Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரதமர் அலுவலகத்தில் குட்டி குஜராத்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமர் அலுவலகத்தில் குட்டி குஜராத்.

 

 

know_the_pm.jpg?resize=1920%2C1080&w=400

நரேந்திர மோடி அரசாங்கத்தின் ஒரு குறிப்பிடத்தக்க குணாம்சம் என்னவெனில், மத்திய அமைச்சகங்களில் பல்வேறு மட்டங்களில் முக்கிய பதவிகளுக்கு குஜராத் கேடர் அதிகாரிகளை சார்ந்திருப்பதையே. கடந்த காலத்தில் அவருடன் பணிபுரிந்த குஜராத் கேடர் அதிகாரிகள் ஐஏஎஸ் அதிகாரிகளிலேயே ஒரு  சிறப்பு வாய்ந்த இனம் என்று பிரதமர் மோடி நம்புகிறார். குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது அவருடன் பணியாற்றிய அனைத்து அதிகாரிகளுக்கும் மத்திய அரசிலும் பிரதமர் அலுவலகத்திலும் முக்கிய பதவிகளை கொடுத்துள்ளார் என்பதில் வியப்பேதுமில்லை.

இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளவர் நிதித்துறை செயலாளர் ஹஸ்முக் அதியா,  கேபினட் செயலாளராக தற்போது பணியாற்றி வரும் பி.கே சின்ஹாகா-வுக்கு கடந்த திங்கள்கிழமை பணி நீட்டிப்பு வழங்கப்படும் வரை ஹஸ்முக்தான் அப்பதவிக்கு அடுத்து வருவார் என அனைவராலும் பேசப்பட்டவர். சின்ஹாவுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படும் தகவலை அறிந்த ஹஸ்முக் அதியா மே 5-ம் தேதி, நிதி அமைச்சகத்தை பணியாளர் பற்றாக்குறையுடன், தலைமையே இல்லாமல் விட்டுவிட்டு, வழக்கத்திற்கு மாறாக நீண்ட விடுப்பில் சென்றுவிட்டார்.   சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் நிதியமைச்சர் அருண் ஜெட்லி வாரத்தில் இரண்டு நாட்கள் டயாலிஸிஸ் செய்து வருகிறார்.  அவரால் முழுமையாக செயல்பட முடியாத நிலையில், செயலாளரும் விடுப்பில் சென்றது, முணுமுணுப்பை ஏற்படுத்தியது.

வருவாய்துறையின் செயலாளராக முக்கிய பதவியில் இருந்தபோது ஹஸ்முக் அதியா ஒரு அடையாளம் தெரியாத தொழிலதிபரிடமிருந்து தீபாவளி பரிசாக தங்க கட்டிகளைப் பெற்றார் என்றும் அவரை யார் மற்றும் ஏன் இன்ப்ளுயென்ஸ் செய்ய முயற்சிக்கிறார்கள் என்பது குறித்து அவர் ஏன் விசாரணைக்கு உத்தரவிடவில்லை என்றும் த ஒயர் இணையதளம் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து அவர் சிக்கலில் மாட்டிக் கொண்டார். தனக்கு எந்த சூழ்நிலையில் அந்த அடையாளம் தெரியாத நபரால் பரிசு வழங்கப்பட்டது என மோடிக்கு அதியா விளக்கமளித்தார். இதையடுத்து பிரதமர் மோடி, நிதியமைச்சர் ஜெட்லி  உடல்நலக் குறைவாக இருந்தபோது நிதியமைச்சகத்தின் சாவிகளை அவரிடம் கொடுத்து, அவர் மீதான தனது நம்பிக்கையை தொடர்ந்தார்.

ஆயினும், சின்ஹாவுக்கு பணி நீட்டிப்பு கொடுத்தது, இரண்டு பேட்ச்களைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், ஐஏஎஸ் பணியின் உச்சபட்ச பதவியை  அடைய முடியாமல் செய்துள்ளது. அப்பதவிக்கு போட்டியிட்டவர்களில் ஒருவர் இது பற்றி கூறுகையில், ”தனக்கு விசுவாசமாக இருக்கும் ஒரு சதிக்கூட்டம் தனக்கு தேவை என பிரதமர் நம்புகிறார். நிர்வாகம் அப்படி வேலை செய்யாது. தனக்கு  விருப்பமான பிடித்த அதிகாரிகள் என வருகிறபோது விதிகளை பிரதமர் மோடி தூக்கி எறிந்துள்ளதால் அனைவரும் வருத்தமடைந்துள்ளனர்” என்றார்.

