சியல் ஆலோ­சகர் அன்ரன் பால­சிங்கம், உள்­ளக சுய­நிர்­ணய உரி­மை­யுடன் கூடிய சமஷ்டி ஆட்சி உரி­மை­யா­னது, விடு­த­லைப்­பு­லி­களின் தலைவர் வேலுப்­பிள்ளை பிர­பா­கரன் அந்த வருடம் (2002) நவம்பர் மாதம் இடம்­பெற்ற விடு­த­லைப்­பு­லி­களின் மாவீரர் தினத்தில் ஆற்­றி­யி­ருந்த மாவீரர் தின உரையின் அடிப்­ப­டை­யி­லா­னது என சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார். சமஷ்டி முறை­யி­லான ஓர் அர­சியல் தீர்­வுக்கு உடன்­பட்­டி­ருந்த அர­சாங்­கத்தின் செயற்­பா­டா­னது, அர­சாங்கத் தரப்­பி­லான முக்­கி­ய­மான ஒரு நிலை­மாற்­ற­மாகும் என்றும் அன்ரன் பால­சிங்கம் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

அர­சியல் இருப்­புக்கு நிலை­மாற்றம் அவ­சியம்

இப்­போ­தைய இலங்­கையின் அர­சியல் நிலைமை உறு­தி­யற்­ற­தாக மாறி­யி­ருக்­கின்­றது. நல்­லாட்சி அர­சாங்­கத்தின் மீது தமிழ் மக்கள் கொண்­டி­ருந்த நம்­பிக்கை அற்றுப் போயுள்­ளது. அரசாங்­கத்­திற்கு நிபந்­த­னை­யற்ற ஆத­ரவை வழங்கி ஒத்­து­ழைத்து வந்த தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலை­மையே அர­சாங்­கத்தின் மீது நம்­பிக்கையிழக்க வேண்­டிய நிலைக்கு ஆளா­கி­யி­ருக்­கின்­றது.

நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்குள் ஏற்­பட்­டுள்ள பிளவும், குழப்­ப­க­ர­மான நிலை­மையும், தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள், அவர்­க­ளு­டைய அர­சியல் விவ­காரம் என்­பன­வற்றில் இருந்து ஆட்­சி­யா­ளர்­களின் கவ­னத்தைத் திசை திருப்­பி­விட்­டி­ருக்­கின்­றன. புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்தின் ஊடாக ஓர் அர­சியல் தீர்வு காணும் முயற்சி மங்கிப் போயுள்­ளது. அது கைவி­டப்­பட்ட நிலை­மைக்கே ஆளா­கி­யி­ருக்­கின்­றது.

இனப்­பி­ரச்­சி­னைக்­கான அர­சியல் தீர்வு விட­யத்­திலும், தமிழ் மக்­களின் அர­சியல் உரிமை தொடர்­பான விட­யங்­க­ளிலும், ஏட்­டிக்குப் போட்­டி­யான நிலைப்­பாட்டைக் கொண்­டுள்ள ஆட்சி அதி­கா­ரத்­திற்­கான அர­சியல் வலி­மையைக் கொண்­டுள்ள இரண்டு தேசிய அர­சியல் கட்­சி­களும் ஒன்­றி­ணைந்த ஆட்சி அதி­காரச் செயற்­பாட்டை முன்­னெ­டுக்க முடி­யாத நிலைமை உரு­வா­கி­யிருக்­கின்­றது. இது முன்­னைய ஏட்­டிக்குப் போட்­டி­யான அர­சியல் நிலை­மை­யிலும் பார்க்க மிக மோச­மா­னது.

அர­சியல் கைதி­களின் விடு­தலை, வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக் குப் பொறுப்பு கூறுதல், இரா­ணு­வத்தின் பிடியிலுள்ள காணி மீட்பு, இன்னும் நிறை வேறாதிருக்கின்ற இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், தமிழர் பிரதேசங்களில் அத்து மீறியுள்ள சிங்களக் குடியேற்றம், பௌத்த மத ஆக்கிரமிப்பு மற்றும் தமிழர் பிரதேசத்து தொழில் துறைகள் மற்றும் வர்த்தகச் செயற்பாடுகளில் இடம்பெற்று வருகின்ற சிங்களவர்களின் அத்துமீறிய ஊடுருவல் செயற்பாடுகள் போன்ற பல் வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் ஆட்சியாளர்களுக்கு நேரம் இல்லாத நிலை மையே காணப்படுகின்றது.

இந்த நிலையில் தமிழர்தரப்பு அரசியல் கட்சிகளும், அரசியல் தலைவர்களும், முக்கியஸ்தர்களும் தமிழ் மக்களின் அரசி யல் நலன்களையும் எதிர்காலத்தையும் கருத்திற்கொண்டு தங்களது நிலைகளில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் அரசியல் கட்சிகளும், அரசியல் தலை மை களும் தங்களுக்கிடையில் காணப்படுகின்ற அரசியல் வேறுபாடுகளை மறந்து ஓர் அணியில் ஒரு குடையின் கீழ் ஒன்றிணைய வேண்டியது இப்போதைய அரசியல் சூழலில் மிகவும் அவசியம்.

நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்துள்ள தமிழ் மக்கள் தன்னெழுச்சி கொண்டு போராடுபவர்களாகப் படிப்படி யாக மாறி வருகின்றார்கள். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நல்லாட்சி அரசாங்கத்துடனான நல்லுறவைப் பயன்படுத்தி, தமது பிரச் சினைகளுக்குத் தீர்வுகாணத் தவறிவிட்டது என்பது தமிழ் மக்களை மிகுந்த ஏமாற்றத்திற்குள்ளாக்கியிருக்கின்றது. கூட்டமைப்பின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த மக்கள் அந்தத் தலைமைக்கு வெளியில் நன்மைகளைத் தேடுபவர்களாக நிலை மாற்றம் கொள்ளத் தொடங்கியிருக்கின்றார் கள். அது அவர்களை சாட்சிக்காரனைக் காட்டிலும், சண்டைக்காரன் காலில் விழு வதே மேல் என்ற நிலைமையை நோக்கி இழுத்துச் சென்றிருக்கின்றது

எனவே, தமிழர் தரப்பு அரசியல் கட்சி களும் அரசியல் தலைவர்களும், அரசியல் வாதிகளும் அந்த மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்காக நிலைமாற்றம் கொள்ள வேண்டியது அவசியமாகியுள்ளது. அரசியலுக்கு மக்களின் ஆதரவு அவசியம். நிலைமாற்றம் இல்லையேல் அந்த ஆதர வைப் பெற முடியாது. அரசியலில் தமது இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளவும் முடியாது.  

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-04-28#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.