Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­களின் உணர்­வு­களை புரிந்­து­கொள்­ளுங்கள்

Featured Replies

பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­களின் உணர்­வு­களை புரிந்­து­கொள்­ளுங்கள்

 

இறுதி யுத்­தத்தில் உயி­ரி­ழந்த உற­வு­களை நினை­வு­கூர்ந்து முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நிகழ்வு உணர்­வெ­ழுச்­சி­யுடன் நடத்­தப்­பட்­ட­தை­ய­டுத்து தென்­ப­கு­தியில் இன­வா­தத்தை கிளப்பும் வகை­யி­லான செயற்­பா­டு­களில் அர­சியல் கட்­சி­களும் அமைப்­புக்­களும் ஈடு­பட்­டுள்­ளதை காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது.

உண்­மை­யி­லேயே இறுதி யுத்­தத்தில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான தமிழ் மக்கள் படு­கொலை செய்­யப்­பட்­டி­ருந்­தனர். இவ்­வாறு படு­கொலை செய்­யப்­பட்ட தமது உற­வு­களை நினை­வு­கூரும் வகை­யி­லேயே வடக்கு, கிழக்கில் முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நிகழ்­வுகள் பர­வ­லாக நடத்­தப்­பட்­டி­ருந்­தன. 18ஆம் திகதி முள்­ளி­வாய்க்­காலில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்கள் ஒன்­று­கூடி தமது உற­வு­களின் ஆத்மா சாந்­திக்­காக பிரார்த்­த­னையில் ஈடு­பட்­டனர்.

தமது உற­வு­களை நினைத்து இந்த மக்கள் அழுது புலம்­பி­ய­மை­யினால் முள்­ளி­வாய்க்கால் மண் கண்­ணீரில் நனைந்­தி­ருந்­தது. தமிழ் மக்கள் தமது உற­வு­களை நினை­வு­கூர்ந்த நிகழ்வை தவ­றான வகையில் அர்த்­தப்­ப­டுத்தி இன­வாதக் கருத்­துக்­களை சுய­நல அர­சியல் நோக்­கத்­திற்­காக தென்­ப­கு­தி­யி­லுள்ள அர­சியல் கட்­சி­களும் பொது அமைப்­புக்­களும் பரப்பி வரு­கின்­றன.

இறுதி யுத்­தத்தில் உயி­ரி­ழந்த தமது உற­வு­களை தமிழ் மக்கள் நினை­வு­கூர்ந்­தி­ருந்­த­போ­திலும் விடு­த­லைப்­பு­லி­களை நினை­வேந்தல் செய்­துள்­ள­தா­கவும் இதனால் நாட்­டுக்கு பேரா­பத்து வரப்போவ­தா­கவும் பொது எதி­ரணி எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது. முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நிகழ்வு வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் தலை­மையில் இடம்­பெற்­றி­ருந்­தது. இந்த நிகழ்வின் போது முத­ல­மைச்சர் நினை­வேந்தல் உரை­யி­னையும் ஆற்­றி­யி­ருந்தார். இதன்­போது யுத்தம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்டு ஒன்­பது வரு­டங்கள் ஆகி­விட்­ட­போ­திலும் தமிழ் மக்­களின் எதிர்­பார்ப்­புக்கள் நிறை­வேற்­றப்­ப­டாமை தொடர்­பிலும் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­க­ளுக்கு நீதி வழங்­கவும் தீர்வு வழங்­கவும் சர்­வ­தே­சத்தின் தலை­யீடு அவ­சியம் என்­ப­தையும் முத­ல­மைச்சர் தனது உரையின் போது வலி­யு­றுத்­தி­யி­ருந்தார்.

இந்த நிலையில் முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ரா­கவும் நினை­வேந்­த­லுக்கு எதி­ரா­கவும் கடும் கண்­ட­னங்கள் தென்­ப­கு­தியில் எழுந்­துள்­ளன. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான பொது எதி­ர­ணியை சேர்ந்­த­வர்கள் புலி­களை நினை­வு­கூர்ந்த வட­மா­காண சபை­யினை உடன் கலைக்­க­வேண்டும் என்றும் முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் மீது உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என்றும் கோரி­யுள்­ளனர்.