மற்ற “Gujarat-Modified officials” என்று அழைக்கப்படும் மோடிக்கு  விசுவாசமான குஜராத் அதிகாரிகளைப்பற்றி பார்ப்போம். ரீட்டா தோட்டியா தற்போது வர்த்தக செயலாளர். டாபன் ரே கூட்டு நிறுவன விவகார செயலாளர். குஜராத் கேடர் அதிகாரிகளைக் கொண்டு பிரதமர் அலுவலகத்தை மோடி நிரப்பியிருக்கிறார். அர்விந் குமார் இணைச் செயலாளர், ராஜீவ் டோப்னோ மோடியின் தனிச் செயலாளர் ஆவர். சஞ்சய் பாவ்ஷார் மற்றும் ஹிரென் ஜோஷி ஆகியோர் சிறப்பு பணி அதிகாரிகள்.

இவர்களில் மிகவும் மூத்த அதிகாரி பிரதமருக்கான கூடுதல் செயலாளராக உள்ள மிஸ்ரா. பிரதமர் அலுவலகத்தில் கூடுதல் செயலாளராக உள்ளார், முக்கிய நியமனங்களுக்கான குழுவை கவனித்து வரும் ஒரு 1972 பேட்ச் அதிகாரி இவர். அனைத்து முடிவெடுத்தலையும் பிரதமர் அலுவலகத்தில் மோடி மையப்படுத்தியதால், மிஸ்ரா மிகவும் சக்திவாய்ந்த அதிகாரியாக கருதப்படுகிறார். மோடியின் “தூதுவராக” கருதப்படும் மிஸ்ராவைக் கண்டு மூத்த அமைச்சர்களும் கூட பயப்படுகிறார்கள்.

மத்திய கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) தலைவரான அனிதா கர்வால் மற்றும் ஊழியர் தேர்வுக்குழு ஆணையர் ஆஷிம் குரானா ஆகிய குஜராத் கேடர் அதிகாரிகளின் செல்வாக்கை இப்போது பார்ப்போம். அனிதா கர்வால் தலைவராக இருந்தபோதுதான் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வுகளின் கேள்வித்தாள்கள் லீக் ஆயின. அதேபோல, SSC வினாத்தாள் லீக் ஆனது போது குரானா தலைவராக இருந்தார். இந்த இரு கசிவுகள் மீது தேசிய அளவில் சீற்றம் எழுந்தபோதும், இந்த இரு குஜராத் கேடர் அதிகாரிகளும் பிரதமர் மோடியுடன் நேரடி தொடர்பில் இருப்பது சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு தெரிவதால் அவ்விரு அதிகாரிகள்  மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அரசியலமைப்பு அமைப்பின் வரலாற்றில் மிகவும் சர்ச்சைக்குரிய தலைமை தேர்தல் ஆணையர் (CEC) ஏ.கே. ஜோதி. பிரதமர் மோடியால் நியமிக்கப்பட்ட குஜராத் கேடர் அதிகாரி ஆவார். அவரது செயல்கள் அவருக்கு நீதித்துறையின் கடும் கண்டனங்களைப் பெற்றுத் தந்தன.

குஜராத் ஆளுமை பட்டியல் இத்துடன் முடிவடையவில்லை. ஜி.சி. முர்மு, கூடுதல் செயலாளர், நிதி சேவைகள்; அனில் கோபிஷங்கர் முகிம், செயலாளர், சுரங்கங்கள்; ராஜ்குமார், தலைமை நிர்வாக அதிகாரி, ஊழியர்களின் ஸ்டேட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்; அதனு சக்ரவர்த்தி, டைரக்டர் ஜெனரல், ஹைட்ரோகார்பன்கள் ஆகிய பெயர்கள், குட்டி குஜராத் பட்டியலின் அங்கம்.

