Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹிட்­லர்- II

Featured Replies

ஹிட்­லர்- II

 

gotha-221-750x430.jpg

 

Sri Lankan Defence Ministry Secretary Gotabaya Rajapaksa (C) rides in a jeep with three forces commanders during a Victory Day parade rehearsal in Colombo on May 17, 2013.

 
 
 

சில தென்­னிந்­தி­யச் சினி­மாப் படங்­கள்­தான் சிங்­கம் I, சிங்­கம் II என்ற விதத்­தில் தொடர்ச்­சி­யாக வௌிவந்து கொண்­டி­ருக்­கும் இன்­றைய கால­கட்­டத்­தில், அஸ்­கி­ரிய பீட அனு­நா­யக்­கர் வெந்­த­றுவ உபாலி தேரர், ஹிட்­லர் II என்­ற­தொரு பாத்­தி­ரத்தை இலங்கை அர­சி­ய­லில் உரு­வாக்க முயல்­கி­றார் என எண்­ணத் தோன்­று­கி­றது.

கோத்­த­பாய ராஜ­பக்­ச­வின் 69ஆவது பிறந்­த­தின கொண்­டாட்ட நிகழ்­வில் வைத்து கோத்­த­பா­ய­வுக்கு ஆசி­வ­ழங்­கிய குறிப்­பிட்ட இந்­தத் தேரர், அடுத்து வர­வுள்ள அரச தலை­வ­ருக்­கான தேர்­த­லில் கோத்­த­பாய ராஜ­பக்ச போட்­டி­யிட்டு வெற்­றி­பெற்று, இலங்­கையை ஹிட்­ல­ரின் வழி­யிலே முன்­னெ­டுத்­துச் செல்ல வேண்­டும் என கருத்து வௌியிட்­டமை நாட்­டில் பெரும் சர்ச்­சையை கிளப்­பி­விட்­டி­ருக்­கி­றது.

நாட்­டின் சாதா­ரண குடி­ம­கன் ஒரு­வன், இப்­ப­டி­யான ஒரு கருத்தை வௌியிட்­டி­ருந்­தால் அதனை ஓர­ள­வுக்கு கணக்­கில் எடுக்­காது புறம்­தள்ளி விட­லாம். ஆனால் புத்­த­பெ­ரு­மா­னின் கருணை, தர்­மம், அன்பு, சமா­தா­னம் என்­னும் கொள்­கை­க­ளைப் போதித்து பெளத்த மதத்­த­வர்­களை அவற்­றைப் பின்­பற்­றிச் செயற்­பட வைப்­பிக்க வேண்­டிய பௌத்த துற­வி­யொ­ரு­வர், ஹிட்­ல­ரின் வழி­யில் நாட்டை முன்­னெ­டுத்­துச் செல்ல வேண்­டும் என்று கருத்­துத் தெரி­விப்­பது, பல­ரின் வெறுப்­புக்­கும் அதி­ருப்­திக்­கும் வழி­யேற்­ப­டுத்தி வைத்­துள்­ளது. தேர­ரின் இந்­தக் கூற்று, கோத்­த­பாய ஒரு ஹிட்­லர் போன்­ற­வர் என்­பதை சொல்­லா­மல் சொல்­லி­விட்­டது. தேரர் தமது ஆசி­யு­ரை­யின் போது ‘‘சிலர் உங்­களை ஹிட்­லர் என வர்­ணிக்­கி­றார்­கள். நீங்­கள் ஹிட்­ல­ரா­கவே இருங்­கள், இரா­ணுவ வழி­யில் இந்த நாட்டை வழி­ந­டத்­துங்­கள்’’ எனத் தெரி­வித்­தி­ருந்­தார்.

 

உபாலி தேர­ரது சர்ச்­சைக்­கு­ரிய
கருத்­துத் தொடர்­பாக
வெளி­யா­கும் விமர்­ச­னங்கள்
உபாலி தேர­ரின் மேற்­கு­றித்த கருத்து அர­ச­த­லை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்­றும் அமைச்­சர் மங்­கள சம­ர­வீர ஆகி­யோ­ரின் மனங்­க­ளைப் புண்­ப­டுத்­தி­யது மட்­டு­மல்­லாது, அவர்­க­ளைக் கடும் சீற்­றத்­திற்­கும் உள்­ளாக்கி விட்­டி­ருந்­தது. சமூக ஊட­கங்­கள் குறித்த இந்­தச் செய்­தியை தத்­த­மது தேவைக்கு ஏற்ற வகை­யில் திரி­வு­ப­டுத்தி வௌியிட்­டுள்­ளன.

