Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விஸ்வரூபம் எடுக்கும் ஜனாதிபதி

Featured Replies

விஸ்வரூபம் எடுக்கும் ஜனாதிபதி

 

ரொபட் அன்­டனி

தேசிய அர­சாங்­கத்­தி­லி­ருந்து வில­கு­வ­தற்கு திக­தி­யொன்றை குறித்­துக்­கொள்­ளுங்கள் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அண்­மையில் நடை­பெற்ற சிறி­லங்கா சுதந்­தி­ரக் ­கட்­சியின் மத்­திய குழுக்­ கூட்­டத்­தின்­போது தெரி­வித்­த­தாக சுதந்­தி­ரக்­ கட்­சியின் மாற்று அணி­யினர் குறிப்­பிட்­டி­ருந்­தனர்.

எனினும் சுதந்­தி­ரக்­ கட்சி சார்­பாக தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் 23 பேர் கொண்ட அணி­யினர் ஜனா­தி­பதி அவ்­வாறு கூற­வில்­லை­யென தெரி­வித்­தி­ருந்­தனர்.இந்த விட­யத்தில் சுதந்­தி­ரக்­ கட்சியின் இரண்டு தரப்­பி­ன­ருக்கும் மத்­தியில் கடும் போட்­டியும் முரண்­பா­களும் நில­வின. இதனால் ஜனா­தி­பதி அவ்­வாறு கூறி­யி­ருப்­பாரா.. இல்லையா என்­பது தொடர்பில் மக்­க­ளுக்கு பாரிய குழப்பம் இருந்­தது.

எனினும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கடந்த புதன்­கி­ழமை தெரி­வித்த கருத்­துக்­களைப் பார்க்கும் போது சுதந்­தி­ரக்­கட்­சியின் மத்­தி­ய கு­ழுக்­ கூட்­டத்தில் அவர் அவ்­வாறு கூறி­யி­ருப்பார் என்று ஊகித்­துக்­கொள்ள முடி­கின்­றது. கடந்த புதன்­கி­ழமை கொழும்பில் நடை­பெற்ற மாது­லு­வாவே சோபித்த தேரரின் இரண்­டா­வது நினை­வு­தின வைப­வத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­றிய ஜனா­தி­பதி விஸ்­வ­ரூபம் எடுத்தார் என்றே கூற­வேண்டும். அந்­த­ள­விற்கு விமர்­ச­னத்தை முன்­வைத்த ஜனா­தி­பதி தேசிய அர­சாங்­கத்தின் மீதும் ஐக்­கிய தேசி­யக் ­கட்சி மீதும் பாரிய அதி­ருப்­தியை கொண்­டி­ருப்­பதை வெளிப்­ப­டுத்­தினார்.

குறிப்­பாக 1967 ஆம் ஆண்டு தனது அர­சியல் வாழ்க்கை தொடங்­கி­ய­தா­கவும் 2014ஆம் ஆண்டு வரை அது ஏறு­மு­கத்தில் காணப்­பட்­ட­தா­கவும், 2014ஆம் ஆண்டின் பின்னர் கடந்த மூன்று வரு­ட­கா­லத்தில் தனது அர­சி­யல் ­வாழ்க்கை இறங்­கு­மு­கத்தில் செல்­வ­துடன் சின்­னா­பின்­ன­மாகும் நிலைமை ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் ஜனா­தி­பதி குறிப்­பிட்­டி­ருக்­கின்றார்.

அது­மட்­டு­மின்றி குறித்த மாது­லு­வாவே சோபித தேரரின் நினை­வு­தின வைப­வத்­திற்கு கூட தனக்கு அழைப்பு விடுக்­க­வில்லை என்றும் இது­போன்ற பல்­வேறு விட­யங்கள் அர­சாங்­கத்­திற்குள் இடம்­பெ­று­வ­தா­கவும் ஜனா­தி­பதி கவலை வெளி­யிட்­டி­ருந்தார்.அதே­போன்று 2015ஆம் ஆண்டு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வெற்­றி­பெற்­றதும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட 100 நாள் வேலைத்­திட்டம் முட்­டாள்­த­ன­மா­னது என்றும் அதனை உரு­வாக்­கி­யது யார் என்று தனக்கு தெரி­யாது என்றும் ஜனா­தி­பதி கடுந்­தொ­னியில் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

