Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்றைய இலங்கை அரசியல் செய்திகள் ஒரே பார்வையில்....29.04.2018

Featured Replies

வெள்­ளிக்கு முன்னர் தேசிய அரசின் ஒப்­பந்தம் கைச்­சாத்து: 8 ஆம் திகதி பாரா­ளு­மன்ற அமர்வு

 

லியோ நிரோஷ தர்ஷன்

ஐக்­கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கு இடை­யி­லான தேசிய அர­சாங்க ஒப்­பந்தம் எதிர்­வரும் வெள்­ளிக்­கி­ழ­மைக்கு முன்னர் கைச்­சாத்­தி­டப்­பட உள்­ள­தாக அமைச்சர் மஹிந்த அம­ர­வீர தெரி­வித்தார். இரு தரப்பு ஒப்­பந்­தத்தை மீள்­கைச்­சாத்­திட்டு தேசிய அர­சாங்­கத்தை தொடர்­வ­தற்­கான இணக்கப்பாடு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்­க­விற்கு இடையில் ஏற்­ப­டுத்­திக்­கொள்­ளப்­பட்டமைக்கு அமை­வா­கவே குறித்த ஒப்­பந்தம் இவ்­வா­ரத்தில் கைச்­சாத்­தி­டப்­பட உள்­ளது என்றும் அவர் கூறினார்.

இத­ன­டிப்­ப­டையில் புதிய அமைச்­சுக்­க­ளுக்­கான அமைச்சர் தெரி­வுகள் மிகவும் மும்­மு­ர­மாக இடம்­பெற்று வரு­கின்­றன. 7 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை புதிய அமைச்­ச­ரவை பத­விப்­பி­ர­மாணம் செய்­யப்­பட உள்­ளது. மறுநாள் 8 ஆம் திகதி கூட உள்ள 8 ஆவது பாரா­ளு­மன்­றத்தின் 2ஆவது கூட்­டத்­தொ­டரில் ஜனா­தி­பதி விசேட உரை­யினை நிகழ்த்த உள்ளார்.  

இதன் போது அடுத்த இரண்டு ஆண்­டு­க­ளுக்­கான அர­சாங்­கத்தின் பொரு­ளா­தாரக் கொள்கை குறித்து ஜனா­தி­பதி உரை­யாற்ற உள்ளார். எவ்­வா­றா­யினும் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும், சுதந்­திரக் கட்­சிக்கும் இடையில் கடந்த 2015ஆம் ஆண்டில் செய்­து­கொள்­ளப்­பட்ட தேசிய அர­சாங்­கத்தின் ஒப்­பந்தம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 31ஆம் திக­தி­யுடன் காலா­வ­தி­யா­னது.

நீண்ட அர­சியல் நெருக்­க­டிக்கு பின்னர் இந்த ஒப்­பந்­தத்தை தொடர்­வது குறித்து இரு­த­ரப்­பிலும் எவ்­வி­த­மான கருத்­துக்­களும் தெரி­விக்­கப்­பட வில்லை. இந்­நி­லையில் பல்­வேறு அர­சியல் நெருக்­க­டி­க­ளுக்கு மத்­தியில் தேசிய அர­சாங்­கத்தை 2020ஆம் ஆண்­டு­வரை தெடர்­வது குறித்து இணக்­கப்­பா­டுகள் எட்­டப்­பட்­டுள்­ளன.

இத­ன­டிப்­ப­டை­யி­லேயே புதிய அமைச்­ச­ரவை குறித்த பணிகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. இந்த பணிகள் இறு­திக்­கட்­டத்தை அடைந்­துள்­ள­தாக அர­சாங்­கத்தின் முக்­கி­யஸ்தர் ஒருவர் குறிப்­பிட்டார்.

ரவி கரு­ணா­நா­யக்க , விஜே­தாச ராஜ­பக்ஷ ஆகி­யோ­ருக்கும் அமைச்சு பத­விகள் வழங்­கு­வது குறித்து கவனம் செலுத்­தப்­பட்­டுள்­ளது. நிதி மற்றும் வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக இருந்த ரவி கரு­ணா­நா­யக்க மத்­திய வங்கி பிணை­முறி மோசடி விவ­கா­ரத்­தினால் பதவி வில­கினார். அதே போன்று அமைச்­ச­ரவைக் கூட்டுப் பொறுப்பை மீறிய குற்­றச்­சாட்டை அடுத்தும் விஜே­தாச ராஜ­பக்ஷ பதவி வில­கினார்.

