Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் ரீதியான சிக்கலை ஏற்படுத்தியிருக்கும் ‘வெசாக்’

Featured Replies

அரசியல் ரீதியான சிக்கலை ஏற்படுத்தியிருக்கும் ‘வெசாக்’ பி.மாணிக்கவாசகம்

wesak.jpg?resize=275%2C183

வெசாக் பண்டிகை நாட்டின் பல பகுதிகளிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டிருக்கின்றது. இது பௌத்த மதத்தின் முக்கியமான பண்டிகையாகும். உலக நாடுகளில் பௌத்தர்கள் வாழும் இடங்களில் இது சிறப்பாகக் கொண்டாடப்;படுகின்றது. இலங்கையில் அதிக முக்கியத்துவம் மிக்கதாகக் கருதப்படுகின் இது. அரசாங்க பண்டிகையாக மிகப் பரந்த அளவில் கொண்டாடப்படுகின்றது. ஆனால், அந்தக் கொண்டாட்டம் பௌத்த மதக் கலாசாரத்தைப் பின்பற்றி அதனை, பேணி பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ள போதிலும், அது எல்லையைக் கடந்து அதனை சிறப்படையச் செய்கின்ற ஒரு நடவடிக்கையாக அமைந்திருக்கின்றது.

 

நாட்டின் பிரதான மதத்தவர்களுடைய பண்டிகை என்பதற்கு அப்பால், வெசாக் அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. பெரும்பான்மை இன மக்களின் இந்த மத உரிமைக் கலாசாரம் என்பது, பிற சமூகங்கள் மீது வலிந்து திணிக்கின்ற அரசியல் மயமான ஆக்கிரமிப்புச் செயற்பாடாக பரிணமித்துள்ள வெசாக் பண்டிகை இம்முறை மத ரீதியான மேலாதிக்கத்தை வெளிப்படுத்தியிருக்கின்றது. இந்த நிலைமை அரசியலையும் மேவியிருக்கின்றது. அரசியலில் புதிய சிக்கல்களையும் உருவாக்கியிருக்கின்றது.

அஹிம்சையைப் போதித்த புத்த பெருமான் இந்தியாவில் லும்பினி என்றழைக்கப்படும் நேபாளம் என்று இப்போது குறிப்பிடப்படுகின்ற இடத்தில் பிறந்த நாள், புத்தகாயா என்ற இடத்தில் பௌத்த நிலையை அடைந்த நாள் மற்றும், அவர் குசிநகர் என்ற இடத்தில் பரிநிர்வாணம் அடைந்த (இறந்த) நாள் ஆகிய மூன்று நிகழ்வுகளையும் குறித்துக் கொண்டாடுவதாக வெசாக் பண்டிகை அமைந்திருக்கின்றது.

இலங்கை, தாய்லாந்து, வியட்நாம், ஜப்பான், சீனா, கம்போடியா உள்ளிட்ட பல உலக நாடுகளில் வெசாக் பண்டிகை முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இங்குள்ள பௌத்த மக்கள் இந்தப் பண்டிகையை பாரம்பரியமாக வருடந்தோறும் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். இலங்கையில் 1950 ஆம் ஆண்டு பௌத்தமதத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் ஒன்று கூடி, வெசாக் பண்டிகையை கௌதம புத்தர் பரிநிர்வாணம் அடைந்த நாளாகக் கொண்டாடுவதற்குத் தீர்மானித்தனர். இந்தத் தீர்மானத்தையடுத்து, கடந்த 18 ஆண்டுகளாக இலங்கையில் வெசாக் பண்டிகை வெகு கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றது.

இந்தக் கொண்டாட்டங்கள் நாட்டின் தலைநகர் கொழும்பு உட்பட தென்பகுதிகளில் பௌத்த மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பிரதேசங்களில் மின் வெளிச்சக் கூடுகள், மின் அலங்காரக் கட்டமைப்புக்கள் என்பவற்றை நிறுவி பலரையும் வசீகரிக்கத்தக்க வகையில் இடம்பெற்று வருகின்றன.

நாட்டில் முப்பது வருடங்களாகத் தொடர்ந்த யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து, பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக யுத்தத்தில் ஈடுபடுத்தப்பட்டதாகக் கூறப்படுகின்ற இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள இடங்களுக்கு இந்தக் கொண்டாட்டங்கள் பரவியிருக்கின்றன. குறிப்பாக தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் வெசாக் பண்டிகைக்கான பெருந் தெருக்களிலான அலங்காரங்கள் புத்த பெருமானின் போதனைகளையும் வரலாற்றையும் வெளிப்படுத்துகின்ற இசை நிகழ்வுகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த அலங்காரங்களும் பௌத்த கலாசாரத்தையொட்டிய நிகழ்வுகளும், பார்ப்பவர்களுக்கு பௌத்த மக்கள் இல்லாத இந்தப் பிரதேசங்கள், பௌத்த மக்கள் பாரம்பரியமாக செறிந்து வாழ்கின்ற பிரதேசங்களாக இருக்க வேண்டும் என்ற மனத்தோற்றத்தை ஏற்படுத்துபவனவாக அமைந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

