Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகலாவிய ரீதியில் யாழ் தேவிக்கு கிடைத்த கௌரவம்

Featured Replies

உலகலாவிய ரீதியில் யாழ் தேவிக்கு கிடைத்த கௌரவம்
 
 

உலகின் மிகச் சிறந்த மற்றும் அழகிய இயற்கை காட்சிகளை இரசிக்கக்கூடிய ரயில் சேவைகள் பட்டியலை தி கார்டியன் (The Guardian) இணையதளம் வெளியிட்டுள்ளது.

மிகச் சிறந்த 18 ரயில் சேவைகள் பட்டியலில் இலங்கையின் யாழ் தேவி ரயில் சேவையும் இடம்பெற்றுள்ளது.

ரயில் பயணத்தின்போது பயணிகளின் மனதுக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய இயற்கை காட்சிகள், பல்வேறு கலாசாரங்களை பிரதிபலிக்கும் கட்டடங்கள் என பயணத்தை இனிமையாக்கும் அனுபவத்தை வைத்து இந்தத் தரப்படுத்தல் வெளியாகியுள்ளது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/உலகலாவிய-ரீதியில்-யாழ்-தேவிக்கு-கிடைத்த-கௌரவம்/175-215437

Duration: 190 miles/6¾hr
Price: About £3.50

For decades northern Sri Lanka was virtually cut off by the civil war, and second city Jaffna lost population and prestige. But the line from the capital reopened in 2013, and now foreigners and Sri Lankans alike are exploring the city and its fascinating Tamil culture. Intercity trains are supposed to take less than seven hours, though delays are frequent. Reservable first- and second-class tickets go on sale 30 days in advance, but there’s no online booking: visitors need to use an agency such as visitsrilankatours.co.uk. Book well in advance to snaffle a seat in an observation car (selected trains only) with large windows for watching the scenery change from lush to dry, dotted with bright-striped Hindu temples.

 

Colombo to Jaffna, Sri Lanka

The Queen of Jaffna train arrives in Jaffna.

https://www.theguardian.com/travel/2018/may/05/worlds-best-rail-journeys-train-travel

3825.jpg?w=700&q=55&auto=format&usm=12&fit=max&s=73435abf5369983dc3faf00dd2bbf060

  • தொடங்கியவர்

லகின் தலை சிறந்த ரயில் வழித்தடங்களில் யாழ்தேவி மற்றும் நீலகிரி மலை ரயில்கள் இடம் பிடித்துள்ளன. 

உலகின் சிறந்த 18 ரயில் பயணங்கள் பட்டியலில் நீலகிரி மலை ரயில், இலங்கை யாழ்தேவி ரயில் தேர்வு: லண்டன் நாளிதழ் ‘தி கார்டியன்’ வெளியிட்டது

 

 
01cbrkkpalam

இயற்கை எழில் கொஞ்சும் மலைப் பாதையில் பயணித்த கோடைகால சிறப்பு மலை ரயில்.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து வெளியாகும் பிரபல நாளிதழான ‘தி கார்டியன்’ (The Guardian) உலகின் சிறந்த 18 ரயில் பயணங்களை பட்டியலிட்டுள்ளது. இதில் ஆசியா கண்டத்தில் இந்தியாவில் நீலகிரி மலை ரயிலும், இலங்கையின் யாழ் தேவி ரயில் மற்றும் சீனாவின் குங்ஹாய் - திபெத் ரயில் ஆகிய மூன்று ரயில் பயணங்களை தேர்வு செய்துள்ளது.

 

நீலகிரி மலை ரயில்

 

நீலகிரி மலை ரயில் 1899-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 2005-ம் ஆண்டில் யுனெஸ்கோ வின் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை உள்ள 46 கி.மீ. தூரத்தைக் கடக்க 250 பாலங்களையும், 208 வளைவுகளையும், 16 சுரங்கப் பாதைகளையும் கடந்து செல்ல வேண்டும்.

இந்த ரயில் பாதை மேல்நோக்கி செங்குத்தாக இருப்பதால் சுமார் 19 கி.மீ. தூரம் பல் சக்கர தண்டவாளப் பாதையில் பயணிக்கிறது. முன்னர் நீராவி இன்ஜினில் இயக்கப்பட்டு வந்த நீலகிரி மலை ரயில், தற்போது பயோ டீசல் இன்ஜின் மற்றும் பர்னஸ் ஆயில் கொண்டும் இயக்கப்படுகிறது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை நீலகிரி மலை ரயில் அதிக அளவில் ஈர்ப்பதால் கூட்ட நெரிசலைத் தவிர்க்க இணையதளங்களில் முன்பதிவு செய்து வருகின்றனர்.

 

யாழ்தேவி ரயில்

இலங்கையில் உள்நாட்டு போர் நடந்து வந்ததால் சுமார் 25 ஆண்டுகளாக தமிழர்கள் அதிகம் வாழும் வட மாகாணப் பகுதிகளில் ரயில் சேவை முடங்கி இருந்தது. இந்தியா உதவியுடன் இலங்கையின் தலைநகர் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு மீண்டும் யாழ் தேவி ரயில் சேவை, கடந்த 13.10.2014 அன்று தொடங்கப்பட்டது. இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான ‘ஐஆர்சிஓஎன்’ இந்த ரயில் சேவைக்கான தண்டவாளங்களை மறுசீரமைப்பதில் முக்கியப் பங்காற்றியது. இது இலங்கையின் வடக்கு மற்றும் தெற்கு மாகாணங்களுக்கிடையே சுமார் 350 கி.மீ. தூரத்தை இணைக்கிறது. யாழ்தேவி ரயில் இலங்கையின் வட மற்றும் தென்பகுதியையும் கலை, பண்பாடு, வர்த்தகம் என பலதரப்பட்ட வகைகளில் ஒன்றிணைக்கக் கூடியது. யாழ் தேவியில் பயணம் செய்ய முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு டிக்கெட் முன்பதிவை 30 நாட்களுக்கு முன்பே மேற்கொள்ள வேண்டும்.

பட்டியலில் இடம்பெற்றுள்ள குங்ஹாய் - திபெத் ரயில் பயணம்தான் உலகிலேயே மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள ரயில் பாதை ஆகும். இது சீனாவின் குங்ஹாய் நகரிலிருந்து திபெத்தின் லாசா நகரம் வரை 1,910 கி.மீ தூரம் கொண்டது.

இந்த ரயில் பாதை ‘தங்குலா கணவாய்’ என்ற பகுதியை கடந்து செல்கிறது. இந்த தங்குலா கணவாய் கடல் மட்டத்திலிருந்து 5, 027 அடி உயரத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/tamilnadu/article23809405.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.