Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமது தலைவிதியை நாமே தீர்மானிக்கவேண்டும்: சிவாஜிலிங்கம்

Featured Replies

எமது தலைவிதியை நாமே தீர்மானிக்கவேண்டும்: சிவாஜிலிங்கம்

 

IMG_1721-720x450.jpg

 

ஐ.நா. மற்றும் உலக நாடுகளின் உதவியுடன் வட.கிழக்கில் ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டு எமது மக்களின் தலைவிதியை நாமே தீர்மானிக்கவேண்டும் என வட.மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினையொட்டி நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் நேற்று (வியாழக்கிழமை) மாலை நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “2009ஆம் ஆண்டு தமிழீழ தேசிய போராட்டம் கொடூரமாக அடக்கப்பட்டு அழிக்கப்பட்டு தமிழ் மக்கள் பல்லாயிரக்கணக்கில் அழிக்கப்பட்ட அந்த போர் முடிவுக்குவந்த மே18 வடக்கு மாகாணசபை தமிழின அழிப்பு நாள் என்றும் தமிழ் தேசிய துக்கநாள் என்றும் பிரகடனப்படுத்தியுள்ளது.

முள்ளிவாய்க்கால் போர் முடிவடைந்த மையப்புள்ளியாக கருதப்படுகின்றதே தவிர இலங்கை முழுவதும் கடந்த 70வருடங்களாக அரச படைகளினாலும் அதன் ஆதரவுடனும் நடைபெற்ற தமிழ் மக்கள் மீதான படுகொலைகளை நினைவுகூரும் வகையிலேயே இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெறுகின்றது.

படுகொலை செய்யப்பட்ட அத்தனை மக்களுக்கும் அஞ்சலி செலுத்துவதற்கும், அவர்களுக்கு நீதி கிடைப்பதற்காகவும் நாங்கள் போராடிவருகின்றோம். இவ்வாறான நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையினை பாராட்டுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டபோது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் பல நாடுகளின் தலைவர்களை சந்தித்திருந்தனர்.

இதன் விளைவாகவும் எமது புலம்பெயர் உறவுகளும் போராடியதன் காரணமாகவும் இங்குள்ள தமிழ் தேசிய தலைவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாகவும் சர்வதேச நீதிப்பொறிமுறையொன்றை ஆரம்பிப்பதற்கான கட்டத்தில் வந்து நிற்கின்றது.இலங்கைமீது தற்போது ஐ.நா.மனித உரிமைகள் பேரவை நம்பிக்கையிழந்து காணப்படுவதன் காரணமாக சர்வதேச நீதி விசாரணை பொறிமுறை ஒன்றை நோக்கி செல்லக்கூடிய வாய்ப்புகள் ஒரிரு ஆண்டுகளில் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகமாகவுள்ளது.

தமிழ் மக்கள் கட்சி பேதங்களை மறந்து ,தனை உறுதியாக கேட்கவேண்டும். தமிழின படுகொலைகள்தான் எமது போராட்டத்திற்கு உரமூட்டி நின்றன.1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில் 10இலட்சம் மலையக தோட்டத்தொழிலாளர்களின் குடியுரிமையினை பறிக்கப்பட்டது.

ஐ.நா. சட்டத்தின் படி பௌதீக வளங்களை அழித்தாலும் குறைத்தாலும் இனப்படுகொலையென்றே சொல்லப்படுகின்றது. பல படுகொலைகள் இந்த நாட்டில் அரங்கேற்றப்பட்டுள்ளன.தமிழ் மக்கள் மீதான படுகொலைதான் இன்று எங்களை சர்வதேச அரங்கிற்கு கொண்டுசென்றுவிட்டுள்ளது. படுகொலை செய்யப்பட்ட அனைவருக்கும் நீதிவேண்டும்.

படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நாங்கள் அஞ்சலி செலுத்துவதுடன் தமிழ் மக்கள் தங்களை தாங்களே ஆளுவதற்கான தீர்வொன்றை பெறுவதுதான் அவர்களுக்கு செலுத்தக்கூடிய உண்மையான அஞ்சலியாகும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

IMG_1698.jpg

http://athavannews.com/?p=673834-எமது-தலைவிதியை-நாமே-தீர்மானிக்கவேண்டும்:-சிவாஜிலிங்கம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு (படங்கள்)

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு (படங்கள்)

 

இலங்கையில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் ஆரம்பிக்கப்படுவதற்கான சூழல் எதிர்வரும் வருடங்களில் உள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை முன்னிட்டு வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை முன்னிட்டு நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் நேற்று (18) மாலை நடைபெற்றது.

கடந்த பல வருடங்களாக இலங்கையில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகளுக்கு நீதி வேண்டும் என்ற தலைப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், முன்னாள் கிழக்கு மாகாண பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், இரா.துரைரெட்னம் உட்பட பிரதேச சபையின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின் போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் உயிரிழந்தவர்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

http://tamil.adaderana.lk/news.php?nid=102394

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.