Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கீத் நொயார் கடத்தல் விவகாரம்; பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் தொடர்பு குறித்து சி.ஐ.டி. விசாரணை

Featured Replies

கீத் நொயார் கடத்தல் விவகாரம்; பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் தொடர்பு குறித்து சி.ஐ.டி. விசாரணை

10-2a0ef73a4b539fefbc490a49b263f669a8e3b402.jpg

 

(எம்.எப்.எம்.பஸீர்)

த நேஷன் பத்திரிகையின் முன்னாள் இணை ஆசிரியர் கீத்

நொயார் கடத்தப்பட்டு சட்ட விரோதமாக தடுத்து வைக்கப் பட்டமை, சித்திரவதை செய்யப்பட்டமை, ஆயுதத்தால் தாக்கப்பட்டமை, கொலை செய்ய முயற்சிக்கப்பட்டமை மற் றும் நொயார் குடும்பத்தினருக்கு 

கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு தொடர்புகள் உள்ளதா என்பது குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு நேற்று கல்கிசை மேலதிக நீதிவான் லோச்சனா அபேவிக்ரமவுக்கு அறிவித்தது.  

இது தொடர்பில் முதல்கட்ட விசாரணையாக கீத் நொயார் கடத்தப்பட்ட தினம், அதற்கு முன்னைய, பிந்திய தினங்களில், தாக்குதலை நடாத்தியதாக கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் உள்ள இராணுவ புலனயவுப் பிரிவின் அதிகாரிகளுடனான தொலைபேசி கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுப்பதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றுக்கு அறிவித்தது.

 இதனைவிட கீத் நொயார் கடத்தப்பட்ட சில நிமிடங்களில், அப்போதைய நேஷன் பத்திரிகை ஆசிரியர் அப்போதைய அமைச்சரும் தற்போதைய சபாநாயகருமான கரு ஜயசூரியவை அழைத்தமை தொடர்பிலும் அதன் பின்னர் கரு ஜயசூரிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அழைத்தமை தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

அதன்பின்னர் இடம்பெற்றுள்ள மஹிந்த - கோத்தா, கோத்தா - கபில ஹெந்த விதாரண, ஹெந்த விதாரண - அமல் கருணாசேகர, அமல் கருணாசேகர - மேஜர் புளத்வத்த ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற தொலைபேசி கலந்துரையாடல்கள் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெறுவதாக நீதிவானுக்கு அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பிலான விசாரணைகளில், முன்னாள் பாதுகபபு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அபோதைய உளவுத் துறை பிரதானி கபில ஹெந்தவித்தாரனவை தொடர்பு கொண்டு 6 நிமிடங்களுக்குள் கபில ஹெந்தவிதாரன - மேஜர் ஜெனரால் அமல் கருணாசேகரவை தொடர்புகொள்ள, அவர் மேஜர் புலத்வத்தவை தொடர்புகொண்டு கீத் நொயாரை விடுவித்துள்ளமை தொடர்பில் விசாரணையாளர்கள் தகவல்களை வெளிப்படுத்திக்கொண்டுள்ளனர்.

நேற்றையதினம் கீத் நொயார் விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணைக்கு வந்தது. இதன்போது ஏற்கனவே கைதனை பிணையில் உள்ள இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மேஜர் ஆர்.டி.எம்.டப்ளியூ.புளத்வத்த, எஸ்.ஏ.ஹேமசந்திர, யூ.பிரபாத் வீரகோன், பி.எல்.ஏ.லசந்த விமலவீர, எச்.எம். நிசாந்த ஜயதிலக, எம்.ஆர். நிசாந்த குமார , சி. ஜயசூரிய ஆகியோருக்கு மன்றில் ஆஜராக வேறு திகதி கொடுக்கப்பட்டுள்ளதால் அவர்கள் ஆஜராகவில்லை.