புலி­களை நினை­வேந்­திய வட­மா­காண முதல்வர் விக்­கி­னேஸ்­வரன் சர்­வ­தேச தரப்­பிற்கு முன்­வைத்த கருத்­தினை ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் அனு­ம­திக்­கின்­ற­னரா? வடக்கில் புலி­களை நினை­வு­கூரும் செயற்­பா­டு­க­ளுக்கு அனு­மதி வழங்­கி­யமை, நினை­வுத்­தூபி அமைத்­தமை என்­பன அர­சாங்­கத்தின் ஒத்­து­ழைப்­புடன் இடம்­பெ­று­கின்­ற­னவா என்­பதை உட­ன­டி­யாக நாட்டு மக்­க­ளுக்கு கூற­வேண்டும் என்று பொது எதி­ர­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பந்­துல குண­வர்த்­தன கருத்து தெரி­வித்­துள்ளார்.

வடக்கின் நிலை­மை­களை எந்­த­வ­கை­யி­லேனும் கட்­டுப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும். ஆகவே ஜனா­தி­பதி உட­ன­டி­யாக வட­மா­காண சபையை கலைத்து நாட்டை சீர­ழிக்கும் பிரி­வி­னையைத் தூண்டும் விக்­கி­னேஸ்­வரன் மற்றும் ஏனைய உறுப்­பி­னர்­க­ளுக்கு எதி­ராக உட­ன­டி­யாக சட்ட நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வேண்டும் என்று பொது எதி­ரணியின் உறுப்­பினர் ஜி.எல். பீரிஸ் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

 இதே­போன்றே முள்­ளி­வாய்க்­காலில் இடம்­பெற்ற நினை­வேந்தல் நிகழ்வு தொடர்பில் கருத்து தெரி­வித்த முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ வடக்கு குறித்து மிகுந்த அவ­தானம் செலுத்தி நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும். அவ்­வாறு செய்தால் நிலை­மை­யினை கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்­துக்­கொள்ள முடியும். அல்­லாது போனால் ­நாட்டில் மிகவும் நெருக்­கடி மிக்க நிலை­மை­யினை எதிர்­கா­லத்தில் சந்­திக்­க­வேண்டி வரும் என்று எச்­ச­ரித்­துள்ளார்.

இதற்கு ஒரு­ப­டி­மேலே சென்று முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷவும் தேசிய நல்­லி­ணக்கம் என்ற பேரில் புலி­களை நினை­வு­கூரும் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. வடக்கின் அர­சியல் போக்­கினை கருத்தில் கொள்­ளாது செயற்­பட்டால் மீண்டும் இந்த நாடு முப்­பது ஆண்­டு­காலம் பின்­நோக்கிப் பய­ணிப்­ப­துடன் தமிழ் மக்­க­ளுடன் ஆயு­தப்­போராட்டம் ஒன்­றினை முன்­னெ­டுக்­க­வேண்­டிய சூழல் உரு­வாகும் என்று கூறி­யி­ருக்­கின்றார்.

மொத்­தத்தில் வடக்கில் புலி­களை நினை­வேந்தல் செய்­த­தா­கவும் இதனால் நாட்­டுக்கு பேரா­பத்து ஏற்­பட்­டுள்­ளது என்ற தோர­ணை­யி­லுமே இவர்­க­ளது கருத்­துக்கள் அமைந்­துள்­ளன.

உண்­மை­யி­லேயே முள்­ளி­வாய்க்­காலில் உயி­ரி­ழந்த தமது உற­வு­க­ளையே தமிழ் மக்கள் நினை­வு­கூர்ந்­தி­ருந்­தனர். ஆனால் தென்­ப­கு­தியில் சிங்­கள மக்­களை குழப்பும் வகையில் அர­சியல் கட்­சிகள் செயற்­பட்டு வரு­கின்­றன. இத்­த­கைய கட்­சி­களே விடு­த­லைப்­பு­லி­களை நினை­வு­கூர அர­சாங்கம் அனு­மதி அளித்­துள்­ள­தா­கவும் இதனால் ஆபத்து ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் பொய்­யான குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்தி வரு­கின்­றன.

முன்­னைய அர­சாங்க காலத்தில் யுத்­தத்தில் உயி­ரி­ழந்த தமது உற­வு­களை நினை­வு­கூ­ரக்­கூட சுதந்­திரம் இல்­லாத நிலைமை தமிழ் மக்­க­ளுக்கு காணப்­பட்­டது. 2009ஆம் ஆண்டு யுத்தம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்ட போதிலும் 2015ஆம் ஆண்டு வரையில் முள்­ளி­வாய்க்­காலில் நினை­வேந்தும் நிகழ்­வினை மக்கள் மேற்­கொள்ள முடி­ய­வில்லை. பகி­ரங்­க­மாக தமது உற­வு­களை நினை­வு­கூர முடி­யாது மக்கள் அடக்கி ஒடுக்­கப்­பட்­டி­ருந்­தனர்.