நிக்­க­வ­ரட்­டிய என்ற இடத்­தில் இடம்­பெற்ற ஒரு நிகழ்­வில் கலந்து கொண்டு உரை­யாற்­றிய அர­ச­த­லை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, 2015ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 8ஆம் திகதி, இந்த நாட்டு மக்­கள் சர்­வா­தி­கார ஆட்­சிக்கு எதி­ரா­கவே வாக்­க­ளித்­துள்­ள­னர் என­வும், மீண்­டும் இலங்­கை­யில் அப்­படி ஒரு சர்­வா­தி­கா­ரப் போக்­குக்­கொண்ட அரசு உரு­வாக தாம் ஒரு­போ­தும் இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்லை என்­றும் கூறி­யுள்­ளார். தொடர்ந்து கருத்து வௌியிட்ட அர­ச­த­லை­வர், கடந்த அர­ச­த­லை­வர் தேர்­த­லில் மக்­கள், உண­வுக்­கா­கவோ, தொழில்­வாய்ப்­பு­க­ளுக்­கா­கவோ வாக்­க­ளிக்­க­வில்லை. நாட்­டில் சுதந்­தி­ர­மும், ஜன­நா­ய­க­மும் மல­ர­வேண்­டும் என்­ப­தற்­கா­கவே மக்­கள் வாக்­க­ளித்­த­னர். நான் அவர்­க­ளுக்­குத் தேவைப்­பட்­டதை நிறை­வேற்­றிக் கொடுத்­துள்­ளேன். இனி மீண்­டும் ஒரு சர்­வா­தி­கா­ரப் போக்­குள்ள ஆட்சி இந்த நாட்­டில் உரு­வாக இடம்­கொ­டுக்­கப்­போவ தில்லை என­வும் தெரி­வித்­தி­ருந்­தார்.

உபாலி தேர­ரின் கருத்து
ராஜ­பக்ச தரப்­பி­னர் மத்­தி­யி­லும்
தாக்­கம் ஏற்­ப­டுத்­தி­யுள்ளது
வெந்­த­றுவ உபாலி தேர­ரின் ஹிட்­லர் பற்­றிய கருத்­தா­னது, ராஜ­பக்­ச­வின் நெருங்­கிய ஆத­ர­வா­ளர்­க­ளுக்­கி­டை­யே­யும் எதிர்­ம­றை­யான விளை­வு­ க­ளையே ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அத்­து­டன் ஊட­கங்­க­ளில் குறிப்­பி­டு­வ­து­போல், ஏற்­க­னவே இரா­ணுவரீதிப் போக்­குக்­கொண்ட ஒரு­வ­ரா­கவே கோத்­த­பாய பொது­வாக எல்­லோ­ரா­லும் நோக்­கப்­ப­டும் நிலை­யில், எரி­கிற நெருப்­பில் எண்­ணெய் ஊற்­றி­னாற்­போன்­ற­தொரு நிலை­யைத் தேர­ரின் கூற்று ஏற்­ப­டுத்­தி­விட்­டுள்­ளது.
ஆயி­னும் அர­ச­த­லை­வ­ருக்­கான தேர்­தல் நடை­பெற இன்­ன­மும் ஒன்­றரை ஆண்­டு­வ­ரை­யான கால இடை­வௌி­யி­ருக்­கும் நிலை­யில், இந்த விஷ­யத்தை காலப்­போக்­கில் பொது­மக்­கள் அநே­க­மாக மறந்­து­வி­டக்­கூ­டும். ஆனால் அர­ச­த­லை­வர் தேர்­தல் நெருங்­கி­வ­ரும் வரை­யில் எங்­க­ளு­டைய அர­சி­யல்­வா­தி­கள் இந்த விவ­கா­ரத்தை நீறு­பூத்த நெருப்­பா­கவே வைத்­தி­ருந்­து­விட்டு, சரி­யான தரு­ணத்­தில் மீண்­டும் ஊதிப் பெருப்­பித்து எரி­யச்­செய்­து­வி­டு­வர். நீதி­மன்­றத்­தின் தீர்ப்­பைக்­கூ­டப் பொருட்­ப­டுத்­தா­மல், அதனை மிதித்­துத் தள்­ளி­விட்டு ஒரு சர்­வா­தி­கா­ரி­போல, அதி­ர­டி­யாக தன்­னு­டைய நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்ட கோத்­த­பா­ய­வைப் பற்­றிய ஞாப­கங்­களை நாட்டு மக்­கள் அவ்­வ­ளவு விரை­வில் மறந்­து­விட மாட்­டார்­கள்.