எனினும் 8 ஆவது சந்தேக நபராக கைது செய்யப்பட்ட இராணுவ புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானியும் முன்னாள் இராணுவ படைப் பிரிவுகளின் பிரதானியுமான முன்னாள் பதில் இராணுவ தளபதி அமல் கருணாசேகர சிறைச்சாலை அம்பியூலன்ஸ் வண்டியில் மன்றில் ஆஜர் செய்யப்பட்டார். அம்பியூலன்ஸ் வண்டியில் இருந்து அவர் சக்கர நாட்காலியிலேயே கல்கிசை மேலதிக நீதிவான் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டார். இந்நிலையிலேயே வழக்கு விசாரணைகள் ஆரம்பமாகின.

இதன்போது குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சர் திசேரா, சமூக கொள்ளை தொடர்பிலான விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா ஆகியோருடன் சட்ட மா அதிபர் சார்பில் அரச சட்டவாதி உதார கருணாதிலக ஆஜரானார். வழமையாக ஆஜராகும் சிரேஷ்ட அரச சட்டவாதி லக்மினி ஹிரியாகம சுகயீனம் காரணமாக நேற்று மன்றில் ஆஜராகவில்லை.

8 ஆம் சந்தேக நபரான மேஜர் ஜெனரால் அமல் கருணாசேகர சார்பில் சட்டத்தரணிகளான மேஜர் அஜித் பிரசன்ன, நலின் இந்திரதிஸ்ஸ ஆகியோர் ஆஜராகினர்.

 இந் நிலையில் மன்றில் மேலதிக விசாரணை அறிக்கையை விசாரணை அதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா கையளிக்க, கருத்துக்களை முன்வைத்த அரச சட்டவாதி உதார கருணாதிலக தெரிவித்ததாவது,

' நீதிமன்றிடம் நாம் ஏற்கனவே பெற்றுக்கொண்ட அனுமதிக்கு அமைய 8 ஆம் சந்தேக நபரான அமல் கருணாசேகரவிடம் வாக்கு மூலம் பெற்றுக்கொண்டுள்ளோம்.

கீத் நொயார் கடத்தப்பட்ட, 2008.05.22 அன்று அப்போதைய இராணுவ புலனயவுப் பிரிவு பணிப்பாளராக இருந்த 8 ஆவது சந்தேக நபரின் 0773613496 எனும் தனிப்பட்ட தொலைபேசியில் இருந்து, மருதானை - திரிப்பொலி முகாமின் கீழ் இருந்த இறுதியில் 951,436 ஆகிய இலக்கங்களைக் கொண்ட இரு தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பு எடுக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் 23.44,23.48 மணிக்கு இந்த அழைப்புக்கள் எடுக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்ப்ட்ட கீத் நொயாரின் வாக்கு மூலத்தின் படி அவர் கட்டி வைக்கப்பட்டு தாக்கப்படும் போது அங்கிருந்த ஒருவருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதற்கு பதிலளித்துள்ள அந் நபர் ' ஓ கே சேர்.... ஓகே சேர்...என கூரிய வண்ணம் கீத் நொயாரை விடுவிக்க உத்தரவிட்டுள்ளார். தொலைபேசி கோபுர தகவல்களுக்கு அமைவாகவும் ஏனைய சாட்சிகளுக்கு அமையவும் சந்தேக நபர்களுடன் இந்த தகவல்கள் ஒத்துப் போகின்றன. குறித்த நேரத்தில் 951,436 என முடியும் இரு இலக்கங்களும் மல்வானை - தெக்கடன பகுதி கோபுரத்தில் பதிவாகியுள்ளது. அப்பகுதியை அண்மித்த பதுவத்தை வீட்டிலேயே கீத் நொயார் அப்போது தடுத்து வைக்கப்ப்ட்டு தககப்ப்ட்டுள்ளமை விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவ்விரு தொலைபேசி இலக்கங்களையும் இவ்வழக்கின் முதல் சந்தேக நபர் மேஜர் புலத்வத்தவே பயன்படுத்தியுள்ளார்.