ஆனால் 2015 ஆம் ஆண்டு நல்­லாட்சி அர­சாங்கம் பத­விக்கு வந்த பின்­னரே முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நடத்­து­வ­தற்­கான சூழ்­நிலை உரு­வா­கி­யி­ருந்­தது. அதுவும் இம்­மு­றைதான் ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் ஒன்­று­கூடி சுதந்­தி­ர­மாக உற­வு­களை நினை­வு­கூர்ந்­தி­ருந்­தனர். இவ்­வா­றான நிலை­யில்தான் தென்­ப­கு­தியில் தவ­றான கருத்­துக்கள் பரப்­பப்­பட்டு வரு­கின்­றன. அர­சியல் சுய­நல இலா­பங்­க­ளுக்­கா­கவும் சிங்­கள மக்­களை குழப்பி அவர்­க­ளது வாக்­கு­களை சுவீ­க­ரிப்­ப­தற்­கா­கவும் இத்­த­கைய பிர­சா­ரங்கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றமை கவ­லை­ய­ளிக்கும் விட­ய­மா­கவே உள்­ளது.

தென்­ப­கு­தியில் நினை­வேந்தல் நிகழ்­வுக்கு எதி­ராக கடும் கண்­ட­னங்கள் தெரி­விக்­கப்­பட்டு வரு­கின்ற போதிலும் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் நினை­வேந்­தலின் அவ­சி­யத்தை மீண்டும் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்றார். எமது மக்கள் தற்­செ­ய­லாக சாக­வில்லை. கொடூ­ர­மாக கொலை செய்­யப்­பட்­ட­ார்கள். ஒரு இடத்­திற்கு கொண்­டு­வ­ரப்­பட்டு சர­ண­டைந்தால் விடு­விப்போம் என்று பல பசப்பு வார்த்­தைகள் கூறி எம்­மக்­களை சதி செய்து கொன்ற நிகழ்வை நாம் நினை­வேந்தல் செய்­யாது எப்­படி இருக்க முடியும். போரில் இறந்­த­வர்­களை நினை­வு­கூ­ரு­வது அவர்­களின் சாந்­திக்­காக பிரார்த்­தனை செய்­வ­தென்­ப­தெல்லாம் சர்­வ­தேச சமூ­கத்தால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட மனித உரி­மை­களின் அல­கு­க­ளாகும் என்று முத­ல­மைச்சர் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

யுத்­தத்தில் பேரி­ழப்­புக்­களை சந்­தித்த தமிழ் மக்கள் இன்­னமும் அந்த துன்­பத்தில் இருந்து விடு­ப­ட­வில்லை. உற­வு­களை இழந்த துய­ரத்தில் இருந்து அவர்கள் இன்னும் வெளி­வ­ர­வில்லை. பாதிக்­கப்­பட்ட இந்த மக்கள் பல்­வேறு துன்­பங்­களை சுமந்த வண்­ணமே வாழ்ந்து வரு­கின்­றனர். இவ்­வாறு பாதிக்­கப்­பட்ட மக்­களின் உணர்­வு­களை தென்­ப­குதி சமூகம் புரிந்­து­கொள்­ள­வேண்­டி­யது அவ­சி­ய­மா­ன­தாகும். பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­களின் மனக்­கு­மு­றல்­களை தென்பகுதி மக்கள் புரிந்துகொண்டால் தான் நாட்டில் உண்மையில் நல்லிணக்கம் என்பது சாத்தியமாகும்.

தென்பகுதியில் மக்கள் ஓரளவிற்கு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் துன்ப துயரங்களை புரிந்துகொள்ள முயல்கின்றபோதிலும் அரசியல்வாதிகள், அதற்கு தடையாக செயற்பட்டு வருகின்றனர். அத்துடன் தமது அரசியல் சுயநலன்களுக்காக அவர்கள் பொய்களையும் புரட்டுக்களையும் கூறி இனவாதத்தைத் தூண்ட முயற்சிக்கின்றனர். ஆண்டாண்டு காலமாக இவ்வாறான செயற்பாடுகளினால்தான் தமிழ், சிங்கள மக்களிடையேயான பிரிவினை அதிகரித்திருந்தது. இதனால்தான் மூன்று தசாப்தகால யுத்தத்தை சந்திக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டிருந்தது.

எனவே இனியாவது பேரிழப்புக்களை சந்தித்த தமிழ் மக்களின் உணர்வுகளை தென்பகுதி புரிந்துகொள்ளவேண்டும். புரிந்துகொண்டு அதற்கேற்றவகையில் செயற்படவேண்டும். இதன்மூலமே நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-05-22#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.