கோத்­த­பாய முன்­னர் பாது­காப்­புச் செய­ல­ராக
செயற்­பட்ட வேளை­யில் மேற்­கொண்ட
சர்ச்­சைக்­கு­ரிய செயற்­பா­டுகள்
ராஜ­பக்ச ஆட்­சி­யின்­போது, மீதொட்­ட­முல்ல குப்­பை­மேடு விவ­கா­ரத்­திற்கு எதி­ராக அந்­தப் பிர­தே­ச­வா­சி­கள் போராட்­டம் மேற்­கொண்­ட­போது, கோத்­த­பாய, இரா­ணு­வத்­தி­ன­ரைக் கொண்டே அவர்­க­ளின் போராட்­டத்தை முடக்­கி­னார். அன்று அவ்­வி­தம் கோத்­த­பாய செயற்­பட்­டி­ரா­து­விட்­டி­ருந்­தால், மீதொட்­ட­முல்ல மக்­க­ளின் பிரச்­சி­னைக்கு அந்­த­வே­ளை­யி­லேயே ஒரு முடிவு எட்­டப்­பட்­டி­ருக்­கும். அப்­படி ஒரு தீர்வு எட்­டப்­ப­டாத கார­ணத்­தி­னால்­தான், தற்­போ­தைய அர­சின் காலத்­தில் மீதொட்­ட­முல்ல குப்­பை­மேடு சரிந்து பெரி­ய­தொரு அனர்த்­த­மும், உயிர் சேதங்­க­ளும் ஏற்­பட்­டன.

இந்­தச் சம்­ப­வத்தை மக்­கள் இல­கு­வில் மறந்­து­வி­ட­மாட்­டார்­கள். அதைப்­போன்றே கொழும்­பில் கொம்­ப­னித்­தெரு, கிலெனி வீதி­ய­ரு­கில் இருந்த சகல வீடு­க­ளை­யும் இரா­ணு­வத்­தி்ன் உத­வி­யு­டன் இடிப்­பித்து அகற்­றி­யமை மற்­றும் புறக்­கோட்டை நடை­பாதை வியா­பா­ரி­களை அவர்­க­ளது நடை­பாதை வியா­பார நட­வ­டிக்­கை­க­ளி­னின்­றும் முற்­றாக வெளி­யேற்­றி­யமை என்­ப­வற்றை மக்­கள் இன்­ன­மும் மறந்­தி­ருக்க மாட்­டார்­கள்.

ஒரு கேந்­திர நக­ரத்தை அழ­கு­ப­டுத்தி கவர்ச்­சி­யான தோற்­றத்தை உரு­வாக்­கும் பொழுது குடி­சை­களை அகற்­று­வ­தில் தவ­றில்லை என ஒரு­சி­லர் அபிப்­பி­ரா­யப்­ப­ட­லாம். அதே­நே­ரம், இங்கு ஜன­நா­ய­கம் பாது­காக்­கப்­பட வேண்­டி­ய­து­டன், மனித உரிமை மீறல்­க­ளும் இடம்­பெ­று­வதை ஏற்­றுக்­கொள்ள இய­லாது. அப்­ப­டிச் செய்­வது வெந்­த­றுவ உபாலி தேரர் கூறு­வ­து­போல் ஹிட்­லர் ஆட்­சி­யின் வௌிப்­பா­டான சர்­வா­தி­கா­ரத் தன்­மையையே எடுத்­துக்­காட்­டு­வ­தாக அமைந்­து­வி­டும்.

எந்­த­வொரு ஜன­நா­யக செயற்­பாட்­டின்­போ­தும், சட்­ட­மும் நீதி­யும்­தான் முன்­னிலை வகிக்­கின்­றன. ஜன­நா­யக செயற்­பா­டு­க­ளுக்கு, நீதித்­துறை சுதந்­தி­ர­மாக சட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­தும் வாய்ப்பு இருக்க வேண்­டும். ஆனால் கோத்­த­பா­ய­வைப் பொறுத்­த­மட்­டில், மகிந்த ராஜ­பக்­ச­வின் ஆட்­சி­யில் நீதி­மன்­றம், அவற்­றின் சட்­ட­திட்­டங்­கள் என எது­வுமே கோத்­த­பா­ய­வைக் கட்­டுப்­ப­டுத்­தக்­கூ­டிய நில­மை­யில் இருக்­க­வில்லை. கோத்­த­பா­ய­தான் அவற்­றைக் கட்­டுப்­ப­டுத்­து­ப­வ­ராகச் செயற்­பட்­டுள்­ளார்.

நீதித்­து­றைக்கே மதிப்­ப­ளிக்­காது
செயற்­பட்ட கோத்­த­பா­ய­வின்
செயற்­பா­டு­க­ளின் தாக்­கம்
கொழும்­புக்­கோட்டை புகை­யி­ரத நிலை­யத்­திற்கு முன்­னால், காணா­மற்­போன ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்­காக போராட்­டம் நடத்­திய இரு தொழிற்­சங்­கப் பிர­தி­நி­தி­களை, அர­ச­த­லை­வ­ரின் செய­ல­கத்­திற்கு அழைத்து அவர்­க­ளு­டன் பேச்சு நடத்­தி­ய­போது, அந்த இரு­வ­ரும் கோத்­த­பா­ய­வி­டம் ‘‘நீங்­கள் விரும்­பி­னால் நீதி­மன்­றத்தை நாட­லாம்’’ என்று கூறி­ய­போது ‘‘எனக்கு நீதி­மன்­ற த்­திற்­கெல்­லாம் போவ­தற்கு நேரம் இல்லை’’ என்று கூறி­யமை நீதி­மன்­றத்­தை­யும் நீதித்­து­றை­யை­யும் கோத்­த­பாய எவ்­வ­ள­வு­தூ­ரம் மதிப்­ப­ளிக்­காது செயற்­பட்­டுள்­ளார் என்­பதை எடுத்­துக்­காட்­டு­கி­றது.

