Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சத்தியலிங்கம் குற்றவாளியல்ல வடக்கு மாகாண சபையில் அறிவிப்பு!!

Featured Replies

  • சத்தியலிங்கம் குற்றவாளியல்ல வடக்கு மாகாண சபையில் அறிவிப்பு!!
 
 

சத்தியலிங்கம் குற்றவாளியல்ல வடக்கு மாகாண சபையில் அறிவிப்பு!!

வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர்  ப.சத்தியலிங்கம் குற்றவாளியல்ல என்று வடக்கு மாகாண சபையில் இன்று ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

வடக்கு மாகாண சபை அமர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் மீதான குற்றங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது. அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை.

அதனால் அவர் குற்றவாளியல்ல என்று சபை அறிவித்தது.

http://newuthayan.com/story/91792.html

  • தொடங்கியவர்
  • குற்­றச்­சாட்­டுக்கு ஆதா­ர­மில்லை -சத்­தி­ய­லிங்­கம் நிர­ப­ரா­தி­யா­னார்!!
 
 

குற்­றச்­சாட்­டுக்கு ஆதா­ர­மில்லை -சத்­தி­ய­லிங்­கம் நிர­ப­ரா­தி­யா­னார்!!

வடக்கு மாகாண சபை­யின் முன்­னாள் சுகா­தார அமைச்­சர் மருத்­து­வர் ப.சத்­தி­ய­லிங்­கத் துக்கு எதி­ரா­கச் சபை­யில் இது­வரை எந்­த­வொரு குற்­றச்­சாட்­டும் முன்­வைக்­கப்­ப­ட­வில்லை. அத­னால் அவர் குற்­ற­மற்­ற­வர் என்று வடக்கு மாகாண சபை தீர்­மா­னிப்­ப­தாக வடக்கு மாகாண அவைத்­த­லை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம் நேற்று அறி­வித்­தார்.

வடக்கு மாகாண சபை­யின் 122 ஆவது அமர்வு, கைத­டி­யி­லுள்ள பேர­வைச் செய­ல­கத்­தில் அவைத்­த­லை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம் தலை­மை­யில் நேற்று இடம்­பெற்­றது.

வடக்கு மாகாண முன்­னாள் அமைச்­சர்­கள் 4 பேர் மீது முத­ல­மைச்­ச­ரால் நிய­மிக்­கப்­பட்ட விசா­ர­ணைக் குழு விசா­ரணை நடத்­தி­யது. அந்த விசா­ர­ணைக் குழு­வின் அறிக்கை வெளி­யா­கிய பின்­ன­ரும் அந்த அறிக்­கை­யில் கூறப்­பட்­டி­ருக்­கும் விட­யங்­கள் தொடர்­பாக மேல்­ந­ட­வ­டிக்கை எது­வும் எடுக்­கப்­ப­ட­வில்லை.

அதற்­கான கார­ணம் என்ன என்று எதிர்க்­கட்சி தலை­வர் சி.தவ­ராசா முத­ல­மைச்­ச­ரி­டம் வாய்­மொ­ழி­யாக வினா எழுப்­பி­னார்.

காணா­மற்­போ­யின
ஆனால் போக­வில்லை
பதி­ல­ளித்த வடக்கு முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், வடக்கு மாகாண சுகா­தார அமைச்­சில் 750 கோவை­கள் காணா­மற்­போ­யின என்று எனக்­குக் கூறப்­பட்­டது. அந்­தக் கோவை­கள் மீள­வும் அங்கு வந்­து­விட்­டன என்று பின்­னர் கூறப்­பட்­டது.

ஆகை­யால் சுகா­தார அமைச்­சர் மீது மேல­திக விசா­ரணை மேற்­கொள்­ள­ வேண்­டிய தேவை எனக்கு இருக்­க­வில்லை என்று பதில் அளித்­தார். இத­னை­ய­டுத்து வடக்கு மாகாண சபை­யி­லும் முன்­னாள் சுகா­தார அமைச்­சர் சத்­தி­ய­லிங்­கத்­துக்கு எதி­ராக எந்­தக் குற்­றச்­சாட்­டுக்­க­ளும் முன்­வைக்­கப்­ப­ட­வில்லை.

எனவே வடக்கு மாகாண முன்­னாள் சுகா­தார அமைச்­சர் மீதான குற்­றச்­சாட்­டுக்­கள் மீளப் பெறப்­ப­டு­வ­து­டன் அவர் முழு­மை­யாக விடு­விக்­கப்­ப­டு­கி­றார் என்று அவைத்­த­லை­வர் சபை­யில் அறி­வித்­தார்.

