Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தன்மானத்தை விற்றுப் பெறும் ஐக்கியம் எமக்கு தேவையில்லை

Featured Replies

தன்மானத்தை விற்றுப் பெறும் ஐக்கியம் எமக்கு தேவையில்லை

 

 

11_21052018_SSK_CMY.jpg

இந்த அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை தனக்குள்ளதாக தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம், அரச கரும மொழிகள் அமைச்சர் மணோ கணேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

இந்த அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது.நாளை, நாளை மறுநாள் அல்லது அடுத்த வாரம் அல்லது அடுத்த வருடம் என்றாவது ஒருநாள் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது.

இந்த நாட்டின் தேசிய இனப்பிரச்சினை தீரும் என்று நம்புகின்றேன்.அந்தக் கனவு என்றாவது ஒரு நாள் நனவாகும்.வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு போர்க்குற்ற விசாரணை நடாத்த தேவையில்லை என நான் ஒரு போதும் கூறவில்லை. எனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

வேண்டுமென்று சிலரால் திரிவுபடுத்தி மக்கள் முன்னிலையில் கொண்டு செல்லப்பட்டுள்ளது.பிரதேசத்துக்கு பிரதேசம் மொழிக்கு மொழி மாறிமாறி கருத்துக்களை பேசுபவன் நானல்ல.

இலங்கையின் உள்நாட்டு பிரச்சினை நாட்டுக்கு வெளியே சென்று பேசப்படுவதை நாங்கள் ஏற்றுக் கொள்ளா விட்டாலும் கூட நடைமுறையில் அது நிகழ்ந்து கொண்டிருக்கின்றது என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று சொன்னேன்.

1988, 1989ம் ஆண்டுகளில் தென்னிலங்கையில் சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்ட போது அந்தப் பிரச்சினைக்கெதிராக அந்த கொலைகளுக்கெதிராக முதன் முறையாக ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஜெனீவா வரை சென்றவர்கள் வேறு யாருமல்ல மஹிந்த ராஜபக்ச, வாசுதேவ நாணயக்கார போன்றோராவர்.

அவர்கள் சென்றதை சரியானது என்று அன்று நான் சொன்னேன்.

உள்நாட்டில் தீர்வில்லை, நீதியில்லை, நியாயமில்லை, நிம்மதியில்லை என்று அரசாங்கத்தின் நம்பிக்கை இழந்து தான் வெளிநாட்டுக்கு பிரச்சினைகளை கொண்டு சென்றனர்.

இதே போல இன்றும் தமிழ் மக்களுக்கு இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தினால் தான் ஐக்கிய நாடுகள் சபை வரை சென்றுள்ளனர்.

ஆகவே ஐக்கிய நாடுகள் சபைக்கு செல்ல வேண்டாம் அமெரிக்கா செல்ல வேண்டாம் ஐரோப்பா செல்ல வேண்டாம் என்று சொல்வானார்களானால் உள்நாட்டில் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். நீதி நியாயத்தை தரவேண்டும் என்றே நான் கூறியிருந்தேன். இதை எடுத்து திரிவுபடுத்தி வெட்டிக்குத்தி மக்களுக்கு தவறாக கொண்டு சென்றார்கள்.

இந்த நாட்டு தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரை முதன் முதலாக இலங்கைக்கு அழைத்து வந்தது நான்தான்.

நவநீதம்பிள்ளை, அல்ஹுஸைன் எல்லாம் யுத்தம் முடிந்ததன் பின்னர் தான் வந்தார்கள். ஆனால் 2006ம் ஆண்டு அன்றைய மனித உரிமை ஆணையாளர் லூயி சாபரை அழைத்து வந்தேன். சாதாரண ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டே நான் அழுத்தம் கொடுத்து அவரை அழைத்து வந்தேன்.

வடக்கு, கிழக்கு இணைக்கப்படல் வேண்டும் என்பதே எனது கருத்தாகும். அந்த இணைப்புக்காக கிழக்கு மாகாணத்தில் வாழக் கூடிய மக்கள் ஆதரவளிக்க வேண்டும். ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

வடக்கு, கிழக்கு இணைப்புக்கு கிழக்கு மாகாணத்திலிருக்கிருக்கின்ற மக்கள் மத்தியில் ஆதரவு இருக்கின்றதா இல்லையா என்பதை பார்க்க வேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் சமமாக வாழ்கின்றார்கள்.

அதற்காக ஒரு வாக்கெடுப்பு நடாத்தப்படல் வேண்டும்.

தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம், அரச கரும மொழிகள் அமைச்சர் என்ற வகையிலே இனபதற்றம், இனச்சிக்கல், பிரிவினையை ஏற்படுத்துவதற்கான அடிப்படைக் காரணங்கள் தோன்றக் கூடாது என விரும்புகின்றேன். தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் எனது பயணத்தை யாரும் தடுத்து நிறுத்த முடியாது.

இந்த நாடு பல்லின. பலமொழி, பல சமயங்கள் உள்ள நாடாகும்.

ஒரே மொழி, ஒரே மதம், ஒரே இனம் என்றால் இந்த நாடு துண்டு துண்டாக பிளவுபடும், இதனை நான் சொல்ல வில்லை. எனக்கு முன்னுள்ளோர் சொன்ன விடயமாகும்.அதனை மீண்டும் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

சில முட்டாள்கள் ஒரே நாடு, ஒரே மதம், ஒரே இனம் என்ற நடைமுறையை கொண்டு வரப்பார்க்கின்றார்கள். அல்லது பெரும்பான்மை மதம், பெரும்பான்மை இனம் என கொண்டு வரப்பார்க்கின்றார்கள்.

பெரும்பான்மை மக்களுக்கு கீழ் படிந்துதான் தமிழ், முஸ்லிம், கத்தோலிக்க மக்கள் நடந்து கொள்ள வேண்டுமென நினைக்கின்றார்கள். அதற்கு இடமளிக்க முடியாது.

நாட்டில் ஐக்கியம் வேண்டும் ஒற்றுமை வேண்டும் என்பதற்காக எங்களது தன்மானத்தையும் சுய மரியாதையையும் ஒரு போதும் விட்டுக் கொடுக்க முடியாது.

தன்மானத்தையும் சுய மரியாதையையும் விலை பேசி விற்று விற்றுத்தான் இந்த நாட்டில் ஐக்கியம் வரவேண்டும் என்றால் அந்த ஐக்கியம் எமக்கு தேவையில்லை என மேலும் தெரிவித்தார்.

http://www.thinakaran.lk/2018/05/22/உள்நாடு/24407/தன்மானத்தை-விற்றுப்-பெறும்-ஐக்கியம்-எமக்கு-தேவையில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.