2015ஆம் ஆண்டு தான் ஜனா­தி­பதி தேர்­தலில் வெற்­றி­பெற்­றதும் தோல்­வி­ய­டைந்த முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தங்­காலை செல்­வ­தற்கு ஹெலி­கொப்டர் வழங்­கி­யது யார் என்று தனக்கு தெரி­யாது என்றும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கூறி­யி­ருக்­கின்றார். கடந்த மூன்­றரை வரு­ட­கா­ல­மாக தான் எண்­ணும்­வ­கையில் எதுவும் செய்ய முடி­யாமல் போன­தா­கவும், சுதந்­தி­ரக்­கட்சி தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் வகிப்­பதால் எத­னையும் செய்ய முடி­யாமல் இருப்­ப­தாக குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­ப­டு­வ­தா­கவும் ஜனா­தி­பதி கூறி­யி­ருந்தார்.

ஆனால் சுதந்­தி­ரக்­கட்சி தேசிய அர­சாங்­கத்­திற்குள் அங்கம் வகித்தன் கார­ண­மா­கவே நாட்­டுக்கு பாத­க­மான பல்­வேறு விட­யங்­களை தடுக்க முடிந்­த­தா­கவும் சுட்­டிக்­காட்­டி­யுள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மத்­திய வங்­கியை சூறை­யா­டு­வ­தற்கு மக்கள் ஆணை­ வ­ழங்­க­வில்லை என்றும் கூறி­யுள்ளார்.

2015 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் மஹிந்த ராஜ­பக் ஷ தேர்­தலில் தோல்­வி­யுற்­றதும் இரண்டு புதிய வாக­னங்­களை வைத்­து­விட்டு ஏனைய அனைத்து புதிய வாக­னங்­க­ளையும் எடுத்துச் சென்­று­விட்டார். அந்த இரண்டு புதிய வாக­னங்­க­ளையும் பிர­தமர் அலு­வ­லக அதி­கா­ரிகள் எடுத்துச் சென்­று­விட்­டனர்.

சுமார் இரண்டு வரு­ட­கா­ல­மாக பழைய வாக­னங்­க­ளையே பயன்­ப­டுத்­தினேன் என்றும் ஜனா­தி­பதி தனது ஆதங்­கத்தை வெளிப்­ப­டுத்­தி­யுள்ளார். இவ்­வாறு மிகவும் கடு­மை­யான தொனி­யிலும் அதி­ருப்­தி­யு­டனும் ஜனா­தி­பதி அர­சாங்­கத்தின் மீதும் ஐக்­கிய தேசி­யக்­ கட்­சியின் மீதும் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­தி­ருக்­கிறார் என்று கூறலாம்.

அதா­வது 2015ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் வெற்­றி­பெற்ற மைத்­தி­ரி­பால சிறி­சேன தனக்கு கிடைத்த ஐந்து வரு­ட­கா­லத்தில் பத­வியில் இருந்து விட்டு சென்­று­வி­டலாம் என்று எண் ­ணா மல் தன் னால் பல்­வேறு விட­யங்­களை செய்­ய­மு­டி­ய­வில்லை என்ற ஆதங்­கத்தை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்றார்.

அத்­துடன் 2015ஆம் ஆண்டு நாய்க்­குட்­டியை கள­மி­றக்­கி­யி­ருந்­தாலும் வெற்­றி­பெற்­றி­ருக்­கலாம் என பலர் கூறு­வ­தா­கவும் அப்­ப­டி­யாயின் அவ்­வாறு ஏன் ஒரு நாய்க்­குட்­டியை கள­மி­றக்­க­வில்லை என்ற கேள்வி எழுப்­பி­யுள்ள ஜனா­தி­பதி, அந்த தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு சரி­யா­ன­வேட்­பா­ளர் இல்­லாததன் கார­ண­மா­கவே தன்னை தெரி­வு­செய்­த­தா­கவும் கூறி­யி­ருக்­கின்றார்.

அந்த வகையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் கருத்­துக்­களைப் பார்க்­கும்­போது தேசிய அர­சாங்­கத்தில் இரண்டு கட்­சி­க­ளுக்கும் இடையில் பாரிய முரண்­பா­டு­களும் நெருக்­க­டி­களும் நில­வு­கின்­றமை உறு­தி­யா­கின்­றது.

