Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெற்றோர் அல்லது அங்கீகரிக்கப்பட்டவர்களே ஆரம்ப பிரிவு மாணவர்களை அழைத்து செல்ல முடியும்: வடக்கில் வருகிறது புதிய நடைமுறை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெற்றோர் அல்லது அங்கீகரிக்கப்பட்டவர்களே ஆரம்ப பிரிவு மாணவர்களை அழைத்து செல்ல முடியும்: வடக்கில் வருகிறது புதிய நடைமுறை!

June 28, 2018
29694740_914250048753277_659822084795609

வடக்கு மாகாண பாடசாலைகளில் ஆரம்ப வகுப்புகளில் கல்வி கற்கும் மாணவர்களை, பாடசாலை முடிந்ததும் பெற்றோர்களோ அல்லது பெற்றோர்களால் பெயர் குறிப்பிடப்பட்டு நியமிக்கப்பட்டவர்களோ மட்டுமே வந்து அழைத்துச் செல்ல வேண்டும் என வடமாகாண கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் அறிவித்துள்ளார்.

மாணவி சிவனேஸ்வரன் ரெஜினாவின் படுகொலை தொடர்பாக அவர் வெளியிட்ட பத்திரிகைச் செய்திக் குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

 

சுழிபுரம் காட்டுப்புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி கற்றுக் கொண்டிருந்த மாணவி சிவனேஸ்வரன் ரெஜினா பாடசாலையில் இருந்து வீட்டுக்கு வந்ததன் பின்னர், ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்டு, படுகொலை செய்யப் பட்டார்.

இத்தகைய துன்பகரமான சம்பவங்கள், எதிர்காலத்தில் நிகழாது இருக்க, சிறுபிள்ளைகள் தொடர்பான பெற்றோர்களின் விழிப்புணர்வு, அவசியமானதாகும். எனினும் எதிர்காலத்தில் சிறுவர்க ளுக்கு இத்தகைய ஆபத்துக்கள் ஏற்படுவதைக் குறைக்கக் கூடிய வகையில் வடமாகாணக் கல்வி அமைச்சு தனது வரையறை களுக்குள், நடவடிக்கைகள் மேற்கொள்வதற்குத் தீர்மானித்துள்ளது.

வடக்கு மாகாணத்தின், பாடசாலைகளில் ஆரம்ப வகுப்புகளில் கல்வி கற்கும் மாணவர்களை, பாடசாலை முடிந்ததும் பெற்றோர்களோ அல்லது பெற்றோர்களால் பெயர் குறிப்பிடப்பட்டு நியமிக்கப்பட்டவர்களோ மட்டுமே வந்து அழைத்துச் செல்ல வேண்டும் என்ற நடைமுறையைச் செயற்படுத்தத் தீர்மானித்துள்ளோம்.

இது எதிர்காலத்தில் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஒரு நடைமுறையாகவும் இருக்கும்“ என்றுள்ளது.

 

http://www.pagetamil.com/9898/

  • கருத்துக்கள உறவுகள்

சமுதாய கட்டமைப்பு மாற்றத்திற்கு, ஓர் அரசு சார்ந்த முதலாவது சமூக பாதுகாப்பு நடைமுறை.

யுத்தம் சமூக கட்டமைப்பை மாற்றிவிட்டது. அதாவது, முன்பு  ஊரில் இருப்பவர்கள் யார் என்பது அக்கு வேறை ஆணி வேறையாக தெரியும். எவர் எந்நேரம் அநேகமாக வீட்டில் அல்லது வெளியில் இருப்பர் என்றும் தெரியும்.

இது தலை கீழாக மாறி விட்டது.

அமைச்சரின் நடவடிக்கை காலதாமதமாயினும், சிந்தித்து , அந்தந்த இடத்தில் (localality) உடனடியாக செயட்படுத்தக்கூடிய நடைமுறைகளுக்கு சட்ட வலு உடனடியாக அளிப்பது வரவேற்கப்படவேண்டும்.

அமைச்சரிடம், இன்னுமொரு வேண்டுகோள்.

சிறார்களை (0 -13), தாய், தந்தை அல்லது தாய் அல்லது தந்தை நம்பும் மற்றும் பிள்ளைகளுக்கு தெரிந்த ஒருவரின் மேற்றுப்பார்வை இன்றி வீட்டிலோ அல்லது  வேறு இடத்திலோ தனிமையாக விட்டு செல்வதை தவிர்ப்பதை கருத்தில் எடுத்து நடைமுறைப்படுத்த வேண்டும்.
   

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.