Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமது தேசத்தில் இறந்த உறவினர்களையும் அவர்களின் பிள்ளைகளையும் நினைவுகூர்வதில் என்ன தவறு? ராஜித

Featured Replies

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுத்து நிறுத்தக் கோரி முறைப்பாடு

 

mulliwaikkal-2017-9-300x200.jpgமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வைத் தடுத்து நிறுத்தக் கோரி,  பௌத்த தகவல் கேந்திர நிலையம் நேற்று சிறிலங்கா காவல்துறை  தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

எதிர்வரும் 18ஆம் நாள் விடுதலை புலிகளுக்கு  வடக்கு, கிழக்கில் அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. அதனை தடுத்து நிறுத்துவதற்கான நீதிமன்ற உத்தரவை காவல்துறையினர் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தில் உடன் நடவடிக்கை  எடுக்கப்பட வேண்டும் என்று பௌத்த தகவல் கேந்திர நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அங்குலுகல்லே சிறி ஜீனாநந்த தேரர்,  தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/05/16/news/30901

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

மே 18 அனுஷ்டிப்புகளை தடுக்க இயலாது :  அரசாங்கம்

 

வடக்கில் எதிர்வரும் மே மாதம் 18 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள அனுஷ்டிப்புகளை தடுக்க இயலாதென அரசாங்கம் தெரிவித்துள்ளது.

may-18.jpg

அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெறும் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில், மே 18ஆம் திகதி புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை நினைவு கூறி படையினரை கௌரவிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இந்த தினத்தில் புலிகளுக்கு ஆதரவாக வடக்கில் அனுஷ்டிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்ற செய்தியாளரின் கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலே அமைச்சரவை துணைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சரவை துணைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன  மேலும் தெரிவிக்கையில்,

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை வடக்கில் தமிழ்நாட்டில் உள்ள மக்கள் அனுஷ்டிக்கவில்லை. எமது தமிழ் மக்களே அனுஷ்டிக்கின்றனர். இதில் எந்த தவறுமில்லை.

ஜேவிபியினரும் இவ்வாறான தினத்தை அனுஷ்டிக்கின்றனர். இதேபோன்றே வடக்கில் யுத்தத்தின் போது இறந்த தமது சகோதரர் உள்ளிட்ட உறவுகளை நினைவுகூறியே வடக்கில் உள்ள தமிழ் மக்கள் இவ்வாறான ஒரு தினத்தை அனுஷ்டிக்கின்றனர். இதில் எந்தவித தவறும் இல்லை.  அங்குள்ள மக்களும் எமது மக்களே. 

வடக்கில் உள்ள தமிழர் , உறவுகளை இழந்தவர்களே இந்த தினத்தை அனுஷ்டிக்கின்றனர். ஜேவிபியும் புலிகளைப்போன்று பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டனர். அவர்களும் இன்று நினைவுகூறி இவ்வாறு நினைவேந்தல் தினத்தை அனுஷ்டித்து வருகின்றனர். இதேபோன்றே வடக்கு மக்களும் அனுஷ்டித்துவருகின்றனர்.

வடக்கு மக்களை வேறு பிரதேச மக்களாக பிரித்து பார்க்ககூடாது. அவர்களுக்கும் தமது உறவுகளின் இழப்புகள் தொடர்பில் உணர்வுகள் உண்டு. யுத்தத்தின் போது எந்வொரு நாட்டிலும் பயங்கரவாதிகள் இறந்ததில்லை .பொதுமக்களும் இறந்ததுண்டு. அதுபோல் தான் இங்கும். வடக்கு மக்கள் இதனை அனுஷ்டிப்பதாலேயே உங்களுக்குப் பிரச்சினை இருப்பதாக தெரிகின்றது. இது தவறானதென அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/33502

  • தொடங்கியவர்

எமது தேசத்தில் இறந்த உறவினர்களையும் அவர்களின் பிள்ளைகளையும் நினைவுகூர்வதில் என்ன தவறு? ராஜித

rajitha.jpg?resize=274%2C184

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின்போது உயிரிழந்தவர்கள் எமது மக்களும் அவர்களின் பிள்ளைகளுமே என்றும் அவர்களை நினைவு கூர்வதில் என்ன தவறு இருக்கிறது என்றும் சுகாதார அமைச்சரும் அரசாங்க அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

