Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ட்ரம்ப் - கிம்மின் சிங்கப்பூர் உச்சிமாநாடு உலக அமைதிக்கான சமிஞ்ஞையாகுமா?

Featured Replies

ட்ரம்ப் - கிம்மின் சிங்கப்பூர் உச்சிமாநாடு உலக அமைதிக்கான சமிஞ்ஞையாகுமா?

 

கடந்த பல வரு­டங்­க­ளாக பூலோ­கத்தின் உக்­கி­ர­மான நெருக்­க­டி­களில் குறிப்­பாக அர­சியல் நெருக்­க­டி­களுள் குறிப்­பிட்டுச் சொல்­லக்­கூ­டிய ஒன்­றாக வட­கொ­ரி­யாவைக் கூறலாம். டொனால்ட் ட்ரம்­புக்கு முன்னர் ஜனா­தி­ப­தி­யாக பத­வி­வ­கித்த ஜோர்ஜ்புஷ் வட­கொ­ரியா,ஈரான் ஆகி­ய­வற்றை ரௌடி நாடுகள் என குறிப்­பிட்­டுள்ளார். வட­கொ­ரியா அணு­ஆ­யுத உற்­பத்­தியில் இர­க­சி­ய­மாக ஈடு­ப­டு­வதும் சர்­வ­தேச நிய­மங்­க­ளுக்கு உட்­ப­டுத்­திக்­கொள்ள மறுப்­பதும் அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி­கட்கும் ஐ.நா. சபைக்கும் பெரும் தலை­யி­டியை கொடுத்த விடயம் ஆகும். ஜனா­தி­பதி ட்ரம்ப் பத­வி­யேற்­றபின் அவரின் உரத்­துப்­பேசும் இயற்­கை­யான குண­வி­யல்பும் மாறி­மா­றிப் பேசும் சுபா­வமும் கொரிய தீப­கற்­பத்தில் போர் ஒன்­றினை உரு­வாக்­கக்­கூடும் என்ற ஊகங்­களை ஏற்­ப­டுத்­தி­யது. வட­கொ­ரிய அதி­பரும் தம்­பங்­கிற்கு சளைத்­த­வ­ராக காட்­சி­ய­ளிக்­க­வில்லை. ட்ரம்பும் பேசப்­பேச கிம்,அணு­ஆ­யுத பரி­சோ­த­னை­களை தொடர்ந்­த­வண்­ணமே இருந்தார். 2018ஆம் ஆண்டு பிறக்கும்போது அமெ­ரிக்­கா­விற்கு அதிர்ச்சி கொடுத்தார். எனது மேசை மேலே அணு­குண்டு அழுத்தும் பட்டன் உள்­ளது. ஒரு வினா­டியில் அழுத்தி அமெ­ரிக்­கா­விற்கு பெரும் அழி­வினை ஏற்­ப­டுத்­துவேன் என முழங்­கினார். 

1950ஆம் ஆண்டு கொரிய தீப­கற்­பத்தில் கொரிய யுத்தம் ஏற்­பட்டு சீனா, அமெ­ரிக்கா ஆகியநாடு­களின் தலை­யீட்­டுடன் யுத்த நிறுத்தம் ஏற்­பட்­டது. வட, தென்கொரியா பிர­தே­சங்­களை பிரிப்­ப­தற்கு எல்­லைக்­கோடு ஒன்று நிர்­ண­யிக்­கப்­பட்­டது. ஆனால் யுத்த நிறுத்தம் தொடர்­பாக எந்த ஒப்­பந்­தமோ எழுத்து வடி­வி­லான வேறு ஆவ­ணமோ உரு­வா­க­வில்லை. இந்த வகையில் பார்க்கும்போது இன்றும் யுத்தம் நடை­பெ­று­வ­தாகத்தான் தோற்­ற­ம­ளிக்­கி­றது. ஆனால் யுத்தம் நடை­பெ­ற­வில்லை. இன்­று­வரை அமெ­ரிக்கா, வட­கொ­ரியா ஆகியநாடு­க­ளி­டையே உத்­தி­யோ­க­பூர்­வ­மான இரா­ஜ்ஜியத் தொடர்­புகள் கிடை­யாது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. 

