Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புன்னகை இராஜதந்திரத்தின் வெற்றி

Featured Replies

புன்னகை இராஜதந்திரத்தின் வெற்றி

 

வடகொரிய அதிபர் கிம் இவ்வருட பிறப்பின் போது அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு வாழ்த்தொன்றை தெரிவித்து உலகை திடுக்கிட வைத்தார். அணு

குண்டுகளை அழுத்தும் கருவி எனது மேசைமேல் உள்ளது. அழுத்தினால் அமெரிக்கா அழிந்துவிடும் என்றார். இதற்கு முன்னதாக வடகொரிய அதிபர் அணுஆயுத பரிசோதனைகளை தொடர்ச்சியாக பரீட்சித்துப் பார்ப்பதுவுமாக உலக சமாதானத்துக்கு ஊறுவிளைவிப்பவராக தென்பட்டார்.அமெரிக்க அதிபரும் கொரிய தீபகற்பப் பிரதேசத்தில் தாட் ஏவுகணை தாங்கி கப்பல்களை தயார் நிலையில் வைத்திருந்தார்.அமெரிக்க அதிபரும் தொடர்ச்சியான எச்சரிக்கைகளை விடுத்துக் கொண்டிருந்தார்.ஐ.நா. சபை மூலம் வடகொரியாவுக்கு எதிராக பொருளாதார தடைகளையும் ஏற்படுத்தியிருந்தார். கொரிய தீபகற்பத்தில் போர் மூளப்போகி றது பெரும் அழிவு ஏற்படப்போகிறது என்கின்ற தோரணையில் சர்வதேச ஊடகங்களில் சமூக வலைத்தளங்களில் செய்திகள் உலாவந்தன. வடகொரிய அதிபர் கிம் மேற்கத்தேய ஊடகங்களால் ஒரு வில்லனாக சித்தரிக்கப்பட்டார்.அமெரிக்கா சர்வதேச பொலிஸாக தன்னைத் தொடர்ந்தும் அடை

யாளப்படுத்திக் கொண்டிருந்தது. சீனா, ரஷ்யா ஆகிய பாதுகாப்புச்சபை நிரந்தர உறுப்பு நாடுகள் வடகொரியாவை அமெரி

க்கா சீண்டிப்பார்ப்பதை விரும்ப வில்லை.1950 களில் ஆரம்பித்த கொரிய பிணக்கு இன்னமும் தொடர்கின் றது.

இச்சூழ்நிலையில் வட,தென்கொரிய அதிபர்கள் சந்தித்து பேசவுள்ளார்கள் என்ற சேதி நம்பமுடியாததாகவிருந்தது. யுத்த வைரிகளாக சித்தரித்துக்காண்பிக்கப்பட்ட இரு நாடுகளின் தலைவர்கள் சந்தித்துப் பேசவுள்ளனர் என்பது உலக மக்களுக்கு இனிப்பான செய்தியாகவிருந்தது. அமெரிக்க அதிபரின் மிரட்டல் ஒருபுறம், ஐ.நா .சபை தடைகள் மறுபுறம் வடகொரியாவை நிலைகுலையச் செய்யவில்லை. திரைமறைவில் நடைபெறும் இரகசிய பேச்சுவார்த்தைகள் சில தீர்மானங்களை எட்டுவதற்கு வழி அமைத்தது. கொரியப் பிரச்சினையில் ஆறு நாடுகளின் அணி தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில், ஈடுபட்

