Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீர்வு விட­யத்தில் அக்­கறை வேண்டும்

Featured Replies

தீர்வு விட­யத்தில் அக்­கறை வேண்டும்

09-302283e3dd547fd7f40bc1f33cc8f3182e4b1da6.jpg

 

அர­சாங்­கத்­திடம் எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் வலி­யு­றுத்தல்

(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வு கண்டால் மட்­டுமே நாட்டின் அனைத்து பிரச்­சி­னை­க­ளையும் வெற்­றி­கொள்ள முடியும். ஆகவே வெகு விரைவில் தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வு காண்­பதில் அர­

சாங்கம் அக்­கறை செலுத்த வேண்டும் என்று எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன் சபையில் வலி­யு­றுத்­தினார்.

தமிழ் மக்­களின் அர­சியல், பொரு­ளா­தார, சமூக உரி­மை­களை புறக்­க­ணித்­து­வி­டலாம், அவற்றை ஒழித்­து­வி­டலாம் என எவரும் நினைத்­து­விடக் கூடாது.  தமிழ் மக்­களை நிரா­க­ரித்த பயணம் ஒன்றை முன்­னெ­டுக்க முடி­யாது என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.  

பார­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை ஜனா­தி­ப­தியின் கொள்கை விளக்க உரை மீதான சபை ஒத்­தி­வைப்பு வேளை விவா­தத்தின் போது உரை­யாற்­று­கை­யி­லேயே எதிர்க்­கட்சி தலைவர் இவ்­வாறு குறிப்­பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறு­கையில்.

ஜனா­தி­ப­தியின் கொள்கை விளக்க உரையில் அவர் மீண்டும் ஆட்­சிக்கு வர­வேண்டும் என்ற தொனியே தெரிந்­தது. இப்­போ­துள்ள தற்­போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலைமை வகிக்கும் கட்­சி­யினர் கடந்த பத்து ஆண்­டு­கா­ல­மாக ஆட்சி நடத்­தி­யி­ருந்­தனர். இந்த கால கட்­டத்­திலும் நாடு பாரிய கடன் நெருக்­க­டிக்குள் தள்­ளப்­பட்­டி­ருந்­தது. இப்­போதும் கடன் நெருக்­க­டிகள் உள்­ளன. இந்தப் பிரச்­சி­னைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும்.

நாட்­டினை மாற்றுப் பாதையில் கொண்டு செல்­வது குறித்து அனை­வரும் சிந்­திக்க வேண்டும். அதேபோல் ஜனா­தி­ப­தியின் உரையில் பிர­தான மூன்று விட­யங்­களை அவர் சுட்­டிக்­காட்­டினார். பொரு­ளா­தாரம், வட­கி­ழக்கு மக்­களின் பிரச்­சி­னைகள், ஊழல் துஷ்­பி­ர­யோகம் ஆகிய விட­யங்கள் குறித்து சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

. இதில் தேசிய பிரச்­சினை குறித்து நான் கவனம் செலுத்த விரும்­பு­கின்றேன். ஏனெனில் தேசிய பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு மிகவும் அவ­சி­ய­மா­ன­தொன்­றாக உள்­ளது. குறிப்­பாக வடக்கு, கிழக்கு மக்­களின் பிரச்­சி­னை­களை கருத்தில் கொள்ள வேண்டும். சுதந்­திரம் அடைந்து 70 ஆண்­டுகள் கடந்தும் இன்று வரையில் வட­கி­ழக்கு மக்­களின் பிரச்­சி­னைகள் மிகப்­பெ­ரிய சவா­லாக கரு­தப்­ப­டு­கின்­றது. தேசிய இனப் பிரச்­சி­னையே நாட்டின் ஏனைய சகல பிரச்­சி­னை­க­ளுக்கும் அடிப்­ப­டை­யா­கவும் காணப்­ப­டு­கின்­றது. ஆகவே வடக்கு, கிழக்கின் தேசிய பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு கண்டால் மட்­டுமே ஏனைய அனைத்து பிரச்­சி­னை­க­ளையும் வெற்­றி­கொண்டு அனை­வரும் இணைந்து முன்­ந­கர முடியும். ஆகவே துரி­த­மாக தேசிய பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணப்­பட வேண்டும்.

எமது நாட்டின் இலக்­கினை அடைய நாம் அனை­வரும் ஒன்­றி­ணைந்து முன்­னேற வேண்டும். எமது நாட்டில் நல்­லெண்ண அடிப்­ப­டையில் பாகு­பாடு இல்­லாத பயணம் ஒன்­றினை முன்­னெ­டுக்க வேண்டும். இதில் பிரி­ப­டாத இலங்­கைக்குள் தீர்­வு­களை பெற்­றுக்­கொண்டு இலங்­கையர் என்ற அடிப்­ப­டையில் செயற்­பட வேண்டும். இதன்­போது அர­சியல் அமைப்பு, சட்டம் ஆகி­ய­வற்றின் மூல­மாக நாடு ஆட்சி செய்­யப்­பட வேண்டும்.