இந்தச் சூழ்­நி­லையில் அமெ­ரிக்கா, வட­கொ­ரிய தலை­வர்­களின் உச்­சி­ம­ா­நாடு எதிர்வரும்12ஆம்திகதி சிங்­கப்­பூரில் நடை­பெ­று­வ­தற்கு இரு­த­ரப்­பி­ன­ராலும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. திகதி நிச்­ச­யிப்­ப­தற்கு முன்னர் உச்­சி­ம­ா­நாடு பற்­றிய நம்­ப­க­ரமான தக­வல்கள் வெளிப்­ப­ரப்பில் கசிந்­த­போது எதிர்­ம­றை­யான ஊகங்­களும் வெளியி­டப்­பட்­டன. உச்­சி­ம­ா­நாடு வெறும் புஸ்­வாணம் தான். ஜனா­தி­பதி ட்ரம்ப் வட­கொ­ரிய தலை­வரை சந்­திக்க விரும்­ப­மாட்டார் என்ற ஊகங்­களும் உலகை சுற்றி வலம் வந்­தன. இடைக்­கி­டையே ட்ரம்ப், கிம் ஆகி­யோரை மேற்கோள்காட்டி வெளியான செய்­தி­களும் இந்த ஊகங்­க­ளுக்கு உயி­ரூட்­டின. பொது­வா­கவே உரத்­துப்­பேசும் ட்ரம்ப் சில கடு­மை­யான வார்த்தைப் பிர­யோ­கங்­களை வெளியிட்டார். இந்த ஊகங்கள் அடங்­கு­வ­தற்குள் சிங்­கப்­பூரில் எதிர்வரும் 12ஆம் திகதி சந்­திப்பு நடை­பெறும் என்­கின்ற செய்தி இரு­த­ரப்­பாலும் உறுதி செய்­யப்­பட்­டது. சிங்­கப்­பூரில் நடை­பெ­ற­வுள்ள உச்­சி­ம­ா­நாட்­டுக்கு முன்­னேற்­பா­டாக அமெ­ரிக்கா, வட­கொ­ரி­யா­வி­லி­ருந்து உயர் அதி­கா­ரிகள் சிங்­கப்பூர் சென்­றுள்­ளனர். அத்­துடன் வட­கொ­ரிய அதி­பரின் வலது கர­மாக கரு­தப்­படும் முன்னாள் இரா­ணு­வ­ப்பு­ல­னாய்வு தலைவர், அமெ­ரிக்க அதி­பரை அவரின் ஒவல் மாளி­கையில் சந்­தித்து ஜனா­தி­பதி கிம்மின் தனிப்­பட்ட கடி­தத்­தையும் கைய­ளித்தார். உச்­சி­ம­ா­நாடு நடை­பெ­று­வது திண்ணம் என்­கின்ற நிலை உரு­வா­கி­யது.

இரு தலை­வர்­களும் சந்­திக்கும்போது மேசையில் வைக்­கப்­ப­டக்­கூ­டிய பிர­தா­ன­மான 2 விட­யங்­களைக் குறிப்­பி­டலாம். அணு­ஆ­யுத உற்­பத்தி, பரி­சோ­தனை, ஆய்­வுகள், அபி­வி­ருத்­திகள் யாவையும் நிறுத்­து­வ­தென வட­கொ­ரிய அதி­ப­ரி­ட­மி­ருந்து உத்­த­ர­வாதம் பெறு­வதே அமெ­ரிக்க தரப்­பினால் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­படும் விடயம் ஆகும். வட­கொ­ரிய தரப்பு வட­கொ­ரி­யா­வுக்கு எதி­ரான ஐ.நா. சபை, EU, US பொரு­ளா­தார தடை­க­ளையும் தளர்த்த வேண்டும் அல்­லது முற்­றாக நிறுத்த வேண்டும் என கோரு­மென எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. பல­மான நிலையில் வட­கொ­ரியா இப்­பேச்­சு­வார்த்­தைக்கு இணங்­கி­யுள்­ளது என்­பது கவ­னத்தில் கொள்ள வேண்­டிய விட­ய­மாகும். 

