Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2000க்குப் பிறகு மலையாள சினிமா: நல்ல சினிமாக்களுக்குச் சிறு இடைவேளை

Featured Replies

2000க்குப் பிறகு மலையாள சினிமா: நல்ல சினிமாக்களுக்குச் சிறு இடைவேளை

 

 
9c96eb6b4014371mrjpg
 
 

மலையாள சினிமாவின் முகம் 2000-க்குப் பிறகு மாறத் தொடங்கியது. மோகன்லால், மம்மூட்டி என்ற இரு பெரும் நாயகர்களுக்குப் பிறகு திலீப், பிருத்விராஜ், குஞ்சாக்கோ போபன், ஜெயசூர்யா, துல்கர் சல்மான், ஃபகத் பாசில், நிவின் பாலி போன்ற அடுத்த காலகட்ட நாயகர்களின் வரவு நிகழ்ந்தது. மிகுந்த அழுத்தமான கதைகளைத் திரைப்படங்களாக உருவாக்கிவந்த சத்யன் அந்திக்காடு, சிபிமலயில், கமல் போன்ற இயக்குநர்கள் மாறிவரும் புதிய சூழலை எதிர்கொள்ளத் திணறிய காலகட்டமும் இதுதான். ஆரோக்கியமான மலையாள சினிமாவும், தாக்குப்பிடிப்பதற்குத் திணறியது. ஆனால் தொழில்நுட்பரீதியில் மலையாள சினிமா வளர்ச்சி அடைந்தது. சென்னை மையமாகக்கொண்டு இயங்கிய மலையாள சினிமா கொச்சிக்கு மாறியதும் இந்தக் காலகட்டத்தில்தான்.

 

1987 ‘தனியாவர்த்தனம்’ மூலம் கதையாசிரியராக அறிமுகமான லோஹிததாஸ், இரண்டாயிரத்தில் தனது சினிமா வாழ்க்கையையே முடித்துக்கொண்டார். சிபிமலயில்-லோஹி கூட்டணி மலையாளத்துக்குப் பல நல்ல சினிமாக்களைச் சம்பாதித்துத் தந்தது. ‘கீரிட’த்தின் இரண்டாம் பாகமான ‘செங்கோல்’தான் இந்தக் கூட்டணியின் இறுதியான வெற்றி. அதற்குப் பிறகு சிபியின் சினிமா வாழ்க்கை சரிவுக்குச் சென்றது. தனது வெற்றியை நிலை நிறுத்திக்கொள்ள, கதையாசிரியர் ரஞ்சித்திடன் இணைந்து 90-களின் இறுதியில் 'சம்மர் இன் பெத்லேகாம்', 'உஸ்தாத்' என அடுத்தடுத்து இரு படங்களை  சிபி இயக்கினார். அதற்குப் பிறகு 2001-ல் திலீப், நெடுமுடி வேணு நடிப்பில் வெளிவந்த ‘இஷ்டம்’ சிபி மலயிலின் கவனிக்கத்தக்க படமாக இருந்தது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ப்ரியதர்ஷன் அதை ‘மேரே பாப் பெஹலே ஆப்’ என்ற பெயரில் இந்தியில் எடுத்தார்.  அதற்குப் பிறகு பத்தாண்டுகள் சிபிக்குச் சவாலாக இருந்தன. மோகன்லால், ஜெயராம் போன்ற மூத்த நடிகர்களைக்கொண்டும் குஞ்சாக்கோ போபன், ஆசிஃப் அலி போன்ற இளம் நடிகர்களைக்கொண்டும் படங்களை இயக்கினார். ஆனால், அவை தோல்வியிலேயே முடிந்தன.

சிபியின் மிகச் சிறந்த வெற்றிப் படங்களின் கதாசிரியரான லோஹி 90-களின் இறுதியில் ‘பூதக்கண்ணாடி’ மூலம் இயக்குநரானார். மம்மூட்டி நடிப்பில் வெளிவந்த இந்தப் படம் அவருக்கு மத்திய, மாநில  விருதுகளைப் பெற்றுத் தந்தது. அதன்பிறகு அவர் அடுத்தடுத்து இயக்கிய இரு படங்களும் தோல்வியில் முடிந்தன. 98-ல் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த ‘கண்மத’த்தில் மீண்டும் அவர் வெற்றியைப் பெற்றார். பிறகு 2000-ல் வெளிவந்த ‘அரயண்ணகளோட வீடு’ கவனிக்கத்தக்க படமாக இருந்தது. அதற்குப் பிறகான லோஹியின் சினிமா ஜீவிதம் சிறப்பாக இருக்கவில்லை. 2005-ல் இயக்கிய ‘கஸ்தூரிமான்’ அவரது சிறந்த படங்களுள் ஒன்றாக ஆனது. ஆனால், அந்தப் படத்தை தமிழுக்காக மீண்டும் அவர் உருவாக்கினார். அது மிகப் பெரிய தோல்வியாக அமைந்தது. 2006-ல் கேரளத்தின் மக்கள் நாயகனாக உருவாகியிருந்த திலீபை வைத்து லோஹி இயக்கிய ‘சக்கரமுத்து’ தோல்விகளில் இருந்து அவரை மீட்டது. பத்தாண்டுகளுக்குள் ‘கிரீடம்’ ‘ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’ ‘பரதம்’ ‘தசரதம்’ ‘மிருகயா’ ‘தூவல் கொட்டாரம்’ எனப் பல நல்ல சினிமாக்களைத் தந்த லோஹியின் சினிமா வாழ்க்கை 2007 அவர் இயக்கிய ‘நிவேத்ய’த்துடன் முடிவுக்கு வந்தது. 

