Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்கி , விஜயகலா , சிவாஜிலிங்கத்தை புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்ப வேண்டும் : என்கிறார் ரஞ்சன்

Featured Replies

விக்கி , விஜயகலா , சிவாஜிலிங்கத்தை புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்ப வேண்டும் : என்கிறார் ரஞ்சன்

 

 
 

விக்கி , விஜயகலா , சிவாஜிலிங்கத்தை புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்ப வேண்டும் : என்கிறார் ரஞ்சன்

விஜயகலா மகேஸ்வரன் , விக்னேஸ்வரன் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோரை புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பி அவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டுமென பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
வடக்கில் புனர்வாழ்வு முகாமிலிருந்து இடமாற்றம் பெற்று சென்ற இராணுவ அதிகாரியொருவரை அங்குள்ளவர்கள் எந்தளவுக்கு கௌரவமளித்துள்ளனர். ஆனால் விஜயகலா போன்றோர் மீண்டும் விடுதலை புலிகள் உருவாக வேண்டுமென கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் மாத்திரமன்றி விக்னேஸ்வரன் மற்றும் சிவாஜி லிங்கம் ஆகியோரும் அப்படித்ததான். அவர்களை குறித்த புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பி அவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம். என அவர் தெரிவித்துள்ளார். -(3)

http://www.samakalam.com/செய்திகள்/விக்கி-விஜயகலா-சிவாஜிலி/

  • தொடங்கியவர்

விஜ­ய­கலா, விக்­கி­னேஸ்­வரன், சிவா­ஜி­லிங்­கத்தை புனர்­வாழ்­வுக்கு அனுப்­பி­வைக்­க­வேண்டும்

CITY-01GMGPage1Image0009-47ab62d00466e16efdc59bf4550be29192b9a29c.jpg

 

(நமது நிருபர்)

பிரதி அமைச்சர் ரஞ்சன் ராம­நா­யக்க கூறு­கிறார்

இரா­ஜாங்க அமைச்சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வரன், வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன், வட­மா­காண சபை­ உ­றுப்­பினர் எம்.கே. சிவா­ஜி­லிங்கம் ஆகி­யோரை புனர்­வாழ்வுமுகா­முக்கு அனுப்­ப­வேண்டும். விடு­த­லைப்­பு­லி­களின் மீள் உரு­வாக்கம் தொடர்பில் இவர்­களே கருத்து கூறி வரு­கின்­றனர் என்று பிரதி அமைச்­சரும் கம்­பஹா மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரஞ்சன் ராம­நா­யக்க தெரி­வித்­துள்ளார்.  

தமிழ் மக்கள் நிம்­ம­தி­யாக வாழ­வேண்­டு­மானால் வடக்கு, கிழக்கில் விடு­த­லைப்­பு­லி­களை மீள் உரு­வாக்க வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ள­தாக இரா­ஜாங்க அமைச்சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வரன் நேற்று முன்­தினம் யாழ்ப்­பா­ணத்தில் ஆற்­றிய உரை தொடர்பில் நேற்று பிரதி அமைச்சர் ரஞ்சன் ராம­நா­யக்க செய்­தி­யாளர் மாநா­டொன்­றினை நடத்­தினார். இந்த செய்­தி­யாளர் மாநாட்டின் போது இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வ­ர­னுடன் தொலை­பே­சியில் தொடர்பு கொண்டு அவர் உரை­யா­டினார். இந்த உரை­யாடல் ஊட­க­வி­ய­லா­ளர்­களால் செவி­ம­டுக்­கப்­பட்­டி­ருந்­தது.

இங்கு கருத்து தெரி­வித்த பிரதி அமைச்சர் ரஞ்சன் ராம­நா­யக்க இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் தனது பத­விப்­பி­ர­மா­ணத்­திற்கு ஏற்­கா­த­வ­கையில் கருத்து கூறி­யுள்ளார். இவ்­வி­டயம் தொடர்பில் பிர­த­மரும் ஜனா­தி­ப­தியும் விசா­ரித்து நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும். பதற்­றத்தில் இவ்­வாறு பேசி­ய­தாக இரா­ஜாங்க அமைச்சர் தெரி­வித்­தி­ருக்­கின்றார். வடக்கில் இடம்­பெற்று வரும் போதை­வஸ்­துப்­பா­வனை மற்றும் வன்­மு­றை­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு பிர­பா­கரன் மீண்டும் வர­வேண்­டு­மெ­னக்­கூ­று­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

போதை­வஸ்­துப்­பா­வ­னையை கட்­டுப்­ப­டுத்தி வன்­மு­றை­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு பிர­பா­கரன் தேவை­யில்லை. புலி­களின் மீள உரு­வாக வேண்­டு­மென்று கருத்து தெரி­விக்கும் இரா­ஜாங்க அமைச்சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வரன், வடக்கு முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன், மாகா­ண­சபை உறுப்­பினர் எம்.கே. சிவா­ஜி­லிங்கம் ஆகி­யோ­ரையும் புனர்­வாழ்வு பெறு­வ­தற்கு அனுப்­ப­வேண்டும்.

