Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை-வெஸ்ட்இண்டீஸ் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்

Featured Replies

இலங்கை-வெஸ்ட்இண்டீஸ் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்

 
அ-அ+

இலங்கை-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று தொடங்குகிறது. #westindies #srilanka #test

 
 
 
 
இலங்கை-வெஸ்ட்இண்டீஸ் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்
 
போர்ட் ஆப் ஸ்பெயின்:

தினேஷ் சன்டிமால் தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி, வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாடுகிறது. இலங்கை-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. ஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் அணி இந்த ஆண்டில் ஆடும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும். இலங்கை அணி இதுவரை வெஸ்ட்இண்டீஸ் மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை. அந்த குறையை போக்க இலங்கை அணி முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ் டெலிவிஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. #westindies #srilanka #test

https://www.maalaimalar.com/News/Sports/2018/06/06093820/1168145/West-Indies-vs-Sri-Lanka-1st-Test-match-starts-today.vpf

  • தொடங்கியவர்

பத்து வருடங்களின் பின்னர் மேற்கிந்திய தீவுகளில் டெஸ்ட் தொடரில் விளையாடும் இலங்கை

SLvWI-Preview-696x464.jpg
 

பத்து வருடங்களுக்கு முன்னர் நீங்கள் நாள் தோறும் வெளிவருகின்ற செய்தி நாளிதழ்களை வாசித்துக் கொண்டிருப்பதாக கற்பனை செய்யுங்கள். அப்போது நீங்கள் விளையாட்டுச் செய்திகளை பார்த்திருப்பீர்களேயானால் “சங்கக்காரவுக்கு மற்றுமொரு சதம்“, ”உலக சாதனையை நெருங்கும் முரளிதரன்“ போன்ற தலைப்புகளில் அமைந்த  இலங்கை கிரிக்கெட் அணியினை சார்ந்த நல்ல செய்திகளையே பார்க்க கூடியதாக இருந்திருக்கும்.

 

 

ஆனால், அனுபவ வீரர்களின் ஓய்வுகளுக்குப் பின்னர் இலங்கை அணியின் நிலையே இன்று தலைகீழாக மாறியிருக்கின்றது. கத்துக்குட்டி நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வே அணியுடன் கடந்த ஆண்டு சொந்த மண்ணில் வைத்து முதல் தடவையாக ஒரு நாள் தொடரினை பறிகொடுத்த இலங்கை அணி, பங்களாதேஷ் அணியினாலும் வரலாற்றில் முதல்தடவையாக டெஸ்ட் போட்டியொன்றில் தோற்கடிக்கப்பட்டிருந்தது. அதோடு, கடந்த ஆண்டில் மோசமான பதிவுகளை காட்டிய கிரிக்கெட் ஜாம்பவானாகவும் இலங்கை மாறியிருந்தது.

எனினும், புதிய பயிற்சியாளரான சந்திக்க ஹதுருசிங்கவின் ஆளுகையில் கீழ் இலங்கை அணி மெல்ல மெல்ல தனது வழமையான ஆட்டத்திற்கு திரும்புவதை நாம் அண்மைய நாட்களில் பார்க்க முடியுமாக இருக்கின்றது.  இப்படியாக புதிய அத்தியாயம் ஒன்றினை மீண்டும் எதிர்பார்த்திருக்கும் இலங்கை அணிக்கு அடுத்த சவாலாக மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் தொடர் அமைகின்றது.

பத்து ஆண்டுகளுக்கு பின்னர் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை அணி ஒரு பகலிரவு டெஸ்ட் உட்பட மொத்தமாக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றது. இந்த டெஸ்ட் தொடரின் முன்னோட்டத்தினை நாம் இங்கு நோக்குவோம்.

இலங்கை – மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் போட்டிகள் வரலாறு

இலங்கை கிரிக்கெட் அணி டெஸ்ட் அந்தஸ்தினைப் பெற்றுக் கொண்டு ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர் அதாவது 1993 ஆம் ஆண்டில் மேற்கிந்திய தீவுகளுடன் முதல் டெஸ்ட் போட்டியில் மோதியிருந்தது. மொரட்டுவையில் நடைபெற்ற குறித்த போட்டியில் இலங்கை அணியினை அர்ஜுன ரணதுங்கவும், மேற்கிந்திய தீவுகளை ரிச்சி ரிச்சர்ட்சனும் வழிநடாத்தியிருந்தனர். மிகவும் எதிர்பார்ப்புக்களோடு நடைபெற்று முடிந்த இந்த டெஸ்ட் போட்டி சமநிலை அடைந்திருந்தது.

