Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இணைந்து வந்தார்கள்- பிரிந்து சென்றார்கள்!!

Featured Replies

இணைந்து வந்தார்கள்- பிரிந்து சென்றார்கள்!!

 

 

sampanthan-a-750x430-1-750x430.jpg

 
 
 
 

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னின் உரை­கள் அடங்­கிய ‘நீதி­ய­ர­சர் பேசு­கின்­றார்’ என்ற நூல் கடந்த 24ஆம் திகதி யாழ்ப்­பா­ணம்–வீர­சிங்­கம் மண்­ட­பத்­தில் வெளி­யி­டப்­பட்­டது. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­த­னும் அந்த மேடை­யில் அமர்ந்­தி­ருந்­தார். விக்­னேஸ்­வ­ரன் ஆத­ரவு அணி­யும், கூட்­ட­மைப்­பி ­ன­ரும் சங்­க­மித்த நிகழ்­வாக அது அமைந்­தது.

5ஆண்­டு­கள் அஞ்­சா­த­வா­சம்
கிட்­டத்­தட்ட 5ஆண்­டு­க­ளுக்கு முன்­பாக, 2013ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபைத் தேர்­த­லில் வெற்­றி­பெற்ற மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளின் பத­வி­யேற்பு வைப­வ­மும் வீர­சிங்­கம் மண்­ட­பத்­தி­லேயே நடை­பெற்­றி­ருந்­தது. வீர­சிங்­கம் மண்­ட­பத்­தில் விக்­கி­யும், சம்பந்­த­னும் அன்று சங்­க­மித்­தி­ருந்­தார்­கள். 5 ஆண்­டு­கால இடை­வெ­ளி­யின் பின்­னர் மீண்­டும் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இவர்­கள் இரு­வ­ரும் வீர­சிங்­கம் மண்­ட­பத்­தில் இணைந்­தி­ருந்­தார்­கள்.

2013ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபைத் தேர்­தல் நடை­பெற்­றது. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் முத­லா­வது பரப்­பு­ரைக் கூட்­டம் வீர­சிங்­கம் மண்­ட­பத்­தில் 2013ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி நடை­பெற்­றது. வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் இரு­வ­ரும் இந்த மண்­ட­பத்­தில் முதன்­மு­த­லில் இணைந்­தது அன்­று­தான். அன்­றைய கூட்­டத்­தில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் ஏனைய பங்­கா­ளிக் கட்­சி­க­ளின் தலை­வர்­க­ளான சுரேஷ் பிரே­ம­சந்­தி­ரன், சித்­தார்த்­தன், செல்­வம் அடைக்­க­ல­நா­தன், ஆனந்­த­சங்­கரி ஆகியோர் கூட மேடை­யே­றி­யி­ருந்­தார்­கள்.

 

விக்கிக்காகப் புறக்­க­ணிப்பு
இவ்­வாறு ஒன்­றாக மேடை­யே­றி­ய­வர்­கள், வடக்கு மாகாண சபைத் தேர்­தல் முடிந்து உறுப்­பி­னர்­க­ளின் பத­வி­யேற்­புக்கு இடை­யி­லேயே பிள­வு­பட்­டார்­கள். 2013ஆம் ஆண்டு ஒக்­ரோ­பர் மாதம் 11ஆம் திகதி வீர­சிங்­கம் மண்­ட­பத்­தில் கூட்­ட­மைப்­பின் மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளின் பத­வி­யேற்பு இடம்­பெற்­றது. வடக்கு மாகாண சபைக்­குத் தெரிவு செய்­யப்­பட்ட கூட்­ட­மைப்­பின் 30உறுப்­பி­னர்­க­ளில் 9பேர் பங்­கேற்­க­வில்லை. கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சி­க­ளான ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ மூன்று கட்­சி­க­ளும் நிகழ்­வைப் புறக்­க­ணித்­தன. வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், அப்­போ­தைய அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச முன்­பா­கப் பத­வியேற்றறதைச் சுட்­டிக்­காட்டி இந்­தப் புறக்­க­ணிப்பை மூன்று கட்­சி­க­ளும் மேற்­கொண்­டி­ருந்­தன. அந்­தக் கட்­சி­க­ளைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­திய மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளும் பத­வி­யேற்­பில் பங்­கேற்­க­வில்லை.

