Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அனைத்து வகை சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் டிவில்லியர்ஸ்

Featured Replies

அனைத்து வகை சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் டிவில்லியர்ஸ்

 

 

தென்ஆப்ரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனான டிவில்லியர்ஸ் அனைத்து வகையான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். #ABDeVilliers #ABDRetires #Mr360

 
 
அனைத்து வகை சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் டிவில்லியர்ஸ்
 
 
ஏபி டிவில்லியர்ஸ் தென்ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராவார். அனைத்துக் காலத்திற்குமான சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் கிரிக்கெட்டில் பல சாதனைகளைப் புரிந்துள்ளார். குறிப்பாக டெஸ்ட் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதி விரைவாக 50, 100, 150 ரன்கள் அடித்த தென்ஆப்ரிக்கா வீரர் எனும் சாதனையையும் சர்வதேச டி20 போட்டிகளில் அதிவிரைவாக 50 ரன்கள் எடுத்த தென்னாப்பிரிக்க வீரர் எனும் சாதனைகளைப் படைத்துள்ளார். இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
 
இவர் மட்டையாளராகவும் , விக்கெட் கீப்பராகவும் துவக்கத்தில் சர்வதேச போட்டிகளில் விளையாடத் துவங்கினார். மத்திய வரிசையில் இறங்கும் இவர் பல திசைகளிலும் அடித்து விளையாடும் வல்லமை படைத்தவர். நவீன காலத் துடுப்பாட்டப் போட்டிகளில் புதுமையான பேட்ஸ்மேன் என அறியப்படுகிறார். மேலும் விக்கெட் கீப்பர் மற்றும் பல திசைகளிலும் அடித்து விளையாடும் சில வித்தியாசமான முறைகளால் இவர் மிஸ்டர் 360 எனும் புனைபெயரால் அழைக்கப்படுகிறார். 
 
2004-ம் ஆண்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆனார். 2005-ம் ஆண்டின் துவக்கத்தில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகம் ஆனார். 2006-ம் ஆண்டில் சர்வதேச டி20 போட்டிகளில் இவர் அறிமுகமானார். அவரின் பேட்டிங் சராசரி இரு வடிவங்களிலும் 50-ற்கும் அதிகமாக உள்ளது.
 
தென்ஆப்ரிக்கா டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாகவும் இருந்துள்ளார். ஆனால் அவருக்கு ஏற்பட்ட காயத்தினால் டெஸ்ட் போட்டிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். ஆனால் ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக நீடித்து வருகிறார். பின் 2017 ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர் ஆகியவற்றின் தோல்விகளால் ஒருநாள் போட்டி கேப்டன் பொறுப்பிலிருந்தும் விலகினார்.
 
201805231731235517_1_ab-de-villiers_806x605_8149._L_styvpf.jpg
 
டிவில்லியர்ஸ் தற்போது நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடினார். ஆனால் அந்த அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. 
 
இந்நிலையில், 123 டெஸ்ட், 228 ஒருநாள் மற்றும் 78 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள டிவில்லியர்ஸ், அனைத்து வகை சர்வதேச போட்டிகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார். #ABDeVilliers #ABDRetires #Mr360

https://www.maalaimalar.com/News/TopNews/2018/05/23173123/1165144/DeVilliers-announces-retirement-from-all-forms-of.vpf

  • தொடங்கியவர்

“நான் களைப்படைந்து விட்டேன்”: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஏ.பி.டிவில்லியர்ஸ் திடீர் ஓய்வு அறிவிப்பு

 

 
devilliers

ஓய்வு பெற்றார் டிவில்லியர்ஸ். | படம். ராய்ட்டர்ஸ்.

நடப்பு ஐபிஎல் தொடரில் கலக்கிய தென் ஆப்பிரிக்க அதிரடி கிரிக்கெட் வீரர் ஏ.பி.டிவில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இவரது திடீர் அறிவிப்பு கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

360 டிகிரி வீரர் என்று பெயர் பெற்ற மிகச்சிறந்த அதிரடி வீரர் திடீரென ஓய்வு அறிவித்தது கிரிக்கெட் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 
 

நீண்ட காயத்துக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஆடவந்த டிவில்லியர்ஸ் ஜிம்பாப்வேவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் ஆடி, பிறகு இந்திய அணி அங்கு சென்றபோது கலக்கல் இன்னிங்ஸ்களை ஆடி தென் ஆப்பிரிக்க வெற்றியில் பெரிய பங்களிப்பு செய்தார், பீல்டிங்கில் கூட அவர் சோடைபோகவில்லை என்பதை இந்த ஐபிஎல் கிரிக்கெட்டிலும் பார்த்தோம்.

இந்திய தொடருக்குப் பிறகு சர்ச்சைகள் நிரம்பிய ஆஸ்திரேலிய தொடரில் மிகச்சிறப்பாக ஆடி ஆஸ்திரேலியாவுக்குத் தலைவலி கொடுத்தார்.

