Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டோனிக்கு இன்று 37-வது பிறந்தநாள் - சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்து மழை

Featured Replies

டோனிக்கு இன்று 37-வது பிறந்தநாள் - சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்து மழை

 

 

இந்திய ஒருநாள் அணியின் முன்னாள் கேப்டன் டோனி இன்று 37-வது பிறந்த நாளை கொண்டாடி வருவதால் அவருக்கு, ரசிகர்கள், பிரபலங்கள் உள்பட பலர் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். #MSDhoni #HappyBirthdayMSDhoni

 
 
 
 
டோனிக்கு இன்று 37-வது பிறந்தநாள் - சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்து மழை
 
ராஞ்சி :

இந்திய ஒருநாள் அணி விக்கெட் கீப்பரும் நட்சத்திர பேட்ஸ்மேன்களில் ஒருவருமான மகேந்திர சிங் டோனி இன்று தனது 37-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். ஜூலை 7, 1981-ல் பிறந்தவர் டோனி. இன்று பிறந்த நாள் காணும் டோனிக்கு பலதரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளது.

இதுவரை இந்தியாவிற்காக டோனி, 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி கடந்த டிசம்பரில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை 318 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

தற்போது, இங்கிலாந்தில் இந்திய அணி சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருவதால், இங்கிலாந்தில் உள்ள டோனி, அங்கு கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் உள்பட பல்வேறு பிரபலங்கள் டோனிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும், டோனி ரசிகர்கள் #HappyBirthdayMSDhoni என்ற ஹேஷ்டேக்கை சமூக வலைத்தளங்களில் உருவாக்கி அவரின் பிறந்த நாள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

டோனியுடன் எடுத்த புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் சுரேஷ் ரெய்னா. அதில், பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜாம்பவான், உங்களை போல் யாருமே இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் வாரியம் நடத்தும் மூன்று வித தொடர்களான 2007-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடர், 2011-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பை தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி கோப்பை ஆகியவற்றை கைப்பற்றிய ஒரே கேப்டன் டோனி என்பது குறிப்பிடத்தக்கது. #MSDhoni  #HappyBirthdayMSDhoni

https://www.maalaimalar.com/News/Sports/2018/07/07105910/1174976/MS-Dhoni-Birthday-Wishes-pour-in-for-Social-media.vpf

 

 

டோனிக்கு இன்று 37ஆவது பிறந்தநாள் 

 

இந்திய ஒருநாள் அணியின் முன்னாள்  தலைவர்  டோனி இன்று 37ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருவதால் அவருக்கு, ரசிகர்கள், பிரபலங்கள் உட்பட பலர் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். 

இந்திய ஒருநாள் அணி விக்கெட் காப்பாளரும் நட்சத்திர துடுப்பாட்டகாரர்களில் ஒருவருமான மகேந்திர சிங் டோனி இன்று தனது 37ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். 

DhcxqOlUEAAEGcp.jpg

இதுவரை இந்தியாவிற்காக டோனி, 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி கடந்த டிசம்பரில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை 318 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

4.jpg

தற்போது, இங்கிலாந்தில் இந்திய அணி சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருவதால், இங்கிலாந்தில் உள்ள டோனி, அங்கு கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார். 

Happy.jpg

http://www.virakesari.lk/article/36169

  • தொடங்கியவர்

'ஓம் ஃபினிஷாய நமஹ' தோனிக்கு குவிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்: வைரலாகும் விடியோ

 

 
msd_bday

 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தனது 37-ஆவது பிறந்தநாளை சனிக்கிழமை கொண்டாடி வருகிறார். இதையடுத்து பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். மேலும் அவரது ரசிகர்களும் நள்ளிரவு 12 மணி முதல் தங்களுடைய வாழ்த்துகளை இணையதளங்களில் வைரலாகப் பரப்பி  வருகின்றனர்.