டது. சீனா, ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா, வடகொரியா ஆகிய ஆறு நாடுகளும் தொடர்ச்சியாக பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டன. 2018 மாசி மாதம் தென்கொரிய தலைவர்கள் சியோலில் ஆரம்பமான குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் இரு கொரிய நாடுகளும் ஹொக்கி போட்டியில் ஒரே அணியாக விளையாட இணங்கியமையும் வடகொரிய அதிபர் தமது நெருங்கிய சகாவும் சொந்த சகோதரியுமாகிய இம் யோ யொங்கை தமது பிரத்தியேக தூதுவராக சியோல் ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பி வைத்தமையும் திருப்பு முனைகளாகும். அப்பெண்மணியின் விஜயம் இரு நாடுகளுக்குமிடையே நேரடித்தொடர்பை ஏற்படுத்தியது. வடகொரிய அதிபரின் பிரத்தியேக செய்தியை தங்கையார் தென்கொரிய அதிபரிடம் கையளித்தார். அச்செய்தியில் தென்கொரிய அதிபரை பியொங்யொங் வருமாறு அழைப்பு விடுத்தார். ஆனால் தென்கொரிய அதிபர் வடகொரியா வரவில்லை. மாறாக வடகொரிய அதிபர் சித்திரை 27ஆம் திகதி (2018) தென்கொரிய வடகொரிய எல்லைகளைப் பிரிக்கும் யுத்த பிரதேசத்தில் காலடி எடுத்து வைத்து உலகை ஆச்சரியத்தில் மூழ்க வைத்தார்.

இரு தலைவர் களும் கட்டி யணைத்து அன்பை வெளிப்படுத்தினார் கள்.உலக ஊடகங்கள் சாட்சிகளாயின. பின்னர் அவை காட்சிகளாக வெளியிடப்பட்டன. வடகொரிய அதிபர் நகைச்சுவையாக குறிப்பிட்ட விடயம் கருத்தாழம் மிக்கது. எதிர்காலத்தில் தென்கொரிய அதிபரும் மக்களும் நிம்மதியாக படுத்துறங்கலாம். எமது ஏவுகணைகள் தென்கொரிய மக்களை நோக்கி வராது என்றார். உலகில் பல தளங்களிலும் நடைபெறும் மோதல்கள் உலக சமாதானத்தை அச்சுறுத்துகிறது என்பது யதார்த்தமானது. வட,தென்கொரிய முறுகல் நிலை தளர்வது மட்டும் உலக சமாதானத்தை ஏற்படுத்த உதவுமா என்ற கேள்வி ஒரு புறமிருக்க வட,தென்கொரிய விவகாரம் ஆழமாக உற்றுநோக்கப்பட வேண்டியது அவசியமானதாகும்.

தற்போதைய தென்கொரிய அதிபர்,தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் வடகொரியாவுடன் முரண்டுபோகும் போக்கினை கடைப்பிடிப்பதில்லையென்றும், மெதுவான போக்கினை கடைப்பிடிக்கப்போவதாகவும் பிரசாரம் செய்து ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டினார்.வடகொரிய அதிபர் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் அணுஆயுத பரிசோதனை நிலையங்களை மூடுவதாக அறிவித்தல் விடுத்தமை கொரிய தீபகற்ப அமைதியின்மைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்கொரிய அதிபர் மூன் ஐ.நா. சபையிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். வடகொரிய அதிபர் மூடுவதற்கு இணங்கிய அணுஆயுத பரிசோதனை நிலையத்தை பரிசோதனை செய்வதற்கு சர்வதேச அணுசக்தி முகவர் அமைப்பை பணிக்குமாறு கேட்டுள்ளார். ஐ.நா. சபையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சர்வதேச அணுசக்தி பரிசோதனை முகவர் அமைப்பு விரைவாக செயலாற்றும் என தெரிகிறது.தென்கொரிய அதிபர் கொரிய தீபகற்ப பிராந்தியத்தை அணுஆயுதமற்ற பிராந்தியமாக மாற்றுவதன் மூலம் இரு நாடுகளும் அமைதியாக வாழமுடியும் என தெரிவித்துள்ளார்.இது இவ்வாறிருக்க பெரிதாக எதிர்பார்க்கப்படும் கிம் –- ட்ரம்ப் உச்சிமாநாடு பற்றி இன்னும் திகதி, வேறு விபரங்கள் வெளியாகவில்லை. உச்சி

மாநாட்டுக்கு முன்னர் நல்லெண்ண சமிக்

ஞையாக வடகொரியாவில் தடுத்து வைக்கப்

பட்டுள்ள மூன்று அமெரிக்க பிரஜைகளை வடகொரியா விடுதலை செய்யலாம் என ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன. வடகொரியாவின் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூவரும் அண்மை யில் வசதிகள் அதிகமாக வழங்கப்படும் தடுப்பு மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மூவரும் விரைவில் விடுதலை செய்யப்படலாம் என்ற ஊடகங்களின் ஊகங்களுக்கு சிறைக்கைதிகளை இடம் மாற்றியமையே காரணமாகும். கிம் – ட்ரம்ப்

