Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை கிடையாது: டிரம்ப்

Featured Replies

வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை கிடையாது: டிரம்ப்

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடன் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை கிடையாது: டிரம்ப்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

இது பேச்சுவார்த்தைக்கான தகுந்த சமயம் அல்ல எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஜூன் மாதம் 12ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறவிருந்த அந்த பேச்சுவார்த்தை நடைபெறாது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

''பெருங்கோபம் மற்றும் திறந்த விரோதத்தின்'' அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள வடகொரியா குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் ஜூன் 12 அன்று உச்சிமாநாட்டை நடத்துவது பொருத்தமற்றது என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அதிபர் கிம்முக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கிம்மை 'மற்றொருநாள்' சந்திக்க மிகவும் ஆவலாக உள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/global-44240756

  • தொடங்கியவர்

எங்களது சக்திவாய்ந்த அணு ஆயுதங்களை நாங்கள் பயன்படுத்தாதிருக்க கடவுளைப் பிரார்த்திக்கிறேன்: கிம் உடன் சந்திப்பை ரத்து செய்த டோனால்ட் ட்ரம்ப்

 

 
northkore3157003f

வடகொரியா தனது அணு ஆயுதச் சோதனை இடங்களை தொடர் வெடிப்புகள் மூலம் அழித்த பிறகு சிங்கப்பூரில் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்-ஐ அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சிங்கப்பூரில் சந்திக்கத் திட்டமிட்டிருந்தார், இந்நிலையில் அந்தச் சந்திப்பை அதிபர் ட்ரம்ப் ரத்து செய்வதாக கடிதம் ஒன்றில் அறிவித்துள்ளார்.

அந்தக் கடிதத்தில், “நீங்கள் அணு ஆயுதத் திறன்கள் பற்றி பேசினீர்கள், ஆனால் எங்களுடைய அணு ஆயுதங்கள் மிகப்பெரியது, சக்தி வாய்ந்தது அதனை நாங்கள் ஒரு போதும் பயன்படுத்தாதிருக்க கடவுளை பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

வடகொரிய அதிபருக்கு ட்ரம்ப் எழுதிய கடிதத்தில் “உங்களுடைய சமீபத்திய அறிக்கை ஒன்று பெரிய அளவு பகைமையும் கோபாவேசமும் நிறைந்ததாக இருந்ததால், நீண்ட நாளைய திட்டமான நம் சந்திப்பை இப்போது நடத்துவது சரியாகாது என்று நான் கருதுகிறேன், இதற்காக நான் வருந்துகிறேன்” என்று எழுதியுள்ளார், இது இழந்த வாய்ப்புதான் ஆனால் இன்னொரு சந்தர்ப்பத்தில் கிம்-ஐ தான் சந்திப்பதாகவும் தெரிவித்துள்ளார் ட்ரம்ப்.

இன்று, வடகொரியா ட்ரம்புடனான அடுத்த மாதச் சந்திப்பிலிருந்து விலகுவதாக திரும்பத் திரும்ப கூறிவந்தது. மேலும் தேவைப்பட்டால் அமெரிக்காவுடன் அணுஆயுதப் போருக்கும் தயார் என்று கூறியிருந்தது.

north%20korea%20nuclear%20sitejpg

வடகொரியாவின் அணு ஆயுத சோதனை இடமான புங்யே-ரி சைட். சாட்டிலைட் படம். | ஏ.பி.

 

வடகொரிய துணை அயலுறவு அமைச்சர் சோ சன் ஹூய், அமெரிக்க துணை அதிபர் மைக் பென்சை “அரசியல் வெத்துவெட்டு” என்றும் தங்களை லிபியாவுடன் ஒப்பிட்டு அணு ஆயுத நாடு என்று மைக் பென்ஸ் கூறியதைச் சுட்டிக்காட்டி கடாஃபி தன் அணு ஆயுதத் திட்டங்களைக் கைவிட்ட பிறகும் நேட்டோ படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் அணு ஆயுத சோதனைத் தளத்தை தகர்த்தது வடகொரியா. ஆனால் ட்ரம்ப் தன் அடுத்த மாதச் சந்திப்பை ரத்து செய்தார்.