சாதாரணர்களின் கதையை இயல்பான நகைச்சுவையுடன் காட்சிப்படுத்திய மலையாள இயக்குநர்களின் முக்கியமானவர் சத்யன் அந்திக்காடு. அவருக்கு 2000 நல்ல தொடக்கத்தைத் தந்த ஆண்டு. ஜெயராம் நடிப்பில் வெளியான ‘கொச்சு கொச்சு சந்தோஷங்கள்’ மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், சிறந்த மலையாளப் படத்துக்கான தேசிய விருதையும் பெற்றது. குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் தரும் பல படங்களை இயக்கிய சத்யனுக்கு, ‘வல்யேட்டன்’, ‘நரசிம்மன்’ போன்ற மசாலாப் படங்களின் ஆதிக்கம் நிறைந்த 2000 ஒரு சோதனைக் காலமாகத்தான் இருந்தது. முதல் பத்தாண்டுகளில் சத்யன் அதில் வெற்றிபெற்றுவிட்டார். ‘டி.பி.பாலகோபாலம் எம்.ஏ.’விலிருந்து சத்யனுடன் பல வெற்றிப் படங்களைத் தந்த ஸ்ரீனிவாசனின் கதையில் ‘யாத்ரகாருட சிரத்தைக்கு’ அடுத்த வெற்றியை அவருக்குத் தேடித் தந்தது. இதைத் தொடர்ந்து, ‘மனசினக்கர’, ‘ராசதந்திரம்’, ‘கத தொடருந்நு’, ‘ஸ்நேகவீடு’ எனப் பல வெற்றிகளைக் கண்டார். சில தோல்விகளையும் சந்தித்தார். 2011-க்குப் பிறகான மலையாள சினிமா மாற்றத்துடன் தாக்குப்பிடிக்க முடியாமல் சத்யனின் படங்கள் திணறின. நட்சத்திர நடிகர் மோகன்லால், இளம் நட்சத்திரங்களான ஃபகத் பாசில், துல்கர் சல்மான் ஆகியோருடனான முயற்சிகளும் சத்யனுக்குப் பெரும் தோல்வியையே பெற்றுத் தந்தன.

மலையாளத்தின் தனித்துவமான நகைச்சுவைப் படங்களை உருவாக்கியவர் ப்ரியதர்ஷன். ‘பூச்சைக்கொரு மூக்குத்தி’யில் தொடங்கி ‘வெள்ளானகளோட நாடு’, ‘மிதுனம்’, ‘சித்ரம்’, ‘முகுந்தேட்டா சுமத்ரா விளிக்குக்குந்நு’, ‘வந்தனம்’, ‘மின்னாரம்’ என மலையாளத்தின் சிறந்த நகைச்சுவைப் படங்களை அவர் தந்துள்ளார். கதையாசிரியர் ஸ்ரீனிவாசனுடன் அவரது கூட்டணி மலையாளத்தின் வெற்றிக் கூட்டணிகளுள் ஒன்றாக இருந்தது. மண் மணம் சார்ந்த படங்கள் மலையாளத்தின் வந்துகொண்டிருந்த காலகட்டத்திலேயே நிலமே இல்லாத களத்தில் தன் படங்களை உருவாக்கினார். அவரது படங்கள் பெரும்பாலும் ஊட்டியை மையமாகக்கொண்டவையாக இருந்தன. அதனால் 2000-த்தின் மாற்றம் அவரால் எதிர்கொள்ள முடிந்ததாக இருந்தாலும், 2000-க்குப் பிறகு ப்ரியதர்ஷன் இந்தியில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார். ஆனால் பொருட்படுத்தக்க படங்களை இந்தக் காலகட்டத்தில் அவர் இயக்கவில்லை. ஆனால் 2003-ம் ஆண்டு ஸ்ரீனிவாசன் கதையிலான ‘கிளிச்சுண்டன் மாம்பழம்’ ப்ரியதர்ஷனுக்கு வெற்றியையும் விமர்சகர்களின் பாராட்டையும் வாங்கித் தந்தது. அதற்கு முன்பாக  2001-ல் மோகன்லால், முகேஷ், நெடுமுடி வேணு ஆகியோரைக்கொண்டு இயக்கிய ‘காக்ககுயில்’ வெற்றியைப் பெற்றாலும், பாராட்டைப் பெறவில்லை. அதற்குப் பிறகு ப்ரியதர்ஷன் தனது வெற்றிக்காக தனது ஆஸ்தான நடிகரும் நட்சத்திரமுமான மோகன்லாலைச் சார்ந்திருக்க வேண்டிவந்தது. அப்படியாக ‘ஒரு மருபூமிக் கத’யும் ‘ஒப்ப’மும் வெற்றியைப் பெற்றன.

1986-ல் வெளிவந்த ‘மிழிநீர்ப்பூவுகள்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான கமல், மென் உணர்வுகளைச் சித்திரிப்பதில் தனித்தன்மையானவர். உண்மையில் இவரைப் போன்ற இயக்குநர் 2000-ல் தாக்குப்பிடிப்பது சிரமம். ஆனால், எண்பதுகளுக்காந இயக்குநர்களின் திறத்துடன் இன்னும் இயங்கிவருபவராக கமல் இருக்கிறார். வெற்றிப் படங்கள் பலவற்றை இயக்கினாலும் 2000-த்தின் பெரும்போக்கிலிருந்து விலகியே படங்களை இயக்கினார். 2001-ல் வெளிவந்த அவரது ‘மேஹமல்ஹர்’, பூவைவிட மென்மையான கதை. பிஜூமேனன், சம்யுக்தா வர்மா ஆகியோர் நடித்த இந்தப் படம் அவருக்கு வெற்றியைத் தந்தது 2000-ன் அபூர்வங்களுள் ஒன்று. ‘கிரமபோன்’, ‘ஸ்வப்னகூடு’, ‘பெருமழக் காலம்’, ‘ராப்பகல்’, ‘பச்சக்குதிர’, ‘மின்னாமினிக் கூட்டம்’ என அடுத்தடுத்து தரமான வெற்றிப் படங்களைத் தந்துகொண்டிருந்தார். மலையாள சினிமாவின் முன்னோடியான ஜே.சி.டானியல் குறித்த வரலாற்றுப் படமான ‘செல்லுலாய்ட்’ படத்தை 2013 உருவாக்கி இளம் இயக்குநர்களுக்குப் பெரும் போட்டியானார். இந்த வெற்றி தந்த உற்சாகத்தில் மலையாளத்தின் முன்னணி எழுத்தாளர் மாதவிக்குட்டி குறித்த புதிய படத்தை இயக்கிவருகிறார்.