 

குறித்த போட்டியோடு சேர்த்து இரண்டு அணிகளும் இதுவரையில் மொத்தமாக 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருப்பதுடன், அதில் இலங்கை அணி 8 வெற்றிகளினையும் மேற்கிந்திய தீவுகள் அணி 3 வெற்றிகளினையும் பதிவு செய்திருக்கின்றது. ஆறு போட்டிகள் சமநிலை அடைந்திருக்கின்றன.

மேற்கிந்திய தீவுகளுக்கு இறுதியாக 2008 ஆம் ஆண்டு டெஸ்ட் தொடரொன்றில்  விளையாடுவதற்காக சென்றிருந்த இலங்கை அணி, இரண்டு போட்டிகள் கொண்ட குறித்த தொடரினை 1-1 என சமநிலைப்படுத்தியிருந்தது.  இதேவேளை 2015 ஆம் ஆண்டு, கடைசியாக இலங்கை மண்ணில் வைத்து இரண்டு அணிகளும் டெஸ்ட் தொடரொன்றில் மோதியிருந்தன. இந்த டெஸ்ட் தொடரினை 2-0 என இலங்கை அணி கைப்பற்றியிருந்தது.

இலங்கை அணி

மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணியே ஆதிக்கம் காட்டியிருப்பதாக கடந்த கால வரலாறுகள் கூறியிருக்கின்றன. எனினும், மேற்கிந்திய தீவுகளில் வைத்து எந்த டெஸ்ட் தொடரும் இலங்கை அணியினால் இதுவரையில் வெற்றி கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இலங்கை அணிக்கு இந்த தொடர் பெரும் சவால்களில் ஒன்று என்பதில் சந்தேகம் ஏதுமில்லை.

இலங்கை அணி அண்மைய நாட்களில் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் மோசமாக செயற்பட்டிருந்தாலும், கிரிக்கெட் விளையாட்டின் நீண்ட வடிவமான டெஸ்ட் போட்டிகளில் குறிப்பிடும் படியான நல்ல பதிவுகளையே காட்டியிருக்கின்றது. இதற்கு இலங்கையின் அண்மைய டெஸ்ட் சுற்றுப்பயணங்களான பாகிஸ்தான், இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுடனான தொடர்களை சான்றுகளாக குறிப்பிட முடியும். ஐ.சி.சி. இன் டெஸ்ட் தரவரிசையில் ஆறாவது இடத்தில் இருக்கும் இலங்கைக்கு சாதனைகள் புரிய ஒரு வாய்ப்பினை இத்தொடர் வழங்கியிருக்கின்றது.

 

 

இத் தொடரில் விளையாடும் இலங்கை குழாத்தினை எடுத்துப் பார்க்கும் போது, ரங்கன ஹேரத்தை தவிர யாரும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கவில்லை. எனவே, புதிய சவாலாக அமையும் இந்த சுற்றுப் பயணத்தில் இலங்கை அணியின் துடுப்பாட்டத்தினை பலப்படுத்தக்கூடிய முக்கிய வீரராக அணித்தலைவர் தினேஷ் சந்திமாலை குறிப்பிட முடியும்.

டெஸ்ட் போட்டிகளில் கடந்த ஆண்டில் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஓட்டங்களினை (1003) குவித்த அவர் இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னர் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற பயிற்சிப் போட்டியிலும் சதம் ஒன்றினை விளாசியிருந்தார்.

Chandimal-10-300x200.jpg தினேஷ் சந்திமால்

சந்திமால் போன்று இலங்கை அணிக்காக கடந்த ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் ஆயிரத்திற்கும் மேலான ஓட்டங்களினை (1031) குவித்த ஆரம்ப துடுப்பாட்ட வீரரான திமுத் கருணாரத்னவுக்கு காயம் காரணமாக இத் தொடரில் விளையாட முடியாத நிலை உருவாகியிருக்கின்றது. இது ஒரு பாரிய இழப்பாகும். திமுத் கருணாரத்னவினை இலங்கையில் நடைபெற்ற உள்ளூர் முதல்தர தொடரில்  திறமையினை வெளிப்படுத்திய மஹேல உடவத்த பிரதியீடு செய்யப்பட்டிருக்கின்றார்.

