Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாகா­ண­சபை வேண்­டு­மென்றே எங்­களைப் புற­மொ­துக்குகின்­றது!!

Featured Replies

  • மாகா­ண­சபை வேண்­டு­மென்றே எங்­களைப் புற­மொ­துக்குகின்­றது!!
 
 

மாகா­ண­சபை வேண்­டு­மென்றே எங்­களைப் புற­மொ­துக்குகின்­றது!!

வடக்கு மாகாண சபை எங்­களை வேண்­டு­மென்றே புற­மொ­து­க்குகின்­றது. இதற்குக் காலம் பதில் சொல்­லும். இவ்­வாறு யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒன்­றி­யத்­தின் தலை­வர் கே.கிருஸ்­ண­மே­னன் தெரி­வித்­தார்.

வடக்கு மாகாண சபை­யி­ன­ருக்­கும், மாண­வர் ஒன்­றி­யத்­தி­ன­ருக்­கும் இடை­யில் நேற்று முன்­தி­னம் மாலை சந்­திப்பு இடம்­பெற்­றி­ருந்­தது. அதன் தொடர்ச்­சி­யாக முள்­ளி­வாய்க்­கா­லில் நேற்று கலந்­து­ரை­யா­டல் நடை­பெ­றும் என்று தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. வடக்கு மாகாண சபை­யி­ன­ரின் கலந்­து­ரை­யா­ட­லில் பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒன்­றி­யத்­தி­னர் பங்­கேற்­க­வில்லை.

இது தொடர்­பில் பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒன்­றி­யத் தலை­வ­ரைத் தொடர்பு கொண்டு கேட்­ட­போது, எமக்கு இன்­றைய (நேற்­றைய) சந்­திப்­புக்­கான நேரம் அறி­விக்­கப்­ப­ட­வில்லை. நாம் மாகாண சபை உறுப்­பி­னர்­கள் சில­ரைத் தொடர்பு கொண்டு நேரம் அறிய முற்­பட்­டோம். ஆனால் அவர்­கள் எமது அலை­பேசி அழைப்­புக்கு பதி­ல­ளிக்­க­வில்லை. அவர்­கள் தமது நிகழ்சி நிரலை முன்­னெ­டுத்­துச் செல்­வ­தி­லேயே குறி­யாக உள்­ள­னர். எம்மை உள்­வாங்­கும் நிலை­யில் அவர்­கள் இல்லை.

நாம் மக்­க­ளு­டன் மக்­க­ளாக முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­த­லில் கலந்து கொள்­வோம். மாண­வர்­க­ளின் உணர்வை மதிக்­காத மாகாண சபை­யி­ன­ருக்கு காலம் பதில் சொல்­லும் – என்­றார்.

http://newuthayan.com/story/92628.html

  • தொடங்கியவர்

வட மாகாண சபை தலை­மையில் நினை­வேந்தல் மேற்­கொள்­வதை நிரா­க­ரிக்­கின்றோம்

 

யாழ்.பல்­க­லைக்­க­ழக மாணவ சமூகம் அறி­விப்பு 

(ரி.விரூஷன்)

மே 18 முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நிகழ்­வு­களை வடக்கு மாகாண சபையின் தலை­மையில் மேற்­கொள்­வதை நிரா­க­ரிப்­ப­தாக தெரி­வித்­துள்ள யாழ்.பல்­க­லைக்­க­ழக மாணவ சமூ­க­மா­னது, மாண­வர்­க­ளினதும் மக்­க­ளி­னதும் தலை­மையின் கீழ் வடக்கு மாகாண சபையும் வடக்கு மாகாண முத­ல­மைச்­சரும் வர­வேண்டும் எனவும் தெரி­வித்­துள்­ளது.

அத்­துடன் மாண­வர்­க­ளுக்­கு­ரிய மரி­யா­தையை வடக்கு மாகாண சபை தர­வில்லை எனவும் எனவே மாண­வர்கள் தமக்கே உரிய தன்­மையில் நினை­வேந்­தலை செய்­வார்கள் எனவும் யாழ்.பல்­க­லை­க­ழக மாணவ சமூ­க­மா­னது தெரி­வித்­துள்­ளது. 

முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் தொடர்­பாக நேற்­று­முன்­தினம் யாழ்.பல்­க­லை­க­ழக மாண­வர்­க­ளுக்கும் பொது அமைப்­புக்கள் மற்றும் வடக்கு மாகாண முத­ல­மைச்சர், அமைச்­சர்­க­ளுக்கும் இடையில் கலந்­து­ரை­யாடல் இடம்­பெற்­றி­ருந்த்து. இக் கலந்­து­ரை­யா­டலின் போதும் திட்­ட­வட்­ட­மான தீர்­வொன்று எட்­டப்­ப­டாத நிலையில் மாண­வர்­க­ளது நிலைப்­பாடு தொடர்­பாக வின­விய போதே யாழ்.பல்­க­லை­க­ழக அனைத்­து­பீட மாணவர் ஒன்­றிய தலைவர் கிருஸ்­ண­மேனன் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்­பாக அவர் மேலும் தெரி­விக்­கையில் ,

பல்­க­லை­க­ழக மாண­வர்­க­ளோடு இணைந்து செயற்­ப­டு­வ­தற்கு அனைத்து பொது அமைப்­புக்­களும் தயா­ரா­க­வுள்­ளன. நாம் எந்த தரப்­பையும் பிரித்து தனி­யாக நனை­வேந்­தலை செய்­வ­தற்கு அனு­ம­திக்க போவ­தில்லை. அனை­வ­ரையும் இணைத்து செய்­வது தான் எமது நோக்கம். அந்த பொறுப்பை நாம் கையில் எடுத்­து­விட்டோம்.

பல­க­லை­க­ழக மாண­வர்­க­ளா­கிய நாம் முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்­தலை செய்­வது தொடர்­பாக அப் பொறுப்பை நாம் கையில் எடுப்­ப­தற்கு மாகாண சபை­யிடம் அனு­மதி பெற வேண்­டிய அவ­சி­ய­மில்லை. மக்கள் எமக்கு அதற்­கான ஆணையை தந்­து­விட்­டார்கள். இதனை வடக்கு மாகாண சபைக்கு தெரி­விக்க வேண்­டிய கடமை எமக்கு இருந்­தது. அதனை தெரி­வித்து விட்டோம். அதனை ஏற்­றுக்­கொள்­வதும் ஏற்­றுக்­கொள்­ளா­ததும் அவர்­களை பொறுத்­த­தே­யாகும்.

 நினை­வேந்­தலில் எவரும், எந்த கட்­சியும் அர­சியல் செய்­வ­தற்கு நாம் அனு­ம­திக்க போவ­தில்லை. மாண­வர்­க­ளதும் மக்­க­ளி­னதும் தல­மையின் கீழ் வடக்கு மாகாண சபையும், வடக்கு மாகாண முத­ல­மைச்­சரும் வர­வேண்டும். அந்த கொள்­கையில் இருந்து நாம் இறுதி வரை விலக போவ­தில்லை. மே 18 முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நிகழ்­வு­களை வடக்கு மாகாண சபையின் தல­மையின் மேற்­கொள்­வதை நிரா­க­ரிக்­கின்றோம்.

மேலும் நாம் வடக்கு மாகாண சபை­யுடன் ஜன­நா­யக முறையில் சென்று பேசி­யி­ருந்த போதும் அவர்கள் எம்மை மதிக்­க­வில்லை. நேற்­றைய தினம் முள்­ளி­வாய்க்கால் செல்­வ­தற்கு எம்மை வரு­மாறு அழைத்­து­விட்டு பின்னர் நாம் தொலை­பேசி அழைப்­பினை மேற்­கொண்ட போது அதனை ஏற்று பதிலளிக்கவில்லை. நாம் இவ்வாறு மூன்று பேரை தொடர்பு கொண்டோம். ஒருவரும் எமது அழைப்புக்கு பதிலளிக்கவில்லை.

மாணவர்களிற்குரிய மரியாதையை வடக்கு மாகாண சபை தரவில்லை. எனவே மாணவர்கள் தமக்கே உரிய தன்மையில் இவ் நினைவேந்தலை செய்வார்கள் என்றார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-05-14#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.