காக்கியுடை மசாலா

பொதுவாக நாயக பிம்பம் இல்லாத மலையாள சினிமாக்களில் இருந்து வேறுபட்டு மலையாளத்தின் நட்சத்திர நடிகர்கள் மோகன்லால், மம்மூட்டி, சுரேஷ் கோபி ஆகியோரை முன்னிறுத்தி மசாலாப் படங்கள் 2000-ல்தான் அதிகரித்தன. மசாலாப் படங்களுக்குப் பெயர் பெற்ற இயக்குநர் ஷாஜி கைலாஷ் ஒரே ஆண்டில் மோகன்லால், மம்மூட்டி இருவரையும் வைத்து முறையே ‘நரசிம்மன்’, ‘வல்யேட்டன்’ ஆகிய இரு படங்களை இயக்கினார். இரண்டும் மாபெரும் வெற்றி பெற்றன. ஷாஜியின் வெற்றியைத் தொடர்ந்து இந்த இரு நட்சத்திரங்களும் அவருடன் 2000-க்குப் பிறகு படங்களில் பணியாற்றினார்கள். மோகன்லாலுடன் இணைந்து ஷாஜி இயக்கிய ‘நாட்டுராஜா’, ‘அலிபாய்’, ‘பாபா கல்யாணி’ போன்ற படங்கள் வசூல் சாதனை படைத்தன. மம்மூட்டியுடன் இணைந்து ‘துரோணா 2010’, ‘ஆகஸ்ட் 2015’, ‘த கிங் அண்ட் கமிஷனர்’ ஆகிய படங்களை ஷாஜி உருவாக்கினார். மற்றொரு நட்சத்திரமான சுரேஷ் கோபியை வைத்தும் இந்தக் காலகட்டத்தில் ‘த டைகர்’, ‘சிந்தாமணி கொலகேஸ்’ உள்ளிட்ட ஐந்து படங்களை ஷாஜி இயக்கினார். இந்தக் காலகட்டத்தில்தான் ஒரே ஆண்டில் சுரேஷ் கோபி மிக அதிகமான படங்களில் நாயகனாக நடித்தார். 2000-ல் வெளிவந்த ‘சத்யமேவ ஜெயதே’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதே ஆண்டில் வெளிவந்த ‘தென்காசிப்பட்டணம்’, ‘கவர் ஸ்டோரி’  படங்களும் வெற்றிபெற்றன. 2000-2011 கால கட்டத்தில் ஒரே ஆண்டில் சராசரியாக ஆறு படங்கள் சுரேஷ் கோபியின் தெறிக்கும் வசன உச்சரிப்பில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றன. சுரேஷ் கோபியின் இந்த வெற்றியால் மம்மூட்டியும் மோகன்லாலும்கூட காக்கிச் சீருடையில் வசனங்களை கோபம் கொப்பளிக்கப் பேச ஆரம்பித்தனர். இவை அல்லாமல் மாதவ் ராமச்சந்திரன் இயக்கத்தில் வந்த ‘மெல்விலாசம்’, ‘அப்போதிகிரி’ ஆகிய நல்ல படங்களையும் சுரேஷ் கோபி தந்துள்ளார். ஆனால், இவை இரண்டும் வணிக வெற்றியைப் பெறவில்லை.

2000-க்குப் பிறகு மம்மூட்டி, மோகன்லால் இடையே மசாலா வெற்றிகளைத் தருவதில் பெரும் போட்டியே உருவாகிவிட்டது. தெலுங்கு சினிமாவை விஞ்சக்கூடிய ‘ராஜமாணிக்கம்’ படம் மம்மூட்டிக்குப் பெரும் வெற்றியைத் தேடித் தந்தது. திருவனந்தபுரம் மலையாள பாஷை பேசும் ரவுடியாக மம்மூட்டி நடித்திருப்பார். இதற்குப் போட்டியாக கொச்சி குப்பத்து ஆளாக மோகன்லால் நடிப்பில் ‘சோட்டோ மும்பை’ வெளியானது. இந்தக் காலகட்டத்தின் மசாலா ஆதிக்கத்தையும் மீறி ‘தன்மத்ரா’, ‘ஸ்நேகவீடு’, ‘உதயனானு தாரம்’, ‘ஸ்பிரிட்’ போன்ற கதையம்சமுள்ள படங்களில் மோகன்லாலும் ‘ஒரே கடல்’, ‘காழ்ச்ச’, ‘அரயன்னகளுட வீடு’ போன்ற சிறந்த படங்களில்  மம்மூட்டியும் நடித்துள்ளனர். சத்யன் அந்திக்காடு, கமல் போன்ற இயக்குநர்களின் படங்களில் தொடர்ந்து நடித்த ஜெயராமுக்கும் இந்தக் காலகட்டத்தில் ஒன்றிரண்டு படங்களே கவனத்தை ஈர்த்த படங்கள். ‘மனசினக்கர’, ‘கொச்சு கொச்சு சந்தோஷங்கள்’ போன்றவை குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பெற்றுத் தந்தன.

அடுத்த நாயகர்கள்

இந்த காலகட்டத்தில்தான் மோகன்லால், மம்மூட்டிக்கு அடுத்த நட்சத்திரமாக திலீப் வளர்ந்தார். ஜனப்பிரிய நாயகனாக திலீப் ஆனதும் இந்தக் காலகட்டத்தில்தான் நடந்தது. நகைச்சுவை நடிகராக அறிமுகமான திலீப் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் தொடர்ந்து நடித்தார். அவருக்கு அது வெற்றியைத் தேடித் தந்தது. மலையாள சினிமாவில் மிக மோசமான படங்களான ‘பாண்டிப்படை’ போன்ற படங்களை இந்தக் காலகட்டதில் தீலிபால் உருவாகின.  அதேசமயம் கமல், சத்யன் அந்திகாடு, லோஹிததாஸ் போன்ற இயக்குநர்களின் படங்களிலும் தீலிப் பணியாற்றினார். அதனால் அவரது சினிமா வாழ்க்கையின் மிகச் சிறந்த படங்கள் உருவாகின. ஆனால், 2011 ஆண்டின் தொடக்கத்தில் இம்மாதிரியான இயக்குநர்களால் கையாள முடியாத பெரும் நட்சத்திர அந்தஸ்தை அவர் எட்டிவிட்டார். அதற்கான வெற்றியை அவரது மசாலாப் படங்கள் அவருக்குத் தேடித் தந்தன.