சந்திமால் தவிர இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் ஜொலிக்க கூடியவர்களாக தனஞ்சய டி சில்வா, ரொஷேன் சில்வா போன்றோரினை குறிப்பிட முடியும். தனது தந்தையின் மரணத்தினால் இலங்கை அணியுடன் மேற்கிந்திய தீவுகளுக்கு பயணமாகாத தனஞ்சய, தற்போது இலங்கை அணியுடன் இணைந்திருக்கின்றார். அண்மையில் நடைபெற்று முடிந்த இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுடனான டெஸ்ட் தொடர்களில் சதம் விளாசிய தனஞ்சயவிடம் இருந்து இம்முறையும் சிறப்பான ஆட்டத்தினை இலங்கை எதிர்பார்க்கின்றது.

Dhananjaya-3-300x200.jpg தனஞ்சய டி சில்வா

தனஞ்சய டி சில்வா போன்று ரொஷேன் சில்வாவும் இலங்கை அணிக்கு நம்பிக்கை தரக்கூடிய வீரராக இருக்கின்றார். டெஸ்ட் போட்டிகளில் ஐந்து இன்னிங்சுகளில் மாத்திரமே ஆடியிருக்கும் ரோஷேன் அதில் ஒரு சதம் உட்பட, மூன்று அரைச்சதங்களை விளாசியிருக்கின்றார். அதோடு அண்மையில் நடைபெற்று முடிந்த “சுபர் – 4”  மாகாண தொடரில் ரொஷேன் 178.33 என்கிற துடுப்பாட்ட சராசரியோடு 535 ஓட்டங்களினைக் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Roshen-Silva-6-300x200.jpg ரொஷேன் சில்வா

மறுமுனையில் அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் குசல் பெரேரா ஆகியோரும் இலங்கையின் டெஸ்ட் அணிக்கு மீண்டும் திரும்பியிருக்கின்றனர். இதில், அதிக அனுபவம் கொண்டவரான மெதிவ்ஸ் தனது காயத்தில் இருந்து குணமாகியதன் பின்னர் நான்கு மாதங்களுக்குப்பிறகு இலங்கை அணிக்கு விளையாடவுள்ளார். மெதிவ்ஸிற்கு டெஸ்ட் போட்டிகளில் 5,000 ஓட்டங்களினை பூர்த்தி செய்ய இன்னும் 86 ஓட்டங்களே தேவையாக இருக்கின்றது.

Mathews-8-300x200.jpg அஞ்செலோ மெதிவ்ஸ்

அதோடு, மேற்கிந்திய தீவுகளில் கடந்த வெள்ளிக்கிழமை (01) இடம்பெற்று முடிந்த பயிற்சிப் போட்டியிலும் மெதிவ்ஸ் சிறப்பான ஆட்டத்தினைக் காட்டியிருந்தார். தனது அனுபவம் கலந்த திறமையினை மெதிவ்ஸ் இத்தொடரில் வெளிப்படுத்துவார் எனில், இலங்கை அணிக்கு அது மிகப் பெரிய பலமாக அமையும்.

kusal-2-300x200.jpg குசல் பெரேரா

இதேவேளை, அண்மைய காலங்களில் திறமையினை நிரூபித்துவரும் குசல் பெரேராவும் ஒன்றரை வருடங்களுக்குப் பின்னர் இந்த தொடர் மூலம் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் சந்தர்ப்பத்தினைப் பெற்றிருக்கின்றார். குசல் பெரேரா மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற பயிற்சிப் போட்டியின் இரண்டு இன்னிங்சுகளிலும் அரைச்சதம் பெற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இளம் வீரர்களான நிரோஷன் திக்வெல்ல மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோரினால் இலங்கையின் துடுப்பாட்டத்துறை இன்னும் பலப்படுத்தப்படுகின்றது.