வெசாக் பண்டிகையானது, வைகாசி விசாக தினத்தையொட்டியதாக ஒரு வார காலத்திற்குக் கொண்டாடப்படுகின்றது. இந்தக் கொண்டாட்டங்களின்போது, தன்சல என்று பௌத்த மக்களால் அழைக்கப்படுகின்ற தண்ணீர்ப் பந்தல்கள் பெருந்தெருக்களில் அமைக்கப்பட்டு, அங்கு தாக சாந்திக்கான குளிர்பானங்களும், உணவும் வழங்கப்படுகின்றது. இந்த இடங்களைச் சூழவுள்ள இக்கள் இவற்றில் பெரும் எண்ணிக்கையில் இவற்றில் விருப்பத்தோடு கலந்து கொள்வார்கள்.

அதேவேளை, வெசாக் பண்டிகை ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ள தொண்டர்கள், கைகளில் ஏந்தியுள்ள கொடிகளில் சைகை செய்து வீதிகளில் செல்கின்ற வாகனங்களை நிறுத்தச் செய்து, அவற்றில் பயணம் செய்பவர்களை வழிமறித்து, அழைத்து, குளிர்பானமும், உணவும் வழங்கி விருந்து படைப்பதைக் காணலாம். பெருந்தெருக்கள் நெடுகிலும் ஆங்காங்கே வேறு வேறு நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து தாகசாந்தி நிலையங்களிலும் இந்த விருந்தோம்பல் இடம்பெறுவது வழக்கம்.

இந்த விருந்தோம்பல் பயணிகளின் தாகத்தையும் பசியையும் தணித்து மகிழ்விக்கின்ற போதிலும், அன்புத் தொல்லையாகவும், எல்லை மீறிய வகையில் பயணிகளை மத அனுஸ்டான கலாசர ரீதியில் சங்கடப்படுத்துகின்ற சம்பவங்களாகவும் அமைந்துவிடுகின்றன. இது, வெசாக் பண்டிகையைக் கொண்டாடுபவர்களின் தாராள சிந்தனையுடன் கூடியதாக ஏனையவர்களை மகிழ்விப்பதற்குப் பதிலாக மனம் கோணச் செய்துவிடுகின்றன. இந்த விருந்தோம்பலில் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருப்பவர்களிடம் வீதிகளில் பயணம் செய்பவர்கள் தமது மனச் சங்கடங்களை வெளிப்படுத்த முடியாமலும், விருந்தோம்பலை நாகரிகமாக மறுக்க முடியாமலும், அவர்களின் மத அனுஸ்டானம் சார்ந்த ஆக்கிரமிப்பில் சிக்கித் திண்டாடுவது வெசாக் பண்டிகை நேரத்தில் சாதாரண நிகழ்வாக இடம்பெற்று வருகின்றது. இது ஒரு வழமையான நிகழ்வாகத் தொடர்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அவ்வாறான நிலைமைக்குள்ளேயும், வடக்கில் வெசாக் பண்டிகையையொட்டி நிறுவப்படுகின்ற அலங்காரங்களையும், இசை நிகழ்ச்சிகளையும் பார்ப்பதற்காக மக்கள் பெரும் எண்ணி;க்கையில் கூடுகின்றார்கள். வெசாக் பண்டிகை அரச பண்டிகை என்பதனால், அதன் ஆரம்ப நிகழ்வுகளிலும், முக்கிய நிகழ்வுகளிலும் பிற மதங்களையும், பிற சமூகங்களையும் சார்ந்த முக்கியஸ்தர்களும் கலந்து கொள்வதையும் காண முடிகின்றது. இவர்கள் அரச வைபவம் என்ற காரணத்திற்காகவா, அல்லது வெசாக் பண்டிகை ஏற்பாட்டாளர்களின் நிர்ப்பந்தத்திற்காகவா இவ்வாறு கலந்து கொண்டு அந்த நிகழ்வை சிறப்பிக்கின்றார்கள் என்று தெரியவில்லை.

அதேவேளை, வெசாக் பண்டிகையின் அலங்காரங்களையும் மின்னொளிக் கூடுகள், மின்னொளி அமைப்புக்களையும் வேடிக்கை பார்ப்பதற்காகக் கூடுகின்ற பிற சமூகங்களைச் சேர்ந்த மக்கள் கூட்டமானது, நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கமும், சமத்துவமும் சமாதானமும் ஏற்பட்டிருக்கின்றது என்று பிரசாரம் மேற்கொள்கின்ற ஒரு போக்கும் காணப்படுகின்றது.

வெசாக் பண்டிகையும் உலக தொழிலாளர் தினமாகிய மேதினமும்

வழமையான வெசாக் தின ஆரவாரங்கள் இந்த 2018 ஆம் ஆண்டில் உலக தொழிலாளர் தினமாகிய மேதினத்துடன் சேர்ந்து அமைந்து அரசியல் ரீதியான அமளியை ஏற்படுத்திவிட்டிருக்கின்றன.