திலீப் அல்லாது குஞ்சாக்கோ போபன், பிருத்விராஜ் சுகுமாரன், ஜெயசூர்யா, இந்திரஜித் சுகுமாரன் போன்ற புதிய நடிகர்களின் பிரவேசங்களும் நிகழ்ந்தன. 90-களின் இறுதியில் வந்த ‘அனியத்திப்ரவு’ மாபெரும் வெற்றியால் போபனுக்கு மலையாளத்தின் நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது. அதற்கடுத்து வந்த ‘மயில்பீலிக்காவு’ம் வெற்றியைப் பெற்றது. ஆனால், 2000 முழுவதும் அவருக்குத் தோல்வியே தந்தன. அதனால் இணை நடிகராகப் பல படங்களில் நடித்தார். ‘அனியத்திப்ரவு’ போன்ற ஒரு வெற்றிக்காக அவர் பத்தாண்டுகள் காத்திருக்க வேண்டி வந்தது. 2010-க்குப் பிறகு பிஜூ மேனனுடன் அவர் இணைந்து நடித்த ‘ஆர்டினரி’, ‘ரோமன்ஸ்’ போன்ற படங்கள் வசூலில் சாதனை படைத்தன. ஆனால்  டாக்டர் பிஜூவின் ‘வலிய சிறகுள்ள பட்சிகள்’ போன்ற மாற்று சினிமா முயற்சிகளில் போபன் அங்கமானார். காசர்கோடு பகுதிகள் எண்டோசல்பைன் உண்டாக்கிய பாதிப்புகளைப் பற்றிய இந்தப் படம் அவருக்கு விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றுத் தந்தது.

 2002-ல் வெளிவந்த மலையாளத்தின் புகழ்பெற்ற கதையாசிரியர் ரஞ்சித் இயக்கிய இரண்டாவது படமான  ‘நந்தனம்’ மூலம்தான் பிருத்விராஜ் அறிமுகமானார். இந்தப் படத்தின் வெற்றி மூலம் 2000-க்குப் பிறகான நட்சத்திரப் பட்டியலில் பிருத்விராஜூக்கு ஓர் இடம் கிடைத்தது. அதற்குப் பிறகு போபன், ஜெயசூர்யா ஆகியோருடன் இணைந்து நடித்த ‘ஸ்வப்னக்கூடு’ம் வெற்றியைப் பெற்றது. இந்தக் காலகட்டத்தில் இயக்குநர் வினயனுடனான கூட்டணியும் பிருத்விராஜூக்குச் சாதகமாக அமைந்தது. இவர்களது கூட்டணியில் ‘வெள்ளி நட்சத்திரம்’, ‘அத்பூததீபு’ போன்ற படங்கள் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றன. அவை வெற்றிப் படங்களாகவும் ஆயின. அதைபோல ஜெயசூர்யாவுடன் இணைந்து நடித்த 2007-ல் வெளிவந்த ‘சாக்லேட்’டும் பிருத்விராஜூக்கு வெற்றியைத் தேடித் தந்தது. இந்தக் காலகட்டத்தில் ஷியமபிரசாதின் இயக்கத்தில் ‘அகலே’ விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றுத் தந்தது. ஆனால் ஒரு நட்சத்திர அந்தஸ்து என்பது பிருத்விராஜூக்கு 2010-க்குப் பிறகுதான் கிடைத்தது. ‘தாந்தோணி’, ‘போக்கிரிராஜா’ போன்ற மசாலா நாயகர்களுக்குரிய படங்கள் அவருக்கு இந்த அந்தஸ்தை வழங்கின. இந்திரஜித்தும் இந்தக் காலகட்டத்தில் நாயகராகத் தொடங்கி இணைநாயகராக ஆனார்.

ஆனால் ஜெயசூர்யா, பிருத்விராஜூக்கு இணையான வளர்ச்சியைப் பெற்றார். அவரும் வினயனின் படங்கள் மூலம் துலங்கி வந்தவர். ‘கேரளா ஹவுஸ் உடன் வில்பனக்கு’, ‘புலிவால் கல்யாணம்’ போன்ற நகைச்சுவை படங்கள் மூலம் தொடர்ந்து வெற்றிபெற்றார். பிருத்விராஜூக்கு மாறாக ‘திருவனந்தபுரம் லாட்ஜ்’, ‘கேசினோவா’, ‘அப்போத்திகிரி’, ‘கும்பசாரம்’, ‘ஸ்கூல் பஸ்’, ‘லூக்காசுப்பி’ போன்ற கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்தார். இதன் மூலம் சிறந்த நடிகருக்கான சிறப்புப் பரிசை மத்திய அரசிடம் இருந்து பெற்றார். அதே சமயம் ‘புன்யாலன் அகர்பத்தீஸ்’, ‘பிரேதம்’ போன்ற படங்களும் அவருக்கு வெற்றியைத் தேடித் தந்தன.

இந்தக் காலகட்டத்தில் பிருத்விராஜ் உள்ளிட்ட ஜெயசூர்யா, இந்திரஜித், போபன் போன்ற இளம் நாயகர்கள் அடிக்கடி இணைந்து நடித்தனர். இந்தப் படங்கள் அவர்களுக்கு வெற்றியையும் தேடித் தந்தன. இயக்குநர் ஷாஃபிதான் இந்த வகைப் படங்களை அதிகம் எடுத்தவர். பிருத்விராஜ், ஜெயசூர்யா ஆகியோரைக்கொண்டு ‘சாக்லேட்’; ஜெயசூர்யா, பிருத்விராஜ், போபன் ஆகியோரைக் கொண்டு  ‘லாலிபப்’; போபன், ஜெயசூர்யா, பிஜூமேனன் ஆகியோரைக் கொண்டு ‘101 வெட்டிங்ஸ்’ போன்ற படங்களை இயக்கினார். இவை நகைச்சுவைக்காக வெற்றியும் பெற்றன.

 மீண்டும் புதிய அலை

2000-ல் மலையாளத்தில் பரவலாக ஆக்கிரமித்திருந்த மசாலா தன்மை 2010-க்குப் பிறகு மாறியது. ஆஷிக் அபு, ராஜேஷ் பிள்ளை, பிளெஸ்ஸி, சமீர் தாஹீர், அருண்குமார் அரவிந்த்,  மதுபால், டாக்டர் பிஜூ, சலீம் அகமது போன்ற இயக்குநர்கள் புதிய அலையை உருவாக்கினர். மாற்று சினிமாக்களை உருவாக்கும் இயக்குநர் ஷியாமபிரசாத், இந்தக் காலகட்டத்தில் இளம் நடிகர்களான பிருத்விராஜ், நிவின் பாலி, ஆஷிஃப் அலி, ஃபகத் பாசில் ஆகியோரை வைத்து அடுத்தடுத்துப் படங்கள் இயக்கினார். மசாலா நாயகரான திலிபை வைத்து ‘அரிகே’ படத்தை இந்தக் காலகட்டத்தில் இயக்கினார். இந்தப் புதிய சினிமா போக்கு, ‘ராஜமாணிக்கம்’ போன்ற மிக மோசமான மசாலா வெற்றிப் படங்களை இயக்கிய அன்வர் ரஷீத்தைக்கூடப் பாதித்தது. அவர் ‘உஸ்தாத் ஹோட்டல்’, ‘அஞ்சு சுந்தரிகள்-ஆமின்’ போன்ற கதையம்சமுள்ள படங்களை இயக்கினார். சண்டை, த்ரில்லர் படங்களை இயக்கிய அமல் நீரத், ‘அயோபிண்ட புஸ்தகம்’ இயக்கியதும் இந்தக் காலகட்டத்தில்தான். ஜனரஞ்சகமான இயக்குநர் லால் ஜோஸ், ஃபகத் பாசிலை வைத்து ‘டைமண்ட் நெக்லஸ்’ போன்ற வித்தியாசமான படத்தை 2010-க்குப் பிறகு எடுத்தார்.