 
 அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்  ஊடவியலாளர் சந்திப்பு கொழும்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்றபோது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.   இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் மே 18ம் திகதியினை தேசிய இனவழிப்பு தினமாக அனுஷ்டிப்பதற்கு வட மாகாண சபை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் ஆனால் , இலங்கையை தீவிரவாதிகளிடம் இருந்து மீட்ட தினமாக நாம் கொண்டாடுகின்றோம் இது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்று அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் மக்கள் விடுதலை முன்னணியினர் அன்று ஆயுதம் ஏந்திய தரப்பினரே. ஆனால் அவர்கள் இன்று உயிரிழந்தவர்களை நினைவு கூரவில்லையா? ஜேவிபினருக்கு இந்த நாட்டில் அதற்கான அனுமதி காணப்படுமாகவிருந்தால் ஏன் தமிழ் மக்களுக்கு அவர்களின் உறவுகளை நினைவு கூர அனுமதி மறுக்கப்படுகிறது. நான் உங்களிடம் ஒன்று கேட்கின்றேன் . உண்மையில் உங்களிடம் தற்பொது எழுந்துள்ள பிரச்சினை நினைவு கூரல் என்பது தொடர்பிலா அல்லது தமிழ் மக்கள் அதனை செய்கின்றனர் என்று பொறுத்துக்கொள்ள முடியாத மனப்பாங்கிலா? இந்த கேள்வியினை கேட்கின்றீர்கள்? என்று பதிலுக்கு கேள்வி எழுப்பினார்.

மற்றொரு சிங்கள ஊடவியலாளர் அமைச்சரைப் பார்த்து இறுதிக்கட்ட யுத்தத்தில் தீவிரவாதிகளே உயிரிழந்தனர் . பொதுமக்கள் உயிரிழக்கவில்லையே என வினவினார்.

 
இதற்குப் பதில் அளித்த அமைச்சர் சர்வதேசம் தன்னிடம் ஒரு கேளிக்கையான கேள்வியொன்றினை முன்வைத்திருந்தது . உங்களைப் போன்ற நபர்கள் இவ்வாறு கேள்வி எழுப்புவதனாலேயே அந்த கேள்வி முன்வைக்கப்பட்டது.அந்த கேள்வி என்ன தெரியுமா? சபையில் எவரேனும் அதனை பற்றி கேள்விபட்டுள்ளீர்களா? இலங்கை பிரதிநிதிகளே…! ஒரு பொது உயிரேனும் இழக்கப்படாமலா இலங்கை யுத்த வெற்றியை பெற்றது. இந்த கேள்விக்கு சிரிப்பதா அல்லது பதிலளிப்பதா நீங்களே கூறுங்கள் என அமைச்சர் கூறினார்.
 
அப்படியென்றால் , இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சாதாரண பொதுமக்களும் கொல்லப்பட்டனர் என்பதனை அரசாங்க தரப்பு பிரதிநிதி என்ற வகையில் நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா..? இவ்வாறு மற்றொரு கேள்வி எழுப்ப்பட்டது.

 

கடும் சினத்துடன் பதிலளித்த ராஜித்த சேனாரத்ன ஏன் உங்களுக்கு தெரியாதா? அல்லது எனக்குதான் தெரியாதா? அனைவரும் அறித்த உண்மையை மீண்டும் கேள்வியாக எழுப்ப வேண்டாம். மனிதாபிமானத்துடன் செயற்பட முயற்சி செய்யுங்கள் என எச்சரிக்கை விடுத்தார்

http://globaltamilnews.net/2018/79415/

பிரபாகரனுக்கும், முள்ளிவாய்க்காலுக்கும், தமிழர்கள் ஏன் துக்கம் அனுஸ்டிக்கக் கூடாது?

JVPயினர், விஜயவீரவுக்காகவும், தம்மவர்க்காகவும் அஞ்சலிக்கிறார்களே – ராஜித…

prabaharan-rohana-jayaweera.jpg?resize=6
வடமாகாண சபையால் எதிர்வரும் 18ம் திகதி துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என்றும், அங்கு கொலை செய்யப்பட்டவர்கள் எமது மக்களே என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.

 

இன்று கொழும்பில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைக் கூறினார்.

இராணுவத்தினரால் கொலை செய்யப்பட்டது பயங்கரவாதிகள் மட்டுமல்ல என்றும், பயங்கரவாதிகளை மாத்திரம் கொலை செய்த இராணுவம் உலகில் எங்கும் இல்லை என்றும் அவர் கூறினார்.

