Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாளை பதவியேற்கிறது புதிய அமைச்சரவை – ஆச்சரியங்களுக்கு வாய்ப்பில்லை

Featured Replies

நாளை பதவியேற்கிறது புதிய அமைச்சரவை – ஆச்சரியங்களுக்கு வாய்ப்பில்லை

 

cabinet-300x200.jpgசிறிலங்காவின் புதிய அமைச்சரவை நாளை பதவியேற்கவுள்ள நிலையில், இந்த அமைச்சரவை ஆச்சரியத்துக்குரிய ஒன்றாக இருக்க வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாளை காலை 10 மணிக்கு அதிபர் செயலகத்தில் புதிய அமைச்சரவை நியமனங்கள் இடம்பெறவுள்ளன.

புதிய அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்கான துறைகள் பற்றிய இறுதிப் பட்டியல் இன்று காலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் ஐதேகவினால் வழங்கப்படவுள்ளது.

இந்த அமைச்சரவையில் பெரியளவிலான மாற்றங்கள் இருக்காது என்று கூறப்படுகிறது.

அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வைத்திருந்த அமைச்சுக்கள், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஏனைய உறுப்பினர்களிடம் பகிர்ந்தளிக்கப்படும்.

இவ்வாறு விலகிச் சென்றவர்கள் மீண்டும் அமைச்சரவையில் இணைந்து கொள்ளும் சாத்தியங்கள் இல்லை என்றும், அவர்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர முடிவு செய்துள்ளனர் என்றும் சிறிலங்கா அதிபருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

http://www.puthinappalakai.net/2018/04/30/news/30651

  • தொடங்கியவர்

புதிய அமைச்­ச­ரவை நாளை பத­வி­யேற்பு: அமைச்­சுக்கள், இலாகா ஒதுக்­கீ­டுகள் குறித்தும் இரண்டு பிர­தான கட்­சி­களும் இணக்கம்

09-0708c939e581c3c9148e01e83440e0e90001d264.jpg

 

(ரொபட் அன்­டனி)

பல்­வேறு சர்ச்சை நிலை­மை­க­ளுக்கு மத்­தியில் தேசிய நல்­லாட்சி அர­சாங்­கத்தின் புதிய அமைச்­ச­ரவை நாளை செவ்­வாய்க்­கி­ழமை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் பத­வி­யேற்­க­வுள்­ளது.

அந்­த­வ­கையில் தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்­கின்ற ஐக்­கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சியின் உறுப்­பி­னர்­க­ளுக்கு எவ்­வா­றான அமைச்சுப் பத­வி­களை வழங்­கு­வது என்­பது தொடர்­பான இணக்­கப்­பா­டு­களும் எட்­ட­பட்­டுள்ள நிலை­யிலும் அது தொடர்­பான விப­ரங்கள் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள நிலை­யி­லுமே நாளை­ய­தினம் புதிய அமைச்­ச­ரவை பத­வி­யேற்­க­வுள்­ளது.  

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கும் இடையில் கடந்த வௌ்ளிக்­கி­ழமை இரவு நடை­பெற்ற விசேட பேச்­சு­வார்த்­தை­யின்­போதே மே மாதம் முதலாம் திகதி புதிய அமைச்­ச­ர­வைக்­கான அமைச்­சர்­களை நிய­மிக்க தீர்­மானம் எடுக்­கப்­பட்­டது.

அதன்­படி நாளை காலை 10 மணி­ய­ளவில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் புதிய அமைச்­ச­ரவை பத­வி­யேற்­க­வுள்­ளது. இதில் கலந்­து­கொள்­ளு­மாறு அனைத்து உறுப்­பி­னர்­க­ளுக்கும் அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.

இத­னி­டையே தற்­போது எவ்­வா­றான அமைச்சுப் பத­விகள் இரண்டு கட்­சி­க­ளுக்கும் இடையில் பறி­மா­றப்­ப­ட­வுள்­ளன என்­பது குறித்து ஆரா­யப்­பட்­டு­வ­ரு­கின்­றது. அதா­வது சுதந்­திரக் கட்­சி­யி­லி­ருந்து 16 பேர் அண்­மையில் அர­சாங்­கத்­தி­லி­ருந்து வில­கினர். இவர்­களில் 6 பேர் அமைச்­ச­ரவை அமைச்­சர்­க­ளாக இருந்­த­வர்கள்.

