Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

125000 பேர் பாதிப்பு.....உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக உயர்வு

Featured Replies

125000 பேர் பாதிப்பு

city-01GMGPage1Image0007-618459e75ca779b6c924c841b8b2f119027fb464.jpg

 

(எம்.எப்.எம்.பஸீர்)

உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக உயர்வு

 

 நாட­ளா­விய ரீதியில் 19 மாவட்­டங்­களை வெகு­வாக பாதித்­துள்ள அடைமழை, வெள்ளம் உள்­ளிட்ட அனர்த்­தங்கள் கார­ண­மாக இரத்­தி­ன­புரி, கம்­பஹா ஆகிய மாவட் ­டங்கள் பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் 28328 பேரும் கம்­ப­ஹாவில் 42973 பேரும் இவ்­வாறு பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­தது.

 இத­னை­விட நேற்று  காலை 8.30 மணி­யுடன் நிறை­வ­டைந்த 24 மணிநேரத்தில்  அதிக மழை வீழ்ச்சி பதி­வா­கி­யுள்ள புத்­தளம் மாவட்­டத்தில் 24133 பேர் அடை மழை, வெள்ளம் கார­ண­மாக பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். அந்த 24 மணி நேரத்தில்  புத்­த­ளத்தின் - மெள்­ளவ  பகு­திக்கு 122.7 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி கிடைத்­துள்­ள­தாக வளி­மண்­ட­ள­வியல் திணைக்­களம் தெரி­வித்­தது. இதற்கு அடுத்­த­ப­டி­யாக இரத்­தி­ன­புரி மாவட்­டத்தின் நிவித்­தி­க­லைக்கு 92 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி கிடைக்கப் பெற்­றுள்­ள­தாக அந்த நிலையம் மேலும் தெரி­வித்­தது.  

இந் நிலையில் சீரற்ற கால நிலை கார­ண­மாக  32136 குடும்­பங்­களைச் சேர்ந்த 125954 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலை­யத்தின் உதவிப் பணிப்­பாளர் (ஊடகம்) பிரதீப் கொடிப்­பிலி தெரி­வித்தார்.

 இவர்­களில் வெள்ளம், மண் சரிவு அபாயம் கார­ண­மாக 13832குடும்­பங்­களைச் சேர்ந்த 54205 பேரை 251 நலன் புரி நிலை­யங்­களில் தங்­க­வைத்­துள்­ள­தா­கவும் அவர் மேலும் குறிப்­பிட்டார்.

தென் மேல் பருவப் பெயர்ச்சி கால­நிலை கார­ண­மாக நாட்டில் நிலவும் கடும் 

மழை­யுடன் கூடிய கால­நி­லை­யினால் 19 மாவட்­டங்கள் பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்ள நிலையில் அம்­மா­வட்­டங்­களில் மக்­களின்  இயல்பு வாழ்க்கை  பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன் சீரற்ற கால நிலை கார­ண­மாக உயி­ரி­ழந்­தோரின் எண்­ணிக்கை  நேற்று  16 ஆக உயர்ந்­துள்­ளது. 

மழை­யுடன் கூடிய கால நிலை தொடர்­வதால் நில்­வள, கிங், களு, களனி, மகா­வலி ஆகிய கங்­கை­களும், அத்­த­ன­கல்ல ஓயா, மா ஓயா, கட்­டு­பிட்டி ஓயா, ரத்­த­ஒலா ஓயா, கலா ஓயா, தெதுரு ஓயா ஆகி­ய­னவும் தொடர்ந்து எச்­ச­ரிக்­கைக்­கு­ரிய பகு­தி­க­ளாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளன.