அதற்கு புதிய அர­சியல் அமைப்பு ஒன்­றினை உரு­வாக்­கு­வது குறித்து நாம் சிந்­தித்தோம். அனைத்து பிரச்­சி­னை­களும் சரி­யான முறையில் அணு­கப்­பட வேண்டும் என ஜனா­தி­ப­தியும் தெரி­வித்தார். மேலும் இந்த நாடு பிரி­ப­டாது அனை­வரும் ஒன்­றி­ணைய வேண்டும் எனவும் நாட்டை பிள­வு­ப­டு­வ­தற்கு தமிழ் மக்கள் முயற்­சிக்­க­வில்லை எனவும் எமது பிர­க­ட­னங்­களில் தெரி­வித்­துள்ளோம். எனினும் 1970ஆம் ஆண்­டு­க­ளுக்கு பின்னர் சில முரண்­பா­டுகள் ஏற்­பட்­டன. இலங்கை இந்­திய ஒப்­பந்தம் மூல­மாக பகிர்­வுகள் பற்­றிய சிந்­தனை எழுந்­தன. எனினும் பிள­வு­ப­டாத நாட்­டுக்குள் தீர்­வுகள் என்ற நிலைப்­பாட்டில் இருந்தே நாம் செயற்­பட்டோம்.  

 கடந்த மூன்று தசாப்­தங்­க­ளாக உள்­ளூ­ராட்சி, மாகா­ண­சபை மற்றும் பொதுத் தேர்­தல்கள் இடம்­பெற்றும் வடக்கு கிழக்கு மக்­களின் பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­ட­வில்லை. மக்­களின் விருப்­பத்தை கேட்­காத ஒரு அர­சியல் அமைப்பு 1972ஆம் ஆண்டு உரு­வாக்­கப்­பட்­டது. அதன் விளைவே பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு முகங்­கொ­டுக்க வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டது. இப்­போது வரையில் இந்த நிலை­மைகள் தொடர்­கின்­றன. இந்த பின்­ன­ணியில் தான் இந்த ஆட்­சியில் புதிய அர­சியல் அமைப்பு உரு­வாக்க முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டது.

முழு பாரா­ளு­மன்­றத்­தையும் அர­சி­ய­ல­மைப்பு சபை­யாக மாற்றி பார­ளு­மன்­றத்தை 225 உறுப்­பி­னர்­களின் ஆத­ர­வுடன் ஒரு புதிய நகர்வு முன்­னெ­டுக்­கப்­பட்­டது. ஆகவே ஜனா­தி­ப­தியின் கொள்கை விளக்க உரையில் இந்த கார­ணிகள் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. தீர்­வு­களை பெற்றுக் கொடுப்­பதில் மாகா­ண­சபை முறை­மை­யினை பலப்­ப­டுத்த வேண்டும் என அவர் கூறி­யுள்ளார். ஆகவே இந்த வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்க அர­சியல் நிகழ்ச்­சித்­திட்­டத்தை உரு­வாக்க வேண்டும். மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்க்க நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட வேண்டும்.

அர­சியல் அமைப்பு நகர்­வுகள் கடந்த இரண்டு மாதங்­க­ளாக இடை நடுவே கைவி­டப்­பட்­டுள்­ளது. கடந்த உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் முடி­வுகள் , ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் 16 உறுப்­பி­னர்கள் எதி­ர­ணியில் அமர்ந்­துள்ள செயற்­பா­டுகள் ஆகி­ய­வற்றின் மூல­மாக அர­சியல் அமைப்பு நட­வ­டிக்­கைகள் கைவி­டப்­பட்­டுள்­ளன. ஆனால் இவற்­றினை மீண்டும் கையாள வேண்டும். விட்ட இடத்தில் இருந்தே மீண்டும் அர­சியல் அமைப்பு நட­வ­டிக்­கை­களை தொடர வேண்டும். மக்கள் கருத்­துக்கு அமைய அனை­வரும் இணைந்து இதனை உரு­வாக்­குவோம் என்­பதே எமது நிலைப்­பா­டாகும்.

ஆகவே அதனை முன்­னெ­டுப்போம், அதன் மூல­மாக பிர­தான பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண்போம். இந்த விட­யத்தில் ஒரு­வ­ருக்கு ஒருவர் எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­தாது செயற்­பட வேண்டும். கடந்த 1987/1988ஆம் ஆண்­டு­களில் அதன் பின்னர் சந்­தி­ரிக்கா குமா­ர­துங்க ஆட்­சியில், பின்னர் மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சியில் என சகல ஆட்சிக் காலத்­திலும் புதிய அர­சியல் அமைப்பின் மூல­மாக தீர்­வு­களை காண்­பதில் அக்­கறை செலுத்­தப்­பட்­டது. ஆனால் துர­திஷ்­ட­வ­ச­மாக அவை முழு­மைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

எனவே வடக்கு கிழக்கு தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை கருத்தில் கொள்­ளாது அவற்றை கடந்து செல்ல முடி­யாது. தமிழ் மக்­களின் அர­சியல், பொரு­ளா­தார, சமூக உரி­மை­களை புறக்­க­ணித்­து­விட முடி­யாது. அவற்றை ஒழித்­து­வி­டலாம் என எவரும் நினைத்துவிடக் கூடாது. தமிழ் பேசும் மக்கள் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். அவர்களின் உரிமைகளை புறக்கணித்து செயற்பட முடியாது. இந்த பிரச்சினைகளை தீர்த்து மனங்களை வெற்றிகொள்ள சரியான நேரம் இப்போது வந்துள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினைகளை புரிந்துகொண்டு செயற்பட வேண்டும். அதன் மூலமாக நாட்டின் சமூக பொருளாதார வெற்றிகளை நோக்கிய பயணத்தினை அனைவரும் இணைந்து முன்னெடுக்க வேண்டும். இந்த விடயத்தில் அரசாங்கம் சில சவால் மிக்க தீர்மானங்களை முன்னெடுக்க தயாராக இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-05-11#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.