இந்­நி­லையில் இவர்கள் இரு­வ­ரையும் மீண்டும் அமைச்­ச­ர­வைக்கு உள்­வாங்­கு­வ­தற்கு ஐக்­கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

அத்துடன் திலக் மாரப்பன, மங்கள சமரவீர, மலிக் சமரவிக்கிரம ஆகியோர் தொடர்ந்தும் அதே அமைச்சுப் பொறுப்புக்களை வகிப்பார்கள். ஆனால் சட்டம் ஒழுங்கு அமைச்சு கைமாறுவதற்கான சந்தர்ப்பம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஐ.தே.க.வின் ஜனா­தி­பதி வேட்­பாளர் ரணில்?

15-79212cd5e77717d97d1d25f45dd0d49b0f61bf33.jpg

 

(எம்.சி.நஜி­முதீன்)

ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு இன்னும் பதி­னெட்டு மாதங்கள் எஞ்­சி­யுள்ள நிலையில் ஒவ்­வொரு கட்­சியும் நிறுத்­த­வுள்ள ஜனா­தி­பதி வேட்­பாளர் குறித்து கவனம் செலுத்தி வரு­கி­றது. அந்த வகையில் ஐக்­கிய தேசியக் கட்சி இம்­முறை பொது வேட்­பா­ளரை நிறுத்­தப்­போ­வ­தில்­லை­யெ­னவும் அக்­கட்­சியின் தலை­வரும் பிர­த­ம­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை கள­மி­றக்­க­வுள்­ள­தா­கவும் தெரி­வித்து வரு­கி­றது.

ஐக்­கிய தேசியக் கட்சி 2010 மற்றும் 2015 ஆம் ஆண்­டு­களில் ஜனா­தி­பதித் தேர்­தலில் பொது வேட்­பா­ளர்­க­ளையே நிறுத்­தி­யது. 2010 ஆம் ஆண்டு பீல்ட்­மார்ஷல் சரத் பொன்­சே­காவை நிறுத்­திய போதும் அவர் தேர்­தலில் தோல்­வி­ய­டைந்தார். அத்­துடன் 2015 ஆம் ஆண்டு பொது வேட்­பா­ள­ராக தற்­போ­தைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை கள­மி­றக்­கி­யது.  

எனினும் அடுத்­து­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் பொது வேட்­பா­ளரை கள­மி­றக்­காது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வையே கள­மி­றக்­கு­வ­தற்கு எதிர்­பார்த்­துள்­ள­தாக அக்­கட்சித் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. இது குறித்து ஐக்­கிய தேசியக் கட்­சியின் தேசிய அமைப்­பா­ளரும் அமைச்­ச­ரு­மான நவீன் திஸா­நா­யக்க தெரி­விக்­கையில்,

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் தலை­மையின் கீழ் தேவை­யான மாற்­றங்­களை செய்ய முடியும் என நான் எதிர்­பார்க்­கிறேன். எனவே அடுத்­து­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் கள­மி­றங்­கு­வ­தற்கு அவர் எதிர்­பார்க்­கிறார். கட்­சியின் தலை­வ­ராக நான் பதவி வகித்­தாலும் ஜனா­தி­பதித் தேர்­தலில் கள­மி­றங்­கு­வ­தற்கு எதிர்­பார்ப்பேன். அது சாதா­ரண விடயம்.

ஆகவே ஜனா­தி­பதித் தேர்­தலில் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் வெற்­றிக்­காக கட்­சியைக் கட்­டி­யெ­ழுப்ப வேண்டும். கட்­சிக்குள் பல அபிப்­பி­ரா­யங்கள் இருக்­கு­மாயின் அதனைத் தீர்த்­துக்­கொண்டு கட்­சியை ஓர­ணி­யாகப் பலப்­ப­டுத்த வேண்டும். அதன் பின்னர் எஞ்­சி­யுள்ள பதி­னெட்டு மாதங்­க­ளுக்­கான வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்க வேண்டும் எனத் தெரி­வித்­துள்ளார்.

