Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.வந்த பிரதமருடன் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சு

Featured Replies

யாழ்.வந்த பிரதமருடன் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சு-புதிய சுதந்திரனுக்கு மாவை சேனாதிராசா பிரத்தியேக செவ்வி

 

 

4C0A0781.jpg

யாழ்.குடாநாட்டுக்கு அண்மையில் வருகை தந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சு நடத்தியதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனதிராசா “புதிய சுததந்திரன்” இக்கு அளித்த பிரத்தியேக செவ்வியில் தெரிவித்தார்.

குறிப்பாக வடக்கில் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மக்களிடம் மீளவும் கையளிப்பது,பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு,தொண்டர் ஆசிரியர்,சுகாதார தொண்டர் நியமனம் உட்பட பல்வேறு விடயங்கள் பேசப்பட்டதாக அவர் தெரிவித்தார்.இவை தொடர்பில் அவர் அளித்த செவ்வி வருமாறு

28.05.2018ந் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காலையில் கிளிநொச்சிக்கும் மாலையில் யாழ்ப்பாணத்திற்கும் வந்திருந்தார். அக் கூட்டங்களில் தாங்களும் பங்குகொண்டிருந்தீர்கள்.இவற்றில் என்ன விடயங்கள் பேசப்பட்டன?

முதலாவதாக கிளிநொச்சி மாவட்டத்திலும், பின் யாழ்ப்பாண மாவட்டத்திலும் பிராந்திய இராணுவத் தளபதிகளுடன் ஆக்கிரமிக்கப்பட்டமக்களின் நிலங்களை விடுவிப்பது தொடர்பிலும், அரச அதிபர்களினால் முன்வைக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் பேசப்பட்டன.

குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் 7000ஏக்கர் தனியாருக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் பழத்தோட்டங்கள் விடுவிக்கப்படவேண்டுமென நானும், சிறிதரன்,பா.உ வலியுறுத்தினோம். அதே போல யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திலும் நானும், விஜயகலா,பா.உ, சிறிதரன்,பா.உ, சரவணபவன்,பா.உ கலந்து கொண்டு நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என வற்புறுத்தினோம். யாழ்ப்பாணத்தில் முதலில் தனியாக பிரதமர்,மாவட்டப் படைத்தளபதிகளும் கலந்து கொண்டனர். இராணுவம், கடற்படை,விமானப்படை வசமுள்ள நிலங்கள் விடுவிப்பதற்கான பேச்சுக்கள் இடம்பெற்றன. இவை தொடர்பான ஆவணங்களும் எம்மால் சமர்ப்பிக்கப்பட்டன. பல இடங்கள் விடுவிக்கப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவித்தனர். பல இணக்கங்கள் ஏற்பட்டன. இணக்கம் ஏற்படாத பிரச்சினைகளில் ஜனாதிபதி தலைமையில் உயர் படைத்தளபதிகள், பாதுகாப்பு அமைச்சுடன் விரைவில் கொழும்பில் பேச்சுவார்த்தை நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது.

அடுத்து பலாலி விமான நிலையம் பற்றிப் பேசப்பட்டது. இவ்விடயம் 1986 முதல் நீண்டகாலமாகப் பேசப்பட்டது தான். 2015 பிற்பகுதியில் வடபகுதி பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக வரவேண்டுமென்றும் காங்கேசன்துறை துறைமுக எல்லையிலிருந்து வளலாய் வரைக்குமான கடலோரப் பிரதேசத்தில் வர்த்தக மையம் நிறுவவேண்டுமெனவும் வற்புறுத்தப்பட்டது. அதனடிப்படையில் எமது வேண்டுகோள் மக்களின் நிலங்களை அதிகம் எடுக்காமல் பலாலிக்கு வடக்காக கடற்பிராந்தியத்தில் சர்வதேச விமானநிலையம் அமைய வேண்டுமென வேண்டுகோள் விடுத்தோம்.