ஒற்­று­மைக் கோசம்
2013ஆம் ஆண்டு ஒக்­ரோ­பர் 11ஆம் திகதி நடந்த அன்­றைய கூட்­ட­மும், 2018ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் திகதி நடந்த நிகழ்­வும் தாங்கி நின்ற கோசம் ‘ஒற்­றுமை’. 2013ஆம் ஆண்டு எழுப்­பப்­பட்ட ஒற்­று­மைக் கோசம் கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சி­க­ளுக்­கா­னது. 2018ஆம் ஆண்­டில் பேசப்­பட்ட ஒற்­று­மைக் கோசம் விக்­கிக்­கா­னது.

2013ஆம் ஆண்டு, தந்தை செல்வா நினை­வுத் தூபி­யி­லி­ருந்து தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை.சேனா­தி­ராசா, வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் ஆகி­யோர் மேள­தா­ளங்­க­ளு­டன் வீர­சிங்­கம் மண்­ட­பத்­துக்கு ஒன்­றாக அழைத்து வரப்­பட்­டார்­கள். 2018ஆம் ஆண்­டில் நடந்த முத­ல­மைச்­ச­ ரின் புத்­தக வெளி­யீட்­டில், வீர­சிங்­கம் மண்­ட­பத்­துக்கு நேர காலத்­து­டன் வந்­தி­ருந்த முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன், எதிர்க்­கட்­சித் தலை­வர் சம்­பந்­த­னுக்கு மாலை­யிட்டு வர­வேற்­றார்.

வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளின் பத­வி­யேற்­பின்­போது வீர­சிங்­கம் மண்­ட­பம் நிறைந்­தி­ருந்­தது. முத­ல­மைச்­ச­ரின் புத்­தக வெளி­யீட்­டின்­போது அரங்­கின் அரை­வா­சிப் பகுதி வெறு­மை­யா­கவே கிடந்­தது. 2013ஆம் ஆண்டு பத­வி­யேற்­பின்­போது, மண்­ட­பத்­தில் அரை­வாசி இடத்­தைப் பிடித்­தி­ருந்­த­ வர்­கள் மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளின் உற­வு­கள். முத­ல­மைச்­ச­ரின் நூல் வெளி­யீட்­டில் ஒரு பகுதி இடத்­தைப் பிடித்­தி­ ருந்­த­வர்­கள், சிறப்­புப் பிரதி வாங்க வந்­தி­ருந்த வர்த்­த­கர்­க­ளும், முத­ல­மைச்­ச­ரின் அமைச்­ச­கப் பணி­யா­ளர்­க­ளும்.

ஆன்மிக அர­சி­யல்
2013ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­கள் பத­வி­யேற்பு நிகழ்­வில் ஆன்மி­க­வா­தி­கள் மேடை­யி­லி­ருந்­தார்­கள். அன்­றைய சூழ­லில் கூட்­ட­மைப்­பின் நிகழ்வு ஒன்­றில் ஆன்மிகத் தலை­வர்­கள் மேடையை அலங்­க­ரித்­தி­ருந்­தது பெரும் ஆச்­ச­ரி­யத்­து­டன் பார்க்­கப்­பட்­டது. நீண்ட இடை­வெ­ளி­யின் பின்­னர் ஆன்மிகத் தலை­வர்­கள் அந்த மேடை­யில் அர­சி­யல் பேசி­னார்­கள். ‘ஒற்­றுமை’ கோசத்தை அவர்­க­ளும் அன்று வலி­யு­றுத்தத் தவ­ற­வில்லை.