சில இணக்­கப்­பா­டு­களை எட்­டி­னாலும் அவை தொடர்ந்து இரு தரப்­பி­னாலும் அமுல்­ப­டுத்­தப்­ப­டுமா? என்­பது இன்­னொரு விட­ய­மாகும். முன்னாள் ஜனா­தி­பதி பராக் ஒபா­மாவின் காலத்தில் ஏற்றுக்கொள்­ளப்­பட்ட, இணங்­கிய விட­யங்­க­ளி­லி­ருந்து அமெ­ரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வில­கி­யுள்­ள­மையை குறிப்­பி­டு­வது பொருத்­த­மா­னது. 2015இல் பாரிஸில் நடை­பெற்ற புவி­ வெப்­ப­ம­டைதல் தொடர்­பாக COP 21 மா­நாட்டு தீர்­மா­னங்­க­ளி­லி­ருந்தும், ஈரா­னுடன் அணு உற்­பத்தி தொடர்­பான 6 நாடு­களின் ஒப்­பந்­தத்­தி­லி­ருந்தும், மத்­திய கிழக்கில் பாலஸ்­தீன விவ­கா­ரத்தில் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட நிலைப்­பா­டு­க­ளி­லி­ருந்தும் அமெ­ரிக்கா வில­கு­வ­தான அதி­பரின் பிர­க­ட­னங்கள் அமெ­ரிக்க, வட­கொ­ரிய பேச்­சு­வார்த்­தை­களின் மீது நம்­பிக்­கையை கட்டியெழுப்­ப­வில்லை.

ஜூன் 12ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள உச்­சி­ம­ா­நாட்­டுக்கு சிங்­கப்பூர் பொலி­வுடன் களை­கட்­டி­யுள்­ளது. இரு நாடு­க­ளி­லி­ருந்தும் பாது­காப்பு, உப­ச­ரணை, புல­னாய்வு, அர­சியல் துறை­களை சேர்ந்த உய­ர­தி­கா­ரிகள், இரா­ஜ­தந்­தி­ரிகள் சிங்­கப்­பூரில் முகா­மிட்­டுள்­ளனர். எதிரும் புதி­ரு­மான இரு தலை­வர்கள் சந்­திக்கும்போது அனுச­ரணை (Protocol) விட­யங்­களில் மிக அவ­தானம் காட்­டப்­படும். மா­நாடு நடை­பெறும் ஹோட்டல், ஹோட்­டலின் மா­நாட்டு அறைகள், அறைகள் ஒரு பக்க கதவா அல்­லது இரு­பக்க கதவா, அறை­யினுள் முதல் காலடி எடுத்து வைப்­பவர் யார்? எவர் எந்­தப்­பக்கம் அமர்­வது, தலை­வர்கள் மட்டும் சந்­திக்கும்போது (மொழி­பெ­யர்ப்­பா­ளர்கள் தவிர)எவ்­வா­றான ஏற்­பா­டுகள், மா­நாட்­டுக்கு முன்­னரும் பின்­னரும் ஊட­கங்­க­ளுக்கு யார் முதலில் பேட்­டி­யு­ரைப்­பது, பாது­காப்­புக்கு யார் பொறுப்பு, தத்தம் நாடு­களின் பாது­காப்புப் பிரி­வி­னரின் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட செயற்­பா­டுகள், இரு நாடு­க­ளுக்­கு­மி­டையில் உத்­தி­யோகபூர்வ இரா­ஜ­தந்­திர உற­வுகள் இல்­லா­மை­யினால் இரு நாட்டுக் கொடி­க­ளையும் எவ்­வாறு பறக்­க­வி­டு­வது போன்ற பல விட­யங்­களை ஆயத்தக் குழு­வி­னர்கள் சிங்­கப்பூர் அரச பிர­தி­நி­தி­க­ளுடன் கலந்­து­ரை­யாடி தீர்­மா­னங்கள் எடுத்­துள்­ளனர்.