2004-ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான தோனி, இதுவரை 90 டெஸ்ட் போட்டிகளில் 6 சதம், 33 அரைசதம் உட்பட 4,876 ரன்களும், 318 ஒருநாள் போட்டிகளில் 10 சதம், 67 அரைசதம் உட்பட 9,967 ரன்களும், 92 டி20 போட்டிகளில் 2 அரைசதங்களுடன் 1,455 ரன்களும் குவித்துள்ளார். மொத்தம் 602 கேட்சுகளும், 178 ஸ்டம்பிங்குகளும் செய்துள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இருப்பினும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். 

36778578_1773488689366660_34604405990380

 

மேலும் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரைத் தொடர்ந்து 500 சர்வதேசப் போட்டிகளில் களமிறங்கிய 3-ஆவது இந்தியர் என்ற சாதனையையும் மகேந்திர சிங் தோனி படைத்தார்.

36743315_1773488982699964_90648757306088

 

இந்நிலையில், இங்கிலாந்து தொடரில் விளையாடி வரும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ள தோனி, அங்கு பிறந்தநாள் கொண்டாடும் விடியோ அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுபோல அதிரடி வீரர் சேவாக் தெரிவித்த பிறந்தநாள் வாழ்த்தும் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

http://www.dinamani.com/sports/special/2018/jul/07/ms-dhoni-turned-37celebrated-his-birthday-with-wife-sakshi-daughter-ziva-and-indian-team-2955141.html

https://twitter.com/msdfansofficial?ref_src=twsrc^tfw|twcamp^tweetembed|twterm^1015394541065551872&ref_url=https%3A%2F%2Fwww.vikatan.com%2Fnews%2Fsports%2F130055-celebrities-and-cricketers-wish-dhoni-on-his-birthday.html

 

  • தொடங்கியவர்

தோனிக்கு கிண்டலாக பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய சேவாக்: கேக்வெட்டி உற்சாகம்

 

 

 
-ms-dhoni-birthday

கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய எம்.எஸ்.தோனி. உடன் அவரின் மனைவி சாக் ஷி   -  படம்உதவி: ட்விட்டர்

“பினிஷிங் நாயகன்” என்று அடைமொழியுடன் அழைக்கப்படும் மகேந்திரசிங் தோனி தனது 37-வது பிறந்தநாளை கேக் வெட்டி உற்சாகமாகக் கொண்டாடினார்.

கடந்த 2004-ம் ஆண்டு, டிசம்பர் 23-ம் தேதி சிட்டகாங்கில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் எம்எஸ். தோனி அறிமுகமாகினார். தொடக்கத்தில் நீண்டமுடியையும், 7-வது வீரராகவும் களமிறக்கப்பட்ட தோனிக்கு, இந்தியாவில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிதான் திருப்புமுனையாக அமைந்தது. விசாகப்பட்டிணத்தில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிராக அவர் அடித்த 148 ரன்கள் அனைவரையும் வியந்து பார்க்க வைத்துவிட்டது.

  

அதன்பின் ஒருநாள் போட்டியில் அவரின் ஒவ்வொரு ஆட்டமும் முத்திரை பதிக்கும் விதத்தில்தான் அமைந்து. குறிப்பாக 2005-ம் ஆண்டு ஜெய்ப்பூரில் இலங்கைக்கு எதிராக 183 ரன்கள் குவித்தது, பாகிஸ்தான் பயணத்தில் பைசாலாபாத்தில் 148 ரன்கள் சேர்த்தது ஆகியவை தோனியின் புகழகை உச்சத்துக்குக் கொண்டு சென்றது.

இந்திய அணி பல்வேறு போட்டிகளில் வெற்றிக்குக் கடைசி நேரத்தில் தடுமாறும் போது, இக்கட்டான தருணத்தில் நின்று அணிக்கு பல்வேறு வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்துள்ளார் தோனி. அதனால்தான் பினிஷிங் நாயகன் என்ற செல்லப்பெயரும் அவருக்கு இருக்கிறது.