கூட்டு எதி­ர­ணி­யின் முக்­கிய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் வாசு­தேவ நாண­யக்­கார இத­னையே மறை­மு­க­மாக கோத்­த­பாய அர­ச­த­லை­வர் பத­விக்­கான தேர்­த­லில் போட்­டி­யி­டு­வ­தைத் தாம் விரும்­ப­வில்லை எனக் கூறி­யுள்­ளார். கோத்­த­பா­யா­வால் உரு­வாக்­கப்­பட்ட ‘‘எலிய’’ மற்­றும் ‘‘வியத் மெகா’’ போன்ற அமைப்­புக்­க­ளில் அதி­க­மா­ன­வர்­கள் இரா­ணு­வத்­தைச் சார்ந்­த­வர்­க­ளா­கவே இருந்­துள்­ள­னர் என்­ப­து­டன், இவர்­கள்­தான் வடக்­கி­லி­ருந்து தமி­ழர்­களை படு­கொலை செய்­வ­தில் பெரும் பங்­க­ளிப்­புச் செய்­துள்­ள­து­டன், அதி­லுள்ள இன்­னும் சிலர், காணா­மற் போன­வர்­க­ளைக் கண்­ட­றி­வ­தற்­கான ஆணைக்­கு­ழுவை உரு­வாக்­கிய சக­ல­ரும் கொலை செய்­யப்­பட வேண்­டும் என­வும் கூறி­யுள்­ள­னர்.

அப்­ப­டி­யா­னால் இப்­ப­டிப்­பட்ட பயங்­க­ர­வா­தி­க­ளை­வி­ட­வும் பயங்­க­ர­மான படு­கொ­லை­க­ளுக்கு மூளை­யா­கச் செயற்­பட்ட கோத்­த­பா­ய­வின் கொடுங்­கோல் நிர்­வா­கச் சூழல் இலங்­கை­யில் உரு­வா­கு­வதை வென்­த­றுவ உபாலி தேரர் எதிர்­பார்க்­கி­றாரா? கரு­ணை­யைப் போதிக்­கும் புத்­த­ரின் கொள்­கை­களை பின்­பற்­ற­ வேண்­டிய தேரர் இத்­த­கைய விதத்­தில் கருத்து வெளி­யி­டல் நியா­ய­மா­னது தானா?

இப்­ப­டிப்­பட்ட குணா­தி­ச­யங்­க­ளைக்­கொண்ட கோத்­த­பா­ய­விற்கு அர­ச­த­லை­வர் பத­விக்­குப் போட்­டி­யி­டு­வ­தில் உரு­வா­கி­யுள்ள பெரிய சிக்­கல் அவ­ரு­டைய இரட்­டைக் குடி­யு­ரி­மை­தான். அத்­து­டன் வல்­ல­ர­சான அமெ­ரிக்கா, மூன்­றாம்­தர நிலை­யில் இருக்­கும் இலங்­கை­யின் ஒரு பிர­ஜை­யின் குடி­யு­ரி­மையை இரத்து செய்­யும் விட­யத்­தில் விட்­டுக்­கொ­டுத்­துப் போகு­மென ஒரு­போ­தும் எதிர்­பார்க்க இய­லாது.

http://newuthayan.com/story/13/ஹிட்­லர்-ii.html

  • தொடங்கியவர்

ஹிட்­லரின் சர்­வா­தி­கா­ரத்தை இனியும் விதைக்­கக்­கூ­டாது

 