இதே வேளை வீடுகளுக்குள் புகுந்து மக்களை மிகக் கொடூரமாகக் கொன்று குவித்த ஜேவிபியினர் நினைவுதினம் அனுஷ்டிக்கும்போது, பிரபாகரன் உயிரிழந்த தினத்தை துக்க தினமாக அனுஷ்டிப்பதில் தவறில்லை என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இதனையடுத்து தமிழீழ விடுதலைப்புலிகள் சர்வதேச ரீதியில் தடை செய்யப்பட்ட அமைப்பு எனவும், ஆனால் ஜேவிபியினர் அவ்வாறு இல்லை என தெரிவித்த ஊடகவியலாளர் தரப்பினர், சர்வதேச ரீதியில் தடை செய்யப்பட்ட ஒரு தீவிரவாத அமைப்பினரையும், அந்த அமைப்பின் தலைவர் பிரபாகரனையும் நினைவு கூர, எவ்வாறு அனுமதிக்க முடியும். இதனை அரசாங்கம் ஏற்றுக்கொள்கின்றதா ? என்ற கேள்விகளை முன்வைத்தனர்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், நமது நாட்டில் நிலவியது உள்நாட்டு யுத்தம். வடக்கில் உயிரிழந்தவர்களும், தெற்கில் உயிரிழந்தவர்களும் எமது பிள்ளைகளே.
ஜே.வி.பி.-யும் அக்காலப்பகுதியில் தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பாகவே விளங்கியது. அவ்வாறாயின் அதுவும் ஒரு பயங்கரவாத அமைப்பே. அவர்களை நினைவுதினம் அனுஷ்டிக்க அனுமதிக்கும்போது புலிகளை நினைகூருவதில் என்ன தவறு?
புலிகள் எமக்கு பயங்கரவாதிகளாக தோன்றினாலும், வடக்கு மக்கள் தமது உறவுகளை இழந்து தவிக்கின்றனர். அவ்வாறானவர்கள் தமது உறவுகளை நினைவுகூருவதில் தவறில்லை” எனத் தெரிவித்தார்.
இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரால் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளமையை நல்லாட்சி அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது.
இராணுவத்தினரால் பயங்கரவாதிகளே கொல்லப்பட்டதாக ஊடகவியலாளர்கள் வாதம் முன்வைக்க அதற்கு பதிலளித்த அமைச்சர், இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரால் பயங்கரவாதிகள் மாத்திரமல்ல பொதுமக்களும் கொல்லப்பட்டனர். இது நான் மட்டுமல்ல. பலரும் அறிந்த உண்மை எனத் தெரிவித்த ராஜித, அவ்வாறாயின் 1988 கலவரத்தில் உயிரிழந்த அனைவரும் ஜே.வி.பி. பயங்கரவாதிகளா என்றும் கேள்வி எழுப்பினார்.
அத்துடன் ஜேவிபி சிங்களவர்கள், புலிகள் தமிழர்கள் என்பதுதான் உங்கள் பிரச்சினையா என கேள்வி எழுப்பியதுடன், ஜே.வி.பி.-இன் தலைவர் விஜயவீரவிற்கும், பிரபாகரனுக்கும் இடையிலான வித்தியாசத்தை கூறுங்கள் என ஊடகவியலாளர்களைப் பார்த்து கேட்டுள்ளார்.
00000000000000000000000000000000

http://globaltamilnews.net/2018/79421/

  • தொடங்கியவர்

படுகொலை நினைவேந்தல் : சிறிலங்கா அமைச்சர்- ஊடகவியலாளர் இடையே நடந்த சூடான விவாதம்

 

rajitha-senarathna-300x200.jpgவடக்கில் நாளை முன்னெடுக்கப்படவுள்ள நினைவேந்தல் செயற்பாடுகள் விடயத்தில், சிறிலங்கா அரசாங்கம் நடுநிலை வகிக்கும் என்று அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது, ஊடகவியலாளர்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பாக தொடர் கேள்விகளை எழுப்பினார்.

இதனால் ஊடகவியலாளர்கள் சிலருக்கும், அமைச்சருக்கும் இடையில் சூடான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

ஊடகவியலாளர்- நாளை தமிழ் இனப் படுகொலை நினைவேந்தல் தொடர்பாக வடக்கு மாகாண அரசியல்வாதி விடுத்துள்ள கோரிக்கை குறித்த சிறிலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?

அமைச்சர்- அதில் ஒரு பிரச்சினையும் இல்லை. ஜேவிபியினரும் கூட தமது வீரர்களை ஒவ்வொரு ஆண்டும் இரண்டு தடவைகள் நினைவு கூருகிறார்கள்.