உறுப்­பி­னர்­கள் சல­ச­லப்பு
முத­ல­மைச்­ச­ரின் பதி­லைக்­ கேட்­ட­தும் உறுப்­பி­னர்­க­ளி­டையே சல­ச­லப்பு ஏற்­பட்­டது. “கோவை­கள் காணா­மற்­போ­யின என்று கூறிய அரச அலு­வ­லர் யார் என்று சபை­யில் முத­ல­மைச்­சர் வெளிப்­ப­டுத்த வேண்­டும். அவரை உள­நல மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்க வேண்­டும்” என்று கூறி­னார். சல­ச­லப்பு சிறிது நிமி­டங்­கள் நீடித்­தன. சத்­தி­ய­லிங்­கம் குற்­ற­மற்­ற­வர் என்று அவைத்­த­லை­வர் சபை­யின் முடிவை அறி­வித்­த­போது, முத­ல­மைச்­சர் அமை­தி­யாக இருந்­தார்.

மருத்­து­வர் சத்­தி­ய­லிங்­கம் சுகா­தார அமைச்­ச­ராக இருந்­த­போது, அவ­ருக்கு எதி­ராக மாகாண சபை­யில் ஒரு குற்­றச்­சாட்­டுக்­கூட இது­வ­ரை­யில் முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. அவர் மீது முத­ல­மைச்­சரோ குற்­றச்­சாட்­டு­கள் உள்­ளன என்­று ­கூறி சுகா­தார அமைச்­சர் பத­வி­யி­லி­ருந்து நீக்­கி­யி­ருந்­தார்.

முன்­னாள் அமைச்­சர்­க­ளாக ஐங்­க­ர­நே­சன், குரு­கு­ல­ராசா ஆகி­யோ­ருக்கு எதி­ரா­கச் சபை­யில் குற்­றச்­சாட்­டு­கள் முன்­வைக்­கப்­பட்­டன. சத்­தி­ய­லிங்­கம், டெனிஸ்­வ­ரன் ஆகி­யோ­ருக்கு எதி­ராக சபை­யில் குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. ஆனால் இவர்­கள் இரு­வர் மீதும் முத­ல­மைச்­சரே குற்­றச்­சாட்­டு­கள் உள்­ளன என்று கூறி­யி­ருந்­தார்.

http://newuthayan.com/story/92004.html

  • தொடங்கியவர்

சத்தியலிங்கம் நிரபராதி;விக்கியின் குழந்தைத்தனம்!

9fa997b619e58a436675dce1f9f68d75?s=48&d=

வடக்கு மாகாணசபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வேலைவாய்ப்புக்கள் வழங்கியதில் முறைகேடாகச் செயற்பட்டார் என்று முதல்வர் நீதியரசர் விக்னேஸ்வரன், அவர் நியமித்த குழு குற்றச்சாட்டுக்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. அவர் சுயாதீனமாகத் தனது அமைச்சுக் கடமைகளைத் தொடரலாம் என்று அறிக்கை சமர்ப்பித்திருந்தும், தன்னிச்சையாக – தான்தோன்றித் தனமாக – தனக்குரிய நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரை சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து விசாரணைகள் பூரணப்படவில்லை, அந்த விசாரணைகள் முடியும்வரை தற்காலிகமாக விடுப்பில் செல்லுமாறு அறிவித்து பதவியில் இருந்து நீக்கினார். அமைச்சர் சத்தியலிங்கம், டெனீஸ்வரன் ஆகியோரின் இடத்துக்கு தனது அல்லக்கைகள் இருவரை நியமித்தார்.

32186168_1747871865272122_75580926650535

மாகாணசபையின் பதவிக்காலம் முடிவடைவதற்கு இன்னமும் 3 மாதங்கள் இருக்கின்ற நிலையில், நேற்றைய சபை அமர்வில் எதிர்க்கட்சித் தலைவர் தவராசாவால் சத்தியலிங்கம் மீதான குற்றச்சாட்டுக்கான ஆதாரங்கள் உள்ளனவா? என வாய்மூலம் எழுப்பப்பட்ட வினாவுக்கு, முதல்வர் வி;க்கி, குழந்தைப்பிள்ளைத் தனமாக – மழுப்பலாக – ”முதலில் வேலைவாய்ப்பு தொடர்பான 750 ஆவணங்கள் காணாமற்போயின, தற்போது அவை இருக்கின்றன” என அலுவலர் தெரிவித்தார் என்று பதிலளித்தார்.