துரைசாமி நடராஜா

ஹிட்லர் தலைமை போன்று இரா­ணுவ ஆட்­சியை உரு­வாக்­க­வேண்டும் என்ற பௌத்த பீடத்தின் கருத்து தொடர்பில் பல்­வேறு வாதப்­பி­ர­தி­வா­தங்கள் இடம்­பெற்று வரு­கின்­றன. இலங்கை ஒரு ஜன­நா­யக நாடு. ஜன­நா­யகப் பண்­பு­களை பின்­பற்றி ஆட்­சி­பு­ரி­கின்ற நாடு. இங்கு சர்­வா­தி­காரம் குறித்த கருத்­துகள் விதை­கப்­ப­டு­வ­த­னையோ சர்­வா­தி­கார சிந்­த­னைகள் மேலெழும்­பு­வ­த­னையோ ஒரு­போதும் அனு­ம­திக்­க­மு­டி­யாது என்று பர­வ­லாக கருத்­துகள் வெளிப்­ப­டுத்­தப்­பட்டு வரு­வ­த­னையும் அவ­தா­னிக்­கக்­கூ­டி­ய­தாக உள்­ளது. இதே­வேளை ஜெர்­ம­னியின் அழி­விற்கு ஹிட்லர் கார­ண­மாக விளங்­கினார். இதைப்­போன்று இலங்­கையில் ஹிட்­லர்­களை அறி­மு­கப்­ப­டுத்தி இலங்­கையின் அழி­விற்கு எவரும் கார­ண­மாக இருந்து விடக்­கூ­டாது என்று புத்­தி­ஜீ­விகள் வலி­யு­றுத்­தி­யுள்­ள­மை­யையும் நோக்­கத்­தக்­க­தாக உள்­ளது.

ஹிட்லர் என்ற பெயரைக் கேட்­டலே உலகம் ஒரு கணம் அதிர்ந்து போகின்­றது. உள்­ளத்தில் ஏதோ ஒரு அச்சம் குடி­கொள்­கின்­றது. ஹிட்லர் சர்­வா­தி­கா­ரத்தின் சிக­ர­மாக வர்­ணிக்­கப்­ப­டு­பவர். அவ­ரது சிந்­த­னை­களும் செயற்­பா­டு­களும் பல்­வேறு பாதக விளை­வு­க­ளுக்கு இட்­டுச்­சென்­றி­ருக்­கின்­றன. 1889 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி ஹிட்லர் பிறந்தார். இவ­ரது இளமைப் பருவம் சுக­மா­ன­தாக அமை­ய­வில்லை. வறு­மையும் போராட்­டமும் அங்கு அதி­க­மாக காணப்­பட்­டன. யுத்­தத்தில் ஜெர்மன் அடைந்த தோல்வி அவரை தலை­கு­னிய வைத்­தது. கம்­யூ­னிஸ்ட்டு­களும் யூதர்­க­ளுமே இதற்கு காரணம் என்­றெண்ணி அவர்­களை பழி­வாங்கத் துடித்தார். ஹிட்லர் சிறந்த பேச்­சா­ள­ராக இருந்­த­துடன் மக்­க­ளுக்கு சொல்­லப்­படும் வார்த்­தை­களில் காந்­தத்­தன்­மையில் அதி­க­மான நம்­பிக்கை கொண்­டி­ருந்­த­தாக கீத­பொன்­கலன் தனது நூல் ஒன்றில் சுட்­டிக்­காட்டி வரு­கின்றார்.

1934 இல் ஜனா­தி­பதி ஹிண்­டபேர்க் இறந்­ததன் பின்னர் ஹிட்லர் ஜனா­தி­பதி பத­வி­யையும் சான்­சலர் பத­வி­யையும் ஒன்­று­ப­டுத்தி இருந்­த­போதும் உண்­மையில் ஜனா­தி­பதி பத­வியை ஒழித்து அதி­கா­ரங்­களை ஒரு­மு­கப்­ப­டுத்தி இருந்­த­தாக புத்­தி­ஜீ­விகள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர். இதன்­மூலம் ஹிட்லர் சான்­சலர், அரசின் தலைவர், கட்­சியின் தலைவர் என்ற நிலைக்கு உயர்ந்­த­தாக வலி­யு­றுத்­தல்கள் இடம்­பெற்­றுள்­ளன. நாசிசக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்­சி­களை ஹிட்லர் தடை செய்­தி­ருந்தார். சட்­டத்­தின்­மூலம் பாரா­ளு­மன்­றத்தின் அதி­கா­ரங்கள் யாவும் நான்கு ஆண்­டு­க­ளுக்கு மந்­திரி சபைக்கு மாற்­றப்­பட்­டது. வாழ்நாள் முழு­வதும் ஹிட்­ல­ருக்கு அதி­கா­ரத்தை வழங்­கக்­கூ­டிய சட்­டங்கள் ஆக்­கப்­பட்­டன. இத்­த­கைய செயற்­பா­டுகள் சர்­வா­தி­கா­ரத்தின் ஆட்­சியை நிலை­நி­றுத்த உந்துசக்­தி­யாக அமைந்­தன. ஹிட்­லரின் ஆக்­கி­ர­மிப்பு கொள்­கை­களால் இரண்­டா­வது உலக யுத்தம் ஏற்­பட்­டது. யுத்­தத்தின் முடிவில் ஜெர்­மனி மீண்டும் தோல்­வி­யையே சந்­திக்­க­நேர்ந்­தது.