உச்சிமாநாட்டுக்கு முன்னர் மூன்று கைதிக ளும் விடுதலை செய்யப்படுவதன் மூலம் பேச்சுவார்த்தை பயனான தீர்மானங்களை மேற்கொள்ள வழி சமைக்கும் என தெரிவிக்கப்படுகிறது. வடகொரியா அதிபர் இவ்வளவு தூரம் இணங்கி வருவார் என உலகின் பிரபலம் பெற்ற ஊடகங்கள் கூட ஊகம் தெரிவிக்கவில்லை. வடகொரிய, - தென்கொரிய அதிபர்களின் சந்திப்பும், அதை தொடர்ந்து இருவரும் கூட்டாக வெளியிட்ட பிரகடனமும் இன்று பூகோளம் பூராகவும் ஆக்கிரமிக்கும் செய்தியாகும். வடகொரிய அணுஆயுத பரிசோதனை நிலையங்களை மூடி யுத்த கோஷங்களை பயமுறுத்தும் அறி

வித்தல்களை நிறுத்தி கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலைப்பதற்கு இசைந்து போனால் நிச்சயமாக உலக சமாதானத்திற்கும் பங்காற்றும் என்பதில் இரு கருத்துக்கு இடமில்லை. கொரிய தீபகற்பம் சமாதான பிராந்தியமாக மாறினால் அதற்கான உண்மைக் காரணங்கள் எவை? காரண கர்த்தாக்கள் யார்? என்ற வினா எழும்புகிறது.

முன்னுக்குப்பின் முரணாக பேசுவதும்,அமெரிக்க ஜனாதிபதிகளின் காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்ட பாரம்பரியத்தை விட்டு விலகுபவர் போல காட்சி தருவதும், சில சமயங்களில் வெளிநாட்டு பாதுகாப்பு அமைச்சர்களின் ஆலோசனைகளைப் பெறாமல் பேசுவதும், சில சமயங்களில் நகைக்கக்கூடிய வகையில் உரையாற்றுவதும் ட்ரம்ப் எனக் கூறினால் அது மிகையில்லை. வடகொரியாவைப் பணிய வைப்பதற்கு கொரிய பிராந்தியத்தை ஏவுகணை ஆயுத கப்பல்கள் மூலம் முற்றுகையிட்டார். ஐ.நா. சபை மூலம் பொருளாதார தடைகளை ஏற்படுத்தினார். தென்கொரிய அதிபரின் சமாதானத்துக்கான அணுகுமுறையை தட்டிக்கொடுத்தார்.சீனாவுடன் தொடர்ச்சியாக வடகொரிய விவகாரத்தை கையாண்டு வந்தார். ஐ.நா. பாதுகாப்புச் சபையில் வடகொரியாவின் நட்பு நாடுகளான சீனா, ரஷ்யா ஆகியவற்றின் ஆதரவையும் பெற்றார்.முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா வடகொரியா விவகாரத்தில் பின்பற்றிய கொள்கையை தந்திரோபாயரீதியான பொறுமை என வர்ணிக்கப்பட்டது. புதிய அதிபர் ட்ரம்ப்பின் கொள்கை தந்திரோபாய ரீதியான தடுமாற்றம் என வர்ணிக்கப்பட்டது. எங்கே டொனால்ட் ட்ரம்ப் பிரச்சினையை மேலும் மோசமாக்கி விடுவாரோ என்ற அச்சமும் நிலவியது. ஆனால் டொனால்ட் ட்ரம்ப் வெற்றியாளராகவே நோக்கப்பட வேண்டும். ஈராக் போன்றோ அல்லது ஆப்கானிஸ்தான் போன்றோ அல்லது சிரியாவைப் போன்றோ வடகொரியா பிரச்சினை கையாளப்படவில்லை. இப்போதே அடுத்த நோபல் பரிசு ஜனாதிபதி ட்ரம்புக்கு வழங்கப்பட வேண்டுமென்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. ட்ரம்ப் கொரிய விவகாரத்தில் காட்டிய அணுகுமுறை மெச்சத்தக்கது. அதேநேரம் தென்கொரிய அதிபரின் அணுகுமுறை அண்ணன் தம்பி பிரச்சினையாக கையாளப்பட வேண்டும் என்பதும் அமெரிக்க அதிபர் தாட் ஏவுகணை தாங்கி கப்பல்களை வடகொரிய கடல் பிராந்தியத்துக்கு அண்மையில் நகர்த்தியிருப்பினும் போர் நிலைமை தோற்றுவிக்கப்படவில்லை. தென்கொரிய ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் இணக்கமாக செயற்பட்டு கொரிய பிரச்சினைகளை தீர்ப்பேன் என்கின்ற அவரின் திடசங்கற்பம் மக்களின் பேராதரவைப் பெற்றது மட்டுமல்லாமல் 1950 களுக்குப் பின்பு வடகொரிய தலைவர் தென்கொரியாவுக்கு காலடி எடுத்து வைப்பதற்கு இராஜதந்திரமாக செயற்பட்டார் என்பது இராஜதந்திரிகளின் கருத்தாகும்.