எனவே 8 ஆம் சந்தேக நபர் முதலாம் சந்தேக நபருக்கு எடுத்த அழைப்பிலேயே கீத் நொயார் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது. 8 ஆம் சந்தேக நபருக்கு அப்போதைய உளவுத் துறை பிரதானி ஹெந்தவிதாரண தனது 0777562873 எனும் தொலைபேசி இலக்கம் ஊடாகவே அழைத்துள்ளார். அமல் கருணாசேகர புளத்வத்தவை அழைக்க 6 நிமிடங்களுக்கு முன்னர் கோத்தாவும் - ஹெந்தவிதாரணவை தொடர்புகொன்டுள்ளார். இவையணைத்தும் தொலைபேசி பகுப்பாய்வில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

 இந் நிலையில் நாம் இது தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுக்கின்றோம். உண்மையில் இந்த விவகாரத்தில் முதலில், அப்போதைய நேஷன் பத்திரிகை ஆசிரியர் குரே, முதலில் அப்போதைய அமைச்சரும் தற்போதைய சபாநாயகருமான கரு ஜயசூரியவை தொடர்புகொண்டுள்ளார். கரு ஜயசூரியவின் வீட்டு தொலைபேசி இலக்கமான 0112552072 இற்கு அழைத்தே அவர் தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து கரு ஜயசூரிய முன்னாள் ஜனடஹிபதியின் வீட்டு தொலைபேசி இலக்கமான 0114733200 எனும் சி.டி.எம். இலக்கத்துக்கு அழைத்து தகவல் வழங்கியுள்ளார்.

 இதனையடுத்து மஹிந்த, கோத்தாவுக்கும், கோத்தா ஹெந்த வித்தாரணவுக்கும், ஹெந்தவித்தாரண - 8 ஆம் சந்தேக நபர் அமல் கருணாசேகரவுக்கும் அழைப்பு ஏற்படுத்தியுள்ளனர்.

 இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பில் நேற்று முன் தினம் 15 ஆம் திகதி நாம் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் விசாரணை செய்ய முற்பட்ட போதும் பல வேலைகள் காரணமாக முடியாமல் போனது. அடுத்து வரும் சில நாட்களில் நாம் அவரிடம் விசாரணை செய்து வாக்கு மூலம் பெறுவோம்.

இதனைவிட முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளில், சரத் பொன்சேகாவுக்கு தொடர்புகள் உள்ளதா என்பது குறித்தும் அவதானம் செலுத்தியுள்ளோம். அப்ப்போது இராணுவ தளபதியாக அவரே இருந்துள்ள நிலையில் அவரிடமும் வாக்கு மூலம் ஒன்று பெற்றுள்ளோம்.' என்றார்.

 இதனையடுத்து தற்போது விளக்கமரியலில் உள்ள மேஜர் ஜெனரால் அமல் கருணாசேகர்வுக்கு பிணை வழங்கக் கூடாது என அரச சட்டவாதி வாதிட, அதற்கு எதிர்ப்பு வெளியிட்டு பிணை கோரி சிரேஷ்ட சட்டத்தரணி நலின் இந்திரதிஸ்ஸவும், மேஜர் அஜித் பிரசன்னவும் மன்றில் வாதிட்டனர்.

 எனினும் பிணை வழங்க நீதிவான் லோச்சன ஆபேவிக்ரம மறுத்து அவரை இம்மாதம் 30 ஆம் திகதிவரை விளக்கமரியலில் வைக்க உத்தர்விட்டார்.

 அத்துடன் சந்தேக நபர் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்படும் போது, சாட்சியாளர்களில் ஒருவரான அழககோனின் வாககு மூலத்தில் இந்த தாககுதலை இராணுவ தளபதியே முன்னெடுத்ததாக கூறப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டி அது தொடர்பில் சி.ஐ.டி. விசாரணை செய்யாமை தொடர்பில் கேள்வி எழுப்பினார்.

 இந் நிலையில் இறுதியில் திறந்த மன்றில் கருத்திவெளியிட்ட நீதிவான் லோச்சனா அபேவிக்ரம, சந்தேக நபர் தரப்பில் கூறப்படும் விடயங்களை கருத்தில் கொன்டு விசாரணைகளை முன்னெடுக்க சி.சி.டி.க்கு ஆலோசனை வழங்கி வழக்கை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-05-17#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.