Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியா சிறைச்சாலைக்குள் கைதிகள் – விலங்குகள் போல் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்…

Featured Replies

வவுனியா சிறைச்சாலைக்குள் கைதிகள் – விலங்குகள் போல் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்…

குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட  செய்தியாளர்…

Vavunia-jail5-1.jpg?resize=768%2C461

 

வவுனியா சிறைச்சாலைக்குள் பாரிய இட நெருக்கடிகள் காணப்படுவதாக தொடர்ச்சியாக பல தரப்பினர்களாலும் குற்றம்சாட்டப்பட்டு வந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள் அதனை உறுதிப்படுத்தியுள்ளன. வவுனியா சிறைச்சாலையில் விளக்கமறியல் கைதிகள், சிறு குற்றங்கள், கடத்தல்கள், கஞ்சா, போன்ற குற்றச்செயல்களுடன் தொடர்புள்ளவர்களே பெருமளவில் காணப்படுகின்றனர்.

இங்குள்ள சிறைக் கூடத்திற்குள் 50 கைதிகள் இருப்பதற்கான வசதிவாய்ப்புகளே அதிகம் என்ற போதிலும் நூற்றுக்கு மேற்பட்ட கைதிகள் ஒரே தடவையில் வைத்திருப்பதாகவும், சில சமயங்களில் மூன்னூறுக்கு மேற்பட்ட கைதிகளையும் அடைத்து வைத்திருந்துள்ளனர் எனவும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும் குற்றம் சுமத்தியிருந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் வவுனியா சிறைச்சாலைக்குள் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில தற்போது வெளியாகியுள்ளன. இதில் கைதிகள் இடவசதியின்றி நெருக்கடிக்குள் ஒருவர் மேல் ஒருவர் படுத்து உறங்குவது போன்ற காட்சிகள் காணப்படுகின்றன.

கைதிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது போன்றும் புகைப்படங்கள் காணப்படுகின்றன. இந்த மோசமான இட நெருக்கடி காரணமாக ஏனைய அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவும், விலங்கள் போல நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vavunia-jail4.jpg?resize=768%2C461  Vavunia-jail6.jpg?resize=768%2C461Vavunia-jail7.jpg?resize=768%2C461Vavunia-jail8.jpg?resize=768%2C461Vavunia-jail10.jpg?resize=461%2C768Vavunia-jail11.jpg?resize=461%2C768Vavunia-jail12.jpg?resize=461%2C768

Vavunia-jail13-1.jpg?resize=480%2C800

http://globaltamilnews.net/2018/82550/

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு பூசாவில்    இருந்த நண்பர் ஒருவரும் இதனை கூறினார். உடுப்புகள் எதுவும் இருக்காது எனவும் நிற்பதற்கு தான் இடம் போதும் என குறிப்பிட்டு இருந்தார். என்ன பெளத்த நாட்டு கொள்கையோ நாமறியோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.