வட­கொ­ரிய தலை­வர்கள் ஏனைய நாட்டுத் தலை­வர்­களைப் போன்று அடிக்­கடி வெளிநாட்டு விஜ­யங்கள் மேற்­கொள்­ப­வ­ரல்ல. அண்­மையில் வட­கொ­ரிய அதி­பரின் தங்­கை கிம் ஜோ தென்­கொ­ரிய அதி­பரை சந்­திப்­ப­தற்கு குளிர்­கால ஒலிம்பிக் போட்­டியை சாத­க­மாக பயன்­ப­டுத்தி சியோல் சென்­றனர். அவரின் விஜ­யத்­துக்­கா­னதும் வட­கொ­ரிய விளை­யாட்டு அணி­களின் விஜ­யத்­துக்­கான செலவின் பெரும்­ப­கு­தியை தென்­கொ­ரிய அர­சாங்­கமே பொறுப்­பெ­டுத்துக் கொண்­டது. அதே­போல தலைவர் கிம்மும் அவ­ரது அணி­யி­னரும் சிங்­கப்­பூருக்கு விஜயம் செய்யும் போது ஏற்­படும் முழுச்­செ­ல­வையும் சிங்­கப்பூர் அர­சாங்கமே பொறுப்­பெ­டுத்துக்கொள்ளும் என்ற ஊகங்கள் வெளியி­டப்­ப­டு­கின்­றன.

இதற்­கி­டையில் வட­கொ­ரி­யாவின் அதிபர் கிம் 3 உயர்­நிலைத் தலை­வர்­களை பத­வி­நீக்கம் செய்து அவ்­வி­டங்­க­ளுக்கு புதி­ய­வர்­களை நிய­மித்­துள்ளார் என தென்­கொ­ரிய தரப்­பி­லி­ருந்து செய்­திகள் வெளிவந்­துள்­ளன. இச்­செய்தி உறுதி செய்­யப்­படவில்­லை­யா­யினும் அர­சியல் ஆய்­வா­ளர்கள் இச்­செய்­தி­களை ஆராய்ந்த வண்ணம் உள்­ளனர். ஜனா­தி­பதி கிம் தமது கரங்­களை, நிலைப்­பா­டு­களை உறு­திப்­ப­டுத்­தவே இம்­மாற்­றங்­களை நிகழ்த்­தி­யுள்ளார் என சில ஆய்­வா­ளர்கள் கருத்து தெரி­விக்­கின்­றனர்.

 எவ்­வா­றா­னாலும் மத்­திய கட்­டுப்­பாட்டில் கட்­டுக்­கோப்­பு­டைய வட­கொ­ரிய கம்­யூனிஸ்ட் கட்­சியின் பொலிற்­பீரோ எனப்­படும் மத்­திய குழு அசைக்க முடி­யா­த­ நி­லை­யி­லுள்­ளது என்­பதை கம்­யூனிச கொள்­கையை பின்­பற்றும் நாடு­களின் உள்­நாட்டு அர­சி­யலை தெரிந்­த­வர்கள் புரிந்து கொள்ள முடியும்.தலைவர் கிம் தமது நெருங்­கிய சகாவும் உடன்­பி­றந்த தங்­கை­யான கிம் ஜோ ஜெங்­கை­சி­யோ­லுக்கு அனுப்பி வட­கொ­ரிய நெருக்­க­டியில் தணி­வினை ஏற்­ப­டுத்­தி­யமை புன்­னகை இரா­ஜ­தந்­தி­ர­மென அர­சியல் அறி­ஞர்கள் குறிப்­பி­டு­கின்­றனர். புன்­னகை இரா­ஜ­தந்­திரம் தொடர்ச்­சி­யான வெற்­றி­களை ஈட்­டுமா? என்­பது பொறுத்­தி­ருந்து பார்க்க வேண்டும்.

