Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிறைவேற்று அதிகாரமும் இனப்பிரச்சினை தீர்வும்

Featured Replies

நிறைவேற்று அதிகாரமும் இனப்பிரச்சினை தீர்வும்

SK-01Page1Image0002-c70a589042efa142a8ed2519548c260b0bb8e96f.jpg

 

வரும் செவ்­வாய்­கி­ழமை பாரா­ளு­மன்றம் கூடும் போது, நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி ஆட்­சி­மு­றையை ஒழிக்கும், வகை­யி­லான, அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆவது திருத்­தத்தை முன்­வைக்­க­வுள்­ள­தாக ஜே.வி.பி. அறி­வித்­துள்ள நிலையில், அதற்கு ஆத­ர­வா­கவும், எதி­ரா­கவும் கருத்­துக்கள் வெளி­வந்து கொண்­டி­ருக்­கின்­றன.

1978 ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜய­வர்த்­தன உரு­வாக்­கிய அர­சி­ய­ல­மைப்பின் மூலம், தோன்­றி­யது தான் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி பதவி.

ஆணைப் பெண்­ணா­கவும் பெண்ணை ஆணா­கவும் மாற்­று­வதைத் தவிர, மற்­றெல்லா அதி­கா­ரங்­களும் இந்த ஜனா­தி­பதி பதவி மூலம் தமக்குக் கிடைத்­தி­ருப்­ப­தாக - பின்னர், ஜே.ஆர். ஜய­வர்த்­தன, கூறி­யி­ருந்தார்.

இந்த நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி பதவி, ஒரு கால­கட்­டத்தில் எதேச்­சா­தி­கார ஆட்சி நடப்­ப­தற்கும் வழி வகுத்­தது.

ஜனா­தி­பதி இட்­டதே சட்டம், யாரும் எதற்கும் கேள்வி கேட்க முடி­யாத நிலை, நீதித்­துறை சுதந்­திரம் கேள்­விக்­குள்­ளா­கிய நிலை என்று மனி­தனின் அடிப்­படைச் சுதந்­தி­ரங்கள், உரி­மைகள் கேள்­விக்­குள்­ளாக்­கப்­ப­டு­வ­தற்கு நிறை­வேற்று அதி­காரம் முக்­கிய கார­ணி­யாக இருந்­தது,

ஜே.ஆருக்குப் பின்னர், ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட்ட சந்­தி­ரிகா குமா­ர­துங்க, மஹிந்த ராஜபக் ஷ, மைத்­தி­ரி­பால சிறி­சேன போன்­ற­வர்கள் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி ஆட்சி முறையை ஒழிக்கப் போவ­தாக வாக்­கு­றுதி அளித்­தி­ருந்­தனர்.

எனினும், சந்­தி­ரி­காவோ, மஹிந்­தவோ, அந்த வாக்­கு­று­தியை நிறை­வேற்­று­வ­தற்கு கொஞ்­சமும் முயற்­சிக்­க­வில்லை. 18 ஆவது திருத்­தச்­சட்­டத்தின் மூலம், மஹிந்த ராஜபக் ஷ நிறை­வேற்று அதி­கா­ரத்தை இன்னும் பலப்­ப­டுத்திக் கொண்டார்.

மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் கூட, பெரி­ய­ளவில் இதற்­கான முயற்­சி­களை எடுத்தார் என்று கூற முடி­யாது.

ஆனால், 19 ஆவது திருத்தச் சட்­டத்தின் மூலம், ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்­களை மட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு துணை­யாக இருந்தார்.

இப்­போது, நிறை­வேற்று அதி­கா­ர­முள்ள ஜனா­தி­பதி பத­வியை ஒழிப்­ப­தற்கு, ஜே.வி.பி. தனி­நபர் பிரே­ர­ணையை பாரா­ளு­மன்­றத்தில் கொண்டு வரப் போவ­தாகக் கூறி­யி­ருக்­கி­றது. அர­சி­ய­ல­மைப்புத் திருத்­தத்தை மேற்­கொள்­வ­தற்­காக, பாரா­ளு­மன்றம், அர­சி­ய­ல­மைப்புப் பேர­வை­யாக அறி­விக்­கப்­பட்­ட­துடன், வழி­ந­டத்தல் குழு ஒன்று அமைக்­கப்­பட்டு, அதன் இடைக்­கால அறிக்­கையும் வெளி­வந்­துள்ள நிலையில் தான், ஜே.வி.பி. இந்த பிரே­ர­ணையை முன்­வைக்­க­வுள்­ளது.

ஆரம்­பத்தில் இருந்தே நிறை­வேற்று அதி­கா­ரத்தை ஒழிக்க வேண்டும் என்­பதில் ஜே.வி.பி. உறு­தி­யாக இருந்து வந்­துள்­ளது. வழி­ந­டத்தல் குழுவின் கூட்­டங்­க­ளிலும் அதனை வலி­யு­றுத்­தி­யது.