அவற்றின் நீர்­மட்டம் தொடர்ந்து உயர்­வ­டைய வாய்ப்­புள்­ளதால் அந்த ஆறு­க­ளுக்கு அருகே வசிக்கும் மக்கள் மிக அவ­தா­ன­மாக இருக்­கு­மாறு கோரப்­பட்­டுள்­ளனர். இத­னை­விட தற்­போது அனர்த்த வல­யங்­களில் இருந்து அறி­வு­றுத்தல் பிர­காரம் வெளி­யே­றி­யுள்­ள­வர்கள் மீள அறி­வித்தல் கிடைக்கும் வரை அப்­ப­கு­தி­க­ளுக்கு திரும்ப வேண்டாம் எனவும், மழை­யுடன் கூடிய கால நிலை தொடர்­வதால் பாது­காப்பை  கருத்­தில்­கொண்டு  இந்த அறி­விப்பை விடுப்­ப­தா­கவும் அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­தது.

முல்­லை­தீவு, கண்டி, நுவ­ரெ­லியா,பதுளை,  கேகாலை, இரத்­தி­ன­புரி, காலி, களுத்­துறை,குரு­ணாகல், புத்­தளம், மொன­ரா­கலை, மாத்­தறை, அம்­பாந்­தோட்டை, 

 வவு­னியா, கம்­பஹா, மாத்­தளை, பொலன்­ன­றுவை, கொழும்பு, யாழ்ப்­பாணம் ஆகிய மாவட்­டங்­களே அடை மழை கார­ண­மாக அனத்­தங்­க­ளுக்கு முகம் கொடுத்­துள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­விக்­கின்­றது.

அதிக பாதிப்பு:

இதில் கம்­பஹா மாவட்­டமும் இரத்­தி­ன­புரி மாவட்­ட­முமே அதிக பாதிப்­புக்­களை சந்­தித்­துள்­ளன. இரத்­தி­ன­பு­ரியின்    எஹ­லி­ய­கொட, குரு­விட்ட, நிவித்­தி­கல, இரத்­தி­ன­புரி, எல­பான, காவத்தை, கல­வானை, கிரி­எல்ல, பெல்­ம­துளை, ஓப­நா­யக்க,  அய­கம, பலாங்­கொடை ஆகிய பிர­தேச செய­லகப் பிரி­வு­க­ளுக்கு உட்­பட்ட 7202 குடும்­பங்­களைச் சேர்ந்த 28328 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். அதில் 179 குடும்­பங்­களைச் சேர்ந்த 621 பேர் நலன் புரி நிலை­யங்­களில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

கம்­பஹா மாவட்டம்:

இரத்­தி­ன­பு­ரியை விட   கம்­பஹா மாவட்டம் அதிக பாதிப்­புக்­களைச் சந்­தித்­துள்­ளது. அம்­மா­வட்­டத்தின் கம்­பஹா, அத்­த­ன­கல்ல, மினு­வங்­கொடை, வத்­தளை, பிய­கம, திவு­ல­பிட்­டிய, மீரி­கம, களனி,  ஜா எல, மஹர மற்றும் கட்­டான ஆகிய பிர­தேச செய­லக பிரி­வு­க­ளுக்கு உட்­பட்ட 10099 குடும்­பங்கள் வெள்ளம், அடை மழையால் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. இக்­கு­டும்­பங்­களில் உள்ள உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை 42973 ஆகும்.

புத்­தளம் மாவட்டம்:

 புத்­தளம் மாவட்­டத்­திலும் அதிக பாதிப்­புக்கள் பதி­வா­கி­யுள்­ளன.. அம்­மா­வட்­டத்தின்  மஹ­வெவ, ஆன­ம­டுவ,  தங்­கொட்­டுவ, முந்தல், ஆராச்­சி­கட்­டுவ, பள்­ளம, கறு­வ­ல­கஸ்­வெவ, நாத்­தாண்­டிய, சிலாபம் உள்­ளிட்ட 14 பிர­தேச செய­லாளர் பிரி­வு­களில் 6640 குடும்­பங்­களைச் சேர்ந்த 24133 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

 

கொழும்பும் ஏனைய மாவட்­டங்­களின் நிலை­மையும் :

