Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காங்கேசன் துறை கடற் பரப்பில் 14 இலங்கை அகதிகள் கைது!!!

Featured Replies

காங்கேசன் துறை கடற் பரப்பில் 14 இலங்கை அகதிகள் கைது!!!

 

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் நாட்டிற்குள் வந்த 14 இலங்கை அகதிகள் காங்கேசன்துறை வடக்கு கடற் பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

http://www.virakesari.lk/article/33156

இலங்கை அகதிகள் காங்கேசன்துறையில் கைது!!

தமிழக ஈழ அகதி முகாமிலிருந்து சட்டவிரோதமாக படகில் தாயகம் திரும்பிய 10 பேர் காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கடற்படையினர் கூறியுள்ளனர்.

இன்று அதிகாலை 2.00 மணியளவிலேயே கைது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாடைக்கு படகோட்டி வந்த தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலையைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்று கடற்படையினர் கூறியுள்ளனர்.

இதேவேளை, பொலிஸாரின் விசாரணையின் பின்னர் 10 பேரும் மல்லாகம் நீதிவான் முன்னிலையில் இன்று முன்னிலை படுத்தப்படவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

http://newuthayan.com/story/90378.html

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

படகு மூலம் தாயகம் திரும்பிய 14 அகதிகள் சிறிலங்கா கடற்படையினரால் கைது

 

sln-tamil-refugees-2-300x199.jpgதமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பிக் கொண்டிருந்த 14 தமிழ் அகதிகளை வடக்கு கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினர் நேற்று அதிகாலை கைது செய்தனர்.

பருத்தித்துறைக்கு வடமேற்காக 11 கடல்மைல் தொலைவில் டிங்கி படகு ஒன்றில் பயணித்த 14 பேரையும் சிறிலங்கா கடற்படையினர் அதிவேகத் தாக்குதல் படகு ஒன்று நேற்று அதிகாலை 2 மணியளவில் இடைமறித்தது.

அந்தப் படகும், அதில் இருந்தவர்களும் காங்கேசன்துறை கடற்படைத் தளத்துக்குக் கொண்டு வரப்பட்டு, மருத்துவ பரிசோதனைகளுக்குப் பின்னர் சிறிலங்கா காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்.

கைது செய்யப்பட்டவர்களில் 7 பேர் ஆண்கள். 3 பேர் பெண்கள். ஏனைய நால்வரும் சிறுவர்களாவர்.

sln-tamil-refugees-1.jpg

sln-tamil-refugees-2.jpgsln-tamil-refugees-3.jpgsln-tamil-refugees-4.jpgஇவர்கள் அனைவரும் திருகோணமலையைச் சேர்ந்தவர்கள் என்றும், போர்ச் சூழலினால் 2004ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு அகதிகளாகச் சென்று புதுக்கோட்டையில் உள்ள அகதி முகாமில் தங்கியிருந்தவர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசாரணைகளை அடுத்து, நீதிமன்றத்தில் நிறுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

http://www.puthinappalakai.net/2018/05/06/news/30762

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.