இந்த வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த ஜூன் 12 பேச்­சு­வார்த்தை எப்­படிச் சாத்­தி­ய­மா­னது? அமெ­ரிக்கா, ஈரா­னுடன் பராக் ஒபா­மாவின் ஆட்சிக் காலத்தில் கைச்­சாத்­தா­கிய ஈரான் அணு­ஆ­யுத ஒப்­பந்­தத்­தி­லி­ருந்து தன்­னிச்­சை­யாக வில­கு­வ­தற்கு தீர்­மானம் மேற்­கொண்ட டொனால்ட் ட்ரம்ப், இன்­னொரு அணு­ஆ­யுத ஆற்­றலை நிரூ­பித்துக் கொண்­டி­ருக்கும் வட­கொ­ரி­யாவை அணு­ஆ­யுத உற்­பத்­தியிலிருந்து விலக வைப்­ப­தற்கு ஏன் பேச்சு வார்த்­தையை ஒரு தந்­தி­ரோ­பா­ய­மாக ஏற்­றுக்­கொண்டார் என்­பது சர்­வ­தேச அர­சியல் அக்­க­றை­யுள்­ள­வர்­களை குடைந்து கொண்­டி­ருக்கும் வினா­வாகும். வெளிநாட்டுக் கொள்கைத் தீர்­மா­னங்கள், தர்­மத்தின் வழியில் அல்­லது சர்­வ­தேச நிய­மங்கள், சர்­வ­தேச சட்­டங்­களின் அடிப்­ப­டையில் நடை­மு­றையில் மேற்­கொள்­ளப்­ப­டு­பவை அல்ல. அந்­தந்த நாடு­களின் சொத்த நலன்­களே வெளிநாட்டுக் கொள்கை எத்­தி­சையில் பய­ணிக்க வேண்டும் என்­பதை தீர்­மா­னிக்கும் கார­ணி­க­ளாகும். அமெரிக்காவைப் பொறுத்­த­மட்டில் அமெரிக்கா எப்­போதும் பூகோ­ளத்தில் முதன்­மை­யா­னது என்ற கொள்கை நிலைப்­பாட்­டையும், அமெரிக்கா உலகில் பலம் வாய்ந்த அதி­கா­ர­முள்ள நாடு என்ற நிலைப்­பாட்­டை­யும் ­ப­றை­சாற்­றிக்­கொண்­டி­ருக்கும் நாடு என்­பது அமெரிக்க வெளிநாட்டுக் கொள்­கை­களை தொடர்ச்­சி­யாக ஆராய்ந்து பார்ப்­ப­வர்­கட்கு புரி­யக்­கூடும்.ஈரான் ஒப்­பந்தம் பராக் ஒபா­மாவின் இரா­ஜ­தந்­திர முயற்­சியால் நிறை­வே­றி­யது. மேலும், மேலும் அணு­சக்தி ஆற்றல் பெறும் நாடு­களை உரு­வாக்கக்கூடாது முளை­யி­லேயே கிள்­ளி­விட வேண்டும் என்­கின்ற கொள்கைப் பண்­பையே பராக் ஒபா­மாவின் பார்­வை­யாக இருந்­தது. டொனால்ட் ட்ரம்பின் பார்­வையும் அத்­த­கை­யதே. இதன் கார­ண­மா­கத்தான் வட கொரி­யாவை அணு­குண்டு நாடாக உரு­வெ­டுக்க அனு­ம­திக்­க­வில்லை. சீனா அணு­குண்டு ஆற்றல் பெற்ற மிக பல­மான நாடு என்­பது சொல்லித் தெரிய வேண்­டிய விடயமல்ல. ஏறக்­கு­றைய ஒரேவித­மான கொள்­கை­யுள்ள இரு­நா­டுகள் சீனா, வட­கொ­ரி­யாவின் கூட்டு தூர­கி­ழக்­கிலும் ஆசிய பசுபிக் பிராந்­தி­யத்­திலும் அமெரிக்­காவின் இரா­ணுவ மேலா­திக்க வல்­ல­மைக்கு பெரும் சவா­லாகும். இதன் கார­ண­மா­கவே அமெரிக்கா - வடகொரி­யா­வுடன் பேச்­சு­வார்த்­தைக்கு இணங்­கி­யது என முதிர்ச்சி பெற்ற இரா­ஜ­தந்­தி­ரிகள் நிறு­வு­கின்­றனர். 