பிரதமர் அலுவலகம், மீள்குடியேற்ற அமைச்சினூடாக அதற்கான திட்டவரைபு என்னிடம் தரப்பட்டது. காங்கேசன்துறை துறைமுகத்தையும், சர்வதேச விமான நிலையம், பொருளாதார மையம் அமைக்க இந்தியாவின் நிதி தேவைப்பட்டது. இப்பொழுது காங்கேசன்துறை துறைமுக கட்டுமாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன.

2016 தைப்பொங்கல் தினத்தன்று பலாலி இராஜராஜேஸ்வரி கோவிலுக்குப் பிரதமர் வந்திருந்தார். அப்பகுதி மக்கள் அங்கு திரண்டிருந்தனர். தங்கள் நிலங்கள் விடுவிக்கப்பட்டு மீள் குடியேற அனுமதிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர். பிரதமர் இவ் விடயங்களில் இந்தியாவுடன் பேசிய விடயங்கள் பற்றியும் என்னுடன் பேசினார். இறுதியில் இரண்டு விடயங்களை முன்னெடுக்க இணக்கம் ஏற்பட்டது.

1.பலாலி விமான நிலையத்தை பிராந்திய நிலையமாக ஏற்படுத்துவது

2. தொடர்ந்தும் காங்கேசன்துறைப் பிரதேசத்தில் சீமெந்துத் தொழிற்சாலைக்குச் சுண்ணாம்புக் கற்பாறைகள் தோண்டக் கூடாது என்பதை நாம் வற்புறுத்தினோம். அதை எற்றுக் கொண்ட பிரதமர் சிறிய தொழில் துறைகள் மற்றும் தொழில்நுட்பத் தொழில் துறைகளும் அவ்விடத்தில் உருவாக்கி வேலை வாய்ப்புக்கள் ஏற்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது. மன்னார் பிரதேசத்தில் சீமெந்துத் தொழிற்சாலைக்கான சுண்ணக்கல் பரப்புக் கடந்தானில் சோதனையிடப்படுகிறது.

28.05.2018 யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பிரதமருடனான கூட்டத்திலும் மேற்குறித்த தீர்மானங்கள் மீண்டும் தீர்மானிக்கப்பட்டன. பலாலி பிராந்திய விமான நிலையம் தொடர்பில் இந்திய தொழில்நுட்பவியலாளர்கள் ஆய்வு செய்தனர். அவர்கள் இப்பொழுதுள்ள ‘விமான நிலைய நிலப்பரப்பு பிராந்திய விமான நிலையத்திற்குப் போதுமானது’ என்று தெரிவித்திருந்தனர். பிராந்திய விமானத்தளபதி 724 ஏக்கர் நிலம் பலாலியில் தங்கள் வசமுள்ளதாக அறிவித்தார். பலாலி விமான நிலைய நிலப்பரப்பு தொடர்பாக மறு நிர்ணயம் செய்வதையும் மக்கள் நிலப்பகுதி இருப்பின் அதிகம் பாதிப்பில்லாமல் நிர்ணயிப்பதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கு அடுத்தபடியாக விடுவிக்கப்படாத ஏனைய நிலங்களை விடுவிப்பது மீள்குடியேற்றத்திற்கான போதுமான நிதி ஒதுக்கப்படுதல் மற்றும் அரச அதிபர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட மேம்பாட்டுத்திட்டங்களிலும் இணக்கமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இவை நடைமுறைக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்பது தான் எமது வேண்டுகோள்.

அத்துடன் இன்னும் தொண்டர் ஆசிரியர், சுகாதார தொண்டர்கள் மற்றும் வேலைவாய்ப்புக்கள் 45 வயது வரையான பட்டதாரிகள் நியமனங்களுக்கு அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்து தீர்வு காணவேண்டும் என்றும் எம்மால் விடுக்கப்பட்ட வேண்டுகோள் பிரதமரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இக் கூட்டங்களில் மீள் குடியேற்ற அமைச்சர், செயலாளர்கள், பல துறைத் தலைவர்கள், அரச அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபைத் தலைவர்கள், உறுப்பினர்கள் பல அமைப்புக்களைப் பிரதிநிதிப்படுத்தியோர் பங்கு கொண்டனர் என்றார்.

http://www.newsuthanthiran.com/2018/06/06/யாழ்-வந்த-பிரதமருடன்-மக்/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.