 

இலங்கை அணியின் பந்துவீச்சினை எடுத்துப்பார்க்கும் போது, மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் அனுபவம் கொண்ட சுரங்க லக்மால் மற்றும் ரங்கன ஹேரத் போன்றோருக்கு வேலைப்பளுவை குறைக்கும் நோக்கில் இரண்டு போட்டிகளில் மாத்திரமே விளையாட சந்தர்ப்பம் வழங்க தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.  இதனால், இரண்டு மேலதிக வேகப்பந்துவீச்சாளர்கள் இத்தொடருக்காக வேண்டி அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர்.

Rangana-1-300x200.jpg ரங்கன ஹேரத்

இதில் இலங்கை அணியின் சுழல் துறையினை ரங்கன ஹேரத்தோடு சேர்ந்து அகில தனஞ்சய, ஜெப்ரி வன்டர்செய் மற்றும் தில்ருவான் பெரேரா ஆகியோர் முன்னெடுப்பர். மறுமுனையில், வேகப்பந்துவீச்சுத் துறையின் முன்னோடியாக சுரங்க லக்மால் இருக்க அவருக்கு லஹிரு கமகே, லஹிரு குமார மற்றும் அசித்த பெர்னாந்து மற்றும் கசுன் ராஜித ஆகியோர் பங்களிப்பு வழங்குவர். இதில், அறிமுக வீரர்களாக இருக்கும் அசித்த பெர்னாந்து மற்றும் கசுன் ராஜித ஆகியோர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பான பதிவுகளை காட்டியமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை குழாம்

தினேஷ் சந்திமால் (அணித் தலைவர்), சுரங்க லக்மால் அஞ்செலோ மெதிவ்ஸ், குசல் மெண்டிஸ், குசல் ஜனித் பெரேரா, தனஞ்சய டி சில்வா, மஹேல உடவத்த, ரொஷேன் சில்வா, நிரோஷன் திக்வெல்ல, ரங்கன ஹேரத், தில்ருவான் பெரேரா, அகில தனஞ்சய, ஜெப்ரி வன்டர்சே, லஹிரு கமகே, லஹிரு குமார, கசுன் ராஜித, அசித்த பெர்னாந்து.

மேற்கிந்திய தீவுகள் அணி

கிரிக்கெட் உலகினை முன்னொரு காலத்தில் ஆட்சி செய்த  அணிகளில் ஒன்றான மேற்கிந்திய தீவுகள், டெஸ்ட் போட்டிகள் என்று வரும் போது இப்போதைய நாட்களில் குறிப்பிடும்படியான சிறப்பான பதிவுகளை காட்டவில்லை என்றே கூறமுடியும். கடந்த நான்கு ஆண்டுகளுக்குள் மேற்கிந்திய தீவுகளினால் ஜிம்பாப்வே, பங்களாதேஷ் தவிர்ந்த ஏனைய கிரிக்கெட் ஜாம்பவான்களுக்கு எதிராக எந்தவொரு டெஸ்ட் தொடர் வெற்றியினையும் பதிவு செய்யவில்லை. அதோடு டெஸ்ட் தரவரிசையில் மேற்கிந்திய தீவுகள் அணியினர் ஒன்பதாவது இடத்திலும் இருக்கின்றனர். ஆனால், இவற்றை வைத்து மேற்கிந்திய தீவுகள் அணி அவர்களது சொந்த மண்ணில் பலம் குறைந்தவர்களாக இருப்பர் என மதிப்பிட முடியாது.

 

 

சகலதுறை வீரர் ஜேசன் ஹோல்டரினால் தலைமை தாங்கப்படும் மேற்கிந்திய தீவுகள் அணி அதிகமான இளம் வீரர்களினையே கொண்டிருக்கின்றது. இதில் துடுப்பாட்டத்தினை பலப்படுத்தும் வீரர்களாக கிரைக் ப்ரத்வைட்,  கெய்ரன் பொவேல், சிம்ரோன் ஹெட்மேயர், ரொஸ்டன் சேஸ் மற்றும் சாய் ஹோப் போன்றோரினை குறிப்பிட முடியும். இவர்களில் ப்ரத்வைட் 3,000 இற்கு கிட்டவான டெஸ்ட் ஓட்டங்களை பெற்ற அனுபவத்தினை கொண்டிருக்கின்றார். 1,620 டெஸ்ட் ஓட்டங்களைப் பெற்றிருக்கும் கெய்ரன் பொவேல் இலங்கை அணியுடன் இடம்பெற்ற பயிற்சிப் போட்டியில் அரைச்சதம் விளாசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Braithwhite-300x200.jpg கிரைக் பராத்வைட் ©Getty Images