டொனால்ட் ட்ரம்பின் சர்­வ­தேச, இரா­ஜ­தந்­திர சவால்­க­ளுக்கு மத்­தியில் அமெ­ரிக்­காவின் சர்­வ­தேச வர்த்­த­கமும் நட்பு நாடு­களின் கண்­ட­னத்­திற்கு உள்­ளா­கி­ய­மையை இங்கு குறிப்­பிட வேண்டும். அண்­மைய மாதங்­களில் அமெ­ரிக்­காவின் இரு­த­ரப்பு வர்த்­தக மீதி அமெ­ரிக்­கா­வுக்கு பாத­க­மாக உள்­ள­மையால் சீனா­வு­ட­னான இரு­த­ரப்பு வர்த்­த­கத்தில் சீனா­வி­லி­ருந்து இறக்­கு­ம­தி­யாகும் உருக்கு, அலு­மி­னியம் உட்­பட பல பண்­டங்­களின் மீது வரியை அதி­க­ரித்து இரு­நா­டு­க­ளுக்­கி­டை­யிலும் வர்த்­த­கப்­போரை ஆரம்­பித்­துள்­ளனர். அர­சியல் ரீதி­யாக நட்பு நாடு­க­ளான நுரு, கனடா, மெக்­சிக்கோ போன்ற நாடு­க­ளி­லி­ருந்து இறக்­கு­ம­தி­களை குறிப்­பாக உருக்கு, அலு­மி­னியம் ஆகி­ய­வற்றை கட்­டுப்­ப­டுத்த வரி­களை அதி­க­ரித்து நுரு நாடு­க­ளு­டனும் வர்த்­தகப் போரை ஆரம்­பித்­துள்ளார். நுரு, கனடா ஆகிய நாடுகள் அமெரிக்க அதி­பரின் வர்த்­தக கொள்­கை­களை கண்­டித்­துள்­ளன. அமெ­ரிக்­காவின் வர்த்­தகப் போர் சீனா­வுடன் மட்டும் நின்­று­வி­ட­வில்லை. அர­சியல், இரா­ணுவ ரீதி­யான நெருங்­கிய உற­வு­களைக் கொண்­டி­ருக்கும் நுரு நாடுகள், கனடா ஆகி­ய­வற்றின் வர்த்­த­கத்தில் தடை­களை ஏற்­ப­டுத்தி அந்­நா­டு­களின் இறக்­கு­ம­தி­களை குறைப்­பதன் மூலம் அமெ­ரிக்­காவின் வர்த்­தக மீதி பாதக நிலையை சரி­செய்­வ­தற்கு டொனால்ட் ட்ரம்ப் முயல்­கின்றார். மீண்டும் சொந்த நலன்­களின் முக்­கி­யத்­துவம் அமெ­ரிக்க விட­யத்தில் தெளிவா­கின்­றது. 