முத­ல­மைச்­ச­ரின் புத்­தக வெளி­யீட்­டில் ஆன்மிகத் தலை­வர்­க­ளில் ஒரு­சா­ரர் மாத்­தி­ரம் அழைக்­கப்­பட்­டி­ருந்­த­னர். அவர்­கள் மேடை­யே­றி­னர். ஆனால் அர­சி­யல் பேச்­சுக்­க­ளுக்கு முன்­பா­கவே அங்­கி­ருந்து அவர்­கள் வெளி­யே­றி­விட்­ட­னர். வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளின் பத­வி­யேற்பு நிகழ்­வில், எதிர்­கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­த­னுக்­கும், வடக்கு முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னுக்­கும் கிரீ­டம் சூட்டி அழ­கு­பார்த்­த­னர் தமி­ழ­ரசு ஆத­ர­வா­ளர்­கள். விக்­கிக்கு வேலும் கொடுத்­த­னர். ஆனால் புத்­த­க­வெ­ளி­யீட்­டில், விக்­கிக்கு மாத்­தி ­ரமே ஆன்மி­கத் தலை­வர்­கள் பொன்­னாடை போர்த்­தி­னர்.

மாறிய காட்சி
2013ஆம் ஆண்டு நிகழ்­வில் விக்­கி­யு­டன் முரண்­பட்டு சுரேஷ்­பி­ரே­ம­சந்­தி­ரன் பத­வி­யேற்­பில் பங்­கேற்­க­வில்லை. அவ­ரது தம்­பி­யா­ரும் அன்­றைய நிகழ்­வில் கலந்­து­கொள்­ள­வில்லை. முத­ல­மைச்­ச­ரின் புத்­த­க­வெ­ளி­யீட்­டி­லும் சுரேஷ்­பி­ரே­ம­சந்­தி­ரன் பங்­கேற்­க­வில்லை. இன்று முத­ல­மைச்­ச­ ரு­டன் ஊடாட்­டம் நன்­றாக இருந்­தா­லும், புத்­தக வெளி­யீடு நடந்த தினத்­தன்று வவு­னி­யா­வில் நடை­பெற்ற தியா­கி­கள் தினத்­தில் பங்­கேற்­ற­தால் சுரேஷ்­பி­ரே­ம­சந்­தி­ரன் பங்­கு­கொள்­ள­வில்லை. அன்று அமைச்­சுப் பதவி கிடைக்­கா­மை­ யால் பங்­கேற்­காத சுரேஷ்­பி­ரே­ம­சந்­தி­ர­னின் சகோ­த­ரர் சர்­வேஸ்­வரன், இன்று அமைச்­சர் பத­வி­யைப் பெற்­ற­தால், தியா­கி­கள் தினத்­தில் பங்­கேற்­கா­மல் முத­ல­மைச்­ச­ரின் புத்­தக வெளி­யீட்­டில் முன்­வ­ரி­சை­யில் அமர்ந்­தி­ருந்­தார்.

அதிஷ்­டக்­கா­ரன்
மாகா­ண­சபை உறுப்­பி­ன­ரா­கத் தெரி­வான பங்­கா­ளிக் கட்­சித் தலை­வ­ரான சித்­தார்த்­தன் பத­வி­யேற்பு நிகழ்­வில், பங்­கா­ளி­க­ளு­டன் கூட்­டுச் சேர்ந்து புறக்­க­ணித்­தி­ருந்­தார். இப்­போது எந்­தப் பக்­கம் நிற்­பது என்ற குழப்­பத்­தில் இருக்­கும் அவர், முத­ல­மைச்­ச­ரின் புத்­த­க­வெ­ளி­யீட்­டில் முன்­வ­ரி­சை­யில் அமர்ந்­தி­ருந்­தார். ஆனால் நேர காலத்­து­டன் போய்­விட்­டார். நீர்­வே­லிச் சவா­ரித் திட­லில் நடை­பெற்ற மாட்­டு­வண்­டிச் சவா­ரியை ஆரம்­பித்து வைப்­ப­தற்­கா­கவே அவர் அங்­கி­ருந்து வெளி­யே­றி­யி­ருந்­தார்.