அவர் எழுதிய கடிதம் வருமாறு:

நமது சமீபத்திய பேச்சு வார்த்தைகளுக்கு தாங்கள் காட்டிய நேரம், பொறுமை முயற்சி ஆகியவற்றை பாராட்டுகிறோம். ஜூன் 12ம் தேதி நமது சிங்கப்பூர் சந்திப்பை விரும்பியது அதிபர் கிம் தான் என்பதை அறிகிறோம். ஆனால் அது எங்களுக்கு பிரச்சினையில்லை. நானும் உங்களைச் சந்திக்க ஆவலாகவே இருந்தேன்.

ஆனால் வருத்தத்திற்குரிய விதமாக நீங்கள் சமீபத்தில் வெளிப்படையான பகைமையையும் கோபாவேசத்தையும் காட்டி பேசியிருக்கிறீர்கள். ஆகவே இந்தத் தருணத்தில் நம் நீண்ட நாள் திட்டமிட்ட சந்திப்பு நடைபெறுவது சரியாக இருக்காது. எனவே நம் இருவரின் நன்மை கருதி, அடுத்த மாத சந்திப்பை ரத்து செய்வதை இந்தக் கடிதம் பிரதிநிதித்துவம் செய்கிறது. ஆனால் இது உலகிற்கு நஷ்டம்தான்.

நீங்கள் அணு ஆயுத திறன்கள் பற்றி பேசினீர்கள், ஆனால் எங்களுடையது சக்தி வாய்ந்தது, மிகப்பெரியது, அதனை நாங்கள் ஒருபோதும் பயன்படுத்தாதிருக்க கடவுளைப் பிரார்த்திக்கிறேன்...

நமது சந்திப்பு அவசியம் என்று கருதி உங்கள் மனநிலை மாறினால் என்னை அழைக்கவோ, எனக்கு எழுதவோ தயங்க வேண்டாம்... இழந்த இந்த வாய்ப்பு உண்மையில் வரலாற்றின் ஒரு துயரமான கணம்.

என்று கடிதம் எழுதியுள்ளார் ட்ரம்ப்.

http://tamil.thehindu.com/world/article23980146.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

President Trump has just cancelled his June 12 summit with North Korea’s Kim Jong-un. Sec. of State Mike Pompeo, who has been meeting with Kim, testifies before the Senate now

  • தொடங்கியவர்

பேச்சுவார்த்தை இல்லை - டிரம்ப்; எப்போதும் பேசத் தயார் - வடகொரியா

வட கொரியாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

எந்த நேரத்திலும், எந்த நிலையிலும் அமெரிக்க அதிபர் டிரம்புடன் பேசத் தயாராக உள்ளதாக வட கொரியா தெரிவித்துள்ளது.

ஜூன் 12-ல் நடப்பதாக இருந்த அமெரிக்கா - வடகொரியா உச்சி மாநாட்டை, அதிபர் டிரம்ப் ரத்து செய்ததையடுத்து, அவரின் முடிவு மிகுந்த வருத்தமளிப்பதாக வட கொரிய துணை வெளியுறவு அமைச்சர் கிம் க்யே-க்வான் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடன் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

இது பேச்சுவார்த்தைக்கு உகந்த சமயம் அல்ல எனவும் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

ஜூன் மாதம் 12ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறவிருந்த அந்த பேச்சுவார்த்தை நடைபெறாது என தெரிவித்த டிரம்ப்,''பெருங்கோபம் மற்றும் வெளிப்படையான விரோதத்தை'' வடகொரியா வெளிப்படுத்தியிருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக சமீபத்தில் அவர் கூறியிருந்தார்.

சிங்கப்பூரில் ஜூன் 12 அன்று உச்சிமாநாட்டை நடத்துவது பொருத்தமற்றது என்றும் அதிபர் கிம்முக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், கிம்மை 'மற்றொரு நாள்' சந்திக்க மிகவும் எதிர்பார்ப்புடன் இருப்பதாக டிரம்ப் தெரிவித்தார்.

 
 

A letter from the President to Chairman Kim Jong Un: "It is inappropriate, at this time, to have this long-planned meeting."

 
 
 

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @WhiteHouse

''உங்களுடன் அங்கு உச்சிமாநாட்டில் பங்குபெற நான் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தேன். ஆனால் சோகம் என்னவெனில் உங்களது சமீபத்திய அறிக்கையில் பெருங்கோபமும், வெளிப்படையான விரோதமும் வெளிப்பட்டிருந்தன. அதன் அடிப்படையில் நான் நீண்டகாலமாக திட்டமிடப்பட்டிருந்த தற்போதைய சந்திப்பில் பங்கேற்பது பொருத்தமானதாக இருக்காது என உணர்கிறேன்'' என டிரம்ப் கூறினார்.

