Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாட்டை துண்டாடப்போகும் 20 ஆவது திருத்தத்தை அனுமதிக்கவே முடியாது : அஸ்கிரிய பீடம் பங்கேற்ற தேசிய பிக்குகள் மாநாட்டில் தீர்மானம்

Featured Replies

நாட்டை துண்டாடப்போகும் 20 ஆவது திருத்தத்தை அனுமதிக்கவே முடியாது : அஸ்கிரிய பீடம் பங்கேற்ற தேசிய பிக்குகள் மாநாட்டில் தீர்மானம்

CITY-01GMGPage1Image0009-40791f6fe8ee0322d70f438d2332d2cbcbe74a43.jpg

 

(நா.தினுஷா)

பல்வேறு தரப்புகளால் பலவிதமாக அர்த்தப்படுத்தப்படு கின்ற உத்தேச 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நாட் டின் இறையாண்மைக்கு எதிரான ஒரு செயற்பாடாகவே கருத முடிகின்றது. நீண்டகால போரின் பின்னர் பல சவால்களுக்கு மத்தியில் கட்டியெழுப்பப்படுகின்ற இன ஒற்றுமைக்கும் இது மிகவும் சவாலான விடயமாகும். ஆகவே நாட்டை மீண்டும் துண்டாடும் இந்த 20 ஆவது அரசிலமைப்பு திருத்ததை அனுமதிக்க முடியாது என தேசிய பிக்குகள் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  

" நிறைவேற்று அதிகாத்தை ஒழிக்கும் நோக்கில் கொண்டு வரும் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நாட்டின் மரண பொறி " என்ற தொனிப்பொருளில் நேற்று வியாழக்கிழமை கொழும்பு - 07 அமைந்துள்ள சம்புத்த ஜயந்தி நிலையத்தில் தேசிய பிக்குகள் மாநாடு இடம்பெற்றது. இதன் போதே மேற்கண்டவாறு தீர்மானம் எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

இதன் போது உரையாற்றிய அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக்க தேரர் மெதகம தம்மானந்த தேரர் கூறுகையில்,

எதிர்வரும் 8ஆம் திகதி புதிய பாராளுமன்றத்தின் புதிய அமர்வுகள் இடம்பெறவுள்ளன. இதன் போது மக்கள் விடுதலை முன்னனியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவினால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை ஒழிக்கும் 20 ஆம் சீர்த்திருத்த யோசனை தனிப்பட்ட பிரேரணையாக பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜே.ஆர் . ஜயவர்த்தன இந்தியாவுடன் இணைந்து 13 ஆம் திருத்த்தத்தினைக் கொண்டு வந்தாலும் அதன் மூலம் நாடு பிளவடையாமல் இருப்பதற்கு சில திட்டங்களை அறிமுகப்படுத்தினார். அத் திட்டங்களின் கீழ் நாம் தெரிந்துகொள்ள வேண்டியதில் முதலாவதாக , மாகாணசபைகளுக்கான ஆளுநர்களை நியமிக்க வேண்டியது நாட்டின் ஜனாதிபதி ஆவார் என்பதாகும். அதன் மூலம் மாகாணசபைகளை செயற்படச் செய்வதற்கான யோசனைகள் , பரிந்துரைகளை ஜனாதிபதியால் நேரடியாக வழங்க முடியும்.

எனினும் இந்த புதிய சீர்த்திருத்தமானது 13 ஆம் அரசியலமைப்பு திருத்தத்தை அடிப்படையாக கொண்டு தனிப்பட்ட அரசியல் நோக்கங்களை நிறைவேற்றி கொள்வதற்காகவே கொண்டுவரப்படுகின்றது. அதனால் நாட்டிற்கு ஏற்படும் ஆபத்துக்கள் குறித்து அவர்கள் கவனத்தில் கொள்ள வில்லை.

மத்திய அரசாங்கத்தின் பிரதிநிதியாக ஆளுனர் மாகாண சபைகளில் செயற்படுவார். மத்திய அரசாங்கத்துடன் மாகாண சபைகள் முரண்படும் சந்தர்ப்பங்களில் தலையீடுகளை மேற்கொண்டு மாகாண சபை ஆட்சியை கலைக்க கூடிய அதிகாரத்தை பெற்றவராகவும் ஆளுநர் உள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த காலப்பகுதியில் 19 ஆம் சீர்த்திருத்தத்தினை முன்வைத்திருந்தது. இந்த சீர்த்திருத்தமும் தனிப்பட்ட அரசியல் பழிவாங்களுகளுக்காக கொண்டுவரப்பட்டதே தவிர நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஏற்றவகையில் கொண்டுவரப்படவில்லை.

வடக்கு பகுதிகளில் காணப்படும் இராணுவ முகாம்களை தகர்த்துவது தொடர்பாகவும் இந்த 20 ஆம் சீர்த்திருத்தத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளமையானது நாட்டை இரண்டாக பிரித்து தற்போது நாட்டில் நிலவும் தேசிய ஒற்றுமையை சீர்குழைக்கும் சீர்த்திருத்தமாகவே அமையப்போகின்றது என்பதனை காட்டுகின்றது.

இலங்கை சுதந்திந்திரமடைந்ததன் பின்னரும் நாட்டின் ஆட்சியாளர்களின மூலம் நாட்டை துண்டாக்கும் சதிகள் இடம்பெற்ற வண்ணமே உள்ளன. இலங்கை அரசியலமைப்பின் அடிப்படையில் சட்ட உருவாக்குவதற்கென ஒரு பாராளுமன்றம் மாத்திரம் போதுமானதாகும். சட்டயியற்றுவதற்கென இரு வேறான கட்டமைப்புக்கள் அவசியமற்றதாகும்.

கடந்த காலங்களில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினால் நாட்டில் பல்வேறான முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் தற்போது இலங்கையில் ஜனாதிபதி பதவி கைபாவையாக மாறியுள்ள நிலை காணப்படுகின்றது. இந்த நிலையில் நாட்டில் வெளிநாட்டு ஆதிக்கத்தினை நிலைநிறுத்தி கொள்வதற்கும் மேலும் நாட்டின் பலத்தினை பாதிக்கும் வகையிலும் இந்த சீர்திருத்தம் அமையபெற்றுள்ளது.

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தப்பின்னர் உருவாக்கப்பட்ட பதவிகளில் நாட்டிற்கு எவ்விதமான நன்மைகளும் ஏற்பட வில்லை. மாறாக பல்வேறு நெருக்கடிகளையே எதிர்கொண்டது. பொருளாதார ஒப்பந்தங்கள் பல மேற்கொள்ளப்பட்டாலும் நாட்டின் பொருளாதாரத்தில் எந்தவித மாற்றங்களும் கொண்டுவரப்படவில்லை.

ஆகவே நாட்டை துண்டாடும் விதத்திலான அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கும் அரசியலில் தனிப்பட்ட நோக்கங்களுக்காக நாட்டினை பிளவுப்படுத்தும் வகையிலான தேசிய அரசாங்கத்தின் கண்மூடித்தனமான விடயங்களுக்கும் பிக்குமார்கள் இடமளிக்க போதில்லை. 20 ஆவது சீர்த்திருத்தம் நாட்டு மக்களுக்கிடையில் பிளவினை ஏற்பத்தும் . எனவே அதனை அனுமதிக்க முடியாது என தெரிவித்தார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-05-04#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.