பங்­கா­ளிக் கட்­சித் தலை­வர்­கள் வரி­சை­யில் ‘அதிஷ்­டக் காரன்’ செல்­வம்­அ­டைக்­க­ல­நா­தன் மட்­டுமே. 2013ஆம் ஆண்டு பத­வி­யேற்­பி­லும் முதல்­வ­ரிசை, இன்­றைய புத்­த­க­வெ­ளி­யீட்­டி­லும் முன்­வ­ரிசை. தனது கட்சி பத­வி­யேற்பு நிகழ்­வைப் புறக்­க­ணித்­த­போ­தும், அந்த நிகழ்­வில் பங்­கேற்று தமிழ் அர­சுக் கட்­சி­யின் விசு­வா­சி­யாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தார். முதல்­வர் விக்­கிக்கு நெருக்­க­மா­ன­வ­ராக இருப்­ப­தாலோ என்­னவோ புத்­தக வெளி­யீட்­டில், தமிழ் அர­சுக் கட்­சிக்­கா­ரர்­க­ளுக்கு எதிர்ப் பக்­கத்­தில் அவ­ருக்கு ஆச­னம் ஒதுக்­கப்­பட்­டது. அல்­லது அவர் அந்த ஆச­னத்­தைத் தேடிக் கொண்­டார்.

அமைச்­ச­ரா­ன­தால் வந்த நிலை
ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்­பாக மாகா­ண­சபை உறுப்­பி­ன­ரான ஐங்­க­ர­நே­சன், அமைச்­சுப் பத­வியை ஏற்­ற­தால் பத­வி­யேற்பு நிகழ்வை அவ­ரது கட்சி புறக்­க­ணித்­த­போ­தும் அவர் பங்­கேற்­றார். அமைச்­சுப் பதவி பறிக்­கப்­பட்ட பின்­ன­ரும் முத­ல­மைச்­ச­ரின் அர­வ­ணைப்­பால் புத்­த­க­வெ­ளி­யீட்­டில் அவர் பங்­கேற்­றார். அன்று ஈ.பி.ஆர்.எல்.எவ். உறுப்­பி­ன­ராக இருந்­த­தால் பங்­கேற்­காத முல்­லைத்­தீவு மாவட்ட மாகா­ண­சபை உறுப்­பி­னர் து.ரவி­க­ரன், இன்று தமிழ் அர­சுக் கட்சி உறுப்­பி­ன­ராக இருந்­தும் விக்­கி­யின் புத்­தக வெளி­ யீட்­டில் பங்­கேற்­றார்.

ரெலோ­வின் மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே.சிவா­ஜி­லிங்­கம் அன்று பத­வி­யேற்­பைப் புறக்­க­ணித்­தி­ருந்­தார். புத்­த­க­வெ­ளி­யீட்­டில் இரண்­டா­வது வரி­சை­யில் அமர்ந்­தி­ருந்­தார். பத­வி­யேற்­பைப் புறக்­க­ணித்த மாகாண சபை உறுப்­பி­னர் ஜி.குண­சீ­லன், இன்று அமைச்­சர் என்­ப­தால் முதல்­வ­ரின் புத்­தக வெளி­யீட்­டில் முதல்­வ­ரி­சை­யில் அமர்ந்­தி­ருந்­தார். பத­வி­யேற்­பில் முத­ல­மைச்­ச­ரு­டன் நெருக்­க­மாக இருந்த அவைத் தலை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னத்தை, புத்­த­க­வெ­ளி­யீட்­டில் காணக்­கி­டைக்­க­வில்லை.