'' உங்களது அணுசக்தி திறன்கள் குறித்து நீங்கள் பேசுகிறீர்கள், ஆனால் எங்களுடையது மிகவும் வலிமையானது மேலும் நான் அவற்றை ஒரு போதும் பயன்படுத்துவதற்கான தேவை வரக்கூடாது என கடவுளிடம் வேண்டுகிறேன்'' என டிரம்ப் குறிப்பிட்டார்.

வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை கிடையாது: டிரம்ப்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

முன்னதாக, வட கொரியா லிபியாவை போல முடிந்துவிடக்கூடும் என அமெரிக்க துணைப் பிரதமர் மைக் ஃபென்ஸ் விமர்சித்ததையடுத்து வட கொரிய அதிகாரி சோ சன் ஹுய் அவரது கருத்தை முட்டாள்தனமானது என தெரிவித்துள்ளார்.

வட கொரியா பேச்சுவார்த்தையை நடத்த பிச்சையெடுக்காது என்றும் பேரப்பேச்சு நடத்துவதற்கான ராஜதந்திர முயற்சிகள் தோல்வியடைந்தால் அணுசக்தி மோதல் நடக்கலாம் எனவும் எச்சரித்திருந்தார் சோ சன் ஹுய்.

Presentational grey line

யார் இந்தசோ சன்-ஹுய்?

கடந்த தசாப்தத்தில் அமெரிக்காவுடனான பல்வேறு பரஸ்பர ராஜீய பேச்சுவார்த்தைகளில் சோ சன் ஹுய் ஈடுபட்டுள்ளார். கிம் ஜாங் உன்னின் உயர்மட்ட உதவியாளர்களில் அவரும் ஒருவர். மேலும், அவரது கருத்து கிம் ஜாங் உன்னின் இசைவுடனேயே வெளிவரும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வட கொரியாவுக்கு லிபியா போல முடிவு இருக்கக்கூடும் என பென்ஸ் வட கொரியாவை எச்சரித்த சில நாட்களுக்கு பிறகு சோ சன் ஹுய் கருத்து வெளியாகியுள்ளது.லிபியாவில் 2011-ல் கிளர்ச்சியாளர்களால் அந்நாட்டின் தலைவர் கடாஃபி கொல்லப்பட்டார்.

Presentational grey line

என்ன நடந்தது ?

மே10 - டிரம்ப் சிங்கப்பூரில் ஜூன் 12-ல் கிம்மை சந்திப்பதாக தெரிவித்தார்.

மே 12 - சோதனை தளத்தை தகர்க்கவுள்ளதாக வடகொரியா அறிவித்தது.

மே 16 - அமெரிக்க தேசிய பாதுகாப்புத்துறையின் ஜான் போல்டன் '' லிபிய மாதிரி'' என வடகொரியா குறித்து கருத்து தெரிவித்ததையடுத்து உச்சிமாநாட்டை ரத்து செய்யவுள்ளதாக வட கொரியா அச்சுறுத்தியது.

மே 18 - போல்டனிடம் இருந்து விலகி நின்ற டிரம்ப், ’லிபியா மாதிரி’ அணுசக்தி ஒழிப்புக்கு அமெரிக்கா தள்ளவில்லை எனத் தெரிவித்தார்

மே 22 - ''சில உறுதியான நிபந்தனைகள் வட கொரியா நிறைவேற்றாவிட்டால்'' அமெரிக்கா சந்திப்பில் பங்கேற்காது என டிரம்ப் வலியுறுத்தியிருந்தார்.

Presentational grey line

இந்நிலையில், அமெரிக்கா - வடகொரியா பேச்சுவார்த்தை ரத்தானதையடுத்து, ஜ.நா சபை செயலாளர் அன்டோனியோ கட்டரஸ் தன் கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

இதே போல, தன் ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ள தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன், உயர் பாதுகாப்பு அதிகாரிகளை அவசரப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.

https://www.bbc.com/tamil/global-44240756

  • தொடங்கியவர்

டிரம்ப் - கிம் பேச்சுவார்த்தை ரத்தானது ஏன்? காரணம் யார்?