 அத்­துடன் கொழும்பு மாவட்­டத்தில் 5 பிர­தேச செய­ல­கங்­க­ளுக்கு உட்­பட்ட 2279 குடும்­பங்­களைச் சேர்ந்த 9347 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்

இத­னை­விட கேகா­லையில் 1367 குடும்­பங்­களைச் சேர்ந்த 5166 பேரும், களுத்­து­றையில் 937 குடும்­பங்­களைச் சேர்ந்த 3375 பேரும், குரு­ணா­கலில் 2150 குடும்­பங்­களைச் சேர்ந்த 7618 பேரும், கண்­டியில் 332 குடும்­பங்­களைச் சேர்ந்த 1471 பேரும் நுவ­ரெ­லி­யாவில் 221 குடும்­பங்­களைச் சேர்ந்த 856 பேரும்  காலியில் 491 குடும்­பங்­களைச் சேர்ந்த 1816 பேரும், பது­ளையில் 126 குடும்­பங்­களிச் சேர்ந்த 526 பேரும்  மாத்­த­றையில் 39 குடும்­பங்­களைச் சேர்ந்த 171 பேரும்,    மொன­ரா­க­லையில் ஒரு குடும்­பத்தின் மூவரும் அநு­ரா­த­பு­ரத்­திலும் ஒரு குடும்­பத்­தி­னரும்  பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக மாவட்ட அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலை­யங்­களில் இருந்து கிடைக்கும் தக­வல்கள் ஊடாக உறுதி செய்ய முடி­கின்­றது.

சேதங்­களும் நட்ட ஈடும்:

அத்­துடன் அனர்த்­தங்கள் கார­ண­மாக 43 வீடுகள் முற்­றா­கவும் 3225 வீடுகள் பகு­தி­ய­ள­விலும் சேத­ம­டைந்­துள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­விக்­கின்­றது. இத­னை­விட 42 சிறிய வர்த்­தக நிலை­யங்­களும் 175 அடிப்­படை கட்­ட­மைப்­புக்­களும் சேத­ம­டைந்­துள்­ளன. 

 இந்த சீரற்ற கால நிலை கார­ண­மாக நேற்று வரை 16 உயி­ரி­ழப்­புக்கள் பதி­வா­கி­யுள்­ளன.  மழை­யுடன்   ஏற்­பட்ட இடி மின்னல் தாக்கம் மற்றும், கடும் காற்றால் மரம் விழுந்­தமை, வெள்­ளத்­தினால் அடித்துச் செல்­லப்­பட்­டமை மற்றும் மண் சரிவு ஆகி­ய­வற்றால் இந்த 16 உயி­ரி­ழப்­புக்­களும் பொலன்­ன­றுவை, மொன­ரா­கலை, புத்­தளம் - ,  காலி, களுத்­துறை, கேகாலை, கொழும்பு, இரத்­தி­ன­புரி , அனு­ரா­த­புரம் மாவட்­டங்­களில் பதி­வா­கி­யுள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் மற்றும் பொலி­ஸாரின் தக­வல்கள் ஊடாக அறிய முடி­கின்­றது.

வான் கத­வுகள் திறப்பு, ஆறுகள்  அபாய நிலையில்

 நாட­ளா­விய ரீதியில் பல நீர்த்­தேக்­கங்­களில் நீர் மட்டம் தொடர்ச்­சி­யாக உயர்­வ­டைந்­தமை அவ­தா­னிக்­கப்­பட்­டுள்ள நிலையில் பல நீர்த்­தேக்­கங்­களின் வான் கத­வுகள் திறக்­கப்­பட்­டுள்­ளன. அடுத்­து­வரும் நாட்­க­ளிலும் மழை எதிர்ப்­பார்க்­கப்­ப­டு­வதால் குறித்த நீர்த்­தேக்­கங்­களின் வான் கத­வுகள் தொடர்ச்­சி­யாக திறக்­கப்­ப­டலாம் என நீர்ப்­பாசத் திணைக்­களம் தெரி­விக்­கின்­றது.   