புது­மு­கங்­கள்
அன்­றைய பத­வி­யேற்பு நிகழ்­வில் அழைக்­கப்­ப­டாத தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் செல்­வ­ராஜா கஜேந்­தி­ரன், ஈ.பி.டி.பியின் செய­லர் டக்­ளஸ் தேவா­னந்தா, சந்­தி­ர­கு­மார், எதிர்க் கட்­சித் தலை­வர் தவ­ராசா என்று சிலர் புத்­தக வெளி­யீட்­டில் புது­மு­கங்­க­ளா­கப் பங்­கேற்­றி­ருந்­தார்­கள்.

அர­சி­யல் தலை­வர்­கள் சில­ருக்­குப் புத்­த­க­வெ­ளி­யீட்­டுக்­கான அழைப்­பி­தழ்­கள் அனுப்­பப்­ப­ட­வே­யில்லை. ஆனால், அரச அதி­கா­ரி­கள் பல­ருக்­கும் அழைப்­பி­தழ்­கள் வலிந்து அனுப்பி வைக்­கப்­பட்­டன.

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் வேட்­பா­ள­ராக மாவை.சேனா­தி­ரா­சவே கள­மி­றங்­கு­வார் என்று 2013ஆம் ஆண்டு எதிர்­பார்ப்பு இருந்­தது. ஆனால் சடு­தி­யாக எல்­லாம் மாறி விக்­னேஸ்­வ­ரன் கள­மி­றக்­கப்­பட்­டார். இத­னால் மாவைக்­கும் விக்­கிக்­கும் இடை­யி­லான அந்­நி­யோன்­னி­யம் அன்­றைய பத­வி­யேற்­பி­லும் குறை­வாக இருந்­தது.

இன்­றும் அவ்­வா­றா­ன­தொரு சூழலே இருக்­கின்­றது. மாவை கூட்­ட­மைப்­பின் முத­ல­மைச்­சர் வேட்­பா­ளர் என்று அவ­ரின் கட்­சி­யி­னர் கூறிக் கொண்­டி­ருக்­கின்­ற­னர். முதல்­வர் விக்­னேஸ்­வ­ர­னும் கூட்­ட­மைப்­பில் இடம் கிடைத்­தால் கள­மி­றங்­கத் தயார் என்ற நிலை­யி­லேயே இருக்­கின்­றார்.

இந்­தப் புத்­த­க­வெ­ளி­யீட்­டில் விக்கி–மாவை இடையே பகைமை கொப்­ப­ளித்­துக் கொண்­டி­ருந்­தா­லும், முகத்­துக்­கா­ கப் புன்­ன­கைத்­துக் கொண்­ட­னர்.

கைதட்­ட­லும் விசி­ல­டிப்­பும்
பத­வி­யேற்பு நிகழ்­வில் விக்­கிக்கு நெருக்­க­மாக இருந்த அவ­ரது மாண­வ­னும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன், புத்­த­க­வெ­ளி­யீட்டு நிகழ்­வில் முன்­வ­ரிசை விருந்­தி­னர் மாத்­தி­ரமே. தன் மாண­வன் மீது தனக்­கி­ருக்­கும் ‘காய்ச்­சலை’ தனது உரை­யில் விக்கி வெளிப்­ப­டுத்­தி­யும் இருந்­தார். பத­வி­யேற்பு நிகழ்­வில் விக்­னேஸ்­வ­ரன் உரை­யாற்­றும்­போது விசி­ல­டி­யும் கைதட்­ட­லும் என்று வீர­சிங்­கம் மண்­ட­பம் அதிர்ந்­தது. புத்­த­க­வெ­ளி­யீட்­டி­லும் அது தொடர்ந்­தது. அன்று கைதட்டி விசி­ல­டித்­த­வர்­கள் தமிழ் அர­சுக் கட்­சிக்­கா­ரர்­கள். இன்று கைதட்டி விசி­ல­டித்­த­வர்­கள் தமிழ் அர­சுக்கு எதி­ரா­ன­வர்­கள்.