இந்­நி­லையில் புதிய அமைச்­ச­ரவை பத­வி­யேற்­பின்­போது குறித்த ஆறு அமைச்­சுக்­களும் சுதந்­திரக் கட்­சிக்கே வழங்­கப்­ப­ட­வுள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது. சுதந்­திரக் கட்­சியின் சார்பில் அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்­கின்ற 23 பேரில் 6 பேருக்கே இந்த அமைச்சுப் பத­விகள் வழங்­கப்­ப­ட­வுள்­ளன.

அத்­துடன் புதிய அமைச்­ச­ர­வை­யா­னது விஞ்­ஞான ரீதி­யா­ன­தாக சரி­யான இலா­கா­கக்­களை பொருத்­த­மான அமைச்­சுக்­க­ளுக்கு ஒதுக்கும் வகையில் அமைந்­தி­ருக்கும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. குறிப்­பாக பொருத்­த­மற்ற வகையில் அமைச்சு ஒதுக்­கீ­டு­களோ இலாகா ஒதுக்­கீ­டு­களோ இருக்­காது என்றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஏற்­க­னவே இலாகா ஒதுக்­கீ­டுகள் குறித்த பேச்­சு­வார்த்­தைகள் நிறை­வ­டைந்­து­விட்­டன. ஜனா­தி­ப­தியின் செய­லா­ளரும் பிர­த­மரின் செய­லா­ளரும் இது தொடர்பில் பேச்சு நடத்தி தற்­போது இணக்­கப்­பாட்­டுக்கு வந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

நீண்ட தாம­தத்தின் பின்னர் கடந்த பெப்­ர­வரி 10ஆம் திகதி உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்தல் நடந்­தது. அந்த தேர்­தலில் எதிர்­பா­ராத வித­மாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் சிறி­லங்கா பொது­ஜன பெர­முன 40 வீத­மான வாக்­கு­களைப் பெற்று வெற்­றி­யீட்­டி­யது. சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி பல்­வேறு சின்­னங்­களில் போட்­டி­யிட்டு 14 வீத­மான வாக்­கு­க­ளையே பெற்­றது.

அத்­துடன் தேசிய அர­சாங்­கத்தின் பிர­தான அர­சியல் கட்­சி­யான ஐக்­கிய தேசி­யக்­கட்சி 30 வீத­மான வாக்­கு­க­ளையே பெற்­றது. இதன் பின்னர் தேசிய அர­சாங்கம் நெருக்­க­டிக்­குள்­ளா­கி­யது. குறிப்­பாக சிறி­லங்கா பெர­முன கட்­சி­யா­னது மக்கள் தம்மை ஆத­ரித்­துள்­ள­தாக தெரி­வித்­த­துடன் பொது­தேர்­தலை நடத்­து­மாறு கோரிக்கை விடுத்­தது. அத்­துடன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பதவி விலகி விட்டு ஐக்­கிய தேசி­யக்­கட்­சியில் வேறொ­ரு­வ­ருக்கு பிர­தமர் பத­வியை வழங்­கு­மாறு கோரினார். அதனை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க முற்­றாக மறுத்­து­விட்டார். அது­மட்­டு­மன்றி தான் பிர­தமர் பத­வி­யி­லி­ருந்து வில­க­மாட்டேன் என்றும் பிர­தமர் அறி­வித்­தி­ருந்தார்.

இந்த சூழலில் கூட்டு எதி­ரணி பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையைக் கொண்­டு­வந்­தது. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை சபா­நா­ய­க­ரிடம் சமர்ப்­பித்தார். அதன் பின்னர் தேசிய அர­சாங்­கத்தின் நெருக்­கடி நிலைமை தீவி­ர­ம­டைய ஆரம்­பித்­தது.

 எவ்­வா­றெ­னினும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை தோற்­க­டித்து வெற்­றி­யீட்­டினார். அவ்­வாறு நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தோற்­க­டித்த பின்­னரும் கூட தேசிய அர­சாங்­கத்தில் ஏற்­பட்­டி­ருந்த நெருக்­கடி நிலை தீர­வில்லை.

காரணம் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை மீதான வாக்­கெ­டுப்பின் போது சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் 16 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பிர­த­ம­ருக்கு எதி­ராக வாக்­க­ளித்­தனர். இதனால் தேசிய அர­சாங்கம் மீண்டும் நெருக்­க­டிக்­குள்­ளா­கி­யது. குறித்த சுதந்­தி­ரக்­கட்­சியின் 16 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் நல்­லாட்­சியில் வகித்த அனைத்து பத­வி­க­ளையும் இரா­ஜி­னாமா செய்­தனர். இதனால் தேசிய அர­சாங்கம் தொட­ருமா என்ற சந்­தேகம் மீண்டும் ஏற்­பட்­டது.