டிரம்ப் - கிம் பேச்சுவார்த்தை ரத்தானது ஏன்?படத்தின் காப்புரிமைAFP

காரசாரமான வாதப் பிரதிவாதங்களைத் தொடர்ந்து, வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னுடனான உச்சிமாநாட்டை ரத்து செய்வதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் அதிபர் டிரம்ப். இது குறித்து விவரிக்கிறார் ஆய்வாளர் அன்கித் பான்டா.

ஜூன் மாதம் 12ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை நடைபெறாது என்று வியாழனன்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். ''பெருங்கோபம் மற்றும் வெளிப்படையான விரோதத்தை'' வடகொரியா வெளிப்படுத்தியிருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸை "அரசியல் போலி" என வட கொரிய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் சோ சன் ஹுய் கூறியிருந்தார்.

எனினும், இந்த பேச்சுவார்த்தை சீர்குலைவதன் தொடக்கமாக இருந்தது அதிபர் டிரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன். வட கொரியா என்னவெல்லாம் செய்யவேண்டும் என்ற அமெரிக்க எதிர்பார்ப்பை விண்ணளவுக்கு உயர்த்தியவர் அவரே.

டிரம்ப் - கிம் பேச்சுவார்த்தை ரத்தானது ஏன்?படத்தின் காப்புரிமைAFP

சிங்கப்பூரில் நடைபெறவிருந்த மாநாட்டில், வட கொரியா அணுசக்தி ஆயுதங்கள் மட்டுமல்லாது ரசாயன ஆயுதங்களையும் மற்றும் பிற ஆயுதங்களை கைவிட வேண்டும் என்ற ஒப்பந்தத்தை எட்டுவதையே பிரதான நோக்கமாக வைத்திருந்தார் போல்டன்.

ஆனால், வட கொரியாவுடனான ராஜதந்திர நடவடிக்கைகள் வெற்றி பெற வேண்டும் என்று உண்மையிலே போல்டனுக்கு ஆர்வம் இல்லாமல் இருந்திருக்கலாம்.

டிரம்பின் தேசிய பாதுகப்பு ஆலோசகராக நியமிக்கப்படும் முன் பேசிய ஜான் போல்டன், பேச்சுவாத்தைக்கான கிம்மின் அழைப்பை ஏற்ற டிரம்ப், இந்த பேச்சுவார்த்தையால் நேரத்தை வீணடிக்கப் போவதாகவும், நமக்கு தேவையான எந்த முன்னேற்றமும் ஏற்பட போவதில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், வட கொரியாவில் "லிபியா மாதிரியை" பின்பற்ற வேண்டும் என்று ஜான் போல்டன் பரிந்துரை செய்திருந்தார்.

டிரம்ப் - கிம் பேச்சுவார்த்தை ரத்தானது ஏன்?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

கடந்த 2003ஆம் ஆண்டு லிபியா தலைவர் கடாஃபி, தொடக்க நிலையில் இருந்த அணு ஆயுதத் திட்டத்தை கைவிடுவதாக ஒப்புக் கொண்டார். அதனையடுத்து அந்நாட்டின் மீது விதிக்கப்பட்ட தடைகள் நீக்கப்பட்டன. ஆனால், 2011ஆம் ஆண்டு மேற்கத்திய நாடுகளின் ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களால் கடாஃபி கொல்லப்பட்டார்.

இதனால் அஞ்சிய வட கொரியா, தன் சமீபத்திய அறிக்கைகளில் இதனை வெளிப்படுத்தியது.

வட கொரியா லிபியாவை போல முடிந்துவிடக்கூடும் என்று கூறப்பட்டதையடுத்து, வட கொரிய முழுமையான அணு ஆயுத சக்தி கொண்டிருப்பதாகவும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை, மற்றும் தெர்மோ நியூக்ளியர் ஆயுதங்களை தன்னிடம் வைத்துள்ளதாகவும் வட கொரியாவின் சோ சன் ஹுய் கூறியிருந்தார்.

அமெரிக்காவின் உத்தரவுப்படி அணு ஆயுதங்களை கைவிட்டால் தன் முடிவை சந்திக்க நேரிடும் என்று கிம் நினைத்திருக்கலாம்.

