Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுன்னாகத்தில் சித்திரவதை!- சிந்திக்கவுக்குத் தொடர் சிக்கல்!!

Featured Replies

சுன்னாகத்தில் சித்திரவதை!- சிந்திக்கவுக்குத் தொடர் சிக்கல்!!

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், பிணை விண்ணப்பத்தை தள்ளுபடி செய்து கட்டளை வழங்கினார்.

 

Jaffna-750x430.jpg

 
 
 
 

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுப்புக் காவலில் இருந்த சந்தேகநபரை சித்திரவதை செய்த குற்றத்துக்காகப் 10 ஆண்டுகள் கடுகாவல் சிறைத் தண்டனையை அனுபவித்துவரும் தண்டனைக் கைதிகளான சிந்திக்க பண்டார உள்ளிட்ட 5 பொலி­ஸாரும் முன்வைத்த பிணை விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்றும் தள்ளுபடி செய்தது.

சுமணன் என்ற சந்தேகநபரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் தண்டனைக் கைதிகளான மனுதாரர்கள் 5 பேருக்கும் எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளநிலையில் பிணை வழங்கப்பட்டால் அந்த வழக்கில் பாதிப்பை ஏற்படுத்தும் உள்ளிட்ட முக்கிய காரணிகளை முன்வைத்து அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த் மன்றில் எழுத்துமூல சமர்ப்பணத்தை முன்வைத்தார்.

அதை ஆராய்ந்த யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், பிணை விண்ணப்பத்தை தள்ளுபடி செய்து கட்டளை வழங்கினார்.

மிஸ் பண்ணிடாதீங்க...!!
 

பின்னணி

2011ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் திகதி சுன்னாகம் பொலிஸாரால் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்­க­ளில் புன்னாலைக்கட்டுவானைச் சேர்ந்த சிறிஸ்கந்தராஜா சுமணன் முதலாவது சந்தேகநபராகக் கைது செய்யப்பட்டார். அவர் விசாரணைக்காக கிளிநொச்சி, வட்டக்கச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு சுமணன் பொலிஸ் காவலிலிருந்து தப்பித்து இரணைமடுக் குளத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என்று பொலிஸாரால் கிளிநொச்சி நீதி­வான் மன்றில் அறியிடப்பட்டது. இந்தச் சம்பவம் 2011ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் திகதி மாலை இடம்பெற்றது என்றும் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது.<

ஏனைய 4 சந்தேகநபர்களுக்கு எதிராக பெரும் குற்றம் வழக்கு மல்லாகம் நீதிவான் மன்றில் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றன. 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த வழக்கின் விசாரணையின் போது சந்தேகநபர்களில் இருவர், சுன்னாகம் பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி சிந்திக்க பண்டார உள்ளிட்ட 8 பொலிஸார் மீது சுமணனை சித்திரவதை செய்து கொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

மல்லாகம் நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன், சந்தேகநபர்களின் குற்றச்சாட்டுத் தொடர்பில் பொலிஸாரிடம் விசாரணைகளை மேற்கொண்டு சித்திரவதை மற்றும் கொலை ஆகிய இரு பிரிவுகளில் வழக்குகளை முன்னெடுக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டார். அத்துடன், சட்டமா அதிபர் திணைக்களத்துக்கும் நீதிவான் அறிவித்தல் வழங்கினார்.

சம்­ப­வம் தொடர்­பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த குற்­றப்­பு­ல­னாய்­வுப் பிரி­வி­னர் சந்­தே­க­ந­பரை கிளி­நொச்­சிக்கு அழைத்­துச் சென்­றனர் என்று தெரி­விக்­கப்­பட்ட சிந்திக்க பண்­டார உள்­ளிட்ட 5 பொலி­ஸா­ருக்கு எதி­ராக கொலை குற்­றச்­சாட்­டு வழக்கை கிளி­நொச்சி நீதி­வான் மன்­றில் முன்­வைத்­த­னர்.

அத்­து­டன், சட்­டமா அதி­பர் திணைக்­க­ளத்­தால் பொலிஸ் அதி­காரி சிந்திக்க பண்­டார உள்­ளிட்ட 8 பொலி­ஸா­ருக்கு எதி­ராக 1994ஆம் ஆண்டு சித்­தி­ரை­வ­தை­கள் சட்­டத்­துக்கு அமை­வாக யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்­றத்­தில் குற்­றப்­பத்­தி­ரிகை தாக்­கல் செய்­யப்­பட்­டது.

சித்­தி­ர­வதை வழக்­கில் சிந்திக்க பண்­டார உள்­ளிட்ட 6 பொலி­ஸா­ருக்கு 10 ஆண்­டு­கள் கடூழி­யச் சிறைத் தண்­டனை யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்­றால் கடந்த ஆண்டு வழங்­கப்­பட்­டது. அவர்களில் ஒருவர் வெளிநாடொன்றில் வாழ்வதால் 5 பொலிஸாரே சிறையில் அடைக்கப்பட்டனர்.

5 தண்டனைக் கைதிகளும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு ஆட்சேபனை தெரிவித்து தமது சட்டத்தரணிகள் ஊடாக கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்துள்ளனர்.
தமது மேன்முறையீட்டு மனு விசாரணையில் உள்ளதால் அதன் தீர்ப்பு அறிவிக்கப்படும்வரை தம்மை பிணையில் விடுவிக்கக் கோரி அவர்கள் 5 பேரும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் மேன்முறையீட்டின் போதான பிணை விண்ணப்பத்தை சீராய்வு மனு ஊடாக முன்வைத்தனர்.

இந்தச் சீராய்வு மனு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இன்று (21) விசாரணைக்கு வந்தது. அதன்போதே சீராய்வு மனுவை நிராகரித்து நீதிபதி கட்டளை வழங்கினார்.

இதேவேளை, தடுப்­புக் காவ­லிலிருந்த சந்­தே­க­ந­ப­ரைக் கொலை செய்­த­னர் என்ற குற்­றச்­சாட்­டில் கிளி­நொச்சி நீதி­வான் நீதிமன்­றால் விளக்­க­ம­றி­ய­லில் உத்தரவை எதிர்த்து சிந்­திக்க பண்­டார உள்­ளிட்ட 5 பொலி­ஸார் சார்­பி­லும் யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்­றில் கடந்த ஆண்டு பிணை விண்­ணப்­பம் செய்­யப்­பட்­டது.

அந்த விண்­ணப்­பம் யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்­றில் நிராகரிக்கப்பட்டிருந்தது.

http://newuthayan.com/story/20/சுன்னாகத்தில்-சித்திரவதை-சிந்திக்கவுக்குத்-தொடர்-சிக்கல்.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.