எவ்­வா­றெ­னினும் பொது­ந­ல­வாய மாநாட்டில் கலந்­து­கொள்ள லண்டன் சென்­றி­ருந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நாடு­தி­ரும்­பி­யதும் சுதந்­தி­ரக்­கட்­சியின் மத்­தி­யக்­குழு கூட்டம் நடந்­ததும் அதில் சுதந்­தி­ரக்­கட்­சியின் 23 பேரும் தேசிய அர­சாங்­கத்தில் நீடிப்­பார்கள் என்றும் பிர­த­மரை எதிர்த்து வாக்­க­ளித்த 16 பேரும் எதி­ர­ணியில் அம­ரலாம் என்றும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

அதன்­ப­டியே தற்­போது தேசிய அர­சாங்கம் தொட­ர­வுள்­ள­துடன் புதிய அமைச்­ச­ர­வையும் பத­வி­யேற்­க­வுள்­ளது. அது தொடர்பில் அண்­மையில் கருத்து வெ ளியிட்­டி­ருந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நாட்டு மக்கள் நம்­பிக்கை வைக்­கக்­கூ­டிய வகை­யி­லான புதிய அமைச்­ச­ர­வையை உருவாக்குவதற்கு திட்டமிட்டுள்ளேன். புதிய அமைச்சரவையை நியமிக்கும்போது அமைச்சுப் பதவி வழங்கப்படுகின்றவர்களின் சர்வதேச பிரதிபலிப்பு குறித்து பரிசீலிக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் அமைச்சரவை மாற்றம் இடம்பெறப்போவதில்லை. மாறாக புதிய அமைச்சரவையை உருவாக்குவதற்கு திட்டமிட்டுள்ளேன். குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகி பதவி விலக்கப்பட்ட அமைச்சர்களை மீண்டும் நியமிப்பதா இல்லையா என்பது குறித்து அரசியல் கட்சிகளே தீர்மானம் எடுக்கவேண்டும்.

நான் இம்முறை அமைச்சர்களை நியமிக்கும்போது அவர் அந்த பதவிக்கு தகுதியானவரா என்பது குறித்து தேடிப்பாரப்பேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

புதிய அமைச்­ச­ர­வையில் விஜே­தாச, ரவி, பாலித்த?

0011-708e537dab2fc21719c4e8d16f3a1064cb8846ab.jpg

 

(ரொபட் அன்­டனி)

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­ பால சிறி­சேன தலை­மை யில் நாளை நடை­பெ­ற­ வுள்ள புதிய அமைச்­ச­ரவை பத­வி­யேற்கும் போது கடந்த  வருடம் பத­வி­யேற்க்­கப்­பட்ட ஐக்­கிய தேசியக் கட்­சியின் விஜ­ய­தாஸ ராஜ­பக்ஷ மற்றும் ரவி கரு­ணா­ந­யக்க ஆகி­யோ­ருக்கு அமைச்­ச­ரவை அமைச்சுப் பத­விகள் வழங்­கப்­ப­டலாம் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.  

இது தொடர்பில் குறித்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுடன் பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தப்­பட்­டி­ருப்­ப­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அத்­துடன் புத்­தளம் மாவட்ட ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான பாலித்த ரங்க பண்­டா­ர­வுக்கு அமைச்­ச­ரவை அமைச்சுப் பத­வி­யொன்று வழங்­கப்­ப­டலாம் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

அதே­போன்று மேலும் பல மாற்­றங்கள் புதிய அமைச்­ச­ர­வையில் இருக்கும் என்றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

இதே­வேளை ஐக்­கிய தேசியக் கட்­சியின் அர­சாங்கம் அமைக்­கப்­பட்டால் அமைச்சுப் பத­வியேற் கத் தயார் என்றும் தேசிய அர­சாங்கம் நீடிக்­கு­மாயின் அமைச்சுப் பத­வியை பொறுப்­பேற்க முடி­யாது என்றும் விஜ­ய­தாஸ ராஜ­பக்ஷ தெரி­வித்­தி­ருப்­ப­தாக தெரி­கி­றது. விஜ­ய­தாஸ ராஜ­பக்ஷ நல்­லாட்சி அர­சாங்­தக்தில் நீதி அமைச்­ச­ராக பதவி வகித்த நிலையில் கடந்த வருடம் பதவி நீக்கம் செய்­யப்ட்டார்.

