Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நியுயோர்க்டைம்ஸிற்கு தகவல் வழங்கிய பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுகின்றனர்

Featured Replies

நியுயோர்க்டைம்ஸிற்கு தகவல் வழங்கிய பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுகின்றனர்

 

அம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த செய்திகளிற்கான தகவல்களை வழங்கிய பத்திரிகையாளர்களை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு நெருக்கமான அரசியல்வாதிகள் அச்சுறுத்திவருவதாக நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான துல்லியமான புலனாய்வு செய்திக்கான தகவல்களை வழங்கிய இரு பத்திரிகையாளர்களை முன்னாள் ஜனாதிபதிக்கு நெருக்கமான அரசியல்வாதிகள் பகிரங்கமாக விமர்சித்துள்ளனர் என நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

பத்திரிகையாளர்கள் இவ்வாறான விதத்தில் அச்சுறுத்தப்படுவதை ஏற்க முடியாது என நியுயோர்க் டைம்சின் சர்வதேச பதிப்பிற்கான ஆசிரியர் மைக்கல் ஸ்லக்மன் தெரிவித்துள்ளார்.

mr.jpg

நியுயோர்க்டைம்சிற்கும் ஏனைய பத்திரிகைகளிற்கும் பணியாற்றும் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை இலங்கை அதிகாரிகள் உறுதிசெய்யவேண்டும் என நியுயோர்க் டைம்ஸ் எதிர்பார்க்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்ச நியுயோர்க் டைம்ஸ் கட்டுரை தொடர்பாக எங்களுடன் தொடர்புகொள்ள விரும்பினால் அவர் பத்திரிகையாளர்களை அச்சுறுத்துவதை விடுத்துவிட்டு எங்களுடைய மூத்த பத்திரிகையாளர்களை அவர் தொடர்புகொள்ளவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/35934

  • கருத்துக்கள உறவுகள்

சீனா கொடுத்த பணத்தைப் பற்றி எழுதும் பத்திரிகைகள் மகிந்தவை கவிழ்பதற்கு எந்த எந்த நாடுகள் அத்தனை கட்சிகளையும் ஒன்றாக இணைப்பதற்கு யார் யாருக்கு எத்தனை பெட்டி பணம் பரிமாறப்பட்டது?

100 நாட்களுக்குள் செய்வதாக வாக்குறுதிகள் என்னாச்சு?

கையாலாகாத ஒரு பொம்மை அரசை நிறுவி 3 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் அந்த அரசால் தமிழர்களுக்கு என்ன தான் செய்ய முடிந்தது?

இவைகளை பற்றி இந்தப் பத்திரிகைகள் வாயே திறப்பதில்லை.இன்னமும் மகிந்த வந்து விடுவாரோ என்ற பயத்தில் உளறிக் கொட்டிக் கொண்டே இருக்கின்றன.

தேர்தல் நெருங்கும் காலத்தில் இன்னும் பல வேடிக்கைகளை எதிர்பார்க்கலாம்.

  • தொடங்கியவர்

"மோத வேண்­டு­மெனில் எம்­மோடு மோதுங்கள்"

 

 

(நா.தனுஜா)

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தொடர்பில் எமது பத்­தி­ரிகை வெளி­யிட்ட செய்தி தொடர்பில் ஏதேனும் தெளி­வு­ப­டுத்­தல்கள் தேவைப்­படின் எமது பத்­தி­ரி­கையின் உயர்­மட்ட பத்­தி­ரிகை ஆசி­ரி­யர்­களைத் தொடர்­பு­கொள்ள முடியும். அதை­வி­டுத்து இலங்­கையின் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு பகி­ரங்க அச்­சு­றுத்தல் விடுக்க வேண்டாம் என "நியூயோர்க் டைம்ஸ்" சர்­வ­தேச நாளி­தழின் ஆசி­ரியர் மைக்கல் ஸ்லெக்மன் தெரி­வித்­துள்ளார். 

micle.jpg

அம்­பாந்­தோட்டை துறை­முக விவ­காரம் தொடர்பில் அண்­மையில்"நியூயோர்க் டைம்ஸ்" நாளிதழ்  செய்தி வெளி­யிட்­டி­ருந்­தது. அவ்­வி­டயம் தொடர்பில் மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்­தி­ருந்த கருத்து குறித்து "நியூயோர்க் டைம்ஸ்" நாளி­தழின் ஆசி­ரியர் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.  

அவ்­வ­றிக்­கையில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

இலங்­கையின் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ மற்றும் சில பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இணைந்து நடத்­திய ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்றின் போது எமது பத்­தி­ரி­கை­யால் கடந்த ஜுன் மாதம் 26 ஆம் திகதி வெளி­யி­டப்­பட்ட அம்­பாந்­தோட்டை துறை­முக விவ­காரம் தொடர்­பான செய்­திக்­கான தகவல் பங்­க­ளிப்­பினை மேற்­கொண்ட இலங்கை ஊட­க­வி­ய­லா­ளர்கள் இரு­வ­ருக்கு பகி­ரங்க அச்­சு­றுத்தல் விடுத்­துள்­ளனர். 

ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு எதி­ரான இவ்­வா­றான அச்­சு­றுத்தல் நட­வ­டிக்­கைகள் ஏற்­கப்­பட முடி­யா­த­வை­யாகும். இத்­த­கைய செயற்­பா­டுகள் ஊடக சுதந்­தி­ரத்­துக்கு தடை­யாக அமை­வ­துடன் ஊட­கங்­களை "அமை­திப்­ப­டுத்தும்" வித­மா­கவும் அமைந்­துள்­ளன. அத்­தோடு செய்­தியை அறிந்­து­கொள்­வதில் இலங்கை மக்கள் கொண்­டுள்ள உரி­மை­யினை மறு­த­லிப்­ப­தா­கவும் உள்­ளது. 

இலங்­கையின் ஊட­க­வி­ய­லா­ளர்கள் எமது நிறு­வ­னத்­துக்கோ அல்­லது வேறு நிறு­வ­னத்­துக்கோ எவ்­வித அச்­சு­றுத்­தல் ­களுமின்றி சுதந்­தி­ர­மாக செயற்­ப­டு­வ­தை உரிய அதி­கா­ர­ச­பைகள் உறு­திப்­ப­டுத்த வேண்டும் என்று எதிர்­பார்க்­கின்றோம். 

மேலும் எமது பத்­தி­ரி­கையில் வெளி­யான செய்தி தொடர்பில் ஏதேனும் முரண்பாடு கள் இருப்பின் "நியூ யோர்க் டைம்ஸ்" பத்தி ரிகையின் உயர்மட்ட ஆசிரியர்களைத் தொடர்புகொள்ள முடியும். அதனை விடு த்து இலங்கை ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் செயற்பாடுகள் ஏற்கப்பட முடியாதவையாகும் என்று தெரிவித்துள் ளார்.

http://www.virakesari.lk/article/35969

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.