குறிப்­பாக இரண்டு கட்­சி­க­ளுக்­கு­மி­டையில் தேசிய அர­சாங்­கத்தில் நெருக்­க­டிகள் இருக்­கின்­றமை அனை­வ­ருக்கும் தெரிந்­தாலும் கூட இந்­த­ள­வு­தூரம் விஸ்­வ­ரூபம் எடுத்­தி­ருக்கும் என யாரும் எதிர்­பார்க்­க­வில்லை. எனவே எந்­த­வொரு கட்­டத்­திலும் சிறி­லங்கா சுதந்­தி­ரக் ­கட்சி தேசிய அர­சாங்­கத்­தி­லி­ருந்து வெளியே றலாம் என்ற எதிர்­பார்ப்பு தற்­போது மேலோங்­கி­யி­ருக்­கி­றது.

அதா­வது ஜனா­தி­பதி சுதந்­தி­ரக்­ கட்­சியின் மத்­தி­ய­கு­ழுக்­ கூட்­டத்தில் அரசில் இருந்து வெளி­யேற தயா­ராக இருங்கள் என்று தெரி­வித்­தி­ருந்­த­தாக கூறப்­படும் தக­வ­லுடன் அவரின் புதன்­கி­ழமை உரை­யையும் ஒப்­பிட்டுப் பார்க்­கும்­போது சுதந்­தி­ரக்­கட்சி விரைவில் தேசிய அர­சாங்­கத்­தி­லி­ருந்து விலகும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. அந்­த­ள­விற்கு இரண்டு கட்­சி­க­ளுக்­கு­மி­டையில் நெருக்­க­டிகள் தொடர்­கின்­றமை வெளிப்­பட்­டி­ருக்­கின்­றது.

இதே­வேளை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் கூற்­றுக்கு பதி­ல­ளித்­துள்ள ஐக்­கிய தேசி­யக்­ கட்­சியின் தவிசாளர் அனை­வ­ரு­டையதும் இணக்­கப்­பாட்­டுக்கு மத்­தி­யி­லேயே நூறுநாள் வேலைத்­திட்­டத்தை கொண்­டு­வந்­த­தா­கவும், அதற்­கான பொறுப்பை ஐக்­கி­ய­தே­சி­யக் ­கட்சி ஏற்­றுக்­கொள்­வ­தா­கவும் தெரி­வித்­தி­ருக்­கின்றார். இதனை தற்­போது விமர்­சிப்­பது முறை­யல்ல என்று குறிப்­பிட்­டி­ருக்­கின்றார்.

ஜனா­தி­ப­தியின் கூற்று தொடர்பில் ஐக்­கி­ய­ தே­சி­யக்­ கட்­சியின் உறுப்­பி­னர்கள் கடும் அதி­ருப்­தி­யுடன் இருக்­கின்ற போதிலும் அவ­ரு­டைய கூற்­றுக்கு எதி­ராக எந்­தக் ­க­ருத்­தையும் வெளி­யிட வேண்டாம் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஐக்­கிய தேசி­யக் ­கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்கு அறி­வு­றுத்­தி­யி­ருக்­கின்றார். அண்­மைக்­கா­லத்தில் ஐக்­கிய தேசி­யக் ­கட்சி பின்­வ­ரிசை உறுப்­பி­னர்கள் ஜனா­தி­ப­தியை கடு­மை­யாக விமர்­சிக்க ஆரம்­பித்­தி­ருந்­தனர்.

குறிப்­பாக நடந்து முடிந்த உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலின் பின்னர் இந்த நிலைமை வலு­வ­டைந்­தது. நிலைமை எல்­லை­மீறி செல்­வதை உணர்ந்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஐக்­கிய தேசி­யக்­ கட்­சியின் பின்­வ­ரிசை உறுப்­பி­னர்­க­ளிடம் ஜனா­தி­ப­தியை விமர்­சிக்­க­வேண்டாம் என கேட்­டுக்­கொண்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. எப்­ப­டி­யி­ருப்­பினும் அதன் பின்னர் ஐ.தே.க.வின் பின்­வ­ரிசை உறுப்­பி­னர்கள் பெரி­தாக ஜனா­தி­ப­தியை விமர்­சித்­தி­ருக்­க­வில்லை.

அதே­போன்று சுதந்­தி­ரக்­ கட்­சியின் மாற்று அணி­யினர் ஜனா­தி­ப­தியின் இந்த விமர்­சனம் கலந்த அறி­விப்பை வர­வேற்­றுள்­ளனர். இது ஐக்­கிய தேசி­யக் ­கட்சி ஜனா­தி­ப­திக்கு செய்யும் கெடு­தல்­க­ளுக்கு எதி­ரான ஒப்­புதல் வாக்­கு­மூலம் என சுதந்­தி­ரக்­கட்சி மாற்று அணியின் முக்­கி­யஸ்தர் டிலான் பெரேரா குறிப்­பிட்­டி­ருக்­கின்றார்.