2011-ல் ஆஷிக் அபு இயக்கத்தில் வெளிவந்த ‘சால்ட் அண்ட் பெப்பர்’ படமும் இந்த மாற்றத்துக்கான கொடியை அசைத்துவைத்தது எனலாம். லால், ஸ்வேதா மேனன் ஆகிய இருவரையும் மையப் பாத்திரங்களாகக்கொண்டு உருவான இந்தப் படம், மலையாள சினிமாவுக்கே புதிய ஆற்றலைத் தந்தது.  ஆஷிக் அபு அடுத்து அவர் இயக்கிய ‘22 ஃபீமேல் கோட்டய’மும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. கோட்டயம் செவிலியப் பெண்ணை ஏமாற்றும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஃபகத் பாசிலின் நடிப்பு மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. இதற்கடுத்து லால் ஜோஸின் இயக்கத்தில் அவர் நடித்த ‘டைமண்ட் நெக்ல’ஸிலும் மற்றொரு செலிவியப் பெண்ணை ஏமாற்றும் மருத்துவராக நடித்திருப்பார். இரண்டுமே அவருக்குப் பாராட்டைப் பெற்றுத் தந்தது. 2002-ல் தந்தை பாசில் இயக்கிய ‘கையெத்தும் தூரத்து’ படத்தின் மோசமான தோல்விக்குப் பிறகு சினிமாவிலிருந்தே வெளியேறிவிட்ட ஃபகத், மீண்டும் மலையாள சினிமாவின் இந்தப் புதிய அலைக் காலகட்டத்தில்தான் திரும்பி வந்தார். அவருக்கு அது வெற்றியையும் தேடித் தந்தது.

துணைக் கதாபாத்திரங்களில் நடித்துப் புகழ்பெற்ற மதுபால், ‘தலப்பாவு’ ‘ஒழிமுறி’ ஆகிய இரு முக்கியமான படங்களை இந்தக் காலகட்டத்தில் இயக்கினார். ஒளிப்பதிவாளராகக் கவனம் பெற்ற ராஜீவ் ரவி 2013-ல் தனது முதல் படமான ‘அன்னயும்  ரசூலு’மை  இயக்கினார். துல்கரை வைத்து அவர் இயக்கிய ‘கம்மட்டிப்பாட’மும் சிறந்த படங்களுள் ஒன்றாக ஆனது.

டாக்டர் பிஜூ இயக்கிய ‘பேரறியாதவர்’ 2015-ல் வெளிவந்து இரு தேசிய விருதுகளைப் பெற்றது. இதில் நாயகனாக நடித்த சுராஜ் வெஞ்சாரமூடு சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார். இதேபோல மூத்த நகைச்சுவை நடிகரான சலீம் குமாருக்கும் சிறந்த நடிகருக்கான  தேசிய விருதைப் பெற்றுத் தந்த ‘ஆதமிண்ட மகன் அபு’ படமும் இந்தக் காலகட்டத்தில்தான் வெளியானது. ஆனால் பிஜூவின் படத்தைவிட ‘ஆதமிண்ட மகன் அபு’ பார்வையாளர்களின் கவனத்தைப் பெற்றது. ‘ஆதமிண்ட மகன் அபு’ நகைச்சுவை நடிகரான சலீம் குமார், 80-களின் இந்தி நாயகியான ஸரினா வஹாப் ஆகியோரை மையப் பாத்திரங்களாகக்கொண்டது. ஹஜ் புனித யாத்திரைக்குச் செல்ல முயலும் வயோதிகத் தம்பதியாரின் பாடுகளை இந்தப் படம் சித்திரித்தது. லிஜோ ஜோஸ் பில்லிசேரியின் ‘ஆமென்’, அருண்குமார் அரவிந்தின் ‘லெஃப்ட் ரைட் லெஃப்ட்’, அனில் ராதாகிருஷ்ணனின் ‘நார்த் 22 காதம்’ போன்றவையும் 2010-ன் புதிய அலையின் சினிமாக்களாக வெளிவந்து கவனம்பெற்றன.

2011-ல்தான் சென்னையில் நடந்த ஓர் இதய அறுவைசிகிச்சையை மையமாகக்கொண்ட ‘ட்ராஃபிக்’ படம் ராஜேஷ் பிள்ளை இயக்கத்தில் வெளிவந்து விமர்சகர்களின் பாராட்டையும் வணிக வெற்றியையும் ஒருசேரப் பெற்றது. இந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் தமிழ், இந்தி ஆகிய மொழிகளிலும் இந்தப் படம் மறு ஆக்கம் செய்யப்பட்டது. ஆஷிக் அபுவின் உதவியாளரும் அவரது படங்களின் துணைக் கதாபாத்திரங்களில் நடித்தவருமான திலீஷ் போத்தனின் ‘மகேஷிண்ட பிரதிகாரம்’ மலையாள சினிமா மறந்துபோயிருந்த கிராமத்து வாழ்க்கையை மீட்டெடுத்துத் தந்தது. 2000-க்குப் பிறகான கிராம வாழ்வை அது சித்திரித்தது.