தெதுரு ஓயாவின் 8 வான் கத­வுகள்  நேற்றும் திறக்­கப்­பட்­டுள்ள நிலையில் உட­வ­லவ நீர்த்­தேக்­கத்தின் ஒரு வான் கதவு திறக்­கப்­பட்­டுள்­ள­தாக நீர்ப்­பா­சன திணைக்­களம் தெரி­விக்­கின்­றது.

 தப்­போவ நீர்த்­தேக்­கத்தின் 4 வான் கத­வுகள் திறக்­கப்­பட்­டுள்­ளன. அத்­துடன் புத்­தளம் மாவட்­டத்தின் பல சிறிய குளங்கள் உடைப்­பெ­டுக்கும் அபா­யத்தை எதிர்­கொண்­டுள்­ளன. 

 களனி கங்­கையை அண்­மித்த  ஹங்­வெல்லை, கொலன்­னாவ, வெல்­லம்­பிட்­டிய , பிய­கம, மல்­வானை, கொழும்பு ஆகிய பகு­திகள் வெள்ள  எச்­ச­ரிக்­கை­யுடன் கூடிய பகு­தி­க­ளாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.  குறிப்­பாக களனி கங்­கையின் பெருக்­கெ­டுப்பால் பிய­கம பகு­தியின் பல வீதிகள் வெள்­ளத்தில் மூழ்­கி­யுள்­ளன. 

மல்­வானை, பிய­கம, பண்­டா­ர­வத்த, மாபிட்­டி­கம உள்­ளிட்ட பகு­திகள் ஊடான போக்கு வரத்து களனி கங்­கையின் பெருக்­கெ­டுப்பால் தடைப்­பட்­டுள்­ளன.  கொலன்­னாவ, வெல்­லம்­பிட்­டிய பகு­தி­க­ளுக்கும் களனி கங்­கையால் வெள்ள அச்­சு­றுத்தல் நிலை  ஏற்­பட்­டுள்­ளது. கொலன்­னாவை பகு­தியில் சில உள் வீதிகள் மற்றும் வீடு­க­ளுக்குள் களனி கங்­கையின் நீர் நேற்று உட்­பு­குந்­தது. 

 இத­னை­விட கிங் கங்கை பெருக்­கெ­டுத்­த­மையால் காலியின் ஹினி­தும,  மஹா போதி­வத்த  பகுதி நேற்றும்  வெள்­ளத்தில் மூழ்­கி­யுள்­ளது.    நில்­வள கங்கை பெருக்­கெ­டுத்­த­தனால் மாத்­த­றையின் பல  தாழ் நில பகு­திகள்  வெள்­ளத்தில் மூழ்­கிய நிலையில், அத்­த­ன­கல்ல ஓயா பெருக்கெடுத்ததில் கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.  மா ஓயா பெருக்கெடுத்ததன் விளைவாக திவுலபிட்டிய பன்னல பகுதிகளின் தாழ் நிலப் பகுதிகள்  வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் நேற்று படிப்படியாக வெள்ளம் வடிந்தோடியது.   

 களு கங்கையின் நீர் மட்டமும் நேற்றும் மீள உயர்வடைய ஆரம்பித்த நிலையில் அதன் கரையோரங்களில் வாழ்வோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு எச்சரிக்கை:

 தொடர்ச்சியாக மழை வீழ்ச்சி பதிவாகிவரும் நிலையில் கண்டி , மாத்தளை, பதுளை, குருணாகல், கொழும்பு, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு மண்சரிவு அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டங்களில் மலைப்பாங்கான பகுதிகள், எச்சரிக்கை வலயங்களில் வசிப்போர் பெரிதும் அவதானத்துடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆய்வு மையம் தெரிவிக்கின்றது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-05-25#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.