2013ஆம் ஆண்டு சுரேஷ்­பி­ரே­ம­சந்­தி­ரன் தனது தம்­பிக்கு வடக்கு அமைச்­ச­ர­வை­யில் அமைச்­சுப் பதவி கேட்­டி­ருந்­தார். அது அவ­ருக்கு வழங்­கப்­ப­ட­வில்லை. இந்த நிலை­யில் தனது உரை­யில் முத­ல­மைச்­சர், ‘‘பொது­வாழ்­கை­யில் வலி­யு­றுத்­தப்­ப­டும் ஏழு கொள்­கையை இந்­தத் தரு­ணத்­தில் எடுத்­தி­யம்­பு­வது உசி­தம் என்று நான் கரு­து­கின்­றேன். முத­லா­வது சுய­ந­ல­மின்மை.

அதா­வது பொது­வாழ்க்­கை­யில் நுழை­ப­வர்­கள் எப்­பொ­ழு­துமே பொது­ந­லம் கரு­தியே முடிவு எடுக்­க­வேண்­டும். தமக்கோ தமது குடும்­பத்­தா­ ருக்கோ, தமது நண்­பர்­க­ளுக்கோ, தமது தம்­பி­மார்­க­ளுக்கோ நிதி சார்­பான அல்­லது வேறு­வ­கை­யான நன்­மை­கள் பெறக் கரு­தியோ முடி­வு­கள் எடுக்­கக் கூடாது’’ என்று குறிப்­பிட்­டி­ ருந்­தார். இந்த உரை­யாற்­றும்­போது, ‘‘தமது தம்­பி­மார்­க­ளுக்கோ’’ என்ற வச­னத்தை அழுத்தி இரண்டு தட­வை­கள் குறிப்­பிட்­டி­ருந்­தார் முத­ல­மைச்­சர். இந்த உரை­யின்­போதே அரங்­கில் விசில் சத்­த­மும், கைதட்­டல்­க­ளும் காதைப் பிளந்­தன.

புத்­தக வெளி­யீட்­டில் முத­ல­மைச்­சர் உரை­யாற்­றும்­போது, தமிழ் அர­சுக் கட்­சியை மறை­மு­க­மா­கக் குத்­திக் காட்­டிப் பேசும்­போதே விசி­ல­டி­யும், கைதட்­ட­லும் அரங்­கில் ஒலித்­தது. இந்­தச் சத்­தங்­கள் எழுந்­த­போது தனது உரையை நிறுத்தி அந்­தச் சத்­தங்­கள் அடங்­கும் வரை அமைதி காத்­தார் முதல்­வர். இவற்றை முதல்­வர் இர­சித்­தாரா இல்லை, அங்­கி­ருந்த தனது தற்­போ­தைய பகை­யா­ளி­க­ளுக்­குத் தனது ‘பவர்’ என்ன என்­ப­தைக் காட்ட முனைந்­தாரா என்­பது புரி­ய­வில்லை.

ஏன் வந்­தார்­கள்?
வடக்கு மாகாண சபை­யின் அதி­கா­ரி­கள் பல­ரும் 2013ஆம் ஆண்டு முதன் முறை­யா­கக் கூட்­ட­ மைப்­பின் நிகழ்­வில் பங்­கேற்­றி­ருந்­தார்­கள். புத்­த­க­வெ­ளி­யீட்­டின்­போது அங்­கொன்­றும் இங்­கொன்­று­மாக அரச அதி­கா­ரி­க­ளைக் காண முடிந்­தது. புத்­த­க­வெ­ளி­யீட்டு நிகழ்வை முழு­வ­து மாக ஏற்­பாடு செய்து, வந்­தோ­ரைக் கவ­னித்­துக் கொண்­ட­வர்­கள் அரச பணி­யா­ளர்­கள். முத­ல­மைச்­ச­ரின் அமைச்­ச­கத்­தில் பணி­யாற்­று­ப­வர்­களே அங்கு நின்­றி­ ருந்­தார்­கள். அரச அதி­கா­ரி­கள் முத­ல­மைச்­ச­ரின் தனிப்­பட்ட நிகழ்­வில் பங்­கேற்­றது சரியா? என்ற கேள்­வி­யும் எழா­மல் இல்லை. முத­ல­மைச்­சர் மீதான அன்­பால் வந்­தார்­களா? அல்­லது கட்­ட­ளை­யால் வந்­தார்­களா? என்­ப­தும் தெரி­ய­வில்லை.