இவர்கள் தவிர டேவோன் ஸ்மித், ஜஹ்மர் ஹமில்டன் போன்ற வீரர்களுக்கும் மேற்கிந்திய தீவுகள் அணியில் விளையாட சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. இதில், அறிமுக விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான ஜஹ்மர் ஹமில்டன் கடந்த பெப்ரவரி மாதம் இங்கிலாந்து லயன்ஸ் அணியுடன் இடம்பெற்ற முதல்தர கிரிக்கெட் தொடரில் மூன்று இன்னிங்சுகளில் விளையாடி ஒரு சதம், அரைச்சதம் உட்பட மொத்தமாக 199 ஓட்டங்களினை குவித்திருந்ததார்.

Devon-Smith-300x200.jpg டெவோன் ஸ்மித் ©WICB

இதேவேளை, 2015 ஆம் ஆண்டிலேயே இறுதியாக மேற்கிந்திய தீவுகளுக்கு விளையாடிய டெவோன் ஸ்மித் 2017-18  ஆம் ஆண்டுக்கான உள்ளூர் முதல்தர தொடரொன்றில் ஆறு சதங்கள் உள்ளடங்களாக 84.23 என்கிற துடுப்பாட்ட சராசரியுடன் 1095 ஓட்டங்களினை விளாசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேற்கிந்திய தீவுகளின் பந்துவீச்சுதுறையினை எடுத்துப்பார்த்தால் இத்தொடரில் அவ்வணி அதிகம் வேகப்பந்து வீச்சாளர்களினையே நம்பியிருக்கின்றது. அணியின் பந்துவீச்சினை முன்னெடுக்கும் முக்கிய வீரராக கெமர் ரோச் காணப்படுகின்றார். வலதுகை வேகப்பந்து

Kemar-Roch-300x200.jpg கெமர் ரோச் ©AFP

வீச்சாளரான கெமர் ரோச் 29.13 என்கிற சராசரியுடன் 147 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. கெமர் ரோச்சோடு அணித்தலைவர் ஜேசன் ஹோல்டர், சன்னோன் கேப்ரியல் மற்றும் மிகுவேல் கம்மின்ஸ் ஆகியோர் ஏனைய வேகப்பந்துவீச்சாளர்களாக இருக்கின்றனர்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு சுழல் பந்துவீச்சாளராக பலம் சேர்ப்பதில் முக்கிய நபராக  நூறு டெஸ்ட் விக்கெட்டுக்களுக்கு மேல் சாய்த்துள்ள தேவேந்திர பீஷு இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கிந்திய தீவுகள் குழாம்

ஜேசன் ஹோல்டர் (அணித் தலைவர்), தேவேந்திர பீஷூ, க்ரைக் ப்ராத்வைட், ரோஸ்டன் சேஸ், மிகுவேல் கம்மின்ஸ், சேன் டோவ்ரிச், சனோன் கேப்ரியல், ஜஹ்மர் ஹமில்டன், சிம்ரோன் ஹெட்மேயர், ஷாய் ஹோப், கெய்ரன் பவல், கேமர் ரோச், டேவோன் ஸ்மித்.

இலங்கை அணியின் மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப் பயணத்தின் போட்டி அட்டவணை

முதலாவது டெஸ்ட் போட்டி – ஜூன் 6 தொடக்கம் ஜூன் 10 வரை, ட்ரினிடாட்
இரண்டாவது டெஸ்ட் போட்டி – ஜூன் 14 தொடக்கம் ஜூன் 18 வரை, சென். லூசியா
மூன்றாவது டெஸ்ட் போட்டி – ஜூன் 23 தொடக்கம் ஜூன் 27 வரை, பார்படோஸ் (பகலிரவுப் போட்டி)

http://www.thepapare.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
144/4 * (42.4 ov)
  • தொடங்கியவர்

மேற்கிந்தியத்தீவுகள் அணி 226 ஓட்டங்கள் குவிப்பு

 

 
 

 

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேரமுடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 84 ஓவர்களுக்கு 6 விக்கெட்களை இழந்து 246 ஓட்டங்களை பெற்றுள்ளது.