எனினும், வழி­ந­டத்தல் குழுவில் அதற்குப் போதிய ஆத­ரவு கிடைக்­காத நிலையில், நிறை­வேற்று அதி­கா­ரத்தை ஒழிப்­ப­தற்கு இடைக்­கால அறிக்­கையில் கவனம் செலுத்­தப்­ப­ட­வில்லை.

அர­சி­ய­ல­மைப்புப் பேர­வையின் பணிகள் ஐந்து மாதங்­க­ளாக முடங்கிக் கிடக்­கின்ற நிலையில், ஜே.வி.பி. 20 ஆவது திருத்­தச்­சட்­டத்தின் மூலம் நிறை­வேற்று அதி­கா­ரத்தை இல்­லாமல் செய்ய முயற்­சிக்­கி­றது.

இதனைச் செய்ய வேண்­டு­மானால், பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்மைப் பலத்­துடன் இந்தத் திருத்தம் நிறை­வேற்­றப்­பட வேண்டும். சில வேளை­களில், இதற்கு சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட வேண்டும் என்று உயர்­நீ­தி­மன்றம் கூறி­னாலும் ஆச்­ச­ரி­ய­மில்லை.

ஆனால் மூன்றில் இரண்டு பெரும்­பான்மைப் பலத்­துடன் இந்தத் திருத்­தத்தை நிறை­வேற்ற முடி­யுமா என்­பது சிக்­க­லான கேள்­வி­யாக இருக்­கி­றது.

ஏனென்றால், முன்னர், நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி பதவி ஒழிக்­கப்­பட வேண்டும் என்று கூறி­ய­வர்கள் இப்­போது அந்த நிலைப்­பாட்டில் இல்லை. காலம், மற்றும் சூழ்­நி­லை­களைக் கருத்தில் கொண்டு அவர்கள் தமது நிலைப்­பாட்டை மாற்­றி­யி­ருக்­கி­றார்கள் அல்­லது இதனை முன்­னி­றுத்தி பேரம் பேச முனை­கி­றார்கள்.

நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி பதவி இல்­லாமல் செய்­யப்­பட்டு விட்டால், பிர­த­ம­ருக்கும் பாரா­ளு­மன்­றத்­துக்கும் அதி­கா­ரங்கள் அதி­க­ரிக்கும்.

ஜனா­தி­ப­தியைப் பொறுத்­த­வ­ரையில் பாரா­ளு­மன்­றத்­துக்கோ அல்­லது வேறு எவ­ருக்­குமோ பொறுப்­புக்­கூற வேண்­டிய நிலையில் இல்லை.

ஆனால் நிறை­வேற்று அதி­கா­ர­முள்ள பிர­தமர், நாடா­ளு­மன்­றத்­த­துக்குப் பதி­ல­ளிக்க வேண்­டிய கடப்­பாட்டைக் கொண்­டி­ருப்­ப­வ­ராக இருப்பார்.

இப்­போ­தைய நிலையில் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை ஒழிக்­கப்­ப­டு­வது முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு சாத­க­மா­னது. ஏனென்றால், அவரால் தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்பின் கீழ், மீண்டும் ஜனா­தி­ப­தி­யாக முடி­யாது.

பிர­த­ம­ருக்கு கூடுதல் அதி­காரம் வழங்­கப்­ப­டு­வது, அவர் பொதுத்­தேர்­தலின் மூலம், ஆட்­சியைக் கைப்­பற்­றினால் முழு­மை­யான அதி­கா­ரத்தை அனு­ப­விப்­ப­தற்கு வாய்ப்புக் கிடைக்கும். 

ஜனா­தி­பதி ஆட்­சி­முறை நீடித்தால், அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலில் தனக்குப் பதி­லாக, இன்­னொரு சகோ­த­ரரைப் போட்­டியில் நிறுத்த வேண்­டிய நிலை ஏற்­படும். அதனால் தமது செல்­வாக்கு பாதிக்­கப்­படும் என்ற அச்­சமும் மஹிந்­த­வுக்கு உள்­ளது.

எனவே நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி ஆட்­சி­முறை ஒழிக்­கப்­ப­டு­வது மஹிந்த ராஜபக் ஷவைப் பொறுத்­த­வ­ரையில் சாத­க­மா­னது. அதனால் தான் அவர், ஒரு நிபந்­த­னை­யுடன் ஆத­ரவு தெரி­வித்­தி­ருந்தார்.

20 ஆவது திருத்­தச்­சட்டம் நிறை­வேற்­றப்­பட்­டதும், பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­படும் என்ற உத்­த­ர­வாதம் தரப்­பட்டால், அதனை ஆத­ரிக்கத் தயார் என்று அவர் கூறி­யி­ருக்­கிறார்.

அதே­வேளை, மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஆத­ரவு அளித்து வரும் தேசிய சுதந்­திர முன்­னணி உள்­ளிட்ட சிங்­கள பௌத்த தேசி­ய­வாதக் கட்­சிகள், இதனை வேறு வித­மாகப் பார்க்­கின்­றன.