புத்­த­க­வெ­ளி­யீடு உரிய நேரத்­துக்கு ஆரம்­ப­மா­னா­லும் அது குறிப்­பிட்ட நேரத்­துக்கு முடி­ய­வில்லை. நிகழ்வு ஒழுங்­க­மைப்பு முற்­றா­கச் சொதப்­பி­யி­ருந்­தது. சொதப்­பல்­கள் ஆரம்­பம் முதல் இறு­தி­வரை தொடர்ந்­தன. சிறப்­புப் பிர­தி­கள் பெற்­ற­தும் மண்­ட­பத்­தில் இருந்து டசின் கணக்­கா­னோர் வெளி­யே­றி­னர். சம்­பந்­த­னின் உரை முடிந்­த­தும் மேலும் ஒரு டசின் கணக்­கா­னோர் வெளி­யே­றி­னர். இறு­தி­யில் உரை­யாற்­றிய முத­ல­மைச்­சர், தனது புத்­தக வெளி­யீட்­டி­லேயே தன்னை இப்­ப­டிக் கடை­சி­யாக, பசிக் கொடுமை நேரத்­தில் உரை­ யாற்ற வைத்து விட்­டார்­கள் என்று நொந்து கொண்­டார்.

தாலாட்­டிய பேச்­சா­ளர்­கள்
புத்­தக வெளி­யீட்­டில் முத­ல­மைச்­ச­ருக்கு முன்­னர் பேசிய பேச்­சா­ளர்­கள் பெரும்­பா­லும் மண்­ட­பத்­தில் இருந்­த­வர்­க­ளைத் தூங்க வைத்­து­விட்­டார்­கள். பேரா­சி­ரி­யர் சிற்­றம்­ப­லம் நூல் ஆய்­வுரை என்ற பெய­ரில் புத்­த­கத்தை வாசித்­துச் சலிப்­பூட்­டி­ னார். அவர் தனது உரை­யில், கூட்­ட­மைப்பு மற்­றும் தமிழ் அர­சுக் கட்சி மீது இருக்­கும் கோப­தா­பத்­தை­யும் வெளிப்­ப­ டுத்­தத் தவ­ற­வில்லை. தீர்வு இன்­று­வ­ரும், நாளை வரும் என்று சொல்­லிக் கொண்­டி­ருக்­கின்­றார்­கள் என்று அவர் பேசத் தொடங்­கும்­போதே, கைதட்­டல்­கள் கிளம்­பின.

புத்­தக வெளி­யீட்­டில் பேசிய ஒவ்­வொ­ரு­வ­ரும் முத­ல­மைச்­சரை ஆகா! ஓகோ! என்று புகழ்ந்து தள்­ளி­னார்­கள். பக்­கத்­தி­லி­ருந்த அரச அதி­காரி ஒரு­வர், ‘இது புத்­த­க­வெ­ளி­யீடா? அல்­லது முத­ல­மைச்­ச­ருக்­கான பிரி­யா­வி­டையா?’ என்று புறு ­பு­றுத்­தார். நிகழ்­வின் முடி­வில் முத­லில் சம்மந்­தர் வெளி­யே­றி­னார். அவ­ரு­டன் மாவை.சேனா­தி­ரா­சா­வும் வெளி­யே­றி­னார். இறு­தி­யாக விக்­னேஸ்­வ­ரன் வெளி­யே­றி­னார். தனித் தனி­யா­கப் பிரிந்தே சென்­ற­னர்.

http://newuthayan.com/story/13/இணைந்து-வந்தார்கள்-பிரிந்து-சென்றார்கள்.html

  • தொடங்கியவர்

மீண்டும் தோன்றும் நெருக்கம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.