மேலும் அடுத்­து­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்சி சார்பில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை கள­மி­றக்­கு­வ­தற்கு எதிர்­பார்த்­துள்­ள­தாக அமைச்சர் ஜோன் அம­ர­துங்­கவும் தெரி­வித்­துள்ளார்.

இதே­வேளை கூட்டு எதிர்க்­கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் குறித்து மாறு­பட்ட கருத்­துகள் நில­வு­கின்­றன. முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோட்­டா­பய ராஜ­ப­க்ஷவை கள­மி­றக்க வேண்டும் என ஒரு சாராரும், முன்னாள் சபா­நா­யகர் சமல் ராஜ­ப­க்ஷவை கள­மி­றக்க வேண்டும் என மற்­று­மொரு சாராரும் தெரி­வித்து வருகின்றனர்.

அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையே மீண்டும் களமிறக்கவுள்ளதாக அமைச்சர்களான துமிந்த திஸாநாயக்க மற்றும் மஹிந்த அமரவீர உள்ளிட்ட தரப்பினர் தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­யினை நீக்­கு­வதா? இல்­லையா? மஹிந்த அணி குழப்பம்

17-f2ebe2029213ec0b22b7f58390f7aa7bf962da7e.jpg

 

 ஆர்.யசி
நீக்க வேண்டும் என்­கி­றது திஸ்ஸ அணி; வேண்டாம் என்­கி­றது விமல் அணிநிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­ மையை நீக்­கு­வதா அல்­லது தொடர்ந் தும் தக்­க­வைத்­துக்­கொள்­வதா என்­பது குறித்து ஆராய்­வதில் மஹிந்த ராஜபக் ஷ தலை­மை­யி­லான கூட்டு எதிர்க்­கட்­சிக்குள் குழப்பம் நில­வு­கின்­றது. நிறை­வேற்று முறை­மை­யினை நீக்க வேண்டும் என்­பதே வாக்­கு­றுதி என்­கி­றது தினேஷ், திஸ்ஸ, குமார வெல்­கம அணி. நீக்கக் கூடாது என்­கி­றது வாசு, விமல், கம்­மன்­பில அணி  நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­யினை நீக்­கு­வது குறித்து மக்கள் விடு­தலை முன்­னணி 20ஆம் திருத்த சட்­ட­மாக பார­ளு­மன்­றத்தில் யோசனை ஒன்­றினை முன்­வைக்­க­வுள்ள நிலையில் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­யினை நீக்­கு­வதா அல்­லது தக்­க­வைத்­துக்­கொள்­வதா என்­பது குறித்து கட்­சி­க­ளி­டையில் கருத்து இணக்­கப்­பாடு மற்றும் கருத்து வேறு­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன. இந்­நி­லையில் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­யினை நீக்­கு­வதா அல்­லது தக்­க­வைத்­துக்­கொள்­வதா என்­பது குறித்து மஹிந்த ராஜபக் ஷவின் கூட்டு எதிர்க்­கட்­சி­யினர் கலந்­து­ரை­யா­டி­யுள்­ளனர். இதன்­போது கூட்டு எதிர்க்­கட்­சிக்குள் இரு­வேறு கருத்­துக்கள் நில­வி­யத்தை அடுத்து எந்­த­வித தீர்­மா­னமும் எடுக்­க­மு­டி­யாத நிலைமை ஏற்­பட்­டுள்­ளது.  

கூட்­டத்தில் கருத்­துக்­களை முன்­வைத்த திஸ்ஸ, குமார் வெல்­கம மற்றும் தினேஷ் குண­வர்த்­தன தரப்­பினர் கூறு­கையில்,

நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை­மை­யினை நீக்க வேண்டும் என்­பதே கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் கள­மி­றங்­கிய இரண்டு வேட்­பா­ளர்­களும் முன்­வைத்த பிர­தான வாக்­கு­று­தி­யாக உள்­ளது. கடந்த பல கால­மா­கவே நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையின் அதி­யுச்ச சர்­வா­தி­காரத் தன்மை கொண்ட நிலை­மை­களை மாற்­றி­ய­மைக்க வேண்டும் என்ற கருத்து நிலவி வரு­கின்­றது. இந்­நி­லையில் மக்கள் விடு­தலை முன்­னணி கொண்­டு­வரும் திருத்தம் இப்­போது உட­ன­டி­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பலப்­ப­டுத்தும் திட்டம் அல்ல. அடுத்த ஆட்­சிக்­கா­லத்தில் தான் இந்தச் சட்டம் நடை­மு­றைக்கு வரும். ஆகவே நிறை­வேற்று முறை­மை­யினை நீக்­கு­வதில் எந்தப் பிரச்­சி­னை­களும் ஏற்­ப­டப்­போ­வ­தில்லை. பிர­த­ம­ருக்கும் பாரா­ளு­மன்­றத்­திற்கும் அதி­கா­ரங்கள் வழங்­கப்­படும் நிலையில் ஜன­நா­யக ரீதியில் பல­மான ஆட்­சி­யினை முன்­னெ­டுத்து செல்ல வாய்ப்­பாக அமையும் என்­பதை கவ­னத்தில் கொண்டு நாம் செயற்­பட வேண்டும் என அவர்கள் தெரி­வித்­தனர்.

இதன்­போது மாற்­றுக்­க­ருத்­துக்­களை முன்­வைத்த மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே, வாசு­தேவ நாண­யக்­கார, விமல் வீர­வன்ச , உதய கம்­மன்­பில அணி­யினர் கூறு­கையில்.

நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­யினை நீக்­கு­வது குறித்து இப்­போது கலந்­து­ரை­யாட வேண்­டிய அவ­சியம் இல்லை. இதில் நன்மை தீமை என இரண்­டுமே உள்­ளது. அதேபோல் ஜே.வி.பியினர் ஐக்­கிய தேசியக் கட்­சியைப் பலப்­ப­டுத்தும் ஒரே நோக்­கத்தில் இதனைக் கொண்­டு­வ­ரு­கின்­றனர். இதன் மூலம் நாமே இரண்­டாக பிள­வு­பட வேண்­டிய நிலைமை ஏற்­படும். நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­யினை நீக்கி ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பலப்­ப­டுத்த வேண்­டிய தேவை எமக்கு இல்லை., ஜே.வி.பிக்கு தேவை­யா­னதை எம்மை வைத்து சாதிக்க முயற்­சிப்­பதை நாம் தடுக்க வேண்டும் என வாத விவா­தங்­களை முன்­னெ­டுத்­தனர்.

இதன்­போது கருத்­துக்­களை முன்­வைத்த முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ கூறு­கையில்,

நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை நீக்குவது குறித்து அரசாங்கம் இன்னமும் எந்தவித தீர்மானங்களையும் முன்னெடுக்கவில்லை. ஜே.வி.பியினரும் உறுதியான நிலைப்பாட்டில் உள்ளனரா என்பதிலும் சந்தேகம் உள்ளது. ஆகவே நாம் இப்போது இது குறித்துக் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. கட்சி உறுப்பினர்கள் அனைவரதும் ஏகமனதான தீர்மானத்திற்கு அமைய தீர்மானங்களை முன்னெடுப்போம் எனக் குறிப்பிட்டார். 

மே தினத்தன்று புதிய அமைச்சரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதி

 

எஸ்.வினோத், ஆர்.யசி

உலக தொழிலாளர் தினமான மே தினத்தன்று காலையில் புதிய அமைச்சரவை உருவாக்கப்படும். புதிய அமைச்சரவையின் மூலம் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுத்தருவதற்கு நான் தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித் துள்ளார். நாட்டினையும் மக்க ளையும் இணைத்த புதிய வேலைத்திட்டமே அவசிய மாகின்றது எனவும் அவர் குறிப் பிட்டார். ரங்கிரி தம் புள்ளை ரஜமஹா விகாரையில் கடந்த வௌ்ளிக்கிழமை இடம்பெற்ற வைபவம் ஒன்றில் வைத்து உரையாற்று போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.    மே மாதம் முதலாம் திகதி முதல் புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளது அதில் புத்தசான அமைச்சிலும் மாற்றம் வரும் என நான் எதிர்ப்பார்கின்றேன். அதன் மூலம் பௌத்த மத கருமார் எனக்கு முன்வைத்த குறைப்பாடுகள் முடிவடையும் என்றும் அவர் தெரிவித்தார்.   