குஜராத் கேடரைச் சேர்ந்த இந்திய காவல் பணியைச் சேர்ந்த ஐ.பி.எஸ் (IPS) அதிகாரிகளை தனது “கண்களாகவும்“, ”காதுகளாகவும்” மோடி பயன்படுத்திவருவதால், மோடியின் கீழ், அவர்களும் நினைத்ததை, விரும்பியதை அனுபவித்து வருகின்றனர்.

சர்ச்சைக்குரிய ஐ.பி.எஸ் அதிகாரி ராகேஷ் அஸ்தானா கடந்த ஆண்டு CBI எனப்படும் மத்திய புலனாய்வு நிறுவனத்தின் சிறப்பு இயக்குனராக நியமிக்கப்பட்டார். தேசிய உளவு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஏ.கே.பட்னாயக்-கும்,  சி.பி.ஐ. இணை இயக்குனராக பிரவின் சின்ஹா-வும் நியமிக்கப்பட்டனர். பிரதமர் நரேந்திர மோடிக்கு  மிகவும் நெருக்கமான மற்றொரு போலீஸ் அதிகாரியான ஒய்.சி. மோடி நேஷனல் இன்வெஸ்டிகேசன் ஏஜென்ஸி எனப்படும் தேசிய புலனாய்வு  அமைப்பின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

மோடி 2014ம் ஆண்டு மேற்கொண்ட தனது வெற்றிகரமான அமெரிக்க பயணத்தின்போது நியுயார்க் நகரில் மாடிசன் ஸ்கொயர் கார்டனில் நடைபெற்ற    ராக்ஸ்டார் வரவேற்பு விழாவை ஏற்பாடு செய்தவரான முன்னாள் வெளியுறவு செயலாளர் எஸ்.ஜெய்சங்கர்-க்கு ஒரு வருட கட்டாய “கூலிங் ஆஃப்“ காலத்தை தள்ளுபடி செய்து அவர் டாடா குழுமத்தில் உலக பெரு நிறுவன விவகாரங்கள் தலைவராக சேரலாம் என்றதன் மூலம் பிரதமர் மோடி தனக்கு  மிகவும் விசுவாசமாக இருக்கும் அதிகாரிகளுக்கு வழக்கமான சாதாரண பணி விதிகள் எதுவும் (சர்வீஸ் ரூல்ஸ்) பொருந்தாது என நம்புகிறார் என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.

ஏற்கெனவே 2017ல், ஜெய்சங்கர் வெளியுறவுத்துறை செயலாளராக ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டார். தனது பதவி நீட்டிப்புக் காலம் முடிந்த சில மாதங்களிலேயே அவர் டாடா குழுமத்தில் சேர்ந்தார். அந்த கார்பொரேட் குழுவின் பாதுகாப்பு களமாக அவர் இவர் இருப்பார் என நம்பப்படுகிறார். ஜெய்சங்கருக்குக்காக விதிகள் புறந்தள்ளப்பட்டதால் சில அதிகாரிகள் கோபமடைந்துள்ளனர். முக்கியமாக, பணி நீட்டிப்பு கொடுக்கப்பட்டதன் மூலம் அவரது ஜுனியர்கள் வெளியுறவு செயலாளர் பதவிக்கு வர முடியமால் தடுக்கப்பட்டுள்ளது. ”ஏன் இந்த விதிகள் மற்றும் கால அவகாசம் எல்லாம்?”.  இதுபோன்ற உயர்ந்த மதிப்புமிக்க பதவிகள் எல்லாம் தனக்கு பிடித்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவிக்கட்டும்” என கடுப்புடன் கூறுகிறார் முன்னாள் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர்.

ufa-modi-nsa-fs-pti.jpg?resize=700%2C527

முன்னாள் வெளியுறவுத் துறை செயலர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவலுடன் மோடி

