Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னார் நகர் மத்தியில் மனித புதைகுழிகள் எவ்வாறு வந்திருக்க முடியும்?

Featured Replies

மன்னார் நகர் மத்தியில் மனித புதைகுழிகள் எவ்வாறு வந்திருக்க முடியும்?

 
 
f0.jpg?itok=D_oFxkHS

மன்னார் என்றால் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு செய்யப்படுகின்ற இடமல்லவா? என்கின்ற வினா பலரிடம் எழுந்துள்ளது.

முன்னர் மன்னார் மாவட்டத்தில் திருக்கேதீஸ்வரம் மாந்தை மனித புதைகுழியில் தொடர்ச்சியாக இடம் பெற்று வந்த மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் நிலையான எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை.

மாந்தை மனித புதை குழி நினைவுகள் மக்கள் மத்தியில் இருந்து அகன்று செல்லாத நிலையிலேயே, மன்னார் நகரின் மத்தியில் மேலும் ஒரு மனித புதை குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மத்தியில் அச்சத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளதோடு, மக்களை ஒரு கனம் சிந்திக்கவும் வைத்துள்ளது.

மன்னார் எமில் நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கொட்டப்பட்ட மண்ணில் மனித எலும்புகள் காணப்பட்ட நிலையிலே மன்னார் நகரில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் நடைபெற்ற அகழ்வுகளின் போது மனித எலும்புக்கூடுகள் வெளி வரத் தொடங்கின. இதென்ன, மன்னாரில் தோண்டும் இடமெல்லாம் மனித எச்சங்களா? என்று இங்கே மக்கள் அரண்டு போயுள்ளனர். ஏராளமான கதைகளும், வதந்திலும் ரெக்கை கட்டுகின்றன.

கடந்த மார்ச் மாதம் 27ம் திகதி மன்னார் எமில் நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கொட்டப்பட்ட மண்ணில் மனித எலும்புகள் காணப்பட்ட தையடுத்து உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைச் செய்தார். இதையடுத்தே மண்ணில் உள்ள எலும்புகள்; சம்மந்தப்பட்ட அகழ்வு பணிகள் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த அகழ்வு பணிகள் தொடர்ந்த போது மேலும் சந்தேகத்தையும் கேள்விகளையும் தோற்று விக்ககூடிய வகையில் மேற்படி வீட்டில் கொட்டப்பட்ட மண்ணில் இருந்து சந்தேகத்திற்கிடமான மனித எலும்புத்துண்டுகள் , பற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.

மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்த கட்டடம் உடைக்கப்பட்டு 'லங்கா சதொச'வுக்கான புதிய கட்டடம் அமைக்கப்படுவதற்கான பணிகள் நடைபெற்று வரும் பகுதியிலேயே இந்த எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. விற்பனை நிலையத்தின் பக்கம் திருப்பியுள்ளது.

குறித்த வளாகத்தில் இருந்து அகழ்வு செய்யப்பட்ட மண் மன்னாரில் உள்ள பல பகுதிகளுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்த காரணத்தினால் இவ் அகழ்வு பணிகளை மேற்கொள்வதில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் விற்பனை செய்யப்பட்ட மண்ணை கொள்வனவு செய்த மக்களையும் 'சதொச' வளாகத்தில் இருந்து மண்ணை ஏற்றி விநியோகித்த வாகன சாரதிகளையும் உடனடியாக பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்து இது தொடர்பான தகவல்களை வழங்குமாறு மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா உத்தரவிட்டுள்ளார்.

இச் செயற்பாடுகளைத் தொடர்ந்து 'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகத்திலும் குறித்த வளாகத்தில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட மோலதிக மண்னை பராமரித்து வைத்திருந்த மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் உள்ள மண் ஆகியவற்றை ஒரே நேரத்தில் அகழ்வு செய்யும் பணிகள் ஆரம்பமானது. அச்சத்தையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தும் வகையில் 'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகம் மற்றும் மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் கொட்டப்பட்ட மண் குவியல்களில் இருந்து தொடர்ச்சியாக மனித எச்சங்கள் மீட்கப்பட்டன.f0-2_5.jpg

இப் பணிகள் இடம் பெற்று கொண்டிருந்த அதே சமயத்தில் குறித்த வளாக பகுதியானது ஓரு மாயானமாக இருந்த இடம் என கதை ஒன்று ஆதாரங்கள் இன்றி பரவ விடப்பட்டிருக்கிறது.