பாசிஸம், நாசிஸம் என்­பன குறித்த விமர்­ச­னங்கள் உலகில் அதி­க­ளவில் இருந்து வரு­கின்­றன. “பாசிஸம் என்­பது வாழ்­வி­னதும் வர­லாற்­றி­னதும் மத்­திய பகு­தியில் தேசிய அரசை அல்­லது இனத்­தையும், அதி­கா­ரத்­தையும் வளர்ச்­சி­யையும் முன்­வைக்கும் ஒரு அர­சியல் முறை அது தனி மனி­த­ரையும் அவர்­க­ளது உரி­மை­க­ளையும் மனித நேயங்­க­ளையும் தேசத்தின் பூர­ண­ந­ல­னுக்­காக புறக்­க­ணிக்­கின்­றது. ஒரு அர­சியல் செயன்­முறை என்ற வகையில் அது தேசிய வாழ்வின் எல்லா அம்­சங்­க­ளிலும் கடு­மை­யான கட்­டுப்­பாட்­டுடன் ஒரு கட்சி அர­சாக சர்­வா­தி­கார முறையை பின்­பற்­று­கின்­றது” என்­பார்கள். இதே­வேளை, ஹிட்­லரின் நாசிக் கட்­சியின் கீழான நாசி­ஸமும் பாசி­ஸத்தின் ஒரு­ப­கு­தி­யா­கவே கருதி ஆரா­யப்­ப­டு­கின்­றது. பாசி­ஸத்தின் ஜெர்­ம­னிய வடி­வ­மான நாசிஸம் 1933 ஆம் ஆண்டு ஹிட்­லரின் தலை­மையில் நிறு­வப்­பட்­டது. ஹிட்லர் பயங்­க­ர­வா­தத்­தையும் பலாத்­கா­ரத்­தையும் ஆத­ரித்த ஒரு­வ­ராக விளங்­கு­கின்றார்.

ஜெர்­ம­னியின் அழி­விற்கும் ஐரோப்­பாவின் அழி­விற்கும் கார­ண­கர்த்­தா­வாக ஹிட்லர் விளங்­கு­கின்றார். மக்­களை நம்ப வைத்து கழுத்­த­றுத்­தி­ருக்­கின்றார். தன்னை எதிர்த்த பலரை கொலை செய்­தி­ருக்­கி­ன்றார். பல இலட்­சக்­க­ணக்­கா­ன­வர்கள் இதில் உள்­ள­டங்­கு­கின்­றனர். ஜெர்­மனி இரண்­டாக பிரி­வ­தற்கும் ஹிட்­லரே கார­ண­கர்த்­த­ாவாக விளங்­கினார். பின்­னரே அது ஒன்­றி­ணைந்­தது. ஹிட்லர் என்­பது பிழை­யான ஒரு உதா­ர­ண­மாகும். ஹிட்­லரின் ஆட்சி முறையை ஜெர்­ம­னி­கூட ஏற்­றுக்­கொள்­ள­வில்லை என்­ப­தையும் இங்கு கூறி­யாதல் வேண்டும்.ஜெர்­மனி பொரு­ளா­தார ரீதியில் சிறந்த வளர்ச்­சியை அடைந்­துள்­ளது. இதே­வேளை ஏனைய நாடு­களில் ஹிட்­லரின் ஆட்சி முறைமை இடம்­பெ­றக்­கூ­டாது என்­ப­தற்­காக அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களின் ஊடாக உத­வி­க­ளையும் செய்­து­வ­ரு­வ­தாக அறி­யக்­கூடி­ய­தாக உள்­ளது. ஊடக சுதந்­திரம் ஜன­நா­யகம் போன்ற அடிப்­படை உரி­மை­களை வலி­யு­றுத்தும் வகை­யி­லான செயற்­பா­டு­க­ளுக்கு ஜெர்­மனி உதவி வரு­கின்­றது. ஹிட்­லரின் இல்­லம்­கூட ஜெர்­ம­னியில் இல்லை. அது ஒஸ்­ரி­யா­வி­லேயே உள்­ளது. எனவே அந்த நாட்டு மக்கள் கூட அவ­ரது வீட்டை தாம் வசிக்­கின்ற வளா­கத்­திற்குள் வைத்துக் கொள்ள விரும்­ப­வில்லை என்­ப­தையே எடுத்­துக்­காட்­டு­வ­தாக முக்­கி­யஸ்­தர்கள் சுட்டிக் காட்­டி­யுள்­ளனர்.