மேலும் உலகக்கோப்பையை வெல்வதே முக்கியம் என்று கூறிவந்தவர், திடீரென உலகக்கோப்பை வெல்வது என்ற அழுத்தம் இனி தனக்கு இல்லை என்று திடீரென ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார், அப்போதே அவர் ஓய்வு பெறுவதைத்தான் இவ்வாறு சூசகமாகக் கூறினார் என்ற ஐயம் எழுந்தது.

மேலும் மீண்டும் டெஸ்ட் போட்டியில் கவனம் செலுத்துவேன் என்று கூறியவர் குறைந்தது உலகக்கோப்பை வரையிலாவது சர்வதேச கிரிக்கெட்டில் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது, இந்நிலையில் அவர் திடீரென சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்துள்ளார்.

டிவில்லியர்ஸ் கூறுவது என்ன?- உருக்கமான பேச்சு

நான் களைப்படைந்து விட்டேன். அனைத்து சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் உடனடியாக ஓய்வு பெற முடிவெடுத்து விட்டேன்.

இது மிகவும் கடினமான முடிவுதான். நான் நீண்ட சிந்தனைக்குப் பிறகே இந்த முடிவுக்கு வந்துள்ளேன். 114 டெஸ்ட் போட்டி, 228 ஒருநாள் போட்டி 78 டி20 சர்வதேச போட்டிகள், இதற்குப் பிறகு மற்றவர்கள் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும். என்னுடைய வாய்ப்புகளை பெற்று விட்டேன், நேர்மையாகக் கூற வேண்டுமெனில் நான் களைப்படைந்து விட்டேன்.

ஆஸ்திரேலியா, இந்தியாவுக்கு எதிரான அபார வெற்றிக்குப் பிறகே இதுதான் ஓய்வு பெற சரியான தருணம் என்று நான் கருதுகிறேன். தென் ஆப்பிரிக்காவுக்காக நான் எப்போது, எங்கு ஆடுவேன் என்பதை நான் தீர்மானித்து முடிவெடுக்க முடியாது. அது சரியானதல்ல. இது எனக்கு அனைத்தும்தான் ஒன்றும் இல்லையும்தான், எனக்கு ஆதரவு அளித்த தென் ஆப்பிரிக்கா ரசிகர்கள் பயிற்சியாளர்களுகு நன்றிக்கடன் பட்டுள்ளேன். என் வாழ்நாள் முழுதும் என்னுடன் ஆடிய வீரர்களுக்கும் நன்றி. இவர்களது ஆதரவின்றி அரை வீரராகக் கூட உருப்பெற்றிருக்க மாட்டேன்.

வேறு லீகுகளில் இன்னும் சம்பாதிக்கும் நோக்கத்தினால் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவில்லை. நான் களைப்பினால் தீர்ந்து போய்விட்டேன். இதுதான் சரியான தருணம். அனைத்தும் முடிவுக்கு வர வேண்டியதுதான். உலகம் முழுதும் உள்ள ரசிகர்கள், தென் ஆப்பிரிக்க ரசிகர்கள் என்னிடம் காட்டிய பெருந்தன்மைக்கு நன்றி.

உங்கள் புரிதலுக்காக, அயல்நாடுகளில் ஆடும் திட்டம் இல்லை. ஆனாலும் உள்நாட்டு கிரிக்கெட்டில் டைட்டன்ஸ் அணிக்கு தொடர்ந்து ஆடுவேன், டுபிளெசிஸ் மற்றும் தென் ஆப்பிரிக்க அணியின் மிகப்பெரிய ஆதரவாளராக நான் இருப்பேன்.

இவ்வாறு உருக்கமாக வீடியோவில் பேசியுள்ளார் டிவில்லியர்ஸ்.

டெஸ்ட் அறிமுகம்: 2004, போர்ட் எலிசபத், இங்கிலாந்துக்கு எதிராக

ஒரு நாள் அறிமுகம் 2005 இங்கிலாந்துக்கு எதிராக

கடைசி டெஸ்ட்: மார்ச் 30, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஜொஹான்னஸ்பர்க் 2018

கடைசி ஒருநாள்: பிப்.16, 2018 இந்தியாவுக்கு எதிராக சென்சூரியன்.

டி20 அறிமுகம்: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2006

கடைசி டி20: 2017-ல் வங்கதேசத்துக்கு எதிராக.

டெஸ்ட் கிரிக்கெட்: 114, 8,765 ரன்கள், சராசரி 50.66, 22 சதங்கள், 46 அரைசதங்கள் 222 கேட்ச் 5 ஸ்டம்பிங். அதிகபட்ச ஸ்கோர் 278.

ஒருநாள் சர்வதேசம்: 228, 9,577, சராசரி 53.50., அதிகபட்ச ஸ்கோர் 176, 25 சதங்கள் 53 அரைசதங்கள். 840 பவுண்டரிகள், 204 சிக்சர்கள். 176 கேட்ச்கள் 5 ஸ்டம்பிங்குகள்.