அதே­போன்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரவி கரு­ணா­ந­யாக்­க­வுக்கு அமைச்­ச­ரவை அமைச்சுப் பத­வி­யொன்று வழங்­கப்­ப­டலாம் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. நல்­லாட்சி அர­சாங்­கத்தில் நிதி அமைச்சு மற்றும் வெ ளிவி­வ­கார அமைச்சுப் பத­வி­களை ரவி கரு­ணா­நா­யக்க வகித்­தி­ருந்தார். அவர் இம்­முறை அமைச்­ச­ரவை மற்­றத்தின் போது அமைச்­ச­ர­வைக்குள் உள்­வாங்­கப்­ப­டுவார் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

அத்­துடன் புத்­தளம் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பாலித்த ரங்க பண்­டா­ர­வுக்கு அமைச்­ச­ரவை அமைச்சுப் பத­வி­யொன்று வழங்­கப்­படும் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அண்­மைக்­கா­ல­மாக ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலைவர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ராக பாலித்த ரங்க பண்­டார கருத்­துக்­களை வெ ளியிட்டு வந்த போதிலும் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை மீதான வாக்­கெ­டுப்­பின்­போது பிர­த­ம­ருக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­தி­ருந்தார்.

அதே­போன்று தேசிய அர­சாங்­கத்தின் புதிய அமைச்­ச­ர­வையில் மேலும் பல மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அமைச்சர் சரத் பொன்சேகாவுக்கு வேரு ஓர் அமைச்சுப் பதவி கிடைக்கலாம் என கூறப்படுகிறது. அத்துடன் ராஜத சேனாரட்ணவுக்கும் வேறு ஓர் அமைச்சுப் பதவி கிடைக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.  

எஸ்.பி.திசா­நா­யக்­கவின் அமைச்சு பொன்­சே­கா­வுக்கு?

11-bf2c22f042ad75f3add9d21525d9f202ea577e36.jpg

 

(எம்.எம்.மின்ஹாஜ்)

தேசிய அர­சாங்­கத்தின் அமைச்­ச­ரவை மாற் றம் நாளை செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெ­ற­வுள்ள நிலையில் சுதந்­திரக் கட்­சி­யிடமிருந்து சமூக நலன்­புரி அமைச்சு (சமுர்த்தி) ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு வழங்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் குறித்த அமைச்சை  பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சே­கா­வுக்கு வழங்­கு­மாறு ஐக்­கிய தேசியக் கட்சி பரிந்­துரை செய்­துள்­ள­தா­கவும் அர­சியல் வட்­டார தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. 

அத்­துடன் ஐக்­கிய தேசியக் கட்­சி­யிடம் இருந்த இரு அமைச்­சுகள் சுதந்­திரக் கட்­சிக்கு வழங்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் தெரி­ய­வ­ரு­கின்­றது.

தேசிய அர­சாங்­கத்தில் அமைச்­ச­ர­வையில் மாற்றம் செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் மும்­மு­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. அதற்­கான பேச்­சு­வார்த்­தை­களும் தொடர்ந்தும் இடம்­பெற்று வரு­கின்­றன.

இந்­நி­லையில் அமைச்­ச­ரவை மாற்­றத்­திற்­கான ஏற்­பா­டு­களை ஜனா­தி­பதி செய­ல­கமும் பிர­தமர் செய­ல­கமும் இறுதி செய்­துள்­ளது. இதன்­படி தற்­போது பத­வி­யேற்கும் நிகழ்வு மாத்­தி­ரமே எஞ்­சி­யுள்­ளது.

அமைச்­ச­ரவை மாற்­றத்தின் போது சுதந்­திரக் கட்­சி­யிடம் இருந்த சமூக நலன்­புரி அமைச்சு (சமுர்த்தி) ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு வழங்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் குறித்த அமைச்சை பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சே­கா­வுக்கு வழங்­கு­த­வ­தற்கு ஐக்­கிய தேசி­யக பரிந்­துரை செய்­துள்­ளது.

அத்­துடன் ஐக்­கிய தேசியக் கட்சியிடம் இருந்து உயர் கல்வி மற்றும் அரச முகாமைத்துவம் ஆகிய அமைச்சுகள் சுதந்திரக் கட்சிக்கு வழங்கவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-04-30#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.