இந்திய அணிக்கு தோனி தலைமை ஏற்றபின் டி20 உலகக்கோப்பை, உலகக்கோப்பைப் போட்டி, சாம்பிய்ஸ் டிராபி என பல்வேறு முக்கிய கோப்பைகளை வென்றுள்ளது இதுவரை எந்த கேப்டனும் செய்யாத சாதனையாகும்.

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிராக 2-வது டி20 போட்டியில் இந்திய அணி நேற்று விளையாடியது. இது தோனிக்கு சர்வதேச அரங்கில் 500-வது போட்டியாகும். இன்று அவருக்கு 37-வது பிறந்தநாளாகும்.

துரதிருஷ்டவசாக இந்திய அணி நேற்றைய போட்டியில் தோற்றது. இருந்தாலும், போட்டி முடிந்தபின், இரவு சகவீரர்கள் அனைவரும் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கூறி கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

dhonijpg

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தோனியுடன் சுரேஷ் ரெய்னா

 

ஹோட்டிலில் தோனி தனது மனைவி சாக் ஷி, மகள் தியா, சக வீரர்கள் முன்னிலையில் கேக் வெட்டி தனது பிறந்தநாளை உற்சாகமாகக் கொண்டாடினார்.

கேக் வெட்டி முடித்ததும், சக வீரர்கள் தோனியின் முகத்தில் கேக்கை பூசி தங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், பிறந்தநாள் வாழ்த்துக்கள் லிஜெண்ட் தோனி. உங்களை போல் யாரும் இல்லை என்று தெரிவித்திருந்தார்.

dhoni-sehwag-wish-759jpg

சேவாக் ட்விட்டர் பக்கத்தில் தோனி குறித்து பதிவிட்ட புகைப்படம்

 

கடந்த 2017-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இக்கட்டான நேரத்தில் விக்கெட்டை எப்படி தற்காத்துக்கொண்டு அணிக்கு வெற்றித் தேடித்தந்தார் தோனி என்பதைக் குறிப்பிட்டு வீரேந்திர சேவாக் ட்விட்டரில் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் சேவாக் கூறுகையில், ‘‘பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோனி, இந்த போட்டியில் நீங்கள் விக்கெட்டை தற்காத்ததுபோல் நீண்டகாலத்துக்கு கிரிக்கெட்டில் இருக்க வேண்டும். , உங்களின் ஸ்டெம்பிங்கைக் காட்டிலும் நீங்கள் அனைத்து விஷயங்களிலும் நீங்கள் மகிழ்ச்சியைக் காண வேண்டும். ஓம் பினிஷாய நமஹ’’ எனக் கிண்டலுடன் தெரிவித்துள்ளார்.

http://tamil.thehindu.com/sports/article24358244.ece

  • தொடங்கியவர்

ஹேப்பி பர்த்டே தோனி: கேப்டன் கூலுக்கு குவியும் வாழ்த்துகள்


 

 

happybirthday-msdhoni

 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் எந்நாளும் கூலாகவே இருக்கும் வீரருமான மகேந்திர சிங் தோனிக்கு இன்று பிறந்தநாள். 37-வது பிறந்தநாளைக் கொண்டாடும் அவருக்கு ரசிகர்களிடமிருந்தும் சக வீரர்களிடமிருந்து மற்ற செலிபிரிட்டிகளிடமிருந்தும் வாழ்த்துகள் குவிகின்றன.

அவரது பிறந்தநாளை ஒட்டி ட்விட்டரில் பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர், ட்விட்டரில் இந்தியளவில் #HappyBirthdayMSDhoni ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.
ட்விட்டரில் பிரபலங்களின் வாழ்த்துகள்..

 

வீரேந்திர சேவாக்: "உனது வாழ்க்கை இவ்வளவு நீளமாக விரியட்டும். எல்லாவற்றிலும் மகிழ்ச்சி தங்கட்டும். ஸ்ட்ம்ப் ஆக்கும் வேகத்தைவிட அதிக வேகமாக எல்லாவற்றிலும் மகிழ்ச்சி கிட்டட்டும். ஓம் ஃபினிஷாய நமஹ" என ட்விட் செய்ததோடு தோனியின் ஃபுல் ஸ்ட்ரெட்ச் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்திருக்கிறார்.