ஜனா­தி­பதி இவ்­வாறு உண்­மையை வெளிப்­ப­டுத்­தி­ய­மையை பாராட்­டு­கின்றோம். எனவே அவர் உட­ன­டி­யாக சுதந்­தி­ரக்­ கட்­சியை தேசிய அர­சாங்­கத்­தி­லி­ருந்து வெளி­யேற்­ற­ வேண்டும். நாளை ஞாயிற்­றுக்­கி­ழமை நடை­பெ­ற­வுள்ள சுதந்­தி­ரக்­கட்­சியின் மத்­தி­ய ­கு­ழுக்­ கூட்­டத்தில் சுதந்­தி­ரக் ­கட்சி அர­சி­லி­ருந்து வெளி­யே­று­வ­தற்­கான முடிவு எடுக்­கப்­படும் என நாம் நம்­பு­கின்றோம். அன்­றைய தினம் எவரும் எதிர்­பார்க்­காத திருப்­பங்கள் இடம்­பெறும் சாத்­தியம் உள்­ளன. ஜனா­தி­ப­தியின் பொறு­மைக்கும் ஒரு எல்லை இருக்­கி­றது என்று டிலான் பெரேரா குறிப்­பிட்­டி­ருந்தார்.

அந்­த­வ­கையில் பார்க்­கும்­போது சுதந்­தி­ரக்­கட்­சிக்கும் ஐக்­கிய தேசி­யக்­ கட்­சிக்­கு­மி­டை­யி­லான நெருக்­க­டிகள் வலு­வ­டைந்து செல்­கின்ற நிலையில் வெகு­வி­ரைவில் பாரிய திருப்பம் ஒன்று ஏற்­ப­டலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. பெரும்­பாலும் சுதந்­தி­ரக் ­கட்­சி தேசிய அர­சாங்­கத்­தி­லி­ருந்து விலகும் என்றே எதிர்­வு­கூ­றப்­ப­டு­கின்­றது.

2015ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதத்தில் ஐக்­கிய தேசி­யக் ­கட்­சியும் சுதந்­தி­ரக் ­கட்­சியும் இணைந்து தேசிய அர­சாங்­கத்தை அமைத்­த­தி­லி­ருந்து இரண்டு கட்­சி­க­ளுக்­கு­மி­டையில் நெருக்­க­டிகள் நிலவி வந்­தன. ஆனால் பெப்­ர­வரி 10 ஆம் திக­திக்கு பின்­னரே நெருக்­க­டிகள் தீவி­ர­ம­டைய ஆரம்­பித்­தன. ஜனா­தி­ப­தியின் அதி­ருப்தி கலந்த அறி­விப்­பா­னது தேசிய அர­சாங்­கத்தின் நெருக்­க­டி­ நி­லையை மிகவும் தெளி­வான முறையில் கோடிட்­டுக்­காட்­டு­கின்­றது.

எனவே எதிர்­வரும் 20 மாத­கா­லத்­திற்கு தேசிய அர­சாங்கம் நீடிக்­குமா என்­பது கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ளது. இந்தச் சூழலில் மஹிந்த தரப்­பினர் மகிழ்ச்­சியில் இருப்­ப­தா­கவே தெரி­கி­றது. தேசிய அர­சாங்­கத்தில் நெருக்­க­டிகள் நீடிப்­பதும் ஜனா­தி­ப­தியின் ஊடா­கவே இந்த விட­யங்கள் வெளி­வ­ரு­வதும் மஹிந்த தரப்­பி­ன­ருக்கும் மகிழ்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்கும். தற்­போது கூட ஜனா­தி­ப­தியின் உரையை அடுத்து கருத்து வெளி­யிட்­டுள்ள முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ ஜனா­தி­ப­தியின் கூற்றைப் பார்க்­கும்­போது நாட்டில் அர­சாங்­க­மொன்று இல்­லை­யென்றே தோன்­று­கி­றது எனக் குறிப்­பிட்­டி­ருக்­கின்றார்.