ஆனாலும் அகழ்வு பணிகளில் புலப்பட்ட மனித எச்சங்கள் சந்தேகத்தை வேறு திசைக்கு கொண்டு சென்றன.

இதனால் இந்த அகழ்வு பணியானது அனைவரின் கவனத்தைக் கவரத் தொடங்கியது.

 

 
 

மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்ட அகழ்வு பணியின் போது விசேட சட்ட வைத்திய நிபுணர் டபில்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையிலான குழுவினர், களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா தலைமையிலான குழுவினர், காணாமல் போனவர்களின் குடும்பங்கள் சார்பாக சட்டத்தரணிகளான வி.எஸ்.நிரைஞ்சன், திருமதி ரணித்தா ஞானராஜ் , விசேட தடவியல் நிபுணத்துவ பொலிஸார், மற்றும் அழைக்கப்பட்ட திணைக்களங்கள் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

முதலில் நில மட்டத்தில் இருந்து சுமார் 4 தொடக்கம் 6 அடி ஆழத்தில் மனித எச்சங்கள் பரவலாக காணப்பட்டமை கண்டு பிடிக்கப்பட்டது. இடம் பெற்று வருகின்ற அகழ்வு பணிகளின் போது மனித எச்சங்கள்,மனித தலை மற்றும் முழுமையான மனித எலும்புக்கூடுகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதோடு, பல்வேறு தடைய பொருட்களும் அகழ்வின் போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. மனித எச்சங்கள் என சந்தேகிக்கும் பல்வேறு எலும்புத்துண்டுகள் மீட்கப்பட்டுள்ளதோடு, பிஸ்கட் பக்கட்டின் பொலித்தீன் பை மற்றும் உடைந்த பானை துண்டுகள் என்பனவும் கண்டு பிடிக்கப்பட்டன.

குறித்த பிஸ்கட் பக்கட் பொலித்தீன் பையில் காணப்படக்கூடிய உற்பத்தி திகதியை கண்டு பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது ஒரு சான்றாகக் கருதப்பட்ட நிலையில், நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா இடமாற்றம் பெற்றுச் சென்ற நிலையில்,மன்னார் நீதவானாக ரி.ஜே.பிரபாகரன் நியமிக்கப்பட்டு தற்போது அவர் முன்னிலையில் அகழ்வுகள் இடம் பெற்று வருகின்றன.

இவை இவ்வாறிருக்க, குறித்த அகழ்வு பணிகள் சர்வதேசத்தின் பக்கம் திரும்பியுள்ளன.

தற்போது வரை 20 தடவைகள் அகழ்வு பணிகள் இடம் பெற்றுள்ளன. தொடர்ந்தும் மனித எலும்புக் கூடுகள் வெளிவந்த வண்ணமே உள்ளன. இதன் உண்மை நிலையை கண்டறியவேண்டிய நிலை உள்ளது.குறித்த பகுதி கடந்த காலங்களில் மயானமாக காணப்பட்டதாக ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

காணாமல் போன, கடத்தப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

எனினும் உண்மை விபரங்கள் தெரியாத நிலையில் மக்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.f0-1_20.jpg

அகழ்வு பணிகள் இடம் பெற்று வரும் வளாகத்தைச் சூழ்ந்த பகுதிகளில் கடந்த காலங்களில் இராணுவம் மற்றும் கடற்படையினர் நிலை கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த காலங்களில் மன்னார் நுழைவாயிலில் காவலரண் அமைத்திருந்த இராணுவத்தின் கடும் சோதனைக்கு பின்னரே மக்கள் மன்னாரை விட்டு வெளியே செல்லவும் முடியும். உள்ளே வரவும் முடியும் என்ற ஒரு அச்சமும் அதிகாரமும் மிகுந்த காலம் ஒன்றிருந்தது.

இந்த நிலையில் மன்னார் நகர மத்தில் எப்படி மனித புதை குழி வந்திருக்க முடியும் என்கின்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மக்கள் நீதியை மட்டுமே நம்பியுள்ள இக்கால கட்டத்தில் மக்களின் நம்பிக்கைக்கு அமைவாக உண்மைகள் வெளிப்பட வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.

http://www.vaaramanjari.lk/2018/06/24/கட்டுரை/மன்னார்-நகர்-மத்தியில்-மனித-புதைகுழிகள்-எவ்வாறு-வந்திருக்க-முடியும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.