 

1530944488.jpg

முகமது கைஃப்: கிரிக்கெட்  யோகிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். இவ்வுலகில் நான் பார்த்தவர்களிலேயே மிகவும் ஆழமாக எனை ஈர்த்த தலைவர் நீங்கள்தான். அன்பும் ஆசியும் நிறையட்டும்.

விவிஎஸ் லக்‌ஷ்மண்: இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தோனி. தொடர்ந்து ரசிகர்களை ஆராவாரம் செய்து, வீரர்களை ஊக்குவித்து மகிழ்ச்சியைப் பரப்பவும்.


 
கஸ்தூரி சங்கர்: கூலஸ்ட், பெஸ்ட்.. எல்லாவிதமான மீஉயர்நிலை வார்த்தைகளும் தோனியின் முன் ஒன்றுமில்லாமல் போய்விடும்.

1530944602.jpg

சுதர்சன் பட்நாயக்: ஹேப்பி பர்த்டே தோனி. வளமான எதிர்காலத்துக்கு வாழ்த்துகள். தேசம் உன்னால் பெருமைப்படுகிறது. ஒடிசாவில் உங்களுக்காக நான் செய்த மணற் சிற்பம்.

1530944553.jpg

ஜிவாவின் இனிய பாடல்..
தோனியின் பிறந்தநாளை ஒட்டி பிசிசிஐ ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளது. அந்த வீடியோவில் கோலி உட்பட பலரும் தோனிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். தோனியின் மகள் ஜிவா தனது ஹேப்பி பார்த் டே பாடலை அழகாகப் பாடியிருக்கிறார்.

 

 

https://www.kamadenu.in/news/sports/3912-happybirthday-msdhoni.html?utm_source=site&utm_medium=TTH_slider_banner&utm_campaign=TTH_slider_banner

 

அப்பா உங்களுக்கு வயசாயிடுச்சு: தோனிக்கு வயதாவதைப் பாடல் மூலம் உணர்த்திய மகள் ஜிவா

 

 
dd

தோனிக்கு கேக் கூட்டி மகிழும் சக அணி வீரர்கள்   -  படம்உதவி: இன்ஸ்ட்ராகிராம்

தோனிக்கு வயதாகிக் கொண்டே செல்கிறது என்பதை சுட்டிக்காட்டும் வகையில் அப்பா வயசாகிடுச்சுப்பா என்று ஜிவா பாடல்பாடி பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

கூல் கேப்டன், பினிஷிங் நாயகன் என்று அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனிக்கு இன்று 37-வது பிறந்த நாளாகும். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணியினர், தோனியின் பிறந்த நாளை மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் கொண்டாடினார்கள்.

 

கார்டிப் நகரில் உள்ள ஒரு ஹோட்டலில், மனைவி சாக்ஷி, மகள் ஜிவா, சக அணி வீரர்கள் முன்னிலையில் கேக் வெட்டி தோனி தனது பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்.

அப்போது தோனியின் மகள் ஜிவா, 'அப்பா உங்களுக்கு வயாசாகிடுச்சு' என்று இந்தியில் பாடலைப் பாடி அனைவரையும் தோனிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தினார்.

பிசிசிஐ, கேப்டன் விராட் கோலி, அவரின் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா ஆகியோர் தோனிக்கும், அவரின் மனைவி, மகளுக்குm வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

donijpg

தோனி தனது மகள் ஜிவாவுடன், சக வீரர்களுடன் விளையாடிய காட்சி

 

இந்திய அணியின் முன்னாள் வீரர்கள், சக வீரர்கள், ஜூனியர் வீரர்கள் என பலரும் தோனிக்கு ட்விட்டர் மூலம் வாழ்த்துகளைத் தெரிவித்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