இதற்கிடையில் பின்னால் ‘த்ரிஷ்யம்’ மூலம் இந்தியத் திரையுலகையே திரும்பிப் பார்க்கவைத்த ஜீத்து ஜோசப் ‘டிடெக்டிவ்’ ‘மெமரீஸ்’ போன்ற தனது த்ரில்லர் பட வெற்றிகள் மூலம் புதிய போக்கை உருவாக்கினார். வினீத் ஸ்ரீனிவாசனின் ‘மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப்’ மூலம் அறிமுகமான நிவின் பாலிக்கு, வினீத்தின் அடுத்த படமான ‘தட்டத்தின் மறயத்து’ நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுத் தந்ததும் இந்தக் காலகட்டத்தில்தான். வினீத்தும் மாறிவந்த இந்தப் புதிய அலையைப் பயன்படுத்திக்கொண்ட சினிமா ஆளுமையாக இருக்கிறார். இயக்கம், திரைக்கதை, நடிப்பு, பாடல் எனப் பலவகையில் தன்னை அதனுடன் தொடர்புபடுத்திக்கொண்டார். 2013-ல் வெளிவந்த ‘செல்லூலாய்டு’ வரலாற்றுப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அறிமுக இயக்குநர் ஆர்.எஸ்.விமல் கேரளத்தின் பிரலமான காதல் இணையான ‘காஞ்சனமாலா-மொய்தீன்’ கதையை ‘எந்நு நிண்டே மொய்தீன்’ என்ற பெயரில் இயக்கினார். பிருத்விராஜ் நடிப்பில் இந்தப் படம் விமர்சகர்களின் பாராட்டையும் வசூலையும் குவித்தது.

2015-ல் வெளிவந்த ‘பிரேமம்’ கேரளம் தாண்டிய வெற்றியைப் பெற்றது. அதுவரை இருந்த மலையாள சினிமாக்களின் வசூல் சாதனையையும் முறியடித்தது. இதுவரை எடுக்கப்பட்ட மிக மோசமான மலையாளப் படமான ‘புலிமுருக’னின் வசூல், ‘பிரேம’த்தை முறியடித்தது. இவை மட்டுமல்லாது கம்யூனிச கட்சியைப் பின்னணியாகக் கொண்டு ‘சகாவு’, ‘ஒரு மெக்சிகன் அபாரத’, ‘காம்ரேட் இன் அமெரிக்கா’ போன்ற சில மோசமான படங்களும் 2010 உருவான சினிமா எழுச்சிக்கு எதிராக அமைந்தன.

முழுக்கப் புது முகங்களைக் கொண்டு 2017-ம் ஆண்டின் தொடக்கத்தில் வெளிவந்த ‘அங்கமாலி டைரீ’ஸ் மிகப் பெரிய வெற்றி பெற்றது. அதில் நடித்த நடிகர்கள் ஒரே வெள்ளிக்கிழமையில் நட்சத்திரங்களாக மாற்றம் பெற்றனர். அதற்கடுத்து அறிமுக இயக்குநர் மகேஷ் நாராயணனின் இயக்கத்தில் வெளிவந்த ‘டேக் ஆஃப்’ படமும் வெற்றியையும் பாராட்டையும் பெற்றது. வெற்றிபெறாவிட்டாலும் சலீம் குமாரின் ‘கறுத்த யூதன்’, ரஞ்சித் சங்கரின் ‘ராமண்ட ஏதன் தோட்டம்’ ஆகியவை கவனிக்கத்தக்க படங்களாக அமைந்தன.

2017-ல் வெளிவந்த மசாலாப் படங்கள் தோல்வியைத் தழுவியுள்ளன. மம்மூட்டி, மோகன்லால் போன்ற நாயகர்களை மையமாக வைத்து வெளிவந்த படங்களும் ஒருவாரத்துக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அதேநேரம்  2017-ம் இறுதியில் வெளிவந்த ‘தொண்டிமுதலும் திருக்சாட்சியும்’ ‘ஞண்டுகளுட நாட்டில் ஓரிடவேள’ ஆகிய படங்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கின்றன. இந்த வெற்றி ஆரோக்கிய சினிமாக்கான விதையாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். 2010-யை ஒட்டி புதிய அலையால் எழுச்சி பெற்ற மலையாள சினிமாவில், இந்த ஆண்டு குறிப்பிடத்தக்க படங்கள் அதிகமாக வரவில்லை. அதேநேரம், அது கண்டடைந்துவிட்ட தன் அடையாளத்தை எதிர்காலத்தில் தக்கவைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.சினிமாவின் முகம் 2000-க்குப் பிறகு மாறத் தொடங்கியது. மோகன்லால், மம்மூட்டி என்ற இரு பெரும் நாயகர்களுக்குப் பிறகு திலீப், பிருத்விராஜ், குஞ்சாக்கோ போபன், ஜெயசூர்யா, துல்கர் சல்மான், ஃபகத் பாசில், நிவின் பாலி போன்ற அடுத்த காலகட்ட நாயகர்களின் வரவு நிகழ்ந்தது. மிகுந்த அழுத்தமான கதைகளைத் திரைப்படங்களாக உருவாக்கிவந்த சத்யன் அந்திக்காடு, சிபிமலயில், கமல் போன்ற இயக்குநர்கள் மாறிவரும் புதிய சூழலை எதிர்கொள்ளத் திணறிய காலகட்டமும் இதுதான். ஆனால் தொழில்நுட்பரீதியில் மலையாள சினிமா வளர்ச்சி அடைந்தது. சென்னையை மையமாகக்கொண்டு இயங்கிய மலையாள சினிமா கொச்சிக்கு மாறியதும் இந்தக் காலகட்டத்தில்தான்.

 

லோஹியின் தனியாவர்த்தனம்

1987 ‘தனியாவர்த்தனம்’ மூலம் கதையாசிரியராக அறிமுகமான லோஹிததாஸ், இரண்டாயிரத்தில் தனது சினிமா வாழ்க்கையையே முடித்துக்கொண்டார். சிபிமலயில்-லோஹி கூட்டணி மலையாளத்துக்குப் பல நல்ல சினிமாக்களைச் சம்பாதித்துத் தந்தது. ‘கீரிட’த்தின் இரண்டாம் பாகமான ‘செங்கோல்’தான் இந்தக் கூட்டணியின் இறுதியான வெற்றி. அதற்குப் பிறகு சிபியின் சினிமா வாழ்க்கை சரிவுக்குச் சென்றது. தனது வெற்றியை நிலை நிறுத்திக்கொள்ள, கதையாசிரியர் ரஞ்சித்துடன் இணைந்து 90-களின் இறுதியில் 'சம்மர் இன் பெத்லேகாம்', 'உஸ்தாத்' என அடுத்தடுத்து இரு படங்களை சிபி இயக்கினார். அதற்குப் பிறகு 2001-ல் திலீப், நெடுமுடி வேணு நடிப்பில் வெளிவந்த ‘இஷ்டம்’ சிபி மலயிலின் கவனிக்கத்தக்க படமாக இருந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் மோகன்லால், ஜெயராம் போன்ற மூத்த நடிகர்களைக்கொண்டும் குஞ்சாக்கோ போபன், ஆசிஃப் அலி போன்ற இளம் நடிகர்களைக்கொண்டும் படங்களை இயக்கினார். ஆனால், அவை தோல்வியிலேயே முடிந்தன.