ஊடகவியலாளர் – ஆனால், இது படுகொலை என்று அழைக்கப்படுகிறதே? அத்துடன் தேசிய துக்க நாளாக கடைப்பிடிக்குமாறும் கேட்கப்பட்டுள்ளது.

அமைச்சர் –  நல்லது.  அது ஒரு படுகொலை தான். அப்படி இல்லையா? அது ஒரு இனப் போர். வெளிநாட்டுப் படையெடுப்பு அல்லவே.

நீங்களும் இன்னும் சிலரும் இதனை ஒரு படையெடுப்பு போலவும், வெளிநாட்டவர்களை நாம் அகற்றியது போலவும் சித்திரிக்க விரும்புகிறீர்கள்.

இரண்டு பக்கத்தினதும் குழந்தைகள் தான் இறந்தார்கள். தமிழ் மக்கள் இறந்தது தான் உங்களின் பிரச்சினையா? 1988இல் சிங்கள மக்கள் கொல்லப்பட்டது உங்களுக்குப் பிரச்சினை இல்லையா?

ஊடகவியலாளர் – எனக்குப் பிரச்சினையில்லை. ஆனால் விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத அமைப்பு.

அமைச்சர்- அதனால் என்ன?. ஜேவிபியும் கூட ஒரு தீவிரவாத அமைப்பாகவே முத்திரை குத்தப்பட்டிருந்தது. ஜேவிபியும் கூட தடை செய்யப்பட்டிருந்தது.

வடக்கில் கொல்லப்பட்டவர்களை நாங்கள் தீவிரவாதிகள் என்று கூறலாம். ஆனால், வடக்கில் வாழுகின்ற மக்களைப் பொறுத்தவரையில்,  அவர்களின் பெற்றோர், சகோதரர்கள், குழந்தைகள், மற்றும் உறவுகள்.

ஊடகவியலாளர் – போர் முடிவுக்கு வந்த போது, நாங்கள் போர் வீரர்களைக் கொண்டாடினோம். அதை கொண்டாட களியாட்ட விழாக்கள் நடத்தினோம். வடக்கில் உள்ள மக்கள் அதே காரியத்தை செய்யும் போது இப்போது நாம் என்ன செய்யப் போகிறோம்?

அமைச்சர் – நாம் எமது வீரர்களை கொண்டாடிய போதிலும், நாம் உண்மையில் என்ன கொண்டாடுகிறோம்?  போர் வீரர்களை நினைவு கூரும் கொண்டாட்டமும் கூட, கொல்லப்பட்ட அனைவரதும் மரணத்தைக் கொண்டாடுவதாகவே இருந்தது. அதனால், நல்லிணக்கத்தைக் கொண்டு வர முடிவு செய்தோம்.

ஊடகவியலாளர் – ஆனால், கொல்லப்பட்டவர்கள் தீவிரவாதிகள்.

அமைச்சர் – தீவிரவாதிகள் மட்டுமா கொல்லப்பட்டனர்?

ஊடகவியலாளர் – அப்படியானால், ஏனைய மக்களும் படுகொலை செய்யப்பட்டனர் என்று நீங்கள் கூறுகிறீர்களா?

அமைச்சர் – தெளிவாக, போர்களில் தீவிரவாதிகள் மட்டுமல்ல, மக்களும் இறக்கின்றனர்.  ஒவ்வொருவருக்கும் இது தெரியும். 1971 கிளர்ச்சியின் போது, ஜேவிபியினர் மட்டுமா கொல்லப்பட்டனர்? இறப்புகள் இல்லாத போர் இல்லை.

ஊடகவியலாளர்- ஜேவிபியும், விடுதலைப் புலிகளும் இரண்டு வேறுபட்ட அமைப்புகள். புலிகள் ஒரு அனைத்துலக தீவிரவாத அமைப்பு.

அமைச்சர்-  விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனுக்கும், ஜேவிபி தலைவர் ரோகண விஜேவீரவுக்கும் இடையிலான வேறுபாடு என்னவென்று உங்களால் கூற முடியுமா? அவர்கள் செய்த குற்றங்கள் தொடர்பான வேறுபாடுகள் என்ன? யார் தவறு, யார் சரி என்று கூறுங்கள்.

ஊடகவியலாளர்-  சிறிலங்கா இராணுவத்துக்கு எதிராக  போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்ற நிலையில், இராணுவம் பொதுமக்களை கொன்றதாக நீங்கள் கூறுகிறீர்களா? இராணுவப் பேச்சாளரால் இதனைக் கூற முடியுமா?