277090.jpg

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று 5 ஆம் திகதி மேற்கிந்தியாவின் போட் ஒப் ஸ்பெயினில் ஆரம்பமானது.

277091.jpg

இப் போட்டியில் நாணய சுழற்சியில்வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்திருந்தது.

277092.jpg

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 84 ஓவர்களுக்கு 6 விக்கெட்களை இழந்து 246 ஓட்டங்களை பெற்றுள்ளது.

277099.jpg

மேற்கிந்திய தீவுகள் அணி சார்ப்பாக பவல் 38 ஓட்டங்களையும் கோப் 44 ஓட்டங்களையும் சேஸி 38 ஓட்டங்களையும் கோல்டர் 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்துள்ளனர்.

277100.jpg

ஷேன் டாவ்ரிச் ஆட்டமிழக்காமல் 46 ஓட்டங்களையும், பிஸ்கோ ஓட்டமெதனையும் பெறாமல் ஆடுகளத்திலுள்ளனர்.

இலங்கை அணி சார்ப்பில் லஹிரு குமாரா 3 விக்கெட்களையும், சுரங்க லக்மால், ரங்கன ஹேரத் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.

http://www.virakesari.lk/article/34569

  • தொடங்கியவர்

டிரினிடாட் டெஸ்ட் - இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இலங்கை 31/3

 
அ-அ+

போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 31 ரன்களை எடுத்துள்ளது. #WIvSL #FirstTest

 
 
 
 
டிரினிடாட் டெஸ்ட் - இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இலங்கை 31/3
 
போர்ட் ஆப் ஸ்பெயின்:
 
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இலங்கை அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது.
 
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் பேட்டிங் தேர்வு செய்தார். அந்த அணியின் கிரெய்க் பிராத்வைட், டேவன் ஸ்மித் ஆகியோர் களமிறங்கினர்.
 
இருவரும் விரைவில் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய பாவெல் 38 ரன்களும், ஷாய் ஹோப் 44 ரன்களும், ரோஸ்டன் செஸ் 38 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் ஜேசன் ஹோல்டர் 40 ரன்கள் எடுத்து அவுட்டானார். 
 
தொடர்ந்து இறங்கிய விக்கெட் கீப்பர் ஓரளவு தாக்குப்பிடித்து ஆடினார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 84 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 246 ரன்கள் எடுத்துள்ளது. ஷேன் டாவ்ரிச் 46 ரன்களுடனும், தேவேந்திர பிஷு ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் இருந்தனர்.
 
201806080504530595_1_dowrich-2._L_styvpf.jpg
 
இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. ஷேன் டாவ்ரிச் பொறுப்பாக சதமடித்து அசத்தினார். அவரை தவிர மற்றவர்கள் நிலைக்கவில்லை.
 
இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 154 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 414 ரன்கள் எடுத்துள்ளது. டாவ்ரிச் 125 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார்.
 
இலங்கை அணி தரப்பில் லஹிரு குமாரா 4 விக்கெட் வீழ்த்தினார். சுரங்க லக்மால் 2 விக்கெட்டும், ரங்கனா ஹெராத் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
 
இதைத்தொடர்ந்து, இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் குசால் மெண்டிஸ், குசால் பெராரா விரைவில் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய மேத்யூசும் 11 ரன்னில் வெளியேறினார். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 10 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 31 ரன்கள் எடுத்துள்ளது.  
 
வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் கீமர் ரோச், காப்ரியல், ஜேசன் ஹோல்டர் ஆகியோர் தலா ஒரு  விக்கெட் எடுத்தனர். #WIvSL #FirstTest

https://www.maalaimalar.com/News/Sports/2018/06/08050453/1168600/srilanka-313-against-west-indies-in-first-test.vpf

  • தொடங்கியவர்

டிரினிடாட் டெஸ்ட் - மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 131/4

 
அ-அ+

போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 131 ரன்களை எடுத்துள்ளது. #WIvSL #FirstTest

 
 
 
 
டிரினிடாட் டெஸ்ட் - மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 131/4
 
போர்ட் ஆப் ஸ்பெயின்:
 
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இலங்கை அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி சமீபத்தில் தொடங்கியது.
 