.   தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் சிலர் அமைச்சுப்பதவிகளைத் துறந்து எதிர்க்கட்சியில் அமரவுள்ள நிலையில் அமைச்சரவையில் நெருக்கடி நிலைமைகள் ஏற்பட்டன.    

இந்நிலையில் தற்காலிக அமைச்சரவை ஒன்று ஜனாதிபதியினால் முன்னெடுத்து செல்லப்பட்டு வருகின்றது. தற்பொழுது மீண்டும் புதிய அமைச்சரவை ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி உறுதிபட தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 1ஆம் திகதி உலக தொழிலாளர் தினத்தன்று காலையில் புதிய அமைச்சரவையினை நியமிக்கவுள்ளதாகவும், புதிய அமைச்சரவையின் மூலமாக இத்தனை கால நெருக்கடி நிலைமைகளுக்கு உறுதியான தீர்வு ஒன்றினை பெற்றுத்தர தயாராக உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில் . நாட்டில் இப்போது நிலவும் தொழிலாளர் பிரச்சினைகள், விவசாயிகள் பிரச்சினை என பலவற்றிற்கும் உறுதியான தீர்வு ஒன்று பெற்றுத்தர வேண்டிய தேவை உள்ளது. இப்போது அமைச்சரவையிலும் வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் உடனடியாக மாற்றங்களை செய்தாகவேண்டியும் உள்ளது. ஆகவே எதிர்வரும் 1ஆம் திகதி மே தினத்தன்று புதிய அமைச்சரவையை உருவாக்கி பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்றார் .   

ரணிலை வீழ்த்­தவே நாம் எதிர்க்­கட்­சியில் அமருகின்றோம்: அரசில் இருந்து சுதந்­திரக் கட்சி விரைவில் வெளி­யே­ற­வேண்டும் - சு.கவின் ரணில் எதிர்ப்பு அணி

 

ஆர்.யசி

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை வீழ்த்தி ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தனி அர­சாங்­கத்தை பலப்­ப­டுத்­தவே எதி­ர­ணியில் அமர்­கின்றோம். மே 8இல் இருந்து எதிர்க்­கட்­சி­யாக ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு அழுத்தம் கொடுப்போம் என ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் ரணில் எதிர்ப்பு அணி­யினர் தெரி­வித்­தனர். வெகு விரைவில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி தேசிய அர­சாங்­கத்தில் இருந்து வெளி­யேற வேண்டும், அதற்­கான நட­வ­டிக்­கை­களை ஜனா­தி­பதி முன்­னெ­டுக்க வேண்டும் எனவும் குறிப்­பிட்­டனர். ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் ரணில் எதிர்ப்பு அணி­யாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­படும் 16 பேர் எதிர்­வரும் 8ஆம் திகதி கூட­வுள்ள பாரா­ளு­மன்ற அமர்­வு­களில் எதிர்க்­கட்­சியில் அம­ர­வுள்­ள­தாக கூறி­யுள்­ள­துடன் அதற்கு அனு­ம­திக்­கக்­கோ­ரிய கடி­தத்தை நேற்று முன்­தினம் பாரா­ளு­மன்ற செய­லாளர் நாயகம் தம்­மிக்க தச­நா­யக்­க­விடம் கைய­ளித்­தனர். இந்த நகர்­வு­களின் பின்னர் முன்­னெ­டுக்­க­வுள்ள செயற்­பா­டுகள் குறித்து வின­விய போதே அவர்கள் இக் கருத்­தினை முன்­வைத்­தனர், இது குறித்து

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுசில் பிரே­ம­ஜ­யந்த கூறு­கையில்.

ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் கூட்­டணி வைத்து ஆட்­சி­யினை முன்­னெ­டுக்க முடி­யாது. அவர்­களின் செயற்­பா­டு­களும் கொள்­கை­களும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யுடன் ஒன்­றித்து போக முடி­யாது. அதேபோல் ஊழல் குற்­றங்­களைத் தண்­டிப்­ப­தாக கூறிய போதும் அவர்­களின் தரப்பில் இடம்­பெறும் பாரிய ஊழல்கள் குறித்து எந்­த­வித நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுக்க முடி­யாத நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யாக நாம் தேசிய அர­சாங்­கத்தில் நியா­ய­மாக செயற்­படும் நிலையில் அதற்கும் தடைகள் ஏற்­ப­டு­கின்­றன. ஆக­வேதான் நாம் பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை ஆத­ரித்து அதன் பின்னர் தேசிய அர­சாங்­கத்தில் இருந்து வெளி­யேற தீர்­மானம் எடுத்தோம். இதனால் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சிக்குள் எந்த முரண்­பா­டு­களும் ஏற்­ப­ட­வில்லை. ஜனா­தி­ப­தியின் பூரண ஆத­ர­வுடன் நாம் இந்தத் தீர்­மா­னத்தை முன்­னெ­டுத்­துள்ளோம். எதிர்க்­கட்­சி­யாக நாமும் செயற்­படத் தீர்­மானம் எடுத்­ததன் மூல­மாக ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் ஆத­ர­வா­ளர்­க­ளுடன் இணைந்து கட்­சி­யினை மேலும் பல­மாக கட்­டி­யெ­ழுப்ப முடியும். அதற்­கான நட­வ­டிக்­கை­க­ளையும் நாம் முன்­னெ­டுக்­க­வுள்ளோம். எவ்­வாறு இருப்­பினும் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆட்­சி­யினை வீழ்த்தி மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் தனி அர­சாங்கம் ஒன்றை உரு­வாக்­கு­வதே எமது நோக்­க­மாகும். அதற்­கான முதற்­கட்ட போராட்­டமே இப்­போது ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது எனவும் அவர் குறிப்­பிட்டார்.

இது குறித்து பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சந்­திம வீரக்­கொடி கருத்துத் தெரி­விக்­கையில்,

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தனி அர­சாங்கம் ஒன்றை உரு­வாக்­கு­வதே எம் அனை­வ­ரதும் நோக்­க­மாகும். அதற்­கான போராட்டம் இப்­போது ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. தேசிய அர­சாங்­கத்தில் இருந்து விடு­பட்டு நாம் எதிர்க்­கட்­சி­யாக செயற்­படும் காலத்தில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் ஆட்­சியை வீழ்த்தி மீண்டும் எமது தனி அர­சாங்­கத்தை உரு­வாக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோள் மட்­டுமே உள்­ளது. அதற்­கா­கவே நாம் எதிர்க்­கட்சி ஆச­னங்­களைத் தெரிவு செய்­துள்ளோம். மேலும் அர­சாங்­கத்தில் முழு­மை­யான மீள் உரு­வாக்கம் ஒன்று இடம்­பெற வேண்­டி­யுள்­ளது. அதேபோல் நாம் எதிர்க்­கட்­சியில் அங்கம் வகிக்கும் நிலையில் கூட்டு எதிர்க்­கட்­சி­யுடன் இணைந்து செயற்படவும் தயார். அதேபோல் தேசிய அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி விரைவில் முழுமையாக வெளியேற வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திலும் தெளிவாகக் கூறியுள்ளோம். ஜனாதிபதி விரைவில் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பார் என நம்புகிறோம் எனவும் அவர் குறிப்பிட்டார். 

ரூபாவின் பெறு­மதி வீழ்ச்சி தற்­கா­லி­க­மா­னது : மத்­திய வங்கி ஆளுநர் கூறு­கிறார்

 

எஸ்.வினோத்

ரூபாவின் பெறு­மதி வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ள­மை­யினால் நாட்டின் கடன் சுமை அதி­க­ரிக்கும் என கருத்து நில­வு­கின்­றது. இது தவ­றான கருத்­தாகும் வெ ளிநா­டு­களில் இருந்து கடன் பெறும் போது அது டொலர்

வடி­வி­லேயே பெறப்­ப­டு­கின்­றது எனவே ரூபாவின் பெறு­மதி வீழ்ச்சி எவ்­வ­கை­யிலும் கடன் சுமையை பாதிக்­காது அத்­துடன் ரூபாவின் பெறு­மதி வீழ்ச்­சியும் தற்­கா­லி­க­மா­னது என மத்­திய வங்­கியின் ஆளுநர் இந்­தி­ரஜித் குமா­ர­சு­வாமி தெரி­வித்தார்.