அமெரிக்கா பூகோ­ளத்தில் அதி­கா­ரம்­மிக்­க­நாடு எனினும் தொடர்ச்­சி­யாக சகல சந்­தர்ப்­பங்­க­ளிலும் இரா­ணுவ மேலா­திக்க வல்­ல­மையை வெளிக்­காட்­டி­யது எனக் கூற­மு­டி­யாது. அந்த வகையில் வட­கொ­ரி­யாவின் மீதான அணுகு முறையை பார்க்க முடியும். அதே­நேரம் ஈரானைப் பொறுத்தமட்டில் மத்­திய கிழக்கில் ஈரான் அணு­ஆ­யுத ஆற்­றலைப் பெற்­றாலும் அணு ஆயுத யுத்தம் என்ற நிலை உரு­வாகும்போது அமெரிக்­காவின் கையே ஓங்கும். ஈரானால் தாக்­குப்­பி­டிக்க முடி­யாது. அது­மட்­டு­மல்ல மத்­திய கிழக்கு பிராந்­தி­யத்தில் சவூதி அரே­பி­யாவும் அதன் நட்பு நாடு­களும் ஈரான் மேல் பகைமை பாராட்டி வரு­கின்­றது. ஈரானைப் பல­வீ­னப்­ப­டுத்தி பிராந்­தி­யத்தில் சவூதி அரே­பி­யாவை பிராந்­திய வல்­ல­ரசு நாடாக மிளிர வைக்க வேண்டும் என்கின்ற தந்திரோபாயம் காணப்படுகின்றது. இக்காரணிகளின் மத்தியில் அமெரிக்காவின் ஈரான் மீதான அணுகுமுறை குறிப்பாக இஸ்ரேலின் இருப்புக்கு சவால் விடக்கூடிய நாடான ஈரானைப் பலவீனப்படுத்துவதும் டொனால்ட் ட்ரம்பின் பிரதானமான வெளிநாட்டுக்கொள்கைகளில் ஒன்றாகும். இச்சூழ்நிலைகளின் அடிப்படையில் பராக் ஒபாமா நிறைவேற்றிய ஈரான் அணுஆயுத ஒப்பந்தத்தை நிராகரித்து ஈரானை ஆத்திரமூட்டி யுத்தமொன்றுக்குஅழைப்பு விடுவது போன்று ட்ரம்ப் ஈரான் விடயத்தைக் கையாளுகின்றார்.

 

உலகம் பூராகவும் பிரதானமான சர்வதேச அரசியல் நிகழ்வாக எதிர்பார்க்கப்படும் ஜூன் 12, ட்ரம்ப் - கிம் உச்சிமாநாடு பல ஆய்வுகளை, கண்ணோட்டங்களை உருவாக்கியுள்ளதென்பது சர்வதேச ஊடகங்கள், உள்ளூர் ஊடகங்கள் மூலம் தெளிவாகியுள்ளது. இராஜதந்திர உறவுகளைக் கொண்டிராத இரு தலைவர்களின் உச்சிமாநாடு என்பதை அறியும்போது வியப்பாக இருக்கும். இதற்கு முன்னரும் இவ்வாறானதொரு நிகழ்வு நடைபெற்றது. 1972ஆம் ஆண்டு சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளிடையே இராஜதந்திர உறவு நிலவாத நிலைமையிலும் அப்போதைய அமெரிக்க அதிபர் நிக்சன் சீனாவிற்கு விஜயம் செய்து சீனத் தலைவர் மாவோவுடன் உச்சிமாநாடு நடத்தினார் என்பதும் இதன்மூலம் சீனா– அமெரிக்க இராஜதந்திர உறவுகள் ஆரம்பமாகி இன்றுவரை செழிப்பாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. இதே அடிப்படையில் இந்த ஜூன் 12 உச்சிமாநாட்டின் மூலம் இருநாடுகளும் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தி உலக சமாதானத்திற்கு ஒரு பங்களிப்பினை செய்யும் என்பது சமாதானத்தை விரும்பும் உலக மக்களின் பெருவிருப்பாகும்.
 

ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம்  
(இளைப்பாறிய பணிப்பாளர், இலங்கை வெளிவிவகார அமைச்சு.)  

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-06-09#page-7

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.