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் பேட்டிங் தேர்வு செய்தார். அந்த அணியில் பாவெல் 38 ரன்களும், ஷாய் ஹோப் 44 ரன்களும், ரோஸ்டன் செஸ் 38 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் ஜேசன் ஹோல்டர் 40 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 84 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 246 ரன்கள் எடுத்துள்ளது. ஷேன் டாவ்ரிச் 46 ரன்களுடனும், தேவேந்திர பிஷு ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் உள்ளனர்.
 
இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஷேன் டாவ்ரிச் பொறுப்பாக சதமடித்து அசத்தினார். அவரை தவிர மற்றவர்கள் நிலைக்காததால், வெஸ்ட் இண்டீஸ் அணி 154 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 414 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக தெரிவித்தது. டாவ்ரிச் 125 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார்.
 
இலங்கை அணி தரப்பில் லஹிரு குமாரா 4 விக்கெட் வீழ்த்தினார். சுரங்க லக்மால் 2 விக்கெட்டும், ரங்கனா ஹெராத் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
 
இதைத்தொடர்ந்து, இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் அவுட்டாக, இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 10 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 31 ரன்கள் எடுத்துள்ளது.  
 
201806090439344863_1_lahiru-2._L_styvpf.jpg
 
மூன்றாம் நாள் ஆட்டத்தில் தினேஷ் சண்டிமால் 44 ரன்களும், நிரோஷன் டிக்வெலா 30 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் விரைவில் அவுட்டாகினர். இதனால் இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 55.4 ஓவரில் 185 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
 
வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்டும், கீமர் ரோச், காப்ரியல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஜேசன் ஹோல்டர், தேவேந்திர பிஷு ஆகியோர் தலா ஒரு  விக்கெட் எடுத்தனர்.
 
இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. கேத் பிராத்வைட், டேவன் ஸ்மித் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். பிராத்வைட் 16 ரன்னிலும், ஸ்மித் 20 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய கிரன் பாவெல் பொறுப்பாக ஆடி அரை சதமடித்தார்.
 
மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 40 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்துள்ளது. பாவெல் 64 ரன்களுடனும், ஷேன் டாவ்ரிச் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
 
இலங்கை அணி தரப்பில் லஹிரு குமாரா 2 விக்கெட்டும், சுரங்க லக்மா, ரங்கனா ஹெராத் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். தற்போதைய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கை அணியை விட 360 ரன்கள் கூடுதலாக பெற்றுள்ளது. #WIvSL #FirstTest

https://www.maalaimalar.com/News/Sports/2018/06/09043934/1168833/west-indies-1314-in-second-inninngs-against-srilanka.vpf

  • தொடங்கியவர்

இலங்கை வெற்றிபெறுமா ? பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் முதல் டெஸ்ட் !

 

 

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் இன்றைய இறுதிநாளில் இலங்கை அணி 7 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 277 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெறவேண்டியுள்ளதால் போட்டியில் ஒரு உத்வேகம் ஏற்பட்டுள்ளது.

New-Layout-_1_kusal.jpg

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3 போட்டிகளைக்கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடுவதற்காக இலங்கை அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

 

இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 6 ஆம் திகதி மேற்கிந்தியத் தீவுகளின் போர்ட் ஒப் ஸ்பெயினில் இடம்பெற்று வருகின்றது.

 

இன்று போட்டியின் 5 ஆவது நாளாகும்.

 

இந்நிலையில் முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

 

அந்தவகையில் முதலாவதாக துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி அதன் முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை இழந்து 414 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளை ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

இதில் மேற்கிந்தியத்தீவுகள்சார்பாக டௌரிச் 125 ஓட்டங்களைப்பெற்று ஆட்டமிழக்காதிருந்தார். இலங்கை அணி சார்பாக பந்துவீச்சில் லகிரு குமார 4 விக்கெட்டுகளையும் சுரங்க லக்மல்2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

 

 

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 185 ஓட்டங்களைப் பெற்று 229 ஓட்டங்களால் பின்னிலைபெற்றது.