முதல்வர் விக்கி ஒரு கல்விமான். ஒரு நீதியரசர். எல்லாவற்றுக்கும் மேலாக ”நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே” என்ற நக்கீரர் பரம்பரையில் வந்த தர்மவான் எனத் தன்னை உலகுக்குக் காட்டுபவர். ஆனால், அதன்படி ஒழுகுபவர் அவர் அல்லர்.

வடக்கு மாகாணசபையில் இதுவரை முதல்வர் நியமித்த 8 அமைச்சர்களுள் சத்தியலிங்கம் ஆளுமை, தலைமைத்துவம், நிர்வாக அறிவு மிக்கவர். நான் அவர் அமைச்சராக இருக்கின்ற காலங்களில் இப்பத்தியில் பலமுறை அவரைப்பற்றி விமர்சித்து எழுதியிருக்கின்றேன். அது தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச் சங்கச் செயலாளர் என்ற அடிப்படையில் – வைத்தியசாலையின் பார்வையில் இருந்து – வைத்தியசாலையை வளம்படுத்துவதற்காக சில தேவைகளை இடித்துரைப்பதற்காகவும் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களின் இடமாற்றம் தொடர்பிலும் அவர்களின் நியாயமான கோரிக்கைக்காகவும் சில விமர்சனக் கருத்துக்களை முன்வைத்துள்ளேன். மற்றும்படி, அவர் எமது தமிழரசுக் கட்சி தொடர்பிலோ அல்லது அவரது அமைச்சுச் செயற்பாடு தொடர்பிலோ எந்தத் தவறும் இழைத்தவர் அல்லர். ஆயுதக்குழுக்களின் அடிமையில் இருந்த வவுனியா மாவட்டத்தை மீட்டு, ஜனநாயகக் கட்சியான தமிழரசு உணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்திய பெருமை அமைச்சர் சத்தியலிங்கத்தையே சாரும்.

32218837_1747872435272065_57852465975331

இது இவ்வாறிருக்க, ஒரு கல்விமான் – நீதியரசர் – குழந்தைப்பிள்ளைத் தனமாக யாரோ அலுவலர் சொன்னார் என்று இல்லாத ஒரு பழியை தனது தனிப்பட்ட காழ்ப்புணர்வு காரணமாக அமைச்சர் சத்தியலிங்கத்தின்மீது சுமத்தியமை படுமுட்டாள்தனம். அதுவும் ஒரு ஆன்மீகவாதியாக – தர்மவானாக – நீதியுரைஞனாக – தன்னை சமூகத்துக்குக் காட்டுபவர் இவ்வாறு குற்றமில்லாத ஒருவரை ஆறுமாதங்களாக விடுப்பில் அனுப்பியமை மகா தவறு! அதுவும் சாதாரண ஒருவர் இவ்வாறு செயற்பட்டாராயின் பறவாயில்லை. நீதி வழங்குவதில் ‘கோன்’ எனப்போற்றப்படும் நீதியரசர் இவ்வாறு செயற்பட்டால் அதை யாரொடு நோவது?

”தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்’
தர்மம் மறுபடிவெல்லும்” என்பது இயற்கை என்றுரைத்த பாரதியின் பாஞ்சாலி சபதக்கூற்றுப்படி, தர்மம் மறுபடி வென்று சத்தியலிங்கம் தர்மவானாக உயர்ந்துள்ளார். அவர்மீது தனிப்பட்ட காழ்ப்புணர்வால் அவதூறை – அபகீர்த்தியை – கழங்கத்தை – ஏற்படுத்திய முதல்வர் விக்கி ஐயா தன்னை தர்மவானாக – நீதிமானாக – நீதி அரசராக – மக்கள் மத்தியில் உள்ள அவர்பற்றிய உயரிய நினைப்பைத் தக்கவைக்க குற்றமற்ற சத்தியலிங்கத்துக்கு மீண்டும் அமைச்சுப் பதவியை வழங்குவாரா? அவ்வாறு அவர் நிரூபிப்பாராயின் மாற்றுத் தலைமையாக மக்கள் மத்தியில் இடம்பிடித்து தன்னை உயர்த்திக்கொள்ள முடியும். செய்வாரா முதல்வர்?

தெல்லியூர் சி.ஹரிகரன்

http://www.newsuthanthiran.com/2018/05/11/சத்தியலிங்கம்-நிரபராதிவ/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.