டி20 சர்வதேசம்: 78, 1672, அதிகபட்சம் 79, சராசரி 26.12. 10 அரைசதம் 140 பவுண்டரிகள் 60 சிக்சர்கள். 65 கேட்ச்கள் 7 ஸ்டம்பிங்குகள்.

http://tamil.thehindu.com/sports/article23969388.ece?homepage=true

  • தொடங்கியவர்

சோகம், அதிர்ச்சி... 360 டிகிரி கிரிக்கெட்... - டிவில்லியர்ஸ் ஓய்வு குறித்து உருக்கமான பிரியாவிடைகள்

 

 
abd

டிவில்லியர்ஸ். | ஏ.எஃப்.பி.

இந்த நூற்றாண்டின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர் ஏ.பி.டிவில்லியர்ஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தது கிரிக்கெட் சகாக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஒருங்கே ஏற்படுத்தியுள்ளது.

இதோ சில ட்வீட்கள்:

 
 

சச்சின் டெண்டுல்கர்: உங்கள் ஆன் பீல்ட் ஆட்டம் போல் களத்துக்கு வெளியேயும் 360 டிகிரி வெற்றிக்கு வாழ்த்துக்கள். உங்களை நிச்சயமாக இழக்கிறோம், மை பெஸ்ட் விஷஸ்.

ஷாகித் அப்ரீடி: நான் மிகவும் போற்றும் ஒரு விக்கெட் இவர். பெரும்பாலும் உங்களை வீழ்த்துவது சவால்தான். ஆச்சரியகரமான உங்கள் கிரிக்கெட்டுக்கு வாழ்த்துக்கள்.

ஆலன் டோனல்ட்: கேள்விப்பட்டதும் அதிர்ச்சி ஏற்பட்டது. ஆனால் இதுதான் வாழ்க்கை. நகர்வதற்கு இது சிறந்த தருணம் என்று உணர்ந்து விட்டார். அபார்மான மேட்ச் வின்னிங் ஆட்டங்கள், திறமியான கேப்டன்சி, அனைத்திற்கும் மேலான உன் அடக்கம், பணிவு ஆகியவற்றுக்கு நன்றி ஏபிடி.

மகேலா ஜெயவர்தனே: சிறந்தவர்களில் ஒருவர். விஷ் யூ ஆல் த பெஸ்ட் ஏபி. அபாரமான வீரர், அனைத்திற்கும் மேலாக மிகச்சிறந்த நபர்.

மார்க் பவுச்சர்: தென் ஆப்பிரிக்காவுக்காக இவர் முதலில் வந்த நாள் நினைவில் உள்ளது. என்ன ஒரு அகத்தூண்டுதல், மனிதர், வீரர் இவர்!! நாட்டுக்காக, சகவீரர்களுக்காக, ரசிகர்களுக்காக நீங்கள் செய்த அனைத்துக்கும் நன்றி.

ஆகாஷ் சோப்ரா: கடந்த 10 ஆண்டுகளில் மிகச்சிறந்த ஜனரஞ்சக கிரிக்கெட் வீரர் சர்வதேச கிரிக்கெட்டை விட்டுச் செல்கிறார். உங்கள் இன்மை உணரப்படும். கிரிக்கெட் வறியதாகிவிடும். உங்கள் எதிர்கால வாழ்வுக்கு வாழ்த்துக்கள்.

ஹர்ஷா போக்ளே: சில நாட்களுக்கு முன்பாக என் வலைப்பதிவில் நான் கூறியிருந்தேன், லாராவின் உண்மையான வாரிசு டிவில்லியர்ஸ் என்று. அவரும் கேட்பார்: நான் எண்டெர்டெய்ன் செய்தேனா? என்று. இதற்குப் பதில் ஆம் ஆம் என்பதைத் தவிர என்னவாக இருக்க முடியும்?

மைக்கேல் வான்: சர்வதேச கிரிக்கெட்டிற்கு வெட்கக்கேட்டை ஏற்படுத்திவிட்டது இவரது ஓய்வு அறிவிப்பு. நம்ப முடியாத கிரிக்கெட் விளம்பரதாரர் இவர். கிரேட் கிரேட் பிளேயர், அனைத்து வடிவங்களும். டாப் 3 நான் கண்டதில்.

ரூலாஃப் வான் டெர் மெர்வ்: திகைக்க வைக்கும் சர்வதேச கிரிக்கெட் கரியர். டாப் பிளேயர், மிகவும் சகஜமானவர். கிரிக்கெட்டுக்கு ஒரு விளம்பரத் தூதர். பார்ப்பவர்களுக்கு ஒரு ரோல் மாடல். பச்சை, தங்க நிறத்தில் ஆடுவதை இனி பார்க்க முடியாது. ஆல் த பெஸ்ட் மை பிரெண்ட், நினைவுகளுக்கு நன்றி.

 

http://tamil.thehindu.com/sports/article23970175.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.