பிரதமராக பதவியேற்ற உடனேயே, நிருபேந்திரா மிஸ்ரா என்பவரை முதன்மைச் செயலாளராக நியமிக்க மோடி ஒரு அவசரச் சட்டத்தைக் கொண்டுவந்தார். இதன்மூலம், தற்போது பணிபுரிந்து வரும் இருந்து வரும் அதிகாரி எவரும்  அந்த பதவிக்கு லாயக்கு இல்லை என்ற தனது எண்ணங்களை தெளிவுபடுத்தி விட்டார். இவரைத் தொடர்ந்து, அஜித் தோவல் என்ற ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். “நாகா உடன்படிக்கை“ பத்தன்கோட் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளை, சம்பவ இடத்தை பார்வையிட அனுமதித்து என, தோவல் பல விவகாரங்களை தவறாக கையாண்டார்.  ஆனால், நேபாள நாட்டோடு நட்பு முடிறந்த்து,  அணு சக்தி குழுவில் சேரும் முயற்சியில் இந்தியாவின் தோல்வி,  ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்பு நிலைமையை தவறாகக் கையாண்டது,  சீனாவுடனான தோக்லாம் சிக்கல், ஆகிய அனைத்தையுமே அஜித் தோவல் தவறாகவே கையாண்டார்.  ஆனால், இவரை யாரும் எதுவும் செய்ய முடியவில்லை.  ஒரே காரணம், இவர் மோடியின் நம்பிக்கையை பெற்றவர் என்பது மட்டுமே.  சீனா மற்றும் பாகிஸ்தானுடனான இந்தியாவின் உறவுகளில் பெரும் குழப்பம் ஏற்பட்டதற்கு டோக்லம்தான் காரணம் என அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், விசுவாசம் காரணமாக அவரை பிரதமர் மோடி அவரை, இன்னும் நெருக்கமாக வைத்துள்ளார்.

அஜீத் தோவல், பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் ஆர்.எஸ்.எஸ்-ன் விவேகானந்தா அறக்கட்டளையை நடத்தி வந்தார்.   மன்மோகன் சிங் அரசாங்கத்தை மண்டியிடச் செய்த அண்ணா ஹஸாரே இயக்கதை வழிநடத்திய  பெருமைக்குரியவர்.

மோடி குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது அவருக்கு பல முக்கிய விஷயங்களில் தோவல் ஆலோசனைகள் வழங்கியதாகக் கூறப்படுகிறது. குஜராத்திலும் அவர், அதிகாரப்பூர்வமற்ற முறையில், மோடியின் பக்கத்தில்தான் இருந்தார். அவரது மகன் ஷௌரியா டோவல் பாஜக தேசிய செயலாளர் ராம் மாதவ் உடன் இணைந்து இந்தியா ஃபவுண்டேஷன் என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளையில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரயல்வே அமைச்சர் பியுஸ் கோயல்,  அமைச்சர்கள் சுரேஷ் பாபு, ஜெயந்த் சின்கா  மற்றும் எம்.ஜே.அக்பர் ஆகியோர் இயக்குநர்களாக உள்ளனர்.

தனக்கு விசுவாசமான அதிகாரிகளுக்கு அவர்களது நல்ல மற்றும் கெட்ட தருணங்களின்போது மோடி ஆதரவாக உள்ளார் என அறியப்படுகிறது. நவம்பர் மாதம் ஓய்வுபெற்ற பின்னர் அமைச்சரவை செயலர் பதவியை பிடிக்க முடியவில்லையே என்ற வருத்தத்தில் அதியா இருந்தாலும், அவருக்காக மோடி பிரதமர் அலுவலகத்தில் ஒரு வேலையை தயாராக வைத்துள்ளார். அதேபோல, NIA-வின் டைரக்டர் ஜெனரலாக பணியாற்றி அண்மையில் அவரது ஒப்பந்தம் முடிவடைந்த சரத்குமார், அனேகமாக, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தகைய முக்கியமான வேலைகள் ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படக் கூடாது என மூத்த அதிகாரிகள் தெரிவித்தாலும், முக்கிய பதவிகளில் உள்ள மோடிக்கு விசுவாசமான அதிகாரிகளுக்கு இந்த கடுமையான விதிகள் பொருந்தாது.

இதுதான் பிரதமர் அலுவலகத்தில் மோடி பராமரித்து வரும் “குட்டி குஜராத்”.

-ஸ்வாதி சதுர்வேதி-

நன்றி தி வயர் இணையதளம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.