Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனது பயணத்தை யாராலும் நிறுத்த முடியாது!

Featured Replies

எனது பயணத்தை யாராலும் நிறுத்த முடியாது!

 

 
 
Image

கைது செய்வதன் ஊடாக தனது பயணத்தை நிறுத்திவிட யாராலும் முடியாது என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ச மேற்கொள்ளும் தீர்மானத்திற்கு ராஜபக்ச குடும்பத்திலுள்ள அனைவரும் மதிப்பளிப்பார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எம்பிலிப்பிட்டிய பகுதியில் கொடக்கவெல மஹிந்தராம விகாரையில் புத்தர் சிலையை திறந்துவைக்கும் நிகழ்வில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் அண்மையில் அரசாங்கத்தில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் டபிள்யூ.டி செனவிரத்னவும் பிரசன்னமாகியிருந்தார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய கோத்தபாய ராஜபக்ச, பௌத்தர்கள் ஆகிய எமக்கு ஏனைய இனங்களுடன் நல்லிணக்கத்துடன் வாழ்வது எவ்வாறு என வெளிநாட்டவர்கள் கூற வேண்டிய அவசியமில்லை என சுட்டிக்காட்டினார்.

நல்லிணக்கத்தை இல்லாது செய்வது பௌத்தர் அல்ல எனவும் வேறு சில கடும்போக்குவாதிகளே அதனை செய்கின்றனர் என்பதை கவலையுடன் கூற வேண்டியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவீர்களா என எழுப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த கோத்தபாய ராஜபக்ச, அந்த தீர்மானத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

மஹிந்த ராஜபக்ச, மேற்கொள்ளும் தீர்மானத்திற்கு குடும்பத்திலுள்ள அனைவரும் நாட்டுக்காக ஒற்றுமையுடன் செயற்பாடுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட முன்னாள் அமைச்சர் டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன, கட்சியின் தலைமைத்துவதற்கு கோத்தபாய ராஜபக்சவே தகுதியானவர் என்பது இரண்டு வருடங்களுக்கு முன்னரே மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் என சுட்டிக்காட்டினார்.

இதேவேளை ஸ்ரீலங்காவில் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் களமிறக்கக்கூடிய தகுதியான வேட்பாளர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மாத்தறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவான உறுப்பினர்களுடனான சந்திப்பில் பங்கேற்று கருத்த வெளியிட்டபோதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

கூட்டு எதிர்கட்சியைச் சேர்ந்த சிலருக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமத்துவத்தில் மாற்றம் ஏற்பட வேண்டிய தேவை காணப்படுவதாகவும் அது நகைப்புக்குரிய விடயம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த 1998 மற்றும் 1999 காலப்பகுதியில் சந்திரிக்கா குமாரதுங்க இரண்டாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில போட்டியிட்ட சந்தர்ப்பத்தில் 'ரணிலுக்கு முடியாது' என்ற தலைப்பில் சுவரொட்டிகளை தாமே ஒட்டியதாகவும் மங்கள சமரவீர குறிப்பிட்டார்.

அந்த சந்தர்ப்பத்தில் எமக்கிருந்த சவால் ரணிலே எனக் குறிப்பிட்ட மங்கள சமரவீர, அவரால் முடியுமென நம்பியதாகவும் அதனாலேயே அவ்வாறு சுவரொட்டிகளை ஒட்டினோம் எனவும் மேலும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

http://www.ibctamil.com/srilanka/80/100466

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.