வழமையாக வைகாசி மாத வைகாசி விசாகம் என குறிப்பிடப்படுகின்ற பூரணை தினத்தில் கொண்டாடப்படுகின்ற வெசாக் பண்டிகை இம்முறை சித்திரா பருவம் என அழைக்கப்படுகின்ற சித்திரை மாதத்துப் பௌர்ணமி தினத்தில் அமைந்துவிட்டமையே இந்த நிலைமைக்கான காரணமாகும்.

தமிழ் சிங்கள புத்தாண்டு சித்திரை மாதத்தில் அதாவது ஏப்ரல் மாதத்திலேயே வருவதுண்டு. , சித்திரைப் புத்தாண்டு கோலாகலத்தின் பின்னர் அதற்கு அடுத்த மாதத்திலேயே வெசாக் பண்டிகையின் விழாக்கோலத்தில் பௌத்த மக்கள் ஈடுபடுவார்கள். ஆனால் இம்முறை அது மாற்றத்திற்கு உள்ளாகிவிட்டது,

பௌத்த மக்களுக்கு ஒவ்வொரு மாதமும் வருகின்ற பூரணை தினம் முக்கியமானது. அவற்றில் ஆங்கிலேய வருடத்தின் படி மே மாதத்தில் வருகின்ற பூரணை தினமாகிய வெசாக் பண்டிகையும், அதற்கு அடுத்ததாக வருகின்ற பொசன் பூரணை தினமும் முக்கியமானதாகும். ஆனால் இம்முறை ஜனவரி மாதத்தில்; இரண்டு பூரணை தினங்கள் இடம்பெற்றுவிட்டன. அதன் காரணமாகவே வருடத்தின் ஐந்தாவது பூரணை தினமாகிய வெசாக் பண்டிகை ஏப்ரல் மாதத்தில் முந்தி வந்துவிட்டது என்று பௌத்த மதத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவர் விளக்கமளித்தார்.

ஆனால், மேதினமும் இம்முறை ஏப்ரல் மாதத்து பூரணைதின வாரத்திற்குள் அமைந்துவிட்டதனால், மேதினத்தையும் வெசாக் பண்டிகையையும் ஒரே சமயத்தில் கொண்டா முடியாத இக்கட்டான சூழல் ஏற்பட்டுவிட்டது என்றும் அவர் விபரித்தார்.

வெசாக் பண்டிகை உலகெங்கும் பௌத்தர்களினால் கொண்டாடப்படுகின்ற பண்டிகை. அந்தப் பண்டிகையை வேறு தினத்தில் கொண்டாட முடியாது. அதேபோன்று உலக தொழிலாளர் தினமாகிய மேதினம் மே மாதம் முதலாம் திகதியே கொண்டாடப்படுகின்றது. அதை வேறு தினத்தில் அனுட்டிக்கப்படுவதில்லை.

இனங்கள், மதங்கள் என்ற எல்லைகளைக் கடந்து வர்க்கரீதியான கூட்டிணைவைக் கொண்ட மேதினமா அல்லது உலகத்தில் வாழ்கின்ற பௌத்த மக்களின் முக்கிய பண்டிகையாகிய வெசாக் பண்டிகையா எது முக்கியத்துவம் மிக்கது என்ற கேள்வி இலங்கையில் எழுந்தது. இந்தக் கேள்விக்குத் தீர்வு காண்பதற்காக பௌத்த மத பண்டிகை அனுட்டானத்தை முதன்மைப்படுத்தி எடுக்கப்பட்ட முடிவினால் அரசியல் ரீதியான சிக்கல்கள் உருவாகியிருக்கின்றன.

வெசாக் பண்டிகை அதற்குரிய பூரணை தினத்தை உள்ளடக்கியதாக ஒரு வார காலத்திற்குக் கொண்டாடப்படுவதே வழமை. அதற்கமைய 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத பூரணை தினமாகிய 29 ஆம் திகதி வெசாக் தினத்தை உள்ளடக்கி மே மாதம் 2 ஆம் திகதி வரையிலான காலப்பகுதி; கொண்டாட்டத்திற்கான வெசாக் வாரமாக மகாசங்கத்தினரால் தீர்மானிக்கப்பட்டது, எனவே, மே தினத்திலும் பார்க்க வெசாக் பண்டிகையே முக்கியமானது. வெசாக் பண்டிகைக்கான வாரத்தில் மேதினம் வருவதனால், அதனைப் பின்போட வேண்டும் என்பது மகாசங்கத்தினருடைய முடிவாகும். இந்த வகையில், பௌத்த மகாநாயக்கர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று மே முதலாம் திகதிய மேதினத்தை ரத்துச் செய்து, அது 7 ஆம் திகதிக்கு பின்போடப்பட்;டதாக பௌத்த மத நிகழ்வொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

பௌத்த மகாசங்கத்தினருடைய வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டு மேதினத்தில் மாற்றம் செய்வது தொடர்பாக அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேதினத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றம் குறித்து, அரசாங்க அதிபர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தகவல் வெளியிட்டிருந்தார். அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் இந்த மாற்றம் செய்யப்பட்டு அரச வர்த்தமானியில் அறிவித்தல் வெளியிட்ட போதிலும், இந்த விடயம் குறித்து அரசாங்கம் குறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொழிற்சங்கங்களையும், அரசியல் கட்சிகளையும் கலந்தாலோசிக்காமலேயே முடிவு செய்திருந்தார் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.