டிரம்ப் - கிம் பேச்சுவார்த்தை ரத்தானது ஏன்?படத்தின் காப்புரிமைREUTERS

இதுகுறித்து டிரம்ப் கூறிய கருத்துகளை அச்சுறுத்தலாக பார்த்தது வட கொரியா.

இது மட்டுமில்லாமல், வட கொரியா தனது பேச்சுவார்த்தை நிலைகள் பற்றி தீவிரமாக பேசியதை, கணக்கில் எடுத்துக் கொள்ள அமெரிக்கா தவறிவிட்டது.

டிரம்பின் கடிதத்தின்படி, வட கொரிய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் சோவின் கருத்துகள்தான், இந்த உச்சிமாநாடு ரத்தானதிற்கு காரணம் என்று அவர் தெரிவித்திருந்தார்.

அந்த நிலையில், ஜான் போல்டனின் கருத்துகளுக்கு வட கொரியா அதிருப்தி தெரிவித்திருந்தது.

மேலும், வட கொரியா தனது அணு ஆயுத தளங்களை அகற்ற முடிவெடுத்த சில மணி நேரங்களில் டிரம்பின் இந்த ரத்து அறிவிப்பு வெளியானது சாதகமற்ற சர்வதேச சூழலை உருவாக்குகிறது.

 
 
 

சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் தென் கொரிய அதிபர் ஆகிய இருவர் சந்திப்புகளுக்கு பிறகும், வட கொரியாவின் பேச்சுவார்த்தை நிலை மாறவில்லை.

அதிபர் டிரம்ப் எழுதிய கடிதம், கிம் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு நடவடிக்கை எடுக்கலாம் என்ற திறந்த நிலையில்தான் உள்ளதாக தெரிகிறது. அவர் தன் கடிதத்தில், "என்னை தொலைபேசியில் தொடர்பு கொள்ளவோ அல்லது கடிதம் எழுதவோ தயங்க வேண்டாம்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால், இந்த வாய்ப்பை எடுத்துக் கொள்ள கிம் ஆவலுடன் இருக்க மாட்டார். இந்த உச்சிமாநாட்டில் வட கொரியா பெறுவதற்கு அதிகம் இருந்தாலும், டிரம்பை சந்திக்க வேண்டுமா என்ற யோசனை இருக்கும்.

https://www.bbc.com/tamil/global-44249466

  • தொடங்கியவர்

''வடகொரியாவிடமிருந்து ஆக்கப்பூர்வமான பதில் வந்திருப்பது நல்ல செய்தி'' - டிரம்ப்

டிரம்ப்படத்தின் காப்புரிமைWIN MCNAMEE

வட கொரியா மற்றும் அமெிக்காவுக்கு இடையேயான பேச்சுவார்த்தை தொடர்பாக வடகொரியாவிடமிருந்து ஆக்கப்பூர்வமான பதில் வந்திருப்பது நல்ல செய்தி என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அதிபர் டிரம்ப் ஜூன் 12ஆம் தேதி நடைபெறவிருந்த கொரிய - அமெரிக்க தலைவர்கள் உச்சி மாநாட்டை ரத்துச் செய்ததையடுத்து எந்த நேரத்திலும் டிரம்புடன் பேசத் தயாராக இருப்பதாக முன்னதாக வடகொரியா அறிவித்தது.

''வடகொரியாவிடமிருந்து ஆக்கப்பூர்வமான அறிக்கை வந்திருப்பது நல்ல செய்தி. இது எங்கே முன்னெடுத்துச் செல்லும் என விரைவில் நாம் பார்ப்போம். நீடித்த வளம் மற்றும் அமைதியை அடைய இவை உதவும் என நம்பிக்கையுடன் உள்ளேன்.ஆனால் நேரமும் செயல்திறனும்தான் இதற்கு பதில் சொல்லும்'' என டிரம்ப் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @realDonaldTrump
 

Very good news to receive the warm and productive statement from North Korea. We will soon see where it will lead, hopefully to long and enduring prosperity and peace. Only time (and talent) will tell!

 
 

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @realDonaldTrump

எந்த நேரத்திலும், எந்த நிலையிலும் அமெரிக்க அதிபர் டிரம்புடன் பேசத் தயாராக உள்ளதாக வட கொரியா தெரிவித்துள்ளது.

https://www.bbc.com/tamil/global-44240756

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.