இலங்கை அணி சார்பில் துடுப்ப்டத்தில் சந்திமால் 44 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். பந்து வீச்சில் மேற்கிந்தியத்தீவுகள் சார்பில் குமின்ஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

 

இந்நிலையில் 229 ஓட்டங்களால் முன்னிலபெற்றிருந்த மேற்கிந்தியத்தீவுகள் அணி தனது 2 ஆவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடக் களமிறங்கியது. 7 விக்கெட்டுகளை இழந்து 223 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது தனது 2 ஆவது இன்னிங்சை இடைநிறுத்திக்கொண்டது.

 

இதையடுத்த இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 452 ஓட்டங்கள் மேற்கிந்திய அணியால் நிர்ணயிக்கப்பட்டது. இலங்கை அணி தனது 2 ஆவது இன்னிங்ஸில் 4 ஆவது நாள் ஆட்டநேரமுடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்களைப்பெற்றிருந்தது.

இலங்கை அணி சார்பில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிவரும் குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்காது 94 ஓட்டங்களைப்பெற்று ஆடுகளத்திலுள்ளார். 

 

போட்டியின் இறுதிநாளான இன்று இலங்கை அணி வெற்றிபெற வேண்டுமானால் 7 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 277 ஓட்டங்களைப் பெற வேண்டும். அல்லது  277 ஓட்டங்களுக்கு  மேற்கிந்தியத்தீவுகள் அணி இலங்கை அணியின்மீதமுள்ள 7 விக்கெட்டுகளையும் கைப்பற்றி போட்டியில் வெற்றிபெறுமா என்று பொருத்திருந்து பார்ப்போம்..

http://www.virakesari.lk/article/34757

  • தொடங்கியவர்

இலங்கையுடன் முதல் டெஸ்ட் - 226 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ்

 
அ-அ+

போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் 226 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. #WIvSL #FirstTest

 
 
 
 
இலங்கையுடன் முதல் டெஸ்ட் - 226 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ்
 
போர்ட் ஆப் ஸ்பெயின்:
 
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இலங்கை அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி சமீபத்தில் தொடங்கியது.
 
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் பேட்டிங் தேர்வு செய்தார். தனது முதல் இன்னிங்சில் 
154 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 414 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக தெரிவித்தது. டாவ்ரிச் 125 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார். இலங்கை அணி தரப்பில் லஹிரு குமாரா 4 விக்கெட் வீழ்த்தினார். சுரங்க லக்மால் 2 விக்கெட்டும் எடுத்தனர்.
 
இதையடுத்து ஆடிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 55.4 ஓவரில் 185 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்டும், கீமர் ரோச், காப்ரியல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
 
தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது. 72 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தது. இலங்கை அணி தரப்பில் லஹிரு குமாரா 3 விக்கெட்டும், ரங்கனா ஹெராத் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
 
201806110003550587_1_kusal-2._L_styvpf.jpg
 
இலங்கை அணி வெற்றி பெற 453 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து ஆடிய இலங்கை அணி நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்துள்ளது. குசால் மெண்டிஸ் 94 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
 
ஐந்தாம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் குசால் மெண்டிஸ் சதமடித்தார். ஆனால் 102 ரன்களில் குசால் மெண்டிஸ் அவுட்டானதும் ஆட்டம் வெஸ்ட் இண்டீஸ் பக்கம் சென்றது. அதற்கு பின்னர் வந்தவர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை.
 
இதனால் இலங்கை அணி 83.2 ஓவரில் 226 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ரோஸ்டன் சேஸ் 4 விக்கெட்டும், தேவேந்திர பிஷு 3 விக்கெட்டும், ஷானோன் காபிரியல் 2 விக்கெட்டும் கைப்பற்றினர். இதையடுத்து, 226 ரன்கள் வித்தியாசத்தில்  வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனான ஷேன் டாவ்ரிச் தேர்வு செய்யப்பட்டார். #WIvSL #FirstTest

https://www.maalaimalar.com/News/TopNews/2018/06/11000355/1169223/west-indies-beat-srilanka-by-226-runs-in-first-test.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.