வரலாற்று முக்கியத்துவம் மிக்க மேதினம்

உலக தொழிலாளர்கள் 12 தொடக்கம் 16 மணித்தியாலங்கள் வேலை செய்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்ட நிலையில் அவர்கள் நடத்திய 8 மணித்தியால வேலை நேரத்திற்கான போராட்டத்தின்போது இரத்தம் சிந்தப்பட்டது. உயிர்ப்பலி கொள்ளப்பட்ட அந்தப் போராட்டத்தின் விளைவாகவே மேதினம் சர்வதேச தொழிலாளர் தினமாகப் பிரகடனம் செய்யப்பட்டது. மேதினம் என்பது சர்வதேச தொழிலாளர் தினமாக 1880 ஆம் ஆண்டு உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட போதிலும், எட்டு மணித்தியால வேலை நேரம் அங்கீகரிக்கப்பட்டு 1886 ஆம் ஆண்டிலேயே முதலாவது மேதினம் கொண்டாடப்பட்;டது.

சிக்காகோ நகரில் நடைபெற்ற இந்த மேதினத்தில் 40 ஆயிரம் பேர் கலந்து கொண்டு தொழிலாளர்களது ஒற்றுமையின் வலிமையையும் வெற்றியையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியிருந்தார்கள். அதனைத் தொடர்ந்து உலக நாடுகளில் தொழிலாளர்களினால் மேதினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இலங்iயில் 1956 ஆம் ஆண்டிலேயே மேதினம் அரச ஊழியர்களுக்கும் வங்கிகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கான பொது விடுமுறை தினமாக அப்போதைய அரசாங்கத்தினால் பிரகடனம் செய்யப்பட்டது.

எனினும் மேதினமும், வெசாக் பண்டிகையும் ஒரே நாளில் வருவதில்லை. ஆனால் வெசாக் வாரத்தில் வருவதனால் குழப்பகரமான நிலைமை ஏற்படும்போது சமயத்திற்கான உரிமையே முன்னிலை பெறுவதுண்டு. ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்க காலத்தில் 1967 ஆம் ஆண்டு இத்தகைய நிலைமை ஒன்று ஏற்பட்டு, மேதினம் 2 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது என்பது வரலாற்றில் பதிவாகியுள்ளது.

அரசாங்கத்தின் அந்த நடவடிக்கையை சீனசார்புடைய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்துக் குரல் எழுப்பியிருந்தது. அப்போது, அந்தக் கட்சிக்கு ஆதரவாக செயற்பட்டிருந்த மைத்திரிபால சிறிசேன இப்போது ஜனாதிபதியாக நாட்டின் தலைவர் என்ற ரீதியில் மேதினத்திற்கு எதிராக சந்தர்ப்பவாத நிலைப்பாட்டை எடுத்துள்ளார் என்று ஐலண்ட் பத்திரிகை சாடியுள்ளது.

மத உரிமைக்காக வெசாக் பண்டிகையை முன்னிட்டு மேதினத்தை பிறிதொரு தினத்திற்கு ஒத்திவைப்பதென்பது, தொழிலாளர்களின் அடிப்படை உரிமை மீறல். அது மட்டுமல்ல. யை அது அவர்களுடைய ஜனநாயக உரிமையை மறுப்பதாகும் என்று தொழிற்சங்கங்கள் பல அரசாங்கத்திற்கு இடித்துரைத்திருக்கின்றன. இருப்பினும் இந்த உரிமை மறுப்புக்கு எதிராக நாட்டில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் எதிர்ப்புக்கொடி காட்டவில்லை. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்காக அரசியல் கட்சிகள் மீது அனைத்துத் தொழிற்சங்கங்களும் இணைந்து அழுத்தம் கொடுக்கவுமில்லை. அரசாங்கத்திடம் ஒன்றிணைந்த எதிர்ப்பை வெளியிடவும் இல்லை. அநேகமான தொழிற்சங்கங்கள் அரசியல் கட்சிகளின் தொழிற்சங்கப் பிரிவுகளாகச் செயற்படுவதே இதற்கு முக்கிய காரணமாகும். ஆனால் சில தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையைக் கண்டித்தும் எதிர்த்தும் அறிக்;கைகளை வெளியிட்டிருக்கின்றன.

அரசியல் ரீதியான சிக்கல்கள்

அது மட்டுமல்லாமல், மேதினத்தை பின்போட்டுள்ள அரசாங்கம் மே முதலாம் திகதிய அரச வர்த்தக வங்கி விடுமுறையையும் ரத்துச் செய்து 7 ஆம் திகதிக்கு மாற்றியுள்ளது. அதே வேளை, ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சி அதிகாரத்தில் உள்ள கொழும்பு மாநகர சபை அதன் எல்லைக்குள் மே முதலாம் திகதி மேதினத்திற்காக எவரும் பேரணிகள் நடத்தக் கூடாது என தடைவிதித்துள்ளது.

