Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவில் மர்மமான முறையில் காணாமல் போயுள்ள சீனர்

Featured Replies

சிறிலங்காவில் மர்மமான முறையில் காணாமல் போயுள்ள சீனர்

 

chinese-dragon-300x200.jpgசிறிலங்காவுக்கு வந்த ஒரு சில மணிநேரங்களிலேயே சீன நாட்டவர் ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போயுள்ளார். அவரைத் தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் சிறிலங்கா காவல்துறை மற்றும் இராணுவம் என்பன ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

ஜியாங் டோ என்ற சீனர் மேலும் இரண்டு பேருடன், கடந்த 11ஆம் நாள் இரவு சிறிலங்காவுக்கு வந்திருந்தார். அவர்கள், தெற்கு அதிவேக நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளை முன்னெடுக்கும் நிறுவனத்தின் கட்டுமானப் பகுதிக்கு கடந்த 12ஆம் நாள் அதிகாலை சென்றிருந்தனர்.

தெனியாய காட்டுப் பகுதியில் சுற்றித்திரிந்த சீனர், அன்று மாலை முகாமுக்குத் திரும்பவில்லை.

இதுதொடர்பாக சிறிலங்கா காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டு தேடுதல்கள் நடத்தப்பட்டன. சிறிலங்கா இராணுவத்தினரும் உதவிக்கு அழைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டது.

தேடுதல்களின் போது, காணாமல் போன சீனரின் அலைபேசி, மேற்சட்டை மற்றும் காலணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

காணாமல் போயுள்ள சீனரைக் கண்டுபிடிக்கும் தேடுதல்களை சி

http://www.puthinappalakai.net/2018/05/17/news/30911

  • தொடங்கியவர்

இலங்கை: காணாமல் போன சீனர் 9 நாட்களுக்கு பிறகு மீட்பு

சீனா

அதிவேக நெடுஞ்சாலையின் பணிக்காக வந்த சீனாவை சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 12 ஆம் தேதி தியகொட பிரதேசத்தில் காணாமல் போயிருந்தார். 9 நாட்களுக்குப்பின் குழி ஒன்றினுள் இருந்து உயிருடன் மீட்கப்பட்டார்.

கடந்த 11.05.2018 ஆம் தேதியில் சீனாவில் இருந்து அம்மாந்தோட்டை மாத்தறை அதிவேக வீதியின் வேலைக்காக சீனாவில் இருந்து தியகொட பிரதேசத்திற்கு தொழிலாளியாக வந்த நபர் ஒருவர் காணாமல் போயிருந்தார்.

இவ்வாறு காணாமல் போயிருந்தவர் சீனாவை சேர்ந்த 35 வயதுடைய ஜிந்தாவு என்பவராவார்.

அதன் பின்னர் இவர் இரவு 7.00 மணியளவில் தான் தங்கியிருந்த வேலைத்தளத்தில் இருந்து. வெளியில் சென்று வருவதாக தன்னோடு தங்கியிருந்தவர்களிடம் கூறிவிட்டு வெளியே சென்றிருக்கிறார்.

அதன் பின்னரே இவர் காணாமல் போனதாக சந்தேகிக்கப்பட்ட தியகொட ஆரணிய ஆற்றுக்கு அருகில் வைத்து இவருடைய தொலைபேசி, பாதணி, சட்டை ஆகியவை கிடைத்தன.

சீனா

இதனால் இவரை மாத்தறை தியகொட போலீசாரும், ராணுவத்தாரும், பொது மக்கள் பலரும் தேடும் பணியில் ஈடுப்பட்டு வந்தநிலையில் எவராலும் தேடிக்கண்டுக்கொள்ள முடியாத நிலை காணப்பட்டது.

9 நாட்களுக்குபின் நேற்று மாலை உடஹபரக்க மஹா பெவுனக அசபுவ வீதியின் பேரகுட்டிய கிராமத்தின் நிமல் என்பவரின் வீட்டுக்கு அருகில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனாந்தரம் ஒன்றில் உள்ள குழி ஒன்றினுள் இருந்து உயிருடன் மீட்கப்பட்டார்.

ஹேவாதுகே சுனில் என்பவர் தனது இரண்டு பிள்ளைகளுடன் மூங்கில் வெட்ட இப்பிரதேசத்திற்கு வந்தபோது சத்தம் கேட்பதை அவதானித்து இருக்கிறார். அதன் பின்னர்ஒருவர் பாலடைந்த கிணற்றில் கிடப்பதை அவதானித்த விட்டு தியகொட போலீஸ் நிலையத்திற்கு அறிவித்திருக்கின்றார்.

சீனா

அதன் பின்னர் போலீஸார் 1990 990 சேவைக்கு அழைத்து குறித்த நபரை கிணற்றில் இருந்து மீட்டு மாத்தரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இவரை காப்பாற்றும் பணியில் மாத்தரை வைத்தியசாலையின் வைத்தியர்கள் பாரிய முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் 9 நாட்கள் இவர் எந்தவிதமான உணவும் இன்றி குழிக்குள் சிக்கி உயிருடன் மீட்கப்பட்டது அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது.

இருந்தும் இவர் தனது நண்பரை காணதான் வர்த்தக வீசா மூலம் இலங்கை வந்தார் .

https://www.bbc.com/tamil/sri-lanka-44188304

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.