நாசிக் கோட்­பாட்டு வாதி­யான ஹேர்மன் கோரிஸ் 1934 இல் நூல் ஒன்­றினை வெளி­யிட்­டி­ருந்தார். இதில் ஜெர்­ம­னிய மேன்­மை­யையும் தனி­நபர் வழி­பாட்­டையும் இவர் ஆத­ரித்­தி­ருந்­தமை நோக்­கத்­தக்­க­தாகும்.1930 இல் அல்­பிரட் ரோசன் பேர்க் வெளி­யிட்­டி­ருந்த நூலில் ஆரிய இனத்தின் சிறப்­புகள் வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருந்­தன. நாசித் தலைவர் ஹிட்­லரும் நூல் ஒன்­றினை எழுதி இருந்தார். நாசிக் கட்­சியின் செயற்­பா­டுகள் இந்­நூலில் விளக்­கப்­பட்­டன. அத்தோடு ஆரிய இனத்தின் மேன்மை மற்றும் அவர்­களின் ஆளும் உரிமை என்­பன குறித்தும் இந்­நூலில் எடுத்­துக்­கூறி இருந்தார். இவர் தேசத்­தையும் அதன் அதி­கா­ரத்­தையும் பலாத்­கா­ரத்தின் ஊடாக நியா­யப்­ப­டுத்த முனைந்தார். பாசிஸம், நாசிஸம் இரண்­டுமே அரசின் அதி­யு­யர்ந்த தன்­மை­யையும் சர்­வா­தி­கா­ரத்­தையும் நியா­யப்­ப­டுத்த முற்­பட்­ட­தாக வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது. பெண்­க­ளுக்கு பிர­சவ விடுதி எத்­த­கை­யதோ அது போன்­றதே யுத்தம் மனி­த­னுக்கு. என்­பது ஹிட்­லரின் கருத்­தாகும்.

ஹிட்­லரின் ஆட்­சியை உல­கமே வெறுக்­கின்ற நிலையில் ஹிட்­லரின் சர்­வா­தி­கார ஆட்சி முறைமை இலங்­கைக்கு அவ­சியம் என்ற ரீதியில் அண்­மையில் தெரி­விக்­கப்­பட்ட கருத்­துக்கள் பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்தி இருக்­கின்­றன. இது குறித்து பலரும் தமது கண்­ட­னங்­களை வெளிப்­ப­டுத்தி வரு­கின்­றனர். ஜன­நா­ய­கத்தின் மகத்­து­வங்­க­ளையும் அதன் விழு­மி­யங்­க­ளையும் மதிக்கும் கட்சி என்னும் வகையில் சர்­வா­தி­காரம் குறித்த கருத்­து­களை ஐக்­கிய தேசியக் கட்சி வன்­மை­யாக கண்­டித்­தி­ருக்­கின்­றது. இந்­நாட்­டுக்கு ஹிட்லர், இடி­அமீன் போன்­றோரின் ஆட்சி அவ­சி­ய­மென்று யாராலும் கூற­மு­டி­யாது. அவ்­வா­றான கருத்­தினை என்முன் நிகழ்த்தி இருந்தால் அந்தக் கணமே அதனை எதிர்த்­தி­ருப்பேன் என்று பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தெரி­வித்­தி­ருக்­கின்றார். மேலும் புத்­த­பெ­ரு­மானின் கருத்­துக்­க­ளையும் ரணில் எடுத்துக் கூறி­யி­ருந்தார். புத்­த­பெ­ருமான் பல நல்­லு­ப­தே­சங்­களை செய்­துள்ளார். அன்­றாட வாழ்க்கை மாத்­தி­ர­மன்றி வர்த்­த­கர்கள் எவ்­வாறு செயற்­பட வேண்டும் என்றும் புத்­த­பெ­ருமான் வழி­காட்டி இருக்­கின்றார்.

நாட்டின் ஆட்­சியை நிர்­வ­கிப்­பது குறித்தும் அவ­ரது போத­னைகள் அதி­க­மாக காணப்­ப­டு­கின்­றன. அவரின் போத­னையின் பிர­காரம் ஜன­நா­ய­க­நாடு என்ற வகையில் நாம் எமது ஆட்­சியை கொண்டு செல்­ல­வேண்டும். தன்­னு­டைய மக்­களை அடக்கி கொலை செய்து ஆட்­சியை முன்­னெ­டுக்­கு­மாறு புத்­த­பெ­ருமான் ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு போதனை செய்­ய­வில்லை. இடைக்­கி­டையே சமா­தா­ன­மாக ஒன்­று­கூடி பேச்­சு­வார்த்தை நடத்தி சமா­தா­ன­மாக கலந்து செல்­லு­மாறே புத்­த­பெ­ருமான் ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு போதனை செய்­தி­ருக்­கின்றார். ஜன­நா­யக ஆட்­சி­கொண்டு செல்­லப்­ப­டு­வதும் அவ்­வா­றே­யாகும். பௌத்த தர்­மத்தின் பிர­காரம் ஜன­நா­யகம் மற்றும் மனித உரி­மை­களை பாது­காக்­க­வேண்டும் என்றும் பிர­தமர் வலி­யு­றுத்தி இருந்­த­மையும் இங்கு நோக்­கத்­தக்­க­தாகும்.