மேதினம் மே மாதம் 7 ஆம் திகதிக்கு பின்போடப்பட்டுள்ள போதிலும் பத்துக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் அன்றைய தினத்திலேயே மேதினத்தை அனுட்டிப்பதற்கு முடிவெடுத்திருந்தன. ஜேவிபி யாழ்ப்பாணத்தில் தனது மேதினத்தை பேரணியுடன் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. அதேபோன்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் யாழ்ப்பாணத்தில் பௌத்த மதத்தின் வெசாக் பண்டிகை நிகழ்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் யாழ் நகருக்கு வெளியில் மேதினத்தைக் கொண்டாடுவதற்குத் தீர்மானித்திருந்தது.

மேதினம் தொடர்பிலான அரசாங்கத்தின் தீர்மானத்தையும் முடிவையும் எதிர்த்து, மேதினத்தில் மேதினத்தைக் கொண்டாடுவதற்குத் தீர்மானித்துள்ள தொழிற்சங்கங்களில் சிறிலங்கா சுதந்திர தொழிலாளர் சங்கம் முக்கியமானது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் நீண்ட காலமாக இணைந்து செயற்பட்டு வருகின்ற சிறிலங்கா நிதாஸ் சேவக சங்கமய என்று அழைக்கப்படுகின்ற இந்தத் தொழிற்சங்கம் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் முரண்பட்டுச் செயற்படும் வகையில் மேனதினத்தன்று மேதின ஊர்வலத்தையும் கூட்டத்தையும் நடத்துவதற்கான தீர்மானத்தை மேற்கொண்டிருந்தது.

இந்தத் தொழிற்சங்கம் 90 ஆயிரம் அரச சேவையாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டு அதிக சக்தி வாய்ந்ததாகத் திகழ்கின்றது. இந்தத் தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் லெஸ்லி தேவேந்திர மேதினத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றம் குறித்து கருத்து வெளியிடுகையில் மகாசங்கத்தினர் அதிக அளவு அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர் என சாடியுள்ளார். பொதுவாக அரசியல்வாதிகளும் அரச முக்கியஸ்தர்களும்கூட பௌத்த மகா சங்கத்தினருக்கு எதிராக மிகவும் அரிதாகவே கருத்துரைப்பார்கள். ஆனால் அரசாங்கத்தின் முக்கிய பங்காளிக் கட்சியாகிய சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தொழிசங்கத்தின் பொதுச் செயலாளர் இவ்வாறு கருத்துரைத்திருப்பது தீவிரமான தொழிற்சங்கச் செயற்பாடாகவே நோக்கப்படுகின்றது.

மேதினத்தில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதற்காக ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் குற்றம் சாட்டியுள்ள அவர், இது தொடர்பான தீர்மானம் தன்னிச்சையாக மேற்கொள்ளப்பட்டது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டிருந்த லெஸ்லி தேவேந்திர இந்த விடயத்தில் முடிவெடுப்பதற்கு முன்னர் தன்னுடன் கலந்தாலோசிக்கவில் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் நாயகம் என்ற தனது பதவியை இராஜிநாமா செய்துள்ள லெஸ்லி தேவேந்திர அரசாங்கத்துடன் முரண்பட்டுள்ள அதேவேளை, சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து வெளியேறியிருப்பதாகக் கூறப்படுகின்றது. இதனால், பெரும் எண்ணிக்கையிலான உறுப்பினர் தொகையையும் மூன்று லட்சம் வாக்குப் பலத்தையும் கொண்டுள்ள தொழிலாளர் சக்தி மிக்க இந்தத் தொழிற்சங்கத்தின் ஆதரவை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமாகிய மைத்திரிபால சிறிசேன இழந்துள்ளார்.

இவ்வாறு சக்தி மிக்க ஒரு தொழிற்சங்கம் ஜனாதிபதியின் கையில் இருந்து நழுவியிருப்பது, நல்லாட்சி அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள குழப்பகரமான நிலையில் அவரை மேலும் அரசியல் ரீதியாகப் பலவீனமாக்கி உள்ளதாகவே அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள். உள்ளுராட்சித் தேர்தலில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் எதிர்காலச் செயற்பாடுகளிலும், அடுத்து வரவுள்ள மாகாணசபைத் தேர்தலிலும் இந்த நிலைமை பெரும் சிக்கல்களை ஏற்படுத்துவதற்கே வழிவகுத்துள்ளது.

http://globaltamilnews.net/2018/77410/

  • தொடங்கியவர்
 
 

மே தினத்தின் வரலாற்று முக்கியத்துவமும் வெசாக்தினக் கூட்டில் ஆட்சியின் மறுப்பும்!!

கடந்து சென்ற 19 ஆவது நூற்­றாண்டு மனிதகுல வர­லாற்­றில் பல்­வேறு திருப்புமுனை­ க­ளுக்கு வழி­வ­குத்த நிகழ்­வு­க­ளைக் கொண்­ட­தா­கும். அவற்­றில் ஒன்றே அனை­வ­ரும் இன்று அனு­ப­வித்­து­வ­ரும் எட்டு மணி­நேர வேலை என்­ப­தா­கும். அதற்­காக அமெ­ரிக்­கத் தொழி­லா­ளர்­க­ளால் முன்­னெ­டுக் கப்­பட்டு வெற்றி கொள்­ளப்­பட்ட நாளே, மே முத­லாம் திகதி நினைவு கொள்­ளப்­ப­டும் மே தின­மா­கும்.