தென்கொரிய அதிபருக்கும்

நோபல் பரிசுக்கான சிபாரிசுகள் முன்வைக்கப்படுகின்றன. வடகொரிய தலைவர் கிம் வில்லனாக மேற்குலகத்தால் சித்தரிக்கப்பட்டாலும் தென்கொரியாவுக்கு காலடி வைத்து தாமும் போருக்கும் ஆயத்தம் சமாதானத்துக்கும் ஆயத்தம் என்பதை மிக தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளார்.

கடந்த ஒரு மாத காலத்துக்கு முன்னதாக (சித்திரை 2018) திடீரென கிம் சீனாவுக்கு விஜயம் செய்து சீனத்தலைவரை சந்தித்து இரகசிய பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் தொடராக நிகழ்ந்தேறிய பிரதான சம்பவங்களில் அதாவது அணுஆயுத பரீட்சை நிலையங்களை மூடுவது, தென்கொரியாவுக்கு விஜயம் செய்தமை, தென்கொரிய அதிபருடன் கூட்டுப் பிரகடனம், அமெரிக்க அதிபருடன் நடைபெறப்போகும் உச்சிமாநாடு யாவும் சீனாவின் ஆலோசனைகளின் பிரகாரம் நடக்கிறதென்பதை சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

வடகொரிய அதிபர் கிம்,உலகிற்கு விடுத்த அறிவித்தலை அதாவது வடகொரியாவில் அணுஆயுத பரிசோதனை நிலையங்களை மூடுவதையும் கொரியத் தீபகற்பத்தில் சமாதானத்திற்கு குந்தகமாக எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப் போவதில்லை என்ற பிரகடணத்தையும் விசுவாசமாக நிறைவேற்றுவாரா? என்பது பற்றி மேற்கத்தேய ஊடகங்களில் வாதப் பிரதிவாதங் கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