ஹிட்லர் பௌத்த தர்­மத்­திற்கு எதி­ரா­ன­வ­ரா­கவே இருந்­தி­ருக்­கின்றார். ஹிட்­லரின் ஆட்­சியில் பௌத்த தர்மம் தொடர்­பான சங்­கங்கள் ஜெர்­ம­னியில் கலைக்­கப்­பட்­டன. அந்த சங்­கங்­களில் இருந்­த­வர்­களை சிறையில் அடைத்தார். கைது செய்­யப்­பட்டோர் தொடர்­பாக பின்னர் எந்­த­வொரு தக­வலும் கிடைக்­க­வில்லை என்­பதும் குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

சர்­வா­தி­கா­ரப்­போக்கு கொண்ட ஹிட்­லரின் ஆட்­சியின் கார­ண­மாக ஏற்­பட்ட அழி­வு­களின் தாக்­கங்கள் இன்னும் தொடர்ந்த வண்­ணமே காணப்­ப­டு­வ­தா­கவும் உலகம் மீண்டும் ஹிட்லர் ஆட்­சி­யினை ஒரு­போதும் அனு­ம­திக்­காது எனவும் தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் தலைவர் கலா­நிதி குண­தாச அம­ர­சே­கர குறிப்­பி­டு­கின்றார். இதே­வேளை, பேரா­சி­ரியர் சோ.சந்­தி­ர­சேகரன் இது­பற்றி குறிப்­பி­டு­கையில், ‘ஒரு நாடு வீழ்ச்சிப் பாதையில் பய­ணிக்­கையில் சர்­வா­தி­கார ஆட்சி வந்தால் பர­வா­யில்லை என்ற ஒரு மனப்­போக்கு மக்­க­ளி­டையே காணப்­படும். இதன் வெளிப்­பாடு இலங்­கையில் நடப்­ப­தாக உணர்­கின்றேன். யுத்­தத்தின் பின்­ன­ரான ஜெர்­ம­னியின் நிலை இத்­தா­லியை ஒத்­த­தா­கவே காணப்­பட்­டது. வேர்­சயீல்ஸ் ஒப்­பந்­தத்தின் மூலம் செய்­யப்­பட்­டி­ருந்த ஏற்­பா­டுகள் ஜெர்­ம­னிய பொரு­ளா­தா­ரத்தின் அடிப்­ப­டை­யையே பாதிப்­ப­தாக அமைந்­தி­ருந்­தன. இதன்­மூலம் மேன்­மை­மிக்க மக்கள் அவ­மா­னப்­ப­டுத்­தப்­பட்­ட­தாக ஜேர்­ம­னி­யர்கள் கரு­தினர். இது­போன்ற நிலை­மை­களால் ஜெர்­ம­னியின் பெரு­மை­களை உத்­த­ர­வா­தப்­ப­டுத்­தக்­கூ­டிய தலை­வ­ரையே ஜெர்­ம­னி­யினர் எதிர்­பார்த்­தி­ருந்­தனர். இதுவே ஹிட்­லரின் எழுச்­சிக்கு வித்­திட்­டது. இலங்­கையில் இப்­போது நல்­லாட்சி இடம்­பெ­று­கின்­றது. எனினும் பொரு­ளா­தாரம், தொழில்வாய்ப்பு, விலைவாசி அதிகரிப்பு, வெளிநாட்டுக்கடன் என்று பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. இந்த வேளையில், சர்வாதிகாரம் தொடர்பான சிந்தனைப்போக்கு இடம்பெற்றிருக்கலாம். எனினும் பெரும்பாலானோர் இதனை கண்டித்திருந்தனர்.

எவ்வாறெனினும் நவீன ஆட்சி முறையில் சமயங்களின் ஆதிக்கம் குறித்தும் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. இதன் விளைவுகளையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க இலங்கைக்கு ஓரளவு சர்வாதிகாரமும் அவசியமாகும். நாட்டின் சீரான போக்கிற்கும் அபிவிருத்திக்கும் இது உந்து சக்தியாகும் என்ற கருத்தினை ஒரு சமயம் தெரிவித்திருந்ததையும் இங்கு நினைவுகூர விரும்புகிறேன். அவரது செயற்பாடுகள் சிலவும் அவ்வாறே அமைந்திருந்தன’ என்று சந்திரசேகரன் குறிப்பிடுகின்றார். ஜே.ஆர். ஜெயவர்தனவின் செயற்பாடுகள் கூட சில சந்தர்ப்பங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன. நிறைவேற்று ஜனாதிபதி முறைமை சர்வாதிகாரத்துக்கு இட்டுச் செல்வதாகவும் சில விமர்சனங்கள் உள்ளன. எவ்வாறெனினும் சர்வாதிகார ஆட்சி என்பது மக்களால் வெறுத்தொதுக்கப்பட்ட ஒரு ஆட்சியாகும். இதனை நிலைபெறச் செய்வதால் நாடு பிளவுபடுவதோடு பாதக விளைவுகள் பலவும் மேலோங்கும் என்பதே உண்மையாகும்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-07-02#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.