 மத்­திய வங்­கியில் இடம்­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டின் போது ஊட­க­வி­ய­லா­ளர்கள் எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளிக்கும் போதே அவர் இதனை தெரி­வித்தார். இது குறித்து அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது

தற்­போது இலங்கை ரூபாவின் பெறு­மதி வீழ்ச்­சி­கண்­டுள்­ளது. சந்தை நில­வ­ரத்தை அடிப்­ப­டை­யாக கொண்டே அந்­நிய செலா­வணி விகிதம் நிர்­ண­யிக்­கப்­ப­டு­கின்­றது. கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் பிற்­பட்ட காலப்­ப­கு­தியில் இருந்து மத்­திய வங்கி அந்­நிய செலா­வணி குறித்து அதிக கவனம் செலுத்த வில்லை இதனால் தற்­போது ரூபாவின் பெறு­மதி வீழ்ச்­சி­கண்­டுள்­ளது. நாம் செலா­வணிக் கையி­ருப்பை அதி­க­ரிப்­பது குறித்தே அதிக கவனம் செலுத்­தினோம். அதனால் தற்­போது 10 பில்­லியன் டொலர் அந்­நிய செலா­வணி இருப்பை எம்மால் தக்க வைத்­துக்­கொள்ள முடிந்­துள்­ளது.

கடந்த காலங்­களில் ரூபாவின் பெறு­ம­தியில் பாரிய வீழ்ச்சி ஏற்­பட்டு வரு­கின்­றது. அதே போன்று வெ ளிநாட்டு நாணய மாற்று விகி­தத்தில் ஏற்ற இறக்­கமும் ஏற்­பட்டு வரு­கின்­றது.அது அந்­நிய செலா­வணி சந்­தையில் காணக்­கூ­டிய இயல்­பாகும்.குறு­கிய காலத்தில் நிலவும் கேள்வி நிரம்­ப­லுக்கு அமை­வாக எதிர்­கா­லத்தில் பாரிய மாற்றம் ஏற்­படும். அது பொது­வாக இம்­பெறும் ஒன்­றாகும்.

எனினும் ரூபாவின் பெறு­மதி தொடர்ச்­சி­யாக வீழ்ச்­சி­ய­டை­யு­மாயின் அதை கட்­டுப்­ப­டுத்த மத்­திய வங்கி தலை­யிடும் அந்த அதி­காரம் மத்­திய வங்­கிக்கு உள்­ளது.

இருப்­பினும் இந்த வீழ்ச்சி எதிர்­வரும் ஓரிரு மாதங்­க­ளுக்கு மாத்­தி­ரமே இருக்கும். பின்னர் ரூபாவின் பெறு­மதி வலு­வ­டையும். ஹம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தின் இறுதி கொடுப்­ப­னவு கிடைக்­கப்­பெ­று­வுள்­ளது அதன் மூலம் அந்­நிய செலா­வணி இருப்பு அதி­க­ரித்து ரூபாவின் பெறு­மதி வலு­வ­டையும்.

இந்­நி­லையில் ரூபாவின் பெறு­மதி வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ள­மை­யினால் நாட்டின் கடன் சுமையும் அதி­க­ரிக்கும் என சிலர் கருத்து தெரி­விக்­கின்­றனர். இது நியா­ய­மற்ற கருத்­தாகும். நாட்டின் ரூபா பெறு­மதி வீழ்ச்­சி­யா­னது கடன் சுமைக்கு எவ்­வித பாதிப்­பையும் ஏற்­ப­டுத்­தாது காரணம் அர­சாங்கம் வெளி­நா­டு­களில் இருந்து கடன் பெறும் போது டொலர் வடி­வி­லேயே அக்­கடன் பெறப்­ப­டு­கின்­றது. அதை மீண்டும் செலுத்தும் போது டொலர் பெறு­ம­தி­யி­லேயே செலுத்த வேண்டும் அவ்­வா­றான நிலையில் அந்­நிய செலா­வணி கையி­ருப்­பையே அது பாதிக்கும். மாறாக மொத்த கடன் தொகையை ரூபாவின் பெறு­ம­தியில் கணக்கிட்டு பார்க்கும் பட்சத்திலேயே அது அதிகரித்து காட்டும் எனினும் அந்த கணக்கீடு கடனை டொலர் வடிவில் செலுத்தும் போது தாக்கத்தை ஏற்படுத்தாது.

எனவே அரசாங்கம் அந்நிய செலாவணி வருமானத்தை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2018-04-29#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.