அமைச்சர்- போரின் போது பொதுமக்கள் கொல்லப்படவில்லை என்று, இராணுவத்தில் உள்ள எவரும் கூறமாட்டார்கள். உலகில் உள்ள எந்த இராணுவமும் அவ்வாறு கூறாது. இது ஒரு போர்.

ஊடகவியலாளர்- இந்தக் கேள்வி இராணுவப் பேச்சாளருக்கு.

அமைச்சர்- பொதுமக்கள் இழப்புக்கள் இல்லாத போர்கள் ஏதும் உள்ளதா?

ஊடகவியலாளர் –  எமக்கு எதிராக அனைத்துலக  விசாரணை ஒன்று நடக்கும் போது, நீங்கள் கூறுவது சரியா?

அமைச்சர் – விசாரணைகள் நீதிக்குப் புறம்பான படுகொலைகளுக்கு எதிராகவே நடக்கிறதே தவிர, நீங்கள் கூறுவது போல அல்ல. ஒரு போரில் இழப்புகள் இருக்கும்.

ஊடகவியலாளர் – இராணுவப் பேச்சாளர், இதனை ஏற்றுக் கொள்கிறீர்களா?

இராணுவப் பேச்சாளர் – நான் இங்கு ஒரு மோதலில் ஈடுபட விரும்பவில்லை.  இராணுவத்திற்கு எதிராக அமைச்சர் எதையும் குறிப்பிட்டார் என்று நான் நினைக்கவில்லை. ஒரு போரில் சில சம்பவங்களில் இழப்புகள் ஏற்படலாம் என்று புரிந்து கொண்டேன்.

அமைச்சர் – போர் தீவிரவாதத்துக்கு எதிராக நடத்தப்பட்டதே தவிர, தமிழர்களுக்கு எதிராக அல்ல. தயவு செய்து அதனை நினைவில் கொள்ளுங்கள். நான் எப்போதும், இந்த நிலைப்பாட்டை பேணி வருகிறேன்.

ஊடகவியலாளர் – அவர்கள் இறந்து போனவர்களை நினைவு கூரும் போது, கொல்லப்பட்ட மக்களை நினைவு கூருகிறார்கள் என்று அர்த்தமில்லையே?

அமைச்சர்- ஜேவிபியும் கூட அவ்வாறு தான் செய்கிறது. 1988இல் நிகழ்ந்தது படுகொலை என்றே ஜேவிபி கூறுகிறது. அதுபோலவே வடக்கிலும் நிகழ்ந்தது படுகொலை என்றே அவர்கள் கூறுகிறார்கள். இவை வேறுபட்ட பார்வைகள்.

ஊடகவியலாளர் – தற்போதைய அரசாங்கம், வெற்றி நாள் கொண்டாட்டங்களை நிறுத்தியது. நாங்கள் அதனைக் கொண்டாடும் போது ஆயிரக்கணக்கான இறப்புகளை கொண்டாடுவதாக இருக்கும் என்பதால் அதனை நிறுத்த முடிவு செய்ததாக கூறியது. ஆனால் அவர்கள் இப்போது ஒரு துக்க நாளை கடைப்பிடிக்கிறார்கள்?

அமைச்சர்- யார் அவர்கள்?

ஊடகவியலாளர் – வடக்கு மாகாண சபை. அதற்கு அரசாங்கம் இடமளிக்குமா?

அமைச்சர்-  அவர்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ள முடியாது. அவர்கள் போதுமான பணிகளை செய்யாத நிலையில், தெற்கிலுள்ள அரசியல்வாதிகளைப் போலவே, இத்தகைய தீர்மானங்களை நிறைவேற்றுகிறார்கள். வாக்குகளைப் பெறுவதற்காக மதத்தையும் இனத்தையும் பயன்படுத்துகின்றனர். செல்வாக்கிழந்த  அரசியல்வாதிகள், இனம் மற்றும் மதம் என்பனவற்றை வலுவான ஆயுதங்களாக வைத்திருக்கின்றனர்.

ஊடகவியலாளர் – விடுதலைப் புலிகளின் தலைவர்கள் வீழ்ந்த பின்னர், சாலைகளுக்கு மறுபெயரிடப் போவதாக அவர்கள் கூறுகிறார்களே?

அமைச்சர் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அது நடக்க இடமளிக்காது.

http://www.puthinappalakai.net/2018/05/17/news/30916

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.