Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எண்ணெய்க் கப்பலில் பயணித்த 130 இலங்கையர்கள் மலேசியாவில் கைது

Featured Replies

எண்ணெய்க் கப்பலில் பயணித்த 130 இலங்கையர்கள் மலேசியாவில் கைது

 

malaysia-boat-1-300x171.jpgஅவுஸ்ரேலியா, நியூசிலாந்து நோக்கி பயணம் செய்த எண்ணெய்க் கப்பல் ஒன்றில் இருந்து 130 இலங்கையர்கள் மலேசியக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

மலேசியாவின், ஜோகோர்  மாகாணத்தின், Tanjung Gemuk துறைமுகத்துக்கு அப்பால் உள்ள கடலில் பயணித்த Etra என்ற எண்ணெய் தாங்கி கப்பலில் இருந்தே, 130 இலங்கையர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மே முதலாம் நாள், காலை இவர்கள் கைது செய்யப்பட்ட போதிலும், இதுபற்றிய தகவல்களை மலேசிய காவல்துறை நேற்று மாலையே வெளியிட்டுள்ளது.

இந்தக் கப்பலில் இருந்த அனைவரும் இலங்கையர்களாவர். அவர்களில் 98 ஆண்களும், 24 பெண்களும், 5 சிறுமிகள் உள்ளிட்ட 9 சிறுவர்களும் அடங்கியுள்ளனர்.

malaysia-boat-2-1024x585.jpg

malaysia-boat-1-1024x585.jpgஇவர்களை கப்பலில் ஏற்றுவதற்குப் பயன்படுத்தப்பட்ட மீன்பிடிப் படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

அதில், இருந்த மூன்று இந்தோனேசியர்களும், நான்கு மலேசியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஆட்கடத்தல் நடவடிக்கைகளுக்கான ஒழுங்குகளைச் செய்த 5 மலேசியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

http://www.puthinappalakai.net/2018/05/06/news/30752

  • தொடங்கியவர்

மலேசியாவில் பிடிபட்ட இலங்கையர்கள் இரண்டு சட்டங்களின் கீழ் தடுத்து வைப்பு

 

arrested-lankans-300x193.jpgஅவுஸ்ரேலியா, நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற போது எண்ணெய்த் தாங்கி கப்பல் ஒன்றில் வைத்து மலேசிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 131 இலங்கையர்கள் தொடர்பாகவும், கோலாலம்பூரில் உள்ள சிறிலங்கா தூதரகம் கவனம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பாக சிறிலங்கா தூதரகம், மலேசிய அதிகாரிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளதுடன், இணைந்து பணியாற்றி வருவதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேவேளை,  கைது செய்யப்பட்ட 131 இலங்கையர்களும், ஜோஹோர் பாரு மாகாணத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று மலேசிய காவல்துறையின் சிறப்பு பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்ட 131 இலங்கையர்களில், 127 பேர், 1959/63  குடிவரவுச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, ஜோஹோர் பாரு மாகாணத்தில் உள்ள பீகன் நேனாஸ் குடிவரவு தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய நான்கு இலங்கையர்கள், 2007ஆம் ஆண்டின் ஆட்களைக் கடத்துவதற்கு எதிரான, மற்றும் குடியேற்றவாசிகள் கடத்தலுக்கு எதிரான சட்டத்தின் கீழ்  கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

arrested-lankans.jpg

அத்துடன், கைது செய்யப்பட்ட இலங்கையர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கைது செய்யப்பட்ட 131 பேரில், 43 பேரிடம், அகதிகளுக்கான ஐ.நா முகவர் அமைப்பினால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகள் இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.puthinappalakai.net/2018/05/07/news/30780

  • தொடங்கியவர்

131 இலங்கையர்களை அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக அழைத்துச் செல்ல முயற்சி

City-01-BlackGMGPage1Image0012-5ef5484ae0f65d0fc2343bd14de4c5d0f93d7658.jpg

 

 

மலேசிய பொலிஸாரால் முறியடிப்பு

மலேசியாவைச் சேர்ந்த ஆட்கடத்தல் குழு வொன்றின் உதவியுடன் துருப்பிடித்த எண்ணெய் தாங்கிக் கப்பலொன்றில் மறைந்தி ருந்து அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோத பயணத்தை மேற்கொண்ட 131 இலங்கையர்களை மலேசிய பொலிஸார் குறுக்கிட்டு தடுத்து நிறுத்தியுள்ளனர்.  

கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.

 அந்த எண்ணெய்தாங்கிக் கப்பலில் பயணித்த இலங்கையர்களில் 98 ஆண்களும் 24 பெண்களும் 4 சிறுவர்களும் 5 சிறுமிகளும் உள்ளடங்குவதாக பொலிஸ் தலைவர் மொஹமட் புஸி ஹருன் தெரிவித்தார்.

மேற்படி கபடமான ஆட்கடத்தல் நடவடிக்கையை ரோயல் மலேசியா பொலிஸார் வெற்றிகரமாக முறியடித்துள்ளதாக அவர் கூறினார்.

 இதன்போது பொலிஸார் அந்தக் கடத்தல் நடவடிக்கையுடன் தொடர்புபட்ட 3 இந்தோனேசியர்கள் மற்றும் 4 மலேசியர்களைக் கைதுசெய்துள்ளதாக சனல் நியூஸ் ஏசியா ஊடகம் தெரிவிக்கிறது.

கடத்தல்காரர்கள் ஜொஹொர் பிராந்தியத்தில் கொதா திங்கியிலுள்ள தன்ஜுங் கெமுக் கடல்பரப்பிலான கப்பல் பயணப் பாதையில் இந்த ஆட்கடத்தல் நடவடிக்கையை மேற்கொண்ட வேளையிலேயே பொலிஸாரிடம் சிக்கிக் கொண்டுள்ளனர்.

 இலங்கை, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, இந்தோனேசியா மற்றும் மலேசியாவுடன் தொடர்புகளைக் கொண்ட மேற்படி ஆட்கடத்தல் குழுவானது 2017 ஆம் ஆண்டின் மத்தியலிருந்து செயற்பட்டு வருவதாக மொஹமட் புஸி ஹருன் கூறினார்.

இதேவேளை இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மலேசியாவின் தெற்கு ஜொஹான் பிரதேசத்தில் கரையோர பகுதியில் கடந்த முதலாம் திகதி இலங்கையர்கள் என நம்பப்படும் 131பேரை கைதுசெய்துள்ளதாக மலேசிய ரோயல் பொலிஸின் விசேட பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. இந்த 131பேரில் 127பேர் 1959/ 63 என்ற இலக்கத்தின் குடிவர சட்டத்தின் கீழே கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தற்போது ஜாெஹானில் இருக்கும் குடிவரவு சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படுபவர்களை தடுத்துவைக்கும் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஏனைய 3பேரும் 2007 (மனித வியாபாரம் மற்றும் மனிதவள ஏற்றுமதி தடை செய்யும்) சட்டத்தின் கீழ் செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் சம்பவம் தொடர்பாக தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதுடன் மலேசியாவின் இலங்கை உயரிஸ்தானிகர் காரியாலயத்தின் அதிகாரிகள் குறித்த மலேசிய அதிகாரிகளுடன் அதுதொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கைதுசெய்யப்பட்ட 131பேர் தொடர்பாக தொடர்ந்தும் உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அத்துடன் எமக்கு கிடைத்த ஆரம்பகட்ட தகவலின் பிரகாரம், அவர்களின் 43பேரிடம் ஐக்கிய நாடுகளின் அகதிகள் தொடர்பில் உயரிஸ்தானிகர் காரியாலயத்தால் விநியாேகிக்கப்படும் அடையாள அட்டை இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் கைதுசெய்யப்பட்ட நபர்கள் தொடர்பாக மேலதிக தகவல்கள் கிடைக்கப்பெற்றதும் அது தொடர்பாக பொது மக்களுக்கு அறியத்தரப்படும். அத்துடன் எங்களால் வழங்கப்படும் தகவல்கள் இது தொடர்பாக தற்போது இடம்பெற்றுவரும் விசாரணை நடவடிக்கைகளுக்கு தடையாக இருக்கக்கூடாது என்பதை கருத்திற்கொண்டே தகவல் வழங்கப்படும்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-05-07#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.