நிறை­வேற்று அதி­கா­ர­முள்ள ஜனா­தி­பதி பத­வியே நாட்டின் ஆள்­புல ஒரு­மைப்­பாட்­டையும், இறை­மை­யையும் பாது­காக்­கி­றது என்று அவர்கள் வலு­வாக நம்­பு­கி­றார்கள்.

நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி ஆட்­சி­முறை இருந்­ததால் தான் புலி­களைத் தோற்­க­டிக்க முடிந்­தது என்றும், அது­போன்ற சவால்கள் எதிர்­கா­லத்தில் தோன்­றினால் அவற்றைச் சமா­ளிக்க இந்தப் பதவி தேவை என்றும் அவர்கள் கூறு­கி­றார்கள்.

இந்­த­நி­லையில் மஹிந்த ராஜபக் ஷ ஆத­ரவு கூட்டு எதி­ர­ணிக்­குள்­ளேயே இது பிள­வு­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும், ஐக்­கிய தேசியக் கட்­சியும் கூட நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி ஆட்­சி­முறை ஒழிக்­கப்­ப­டு­வ­தற்கு முழு மன­துடன் ஆத­ரவு அளிக்கத் தயா­ராக இல்லை.

மஹிந்த ராஜபக் ஷ மீண்டும் அதி­காரம் படைத்­த­வ­ராக மாறு­வதை தடுப்­ப­தற்கு ஐக்­கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி ஆகி­ய­வற்­றுக்கு இப்­போது உள்ள ஒரே ஆயுதம் இந்த நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி பதவி தான்.

இது மாத்­திரம் தான் அவரால் எட்டிப் பிடிக்க முடி­யாத பதவி. எனவே, இதனைத் தக்­க­வைத்துக் கொண்டால் தான், மஹிந்­தவின் ஆட்­டத்தைக் கட்­டுப்­ப­டுத்தி வைத்­தி­ருக்க முடியும் என்று இந்தக் கட்­சிகள் நினைக்­கின்­றன.

அதே­வேளை, நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறை ஒழிக்­கப்­பட வேண்டும் என்று வலி­யு­றுத்­திய தமிழ், முஸ்லிம் கட்­சிகள் கூட இப்­போது உட­ன­டி­யாக அதனைச் செயற்­ப­டுத்­து­வ­தற்கு ஆத­ர­வ­ளிக்கத் தயா­ராக இல்லை.

தமிழ்க் கட்­சி­களைப் பொறுத்­த­வ­ரையில், இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வை முக்­கி­ய­மான ஒன்­றாக பார்க்­கின்­றன. பல தசாப்­தங்­க­ளாக இழு­ப­றிப்­பட்டு வரும் இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு எட்­டு­வது தான் முதன்­மை­யான -முக்­கி­ய­மான பிரச்­சி­னை­யாக தமிழ்க் கட்­சிகள் கரு­து­கின்­றன.

ஆனால், இந்த ஆட்­சியில் இனப்­பி­ரச்­சி­னைக்கு, புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாகத் தீர்வு எட்­டப்­படும் என்று அளிக்­கப்­பட்ட வாக்­கு­றுதி நிறை­வே­றப்­ப­டாத நிலையில், நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி பத­வியை மாத்­திரம் ஒழிப்­ப­தற்கு துணை­போக முடி­யாது என்­கி­றது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு.

இனப்­பி­ரச்­சினைத் தீர்வு உள்­ளிட்ட அனைத்து பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்வு காணப்­படும் நிலையில் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி பத­வியை ஒழிப்­ப­தற்கு ஆத­ரவு அளிக்­கலாம் என்று கூட்­ட­மைப்பின் பேச்­சாளர் சுமந்­திரன் கூறி­யி­ருக்­கிறார்.

இன்­றைய நிலையில், ஐக்­கிய தேசியக் கட்­சிக்கோ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கோ, பொதுஜன முன்னணிக்கோ, அல்லது ஜே.வி.பி.க்கோ இனப்பிரச்சினை தீர்வு முக்கியமானதாக தெரியவில்லை.

அவர்களைச் சுற்றியுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலேயே கவனம் செலுத்துகிறார்கள். அத்தகைய பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு தமிழ், முஸ்லிம் கட்சிகளின் ஆதரவையும் தேடிக் கொள்கிறார்கள்.

ஆனால் சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கோ, அதற்கான முயற்சிகளை எடுப்பதற்கோ அவர்கள் கவனம் செலுத்தவதாக இல்லை.

இப்படியான நிலையில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கும் ஜே.வி.பியின் சட்டத்திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேறுவது கடினம்.

என்றாலும், அதனை நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படக் சூடிய சூழல் ஏற்பட்டால், தமிழ்க் கட்சிகளும் இனப்பிரச்சினைத் தீர்வை முன்வைத்து பேரம் பேசுவதை விட வேறு வழி இல்லை.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-05-06#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.