தற்­போது ஹிட்­லரின் ஆட்சி வேண்­டு­மென்று பௌத்த மத­குரு கூறு­கின்றார். அதே­போன்று பிர­பா­க­ரனின் ஆட்சி வேண்­டு­மென்று கோரப்­ப­டு­கின்­றது. இவை தவ­றான செயற்­பா­டு­க­ளாகும். ஒரு­வரின் தனிப்­பட்ட கருத்­துக்­கா­ர­ண­மாக 2020 ஜனா­தி­பதி தேர்­தலில் எமது வெற்றி தடைப்­ப­டப்­போ­வ­தில்லை. இரா­ஜாங்க அமைச்சர் கூறிய கருத்­துக்­காக நான் ஒரு­போதும் இரா­ஜி­னாமா செய்­யப்­போ­வ­தில்லை.

யாழ்­பா­ணத்தில் இரா­ஜாங்க அமைச்சர் பேசும்­போது வெளி­வி­வ­கார அமைச்சர் திலக் மாரப்பன, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேரவர்த்தன ஆகியோரும் இருந்துள்ளனர். நான் அந்தக்கூட்டத்தில் இருந்திருந்தால் இராஜாங்க அமைச்சரின் பேச்சை இடைமறித்து இவ்வாறு பேசுவது தவறு என்று கூறியிருப்பேன்.

எனவே இராஜாங்க அமைச்சர் தான் கூறிய கூற்றை வாபஸ்பெறவேண்டும் என்று தெரிவித்தார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-07-04#page-1

  • தொடங்கியவர்
‘முடிவெடுக்க வடக்குக்கு வாருங்கள்’
 
 

எங்களுக்குப் புனர்வாழ்வளிக்க வேண்டுமா என்று முடிவெடுக்க, அமைச்சர் ரஞ்சன் இராமநாயக்கவை வடக்குக்கு கௌரவத்துடனும் அன்புடனும் அழைக்கின்றேனென, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

 “விக்கி, விஜயகலா, சிவாஜிலிங்கத்திற்கு விசுவமடு முகாமில் புனர்வாழ்வளியுங்கள்” என்று பிரதி அமைச்சர் ரஞ்சன் இராமநாயக்கா கூறியுள்ளார். இதைப்பற்றி உங்கள் கருத்தென்ன என வினவியபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“நான் சிங்களத் திரைப்படத்துடன் சம்பந்தப்பட்ட பலருடன் எனது இளமைக்காலத்தில் பழகியவன். என் நண்பரும் வாசுவின் சகோதரருமாகிய யசபாளித நாணயக்காரவின் நட்பால் இது ஏற்பட்டது. விஜய் குமாரணதுங்க போன்ற பலரை அறிந்து வைத்திருந்தவன். இரஞ்சனை எனக்கு பழக்கமில்லை. ஆனால் அவர் ஒரு உணர்ச்சி மிகுந்த ஒருவர் என்று எனக்குத் தெரியும். நாம் கூறுவனவற்றையும் செய்வதையும் பத்திரிகை வாயிலாக கண்டு உணர்ச்சிவசப்பட்டு விமர்சிக்கின்றார்.

“உண்மையை உணர்ந்த பின்னரே அவரின் வார்த்தைகள் வெளிவர வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன். எங்களுக்குப் புனர்வாழ்வளிக்க வேண்டுமா என்று முடிவெடுக்க ரஞ்சன் இராமநாயக்கவை வடக்குக்கு கௌரவத்துடனும் அன்புடனும் அழைக்கின்றேன்.

“இரத்தினப்பிரிய பந்து, இல்லாதவர்களுக்குக் கொடுத்து அவர்களின் அன்பைப் பெற்றுக் கொண்டார். ஆனால், எங்கள் நால்வரிடையில் விஜயகலாவும், சிவாஜிலிங்கமும் நானுமே இல்லாதவர்கள். எமது மக்களுக்குப் பாதுகாப்பில்லை; எமக்கு அதிகாரங்கள் இல்லை; எமது கருத்துகளுக்கு தெற்கில் இடமில்லை, எமக்கு மதிப்பில்லை; புறக்கணிக்கப்படுகின்றோம்; ஆக்கிரமிக்கப்படுகின்றோம்.

“ஆகவே இரத்தினப்பிரிய பந்து போல் எமக்கு வேண்டுவனவற்றை உடனே வழங்க ரஞ்சன் இராமநாயக்க முன்வரவேண்டும். எம்மிடம் இல்லாதவற்றை அவரின் அரசாங்கத்தின் ஊடாக எங்களுக்கு வழங்கினால் நாமும் அவர் மேல் அன்பும் மரியாதையும் காட்டுவோம்.

“வடமாகாணத்துக்கு வந்து நிலைமையைப் பார்த்துச் செல்ல பிரதி அமைச்சரை அன்புடன் அழைக்கின்றேன். இங்கு வந்து இராணுவத்தினரிடமோ பொலிஸாரிடமோ தனது கட்சிக்காரரிடமோ உண்மையைக் கேட்பதில் பயன் இல்லை. மாறாக, பொதுமக்களிடம் கேட்கட்டும். அவர்கள் சொல்வார்கள் யாருக்குப் புனர்வாழ்வு அளிக்க வேண்டும் என்று” எனத் தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/மு-டிவெடுக்க-வடக்குக்கு-வாருங்கள்/175-218527

  • கருத்துக்கள உறவுகள்

உந்த ரஞ்சன் என்ற வெங்காயம் சொல்லுது.. டக்கிளஸ் புலியாம். அப்ப புலியையாடா... அமைச்சரா வைச்சிருந்தீங்கள்.

முழு முட்டாள்கள் தான் சிங்கள மக்களை வழிநடத்தும் தலைமைகள்.

இப்ப விளங்குது.. ஏன் சிங்கள தேசம்.. இன்னும் 3ம் உலக நிலையில் கிடக்குது என்று. ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.