சிபியின் மிகச் சிறந்த வெற்றிப் படங்களின் கதாசிரியரான லோஹி 90-களின் இறுதியில் ‘பூதக்கண்ணாடி’ மூலம் இயக்குநரானார். மம்மூட்டி நடிப்பில் வெளிவந்த இந்தப் படம் அவருக்கு மத்திய, மாநில விருதுகளைப் பெற்றுத் தந்தது. இடைவெளிக்குப் பிறகு 98-ல் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த ‘கண்மத’த்தில் மீண்டும் அவர் வெற்றியைப் பெற்றார். பிறகு 2000-ல் வெளிவந்த ‘அரயண்ணகளோட வீடு’ கவனிக்கத்தக்க படமாக இருந்தது. அதற்குப் பிறகான லோஹியின் சினிமா ஜீவிதம் சிறப்பாக இருக்கவில்லை. பல நல்ல சினிமாக்களைத் தந்த லோஹியின் சினிமா வாழ்க்கை 2007 அவர் இயக்கிய ‘நிவேத்ய’த்துடன் முடிவுக்கு வந்தது.

 

சாதாரணர்களின் கதை

சாதாரணர்களின் கதையை இயல்பான நகைச்சுவையுடன் காட்சிப்படுத்திய மலையாள இயக்குநர்களில் முக்கியமானவர் சத்யன் அந்திக்காடு. அவருக்கு 2000 நல்ல தொடக்கத்தைத் தந்த ஆண்டு. ‘வல்யேட்டன்’, ‘நரஸிம்ஹம்’ போன்ற மசாலாப் படங்களின் ஆதிக்கம் நிறைந்த 2000, அவரைப் போன்ற இயக்குநருக்கு ஒரு சோதனைக் களம்தான். முதல் பத்தாண்டுகளில் சத்யன் அதில் வெற்றிபெற்றுவிட்டார். ஸ்ரீனிவாசனின் கதையில் ‘யாத்ரகாருட சிரத்தைக்கு’ வெற்றியைத் தேடித் தந்தது. இதைத் தொடர்ந்து, ‘மனசினக்கர’, ‘ராசதந்திரம்’, ‘கத தொடருந்நு’, ‘ஸ்நேகவீடு’ எனப் பல வெற்றிகளைக் கண்டார். சில தோல்விகளையும் சந்தித்தார். 2011-க்குப் பிறகான மலையாள சினிமா மாற்றத்துடன் தாக்குப்பிடிக்க முடியாமல் சத்யனின் படங்கள் திணறின.

மலையாளத்தின் தனித்துவமான நகைச்சுவைப் படங்களை உருவாக்கியவர் ப்ரியதர்ஷன். மண் மணம் சார்ந்த படங்கள் மலையாளத்தின் வந்துகொண்டிருந்த காலகட்டத்தில் நிலமே இல்லாத களத்தில் தன் படங்களை உருவாக்கினார். அவரது படங்கள் பெரும்பாலும் ஊட்டியை மையமாகக்கொண்டவையாக இருந்தன. 1986-ல் வெளிவந்த ‘மிழிநீர்ப்பூவுகள்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கமல், மென் உணர்வுகளைச் சித்திரிப்பதில் தனித்தன்மையானவர். உண்மையில் இவரைப் போன்ற இயக்குநர் புத்தாயிரத்தில் தாக்குப்பிடிப்பது சிரமம். ஆனால், எண்பதுகளுக்கான இயக்குநர்களின் திறத்துடன் இன்னும் இயங்கிவருபவராக கமல் இருக்கிறார்.

 

காக்கியுடை மசாலா

பொதுவாக நாயக பிம்பம் இல்லாத மலையாள சினிமாக்களில் இருந்து வேறுபட்டு நட்சத்திர நடிகர்கள் மோகன்லால், மம்மூட்டி, சுரேஷ் கோபி ஆகியோரை முன்னிறுத்திய மசாலாப் படங்கள் 2000-ல்தான் அதிகரித்தன. 2000-11 கால கட்டத்தில் சராசரியாக ஆண்டுக்கு ஆறு படங்கள் சுரேஷ் கோபியின் தெறிக்கும் வசன உச்சரிப்பில் வெளியாகிப் பெரும் வெற்றியைப் பெற்றன. சுரேஷ் கோபியின் இந்த வெற்றியால் மம்மூட்டியும் மோகன்லாலும்கூட காக்கிச் சீருடையில் வசனங்களைக் கோபம் கொப்பளிக்கப் பேச வேண்டிய நிர்ப்பந்தம் உண்டானது.

மோகன்லால், மம்மூட்டிக்கு அடுத்த நட்சத்திரமாக திலீப் வளர்ந்தார். நகைச்சுவை நடிகராக அறிமுகமான திலீப் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் தொடர்ந்து நடித்தார். அவருக்கு அது வெற்றியைத் தேடித் தந்தது. கமல், சத்யன் அந்திக்காடு, லோஹிததாஸ் போன்ற இயக்குநர்களின் படங்களிலும் திலீப் பணியாற்றினார். அதனால் அவரது சினிமா வாழ்க்கையின் மிகச் சிறந்த படங்கள் உருவாயின. திலீப் அல்லாது குஞ்சாக்கோ போபன், பிருத்விராஜ் சுகுமாரன், ஜெயசூர்யா, இந்திரஜித் சுகுமாரன், ஆசிப் அலி போன்ற புதிய நடிகர்களின் பிரவேசங்களும் நிகழ்ந்தன. 2000-க்குப் பிறகான நட்சத்திரப் பட்டியலில் பிருத்விராஜுக்கு ஓர் இடம் கிடைத்தது. பிருத்விராஜ், ஜெயசூர்யா, இந்திரஜித், போபன் போன்ற இளம் நாயகர்கள் அடிக்கடி இணைந்து நடித்தனர். இந்தப் படங்கள் அவர்களுக்கு வெற்றியையும் தேடித் தந்தன.