அத்­த­கைய பன்­னாட்­டுத் தினத்­தைத் தமது பௌத்த முதன்­மை­யைக் காட்டி மறுக்­க­வும் மாற்­ற­வும் முனை­வது அப்­பட்­ட­மான தொழி­லா­ளர் விரோத நிலைப்­பா­டா­கும்.

இது ஏற்­க­ன­வே­ இலங்­கை­யில் இடம்­பெற்று வந்­துள்ளது. இந்த வருடமே தினத்­தைப் புனித வெசாக்­கைச் சாட்­டாக வைத்து அரசு மே முத­லாம் திக­தி­யி­லான பொது விடு­மு­றையை இல்­லா­மல் செய்து மே ஏழாம் திக­தியை மே தின­மாக அறி­வித்­துள்­ளது.

இந்த நிலை­யில் மே தின வர­லாறு பற்­றி­யும் அந்­தத் தினத்­தின் முக்­கி­யத்­து­வம் மறுக்­கப்­பட்ட சந்­தர்ப்­பங்­க­ளில் இடம்­பெற்ற போராட்­டங்­கள் சம்­பந்­த­மா­க­வும் குறிப்­பி­டு­ வது அவ­சி­ய­மா­கும்.

தொழி­லா­ளர் சுரண்­டல்­களை
எதிர்த்து வெடித்­தது பேரணி

பத்­தொன்­ப­தாம் நூற்­றாண்டு முத­லா­ளித்­துவ உற்­பத்தி முறை வளர்ச்­சி ­பெற்று பலம்­பெற்று வந்த காலப்­ப­கு­தி­யா­கும். மூல­தன முத­லீட்­டா­ளìர் கள் பெரு இலா­ப­ம­டை­ய­வும் தொழி­லா­ளர்­கள் ஒட்­டச் சுரண்­டப்­ப­டு­வ­து ­மான சூழலே அன்று நில­வி­யது.

பத் தொன்­ப­தா­வது நூற்­றாண்­டின் நடுப்­ப­கு­தி­யில் ஐரோப்­பிய அமெ­ரிக்க ஆஸ்­திரே­லி­யத் தொழி­லா­ளர்­கள் மத்­தி­யில் தமது நிலை பற்­றிய விழிப் பு­ணர்வு தோன்ற ஆரம்­பித்­தது. அதி­லி­ருந்து மூன்று விட­யங்­கள் வற்­பு­றுத்­தப்­பட்­டன. வேலை நேரக்­கு­றைப்பு, சம்­பள அதி­க­ரிப்பு, சங்­கம் வைக்­கும் உரிமை போன்­ற­னவே அவை­யா­கும்.

பதி­னெட்டு, பதி­னாறு, பதி­நான்கு, பன்­னி­ரண்டு, பத்து மணித்­தி­யா­லங்­கள் தொழி­லா­ளர்­கள் வேலை செய்ய வேண்­டும் என முத­லா­ளி­ க­ளால் நிர்­பந்­திக்­கப்­பட்டு வந்த சூழ­லி­ லேயே எட்டு மணி­நேர வேலை என் பது தொழி­லா­ளர்­க­ளால் வலி­யு­றுத்­தப்­பட்­டது.

அதா­வது 24 மணி­நே­ரம் கொண்ட ஒரு நாளில் எட்டு மணி­ நேர வேலை எட்டு மணி­நேர ஓய்வு, மிகுதி எட்டு மணி­நே­ரம் ஏனைய விட­யங்­க­ளைக் கவ­னிப்­பது என வகுக்­கப்­பட்டே எட்டு மணி­நேர வேலை என் பது பொதுக் கோரிக்­கை­யாக்­கப்­பட்­டது. இதற்­கான தொழி­லா­ளர்­க­ளின் போராட்­டங்­களை அமெ­ரிக்­கத் தொழி ­லா­ளர்­கள் முன்­வைத்து அவ்­வப்­போது வேலை நிறுத்­தங்­கள் ஆர்ப்­பாட்­டங்­களை நடத்தி வந்­த­னர்.

இக்­கால கட்­டத்­தி­லேயே ஜேர்­ம­னி­யின் கார்ல் மாக்ஸ், பிர­டெக்ற் ஏங்­கல்ஸ் மற்­றும் அவர்­க­ளோடு இணைந்­த­வர்­க­ளால் கம்­யூ­னிஸ்ட் கட்சி அறிக்கை என்­பது 1848ஆம் ஆண்­டில் வெளி­யி­டப்­பட்­டது. இந்த அறிக்கை ஐரோப்­பிய அமெ­ரிக்­கத் தொழி­லா­ளர்­க­ளுக்­கும் ஏனைய உலக நாடு­க­ளின் தொழி­லா­ளர்­க­ளுக்­கும் பெரும் உந்­து­த­லை­யும் உற்­சா­கத்­தை­யும் வழங்­கி­யது.