இந்­நி­லையில் எதிர்­வரும் ஒன்­றரை வரு­ட­கா­ல­மா­னது அர­சி­யலில் பர­ப­ரப்­பா­கவே இருக்கும் என தோன்­று­கின்­றது. ஒரு­புறம் அடுத்த ஜனா­தி­பதி வேட்­பாளர் யார் என்­பதை தெரி­வு­செய்­வதில் அனைத்து அர­சியல் கட்­சி­களும் தீவிரம் காட்டத் தொடங்­கி­விட்­டன. மஹிந்த தரப்பில் கோத்­த­பாய ராஜ­பக் ஷவும், ஐ.தே.க. தரப்பில் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் ஜனா­தி­பதி வேட்­பா­ளர்கள் என்ற தோர­ணையில் நடந்­து­கொள்­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. எனவே 2020ஆம் ஆண்டு நடக்­க­வி­ருக்­கின்ற ஜனா­தி­பதி தேர்தல் தொடர்­பாக தற்­போதே அர­சியல் நகர்­வுகள் இடம்­பெற ஆரம்­பித்­து­விட்­டன.

இதற்­கி­டையில் தேசிய அர­சாங்­கமும் உடைந்­து­வி­டு­வ­தற்­கான சமிக்­ஞைகள் தெரிய ஆரம்­பித்­து­விட்­டன. எந்த நேரத்­திலும் சுதந்­தி­ரக்­கட்சி தேசிய அர­சாங்­கத்­தி­லி­ருந்து வெளி­யே­றலாம் என்ற நிலைமை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. இந்த அனைத்து விட­யங்­க­ளுக்கும் மத்­தியில் ஏமாற்­றப்­பட்ட ஒரு தரப்­பினர் இருக்­கின்­றனர்.

இந்த நாட்டின் சிறு­பான்மை மக்கள் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் மூலம் தமக்கு ஒரு நியா­ய­மான அர­சியல் தீர்வு கிடைக்கும் என நம்­பி­யி­ருந்­தனர். அதே­போன்று யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்கள் தமக்கு இடம்­பெற்ற அநீ­தி­க­ளுக்கு எதி­ராக நீதி­நி­லை­நாட்­டப்­படும் என நம்­பிக்­கொண்­டி­ருக்­கின்­றனர். ஆனால் இவை எது­வுமே நடை­பெ­றாதோ என்ற சந்­தே­கமே தற்­போது மக்கள் மத்­தியில் ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.

ஐக்­கிய தேசி­யக் ­கட்­சியும் சுதந்­தி­ரக்­கட்­சியும் தற்­போது தமது கட்­சி­களின் செயற்­பா­டு­களில் ஆர்வம் காட்டி வரு­கின்­ற­னவே தவிர தமிழ் பேசும் மக்­களின் பிரச்­சி­னை­களைத் தீர்த்து வைப்­பதில் அக்­கறை கொள்­வ­தாக தெரியவில்லை. எப்படியிருப்பினும் தற்போது தென்னிலங்கை அரசியலில் நெருக்கடிகள் அதிகரித்திருப்பதானது எதிர்வரும் 20 மாதங்கள் தொடர்பான பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கின்றன.

அதாவது 2020 ஆம் ஆண்டுவரை தேசிய அரசாங்கம் நீடிக்குமா? புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படுமா? அரசியல் தீர்வு எட்டப்படுமா? பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்படுமா? அரசியல் கைதிகள் பிரச்சினைக்கு தீர்வு கிட்டுமா? காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்ற விடயங்கள் கண்டுபிடிக்கப்படுமா போன்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

அவற்றுக்கு தற்போது பதில் இல்லாத நிலைமையே நீடிக்கிறது. ஜனாதிபதியின் புதன்கிழமை அறிவிப்பானது தேசிய அரசாங்கத்தின் எதிர்காலம் தொடர்பில் பல்வேறு விடயங்களை கோடிட்டுக்காட்டுகிறது. அதாவது தேசிய அரசாங்கம் தொடர்ந்து நீடிக்காது என்பதற்கான சமிக்ஞை ஜனாதிபதியின் உரை மூலம் வெளிப்பட்டிருக்கின்றது. இதனை சுதந்திரக்கட்சியின் மாற்று அணியினரும் உறுதிப்படுத்தியுள்ளனர். எனவே அடுத்து வரும் வாரங்கள், மாதங்கள் என்பன நாட்டின் தேசிய அரசியலில் பரப்பரப்பாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள சுதந்திரக்கட்சியின் தீர்க்கமான மத்திய குழுக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதன் பின்னர் சுதந்திரக்கட்சி தேசிய அரசாங்கத்திலிருந்து விலகும் முடிவைக் கூட எடுக்கும் சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

எப்படியிருப்பினும் அடுத்துவரும் காலப்பகுதி தேசிய அரசியலில் பரபரப்பாக இருக்கப்போகின்றது என்பதே உண்மையாகும். 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-06-02#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.