Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சரணடைந்தவர்களின் பட்டியலை வெளியிடக் கோருகிறது அனைத்துலக மன்னிப்புச் சபை

Featured Replies

சரணடைந்தவர்களின் பட்டியலை வெளியிடக் கோருகிறது அனைத்துலக மன்னிப்புச் சபை

 

Amnesty-300x200.jpgபோரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்தவர்களின் பட்டியலையும், அவர்கள் பற்றிய தகவலையும் வெளியிடுமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம், அனைத்துலக மன்னிப்புச் சபை கோரியுள்ளது.

சிறிலங்காவில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட ஒன்பதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, அனைத்துலக மன்னிப்புச்சபை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

”சரணடைந்தவர்களின் பட்டியலை வெளியிடுமாறு தாம் பாதுகாப்புச் சபைக்கு உத்தரவிடுவதாக கடந்த 2017ஆம் ஆண்டு, ஜூன் மாதம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன,  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தார்.

தேசிய பாதுகாப்புச் சபையின் தலைவராக சிறிலங்கா அதிபரே இருக்கிறார். அவரே முப்படைகளினதும் தளபதி.

இருந்த போதும், அவர் வாக்குறுதி அளித்து 11 மாதங்களாகியும், போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்தவர்களின் படடியல் இன்னமும் வெளியிடப்படவில்லை.” என்றும் அனைத்துலக மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

http://www.puthinappalakai.net/2018/05/18/news/30925

 

 

காணாமல்போனவர்களின் விபரங்களை அரசாங்கம் வெளியிடவேண்டும்

 

பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்பட்டவர்கள் அனைவர்களினதும் பெயர் விபரங்களை அரசாங்கம் வெளியிட வேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வந்து இன்று ஒன்பது வருடங்களாகின்ற நிலையில் சர்வதேச மன்னிப்புச்சபை இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் படையினரிடம் சரணடைந்த பின்னர் காணாமல்போகச்செய்யப்பட்டவர்களின் விபரங்களை அவர்களின் குடும்பத்தவர்களுக்கு வழங்கவேண்டும் என மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

யூன் 2017 ம் ஆண்டு காணாமல்போனவர்களின் உறவினர்களை சந்தித்தவேளை  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  தேசிய பாதுகாப்பு சபையை குறிப்பிட்ட பட்டியலை வெளியிடுமாறு கேட்டுக்கொள்வேன் என உறுதியளித்தார் எனவும் சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

யுத்தம் முடிவிற்கு வந்த மே மாதத்தில் இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்த 100ற்கும் மேற்பட்ட விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் காணாமல்போயுள்ளனர் என உயிருடன் உள்ள அவர்களது குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர் எனவும் சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

misinnig_may18.jpg

ஓரு குழுவினர் கத்தோலிக்க மதகுருவான பிரான்சிஸ் தலைமையில் சரணடைந்தனர் அவரும் பின்னர் காணாமல்போனார் என தகவல்கள் கிடைத்துள்ளன என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகள் இயக்க போராளிகள் சரணடைவதை நேரில் பார்த்த அவர்களின் குடும்பத்தவர்கள் அவர்களை படையினர் பேருந்துகளில் ஏற்றிச்செல்வதை கண்டதாக தெரிவித்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ள சர்வதேச மன்னிப்புச்சபை அவர்களிற்கு என்ன நடந்தது என்பது இதுவரை தெரியாத நிலையே நிலவுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளது.

2013 ம் ஆண்டு  காணாமல்போனவர்களின் 13 குடும்;பத்தவர்கள் ஆட்கொணர்வு மனுவொன்றை தாக்கல் செய்ததுடன் தங்கள் குடும்பத்தவர்கள் எங்கிருங்கின்றார்கள் என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தனர் எனவும் மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்கள் தங்கள் உறவுகளை கண்டுபிடித்து உண்மையையும் உரிய பதிலையும் பெறுவதற்காக மேற்கொண்டுள்ள முயற்சிகளிற்கு இலங்கை அரசாங்கம் ஆதரவு வழங்கவேண்டும் எனவும் மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. 

http://www.virakesari.lk/article/33589

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.