அதன் வழி­யில் அமெ­ரிக்­கத் தொழி­லா­ளர்­கள் தமது எட்டு மணி­நேர வேலை என்­கிற கோரிக்­கை­யைப் போராட்­ட­மாக்­கி­னார். 1870 -/80களில் அவை வேக­ம­டைந்­தன. 1886ஆம் ஆண்­டின் மே முத­லாம் திகதி சிக்­காக்கோ நக­ரின் தொழி­லா­ளர்­கள் பெரும் வேலை­நி­றுத்­தங்­க­ளி­லும் ஆர்ப்­பாட்­டங்­க­ளி­லும் ஈடு­பட்­ட­னர்.

அன்று பொலி­ஸார் நடத்­திய தாக்­கு­தல்­க­ளில் தொழி­லா­ளர்­க­ளின் செங்­கு­ருதி வீதி­க­ளில் ஓடி­யது. வெண்­சட்­டை­கள் குரு­தி­யில் தோய்ந்து செந்­நி­ற­மா­கிக் கொண்­டன. அன்­றைய சம்­ப­வங்­க­ளைக் கண்­டித்து மே 3ஆம் 4ஆம் திக­தி­க­ளில் தொழி­லா­ளர்­க­ளின் பெரும் ஆர்ப்­பாட்­டம் ஒழுங்கு செய்­யப்­பட்டு சிக்­காக்கோ முடக்­கப்­பட்­டது.

மே தினத்­துக்­கான விதை

அவ்­வாறு மேற்­கொள்­ளப்­பட்ட ஆர்ப்­பாட்­டங்­க­ளுக்கு முத­லா­ளி­க­ளால் பல்­வேறு குழப்­பங்­கள் கொடுக்­கப்­பட்­டன. ஆர்ப்­பாட்­டத்­தின் குண்­டொன்று வெடித்­த­தில் ஏழு தொழி­லா­ளர்­க­ளும், நான்கு பொலி­ஸா­ரும் உயி­ரி­ழந்­த­னர்.

இந்த அசம்­பா­வி­தத்­துக்கு தொழி­லா­ளர்­க­ளின் தலை­வர்­கள் குற்­ற­வா­ளி­க­ளாக்­கப்­பட்டு அவர்­க­ளில் நால்­வ­ருக்கு தூக்­குத் தண்­டனை தீர்ப்­பி­டப்­பட்­டது. அந்த நால்­வ­ரும் தூக்கு மேடை­யில் வைத்து இறு­தி­யா­கக் கூறி­யவை, ‘’எமது கல்­ல­றை­க­ளின் மௌனம் ஆயி­ரம் சொற்­பொ­ழி­வு­களை விட அதி­க­மா­ன­வற்­றைக் கூறிக் கொண்­டே­இ­ருக்­கும்’’ என்­ப­தா­கும்.

இத்­த­கைய குருதி தோய்ந்த வர­லாற்­றுக்கு வித்­திட்ட மே முத­லாம் திகதி தொழி­லா­ளர் தின­மாக அங்­கீ­கா­ரம் பெற்­றது. 1886ஆம் ஆண்டு இந்த அங்­கீ­கா­ரம் கிடைத்­தது. இதன்­படி இந்த வருட மே தினம் 132ஆவது மே தின­மா­கும்.

இலங்­கை­யில் மே தினம்
இலங்­கை­யில் அந்­நிய கொல­னிய ஆட்­சிக் காலத்­தி­லும் சுதந்­தி­ரம் எனப்­ப­டு­வ­தற்­குப் பின்பு ஐக்­கிய தேசி­யக் கட்சி ஆட்­சி­யி­லும் மேதி­னம் விடு­முறை நாளாக அறி­விக்­கப்­ப­ட­வில்லை. இருப்­பி­னும் தொழி­லா­ளர்­க­ளும் தொழில் சங்­கங்­க­ளும் இடது சாரிக் கட்­சி­க­ளும் மே தினத்தை மே முத­லாம் திகதி நினைவு கூர்ந்து முன்­னெ­டுத்து வந்­தி­ருக்­கி­றார்­கள்.

1956ஆம் ஆண்­டில் ஏற்­பட்ட ஆட்சி மாற்­றத்­தின் பின்பே எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்­டா­ர­நா­யக்க தலை­மை­யி­லான அரசே மே தினத்தை விடு­முறை தின­மாக்­கிக் கொண்­டது. எனி­னும், வெசாக்­தி­னத்­தை­யொட்டி மே தினத்தைத் தடை­செய்து வந்த நிகழ்­வு­கள் இலங்­கை­யில் ஏற்­க­னவே இடம்­பெற்­ற­வை­யா­கும். ஆனால் அரச தடை­க­ளை­யும் மீறி மே முத­லாம் திக­தியே மே தினத்தை நடத்­திய சம்­ப­வங்­கள் கடந்த காலங்­க­ளில் இடம்­பெற்று வந்­துள்­ளன.