இத்தருணத்தில் கொரிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முகமாக வட கொரியாவில் நிகழ்த்த உத்தேசிக்கப்பட்டுள்ள உச்சிமாநாட்டுக்கு வருமாறு தென்கொரிய ஜனாதிபதிக்கு அழைப்பிதழ் அனுப்பியமை நினைவுகூரத்தக்கது. எவ்வாறிருப்பினும் வடகொரிய ஜனாதிபதியின் தங்கை தென்கொரியாவுக்கு விஜயம் செய்தமை மிக முன்னேற்றகரமான விடயம் என்பது இன்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டி விஜயத்தின் போது ஜப்பானிய பிரதமர் அபே ஒரு எச்சரிக்கையையும் விடுத்தார். அதாவது புன்னகை இராஜதந்திரத்தில் மயங்கக்கூடாது என தென்கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஒரு எச்சரிக்கை சமிக்ஞையை விடுத்தார். புன்னகை இராஜதந்திரம் வெற்றி பெற்றுள்ளதோ என்றும் சிந்திக்க வேண்டியுள்ளது. கிம், அமெரிக்க அச்சுறுத்தலுக்கு அடிபணிந்தார் என இறுமாப்புடன் கருத்துக்களைத் தெரிவிக்கும் மேற்கத்தைய ஊடகங்கள் வெற்றி பெற்றவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ட் என்றும் அவருடைய கொரிய தீபகற்பம் சம்பந்தமான கொள்கை வெற்றியளித்துள்ளது என்றும் அடுத்த நோபல் பரிசிற்கான தகுதி அவரிற்கு உண்டென்றும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றன. வடகொரிய ஜனாதிபதி கிம் அமெரிக்காவிற்கு எதிரான நிலைப்பாடுகளை மேற்கொள்வதற்கு 1950 களிலிருந்து அமெரிக்காவினால் பின்பற்றப்பட்ட கொள்கையும் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அமெரிக்க ஜனாதிபதிகள் பின்பற்றிய கொள்கையும்,சாராம்சத்தில் ஒரே மாதிரியாகவே அமைந்தன. அதே வேளை வடகொரிய முன்னாள் அதிபர் கிம் உல் சங் அவரைத் தொடர்ந்து வந்த தலைவர்கள் தமது கொள்கைகளில் தெளிவாகவே இருந்தனர். கொரியப் பிரச்சினை கொரிய மக்களின் பிரச்சினை. இந்த விவகாரத்தில் அமெரிக்கா மூக்கை நுழைக்க வேண்டிய அவசியமில்லை. நாமே எமது பிரச்சினையைத் தீர்ப்போம் என்பதே வடகொரியத் தலைவர்களின் தெளிவான செய்தியாகும். வடகொரியா பொருளாதாரத் தடைகளால் சில பாதகமான விளைவுகளை எதிர்நோக்கினாலும் கோடிக்கணக்கான டொலரை முதலீடு செய்து அணுசக்தியை பரீட்சிப்பதென்பது மாபெரும் விடயமாகும். சோவியத் ரஷ்யாவின் உடைவிற்குப் பின்னர் ரஷ்யா பொருளாதாரத்தில் வலிமையுடைய நாடாக இல்லாதுவிடினும் இராணுவ ரீதியாக ஆற்றல் நிறைந்த நாடு என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். இன்று உலகில் வளர்ந்துவரும் வல்லரசான மக்கள் சீனாவில் ஒரு பட்டு ஒரு பாதைத் திட்டமும்அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கான ஆசிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி வங்கி ஊடாக மேற்கொள்ளும் உதவிகளும் நீண்ட காலமாக சீனத் தலைவர் மாவோவின் காலத்திலிருந்து இன்றுவரை வடகொரியாவுக்கு வழங்கிவரும் ஆதரவும் வடகொரியாவிற்கு பலம் சேர்த்த விடயங்களாகும். எவ்வாறாயினும் ஆறு நாடுகள் கொண்ட அணியும் (வடகொரியா, தென்கொரியா, சீனா,ஜப்பான், ரஷ்யா, அமெரிக்கா) திரைமறைவில் மேற்கொண்ட இராஜதந்திர நடவடிக்கைகளும் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நிதானமான போக்குகளும் தென்கொரிய அதிபரின் பொறுமையான அணுகுமுறையும் கொரிய தீபகற்பத்தை அமைதிப் பூங்காவாக மாற்றும் என்ற எதிர்பார்ப்பு உலகின் பல தரப்பினரிடமும் காணப்ப டும் பேர வாவா கும். 

ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம்  
(இளைப்பாறிய பணிப்பாளர், இலங்கை வெளிவிவகார அமைச்சு.) 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-05-05#page-5

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

ரஸ்ய,குறிப்பாக சீனாவின் ஆலோசனைகளை கனகச்சிதமாக வடகொரியா செயற்படுத்துவது போல் தான் தற்போதைய நிலை உள்ளது.அமெரிக்காவின்  தந்திரங்களை பலநாடுகள் அறிந்தே வைத்துள்ளன. அதற்கான பதில் தந்திரங்களை ஈரான் தொடக்கம் வடகொரியா வரை அரங்கேற்றி வருகின்றன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.