 

மீண்டும் புதிய அலை

2000-ல் மலையாளத்தில் பரவலாக ஆக்கிரமித்திருந்த மசாலா தன்மை 2010-க்குப் பிறகு மாறியது. ஆஷிக் அபு, ராஜேஷ் பிள்ளை, பிளெஸ்ஸி, சமீர் தாஹீர், அருண்குமார் அரவிந்த், மதுபால், டாக்டர் பிஜு, சலீம் அகமது போன்ற இயக்குநர்கள் புதிய அலையை உருவாக்கினர். மாற்று சினிமாக்களை உருவாக்கும் இயக்குநர் ஷியாமபிரசாத் மசாலா நாயகரான திலீபை வைத்து ‘அரிகே’ படத்தை இயக்கினார். இந்தப் புதிய சினிமா போக்கு, ‘ராஜமாணிக்கம்’ போன்ற மிக மோசமான மசாலா வெற்றிப் படங்களை இயக்கிய அன்வர் ரஷீத்தைக்கூடப் பாதித்தது. அவர் ‘உஸ்தாத் ஹோட்டல்’, ‘அஞ்சு சுந்தரிகள்-ஆமின்’ போன்ற கதையம்சமுள்ள படங்களை இயக்கினார். ஜனரஞ்சகமான இயக்குநர் லால் ஜோஸ், ஃபகத் பாசிலை வைத்து ‘டைமண்ட் நெக்லஸ்’ போன்ற வித்தியாசமான படத்தை 2010-க்குப் பிறகு எடுத்தார்.

2011-ல் ஆஷிக் அபு இயக்கத்தில் வெளிவந்த ‘சால்ட் அண்ட் பெப்பர்’ படமும் இந்த மாற்றத்துக்கான கொடியை அசைத்துவைத்தது. ஆஷிக் அபு அடுத்து இயக்கிய ‘22 ஃபீமேல் கோட்டய’மும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. 2002-ல் தந்தை பாசில் இயக்கிய ‘கையெத்தும் தூரத்து’ படத்தின் மோசமான தோல்விக்குப் பிறகு சினிமாவிலிருந்தே வெளியேறிவிட்ட ஃபகத், மீண்டும் மலையாள சினிமாவின் இந்தப் புதிய அலை காலத்தில்தான் திரும்பி வந்தார். அவருக்கு அது வெற்றியையும் தேடித் தந்தது. ஒளிப்பதிவாளராகக் கவனம் பெற்ற ராஜீவ் ரவி 2013-ல் தனது முதல் படமான ‘அன்னயும் ரசூலு’மை இயக்கினார். துல்கரை வைத்து அவர் இயக்கிய ‘கம்மட்டிப்பாட’மும் சிறந்த படங்களுள் ஒன்று. டாக்டர் பிஜு இயக்கிய ‘பேரறியாதவர்’ 2015-ல் வெளிவந்து இரு தேசிய விருதுகளைப் பெற்றது. இதில் நாயகனாக நடித்த சுராஜ் வெஞ்சாரமூடு சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார். இதேபோல மூத்த நகைச்சுவை நடிகரான சலீம் குமாருக்குச் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றுத் தந்த ‘ஆதமிண்ட மகன் அபு’ (2011) படமும் வெளியானது.

இதற்கிடையில் பின்னால் ‘த்ரிஷ்யம்’ மூலம் இந்தியத் திரையுலகையே திரும்பிப் பார்க்கவைத்த ஜீத்து ஜோசப் ‘டிடெக்டிவ்’, ‘மெமரீஸ்’ போன்ற தனது த்ரில்லர் பட வெற்றிகள் மூலம் புதிய போக்கை உருவாக்கினார். 2013-ல் வெளிவந்த ‘செல்லுலோய்டு’ வரலாற்றுப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அறிமுக இயக்குநர் ஆர்.எஸ்.விமல் கேரளத்தின் பிரபலமான காதல் இணையான ‘காஞ்சனமாலா-மொய்தீன்’ கதையை ‘எந்நு நிண்ட மொய்தீன்’ என்ற பெயரில் இயக்கினார். பிருத்விராஜ் நடிப்பில் இந்தப் படம் விமர்சகர்களின் பாராட்டையும் வசூலையும் குவித்தது.

2015-ல் வெளிவந்த ‘பிரேமம்’ கேரளம் தாண்டியும் வெற்றியைப் பெற்றது. அதுவரை இருந்த மலையாள சினிமாக்களின் வசூல் சாதனையையும் முறியடித்தது. இதுவரை எடுக்கப்பட்ட மிக மோசமான மலையாளப் படமான ‘புலிமுருக’னின் வசூல், ‘பிரேம’த்தை முறியடித்தது. ஆனால் அறிமுக இயக்குநர் சந்தோஷ் விஸ்வநாத்தின் ‘சிறகொடிஞ்ச கினாவுகள்’, பாஷ் முகமதின் ‘லூக்கா சுப்பி’ சனல்குமார் சசிதரனின் ‘ஒழிதிவசத்த களி’ போன்ற வித்தியாசமான படங்களும் வெளிவந்தன. அடூர் கோபாலகிருஷ்ணனின் ‘பின்னேயும்’ (2016) தோல்வி விமர்சனரீதியிலும் தோல்வியடைந்தது. இவை மட்டுமல்லாது கம்யூனிச கட்சியைப் பின்னணியாகக் கொண்டு ‘சகாவு’, ‘ஒரு மெக்சிகன் அபாரத’, ‘காம்ரேட் இன் அமெரிக்கா’ போன்ற சில மோசமான படங்களும் 2010-க்குப் பிறகு உருவான சினிமா எழுச்சிக்கு எதிராக அமைந்தன.

முழுக்கப் புது முகங்களைக் கொண்டு 2017-ம் ஆண்டின் தொடக்கத்தில் வெளிவந்த ‘அங்கமாலி டைரீ’ஸ் மிகப் பெரிய வெற்றி பெற்றது. அறிமுக இயக்குநர் மகேஷ் நாராயணனின் இயக்கத்தில் வெளிவந்த ‘டேக் ஆஃப்’ படமும் வெற்றியையும் பாராட்டையும் பெற்றது. 2017-ல் வெளிவந்த மசாலாப் படங்கள் தோல்வியைத் தழுவியுள்ளன. அதேநேரம் 2017-ம் இறுதியில் கதையம்சத்துடன் வெளிவந்த ‘தொண்டிமுதலும் திருக்சாட்சியும்’ ‘ஞண்டுகளுட நாட்டில் ஓரிடவேள’ ஆகிய படங்கள் வெற்றியைப் பெற்றிருக்கின்றன. இந்த வெற்றி ஆரோக்கிய சினிமாவுக்கான விதையாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

(முழுமையான கட்டுரை)

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article23839244.ece

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.