1965ஆம் ஆண்டு மேதி­னத்­தில் ஊர்­வ­லங்­கள் நடத்­தக் கூடாது, கூட்­டங்­கள் மட்­டும் என அன்­றைய ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் தேசிய அரசு ஆணை­யிட்­டது. அதனை மீறித் தொழி­லா­ளர்­க­ளும் உழைக்­கும் மக்­க­ளும் ஊர்­வ­லம் நடத்­தி­னர். யாழ்ப்­பா­ணம் விதி விலக்­கில்லை.

1969ஆம்  ஆண்­டில்  மே தினத்­துக் குத் தடை
1969ஆம் ஆண்டு

மேதி­னத்தை அன்­றைய அரசு வெசாக்­தி­னத்­தைச் சாட்­டாக வைத்து ஊர்­வ­லங்­கள் கூட்­டங் க­ளுக்­குத் தடை­வி­தித் தது. இதனை மீறி மேதி­னத்தை அதன் முத­லாம் திக­தியே நடத்­து­வது என அன்­றைய நா.சண்­மு­க­தா­சன் தலை­மை­யி­லான புரட்­சி­க­ரக் கம்­யூ­னிஸ்ட் கட்சி தீர்­மா­னித் தது.

அதன் அடிப்­ப­டை­யில் கொழும்­பி­லும் யாழ்ப்­பா­ணத்­தி­லும் மேதி­னம் சட்­ட­ம­றுப்­பாக இடம்­பெற்­றது. கொழும்­பில் ஊர்­வ­லம் ஆரம்­பிக்­கும் இடத்தை முன்­கூட்­டியே பொலி­ஸார் மோப்­பம் பிடித்­த­தால் ஊர்­வ­லத்­தைத் தடுத்­து­விட்­ட­னர். ஆனால் கூட்­டத்தை பொலி­சார் தடுக்­க­மு­டி­யா­த­படி நடத்­தி­னர்.

ஆனால் யாழ்ப்­பா­ணத்­தில் மேதின ஊர்­வ­லம் வெற்­றி­க­ர­மா­கப் பொலி­ஸாரின் கண்­க­ளில் படாது ஆரம்­பித்து சுமார் இரண்டு கி.மீ. தூரம்­வரை நடத்­தப்­பட்­ட­து­டன் முடி­வுக்­குச் சற்று முன்­ப­தாக முற்­ற­வெ­ளிக்கு அண்­மை­யாக வைத்து பொலி­ஸா ரால் வழி­ம­றிக்­கப்­பட்­டுக் கடும் தாக்­கு­தல் மேற்­கொள்­ளப்­பட்­டது. இதில் தலைமை தாங்­கிச் சென்ற கம்­யூ­னிஸ்ட் தலை­வர்­க­ளில் ஒரு­வ­ரான கே. ஏ. ப்பிர­ம­ணி­யம் கடு­மை­யான தாக்­கு­த­லுக்கு உள்­ளாகி மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டார்.

கஸ்­தூ­ரி­யார் வீதி, யாழ் பஸ் நிலை­யம், ஸ்ரான்லி வீதி, முட்­டாஸ் கடைச் சந்தி, கே.கே.எஸ் வீதி வழி­யாக யாழ். முற்­ற­வெளி நோக்கி ஊர்­வ­லம் சென்­றது. தற்­போ­தைய கூட்­டு­ற­வுச் சங்க கட்­டி­டத்­திற்கு அண்­மை­யா­கத் துப்­பாக்­கி­கள், குண்­டாந்­த­டி­கள், தடுப்­புத் தட்­டி­ க­ளு­டன் பொலிஸ் படை வீதி­யின் குறுக்கே நிறுத்­தப்­பட் டி­ருந்­தது. கலைந்து செல்­லு­மாறு பொலிஸ் கட்­ட­ளை­யிட்­டது.

இது எங்­க­ளது பன்னாட்டு உரி­மைத்­தி­னம் என தலைமை தாங் கிச் சென்ற கே. ஏ.சுப்­பி­ர­ம­ணி­யம் உரத்­துக் கூற ஊர்­வ­லத்­தி­னர் முழக்­க­மிட்­ட­னர். குண்­டாந்­த­டித் தாக்­கு­த­லுக்கு கட்­ட­ளை­யி­டப்­பட்­டது. முன்­ன­ணி­யில் சென்­றோர் மீது பொலிஸ் மிரு­கத் தன­மா­கத் தாக்­கி­யது.

குருதி வீதி­யில் வழிந்­தோ­டி­யது. கண்­ணீர் புகை­யும் பயன்­ப­டுத்­தப்­பட்­டது. அன்று போன்றே இன்­றும் மேதி­னம் மறுக்­கப்­ப­டு­கி­றது. சிங்­கள பௌத்­தம் என்ற மேலா­திக்­கத்­துக்­குள் இந்த நாடு ஆழ­மாக மூழ்­கி­விட்­டது. தொழி­லா­ளர்­க­ளின் தினம் முடக்­கப்­ப­டு­வது அவர்­க­ளின் உழைப்பை கொச்­சப்­ப­டுத்­து­வது போன்­றதே. தொழி­லா­ளர்­கள் இல்­லை­யேல் இலங்­கை­யில்லை. இலங்கை மட்­டு­மல்ல எது­வும் இல்லை.

http://newuthayan.com/story/89342.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.