விராட் கோலி கூறுகையில், “37 வயதிலும் உடற்தகுதியுடன், வேகமாகவும் நீங்கள் செயல்படுவது பார்ப்பதற்கு உற்சாகமாக இருக்கிறது. தோனிக்கு வாழ்வில் அனைத்துச் சிறப்புகளும் கிடைக்க வாழ்த்துகிறேன். இன்னும் உங்களுடன் நான் விளையாடி வருவது எனக்குக் கிடைத்த பெருமையாகும். உங்களின் காலடியில் நான் தொடங்கினோம், அன்பையும், மரியாதையும் பகிர்ந்து கொண்டோம். உங்களைச் சுற்றி நேர்மறையான ஊக்கமும், உற்சாகமும் இருக்க வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

dhonipng

தோனி, தோனி மனைவி சாக் ஷி

தோனியின் மனைவி சாக்‌ஷி தோனியுடன் நிற்குமாறு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உருக்கமாக எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், ''பிறந்த நாள் வாழ்த்துக்கள் அன்பே.. நீங்கள் எப்படிப்பட்ட மனிதநேயமுள்ளவர் என்பதைக் கூற வார்த்தைகள் இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக உங்களிடம் பல்வேறு நல்ல பழக்கங்களை  கற்றுக்கொண்டேன். இது தொடரும். வாழ்க்கையை மிகவும் நேர் கோணத்திலும், எதார்த்தமாகவும் பார்க்க உதவிய உங்களுக்கு எனது நன்றி'' என்று சாக்‌ஷி தோனி தெரிவித்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ''பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோனி, 500-வது போட்டியில் நீங்கள் விளையாடியதற்கு வாழ்த்துகள். உங்களைச் சுற்றி உள்ளவர்களுக்கும், அப்பாற்பட்டவர்களுக்கும் நீங்கள் தொடர்ந்து மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் வழங்க வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.

விவிஎஸ் லட்சுமண் ட்விட்டரில் வாழ்த்துச்செய்தியில், ''தோனிக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்களுக்கு மிகழ்ச்சியும், உற்சாகமும் தொடர்ந்து கிடைக்க வாழ்த்துகிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

http://tamil.thehindu.com/sports/article24360177.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

  • தொடங்கியவர்

நெட்டிசன் நோட்ஸ் : தோனி பிறந்த நாள் - டோனி ஆகணும்னு நினைக்காதீங்க...

 

 
dhonijpg

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி இன்று (சனிக்கிழமை) தனது 37வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் பலரும் தோனிக்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு  வருகிறார்கள். அவற்றின்  தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

கள்வன்   ராவணன்  

 
 

சச்சின் அவுட் ஆனதும் முடிஞ்சது இனி அவ்ளோதான்னு நினைச்சுட்டு இருந்த நம்மல தோனி நிக்குறாரு மேட்ச் எப்படியாது நம்ம பக்கம் மாத்திருவாருன்னு நினைக்கவச்சது தான் தோனியோட சக்ஸஸ்னு நான் சொல்லுவேன்

ஓகே கண்மணி

‏சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒருவர் திறமை இருந்தால் உச்ச நிலையை அடைய முடியும்.. என்பதற்கு வாழும் அடையாளம்

Màgesh Sţr Äķ     

‏இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு எண்ணற்ற மகிழ்ச்சியான தருணங்களை அளித்த மிஸ்டர் ஹெலிகாப்டர், CSK-வின் சிங்கம் "தல" MS டோனி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

பட்டாசு

தோற்க மாட்டேன் என்ற பிடிவாதம் கொண்ட @msdhoni க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

வெள்ளந்தி ™

‏சச்சின் அவுட்டானதும் டிவியை ஆஃப் பண்ணும் நிலை எப்போது மாறும் என எத்தனை ஆண்டுகள் காத்திருந்தோம்? கில்லி-க்ளைமாக்ஸ் கேப்டன் வேலு போல எழுந்து கை கால்களை சரிசெய்து எதிரணியை ஃபினிஷ் செய்ய யாருமில்லையா என எந்தனை நாள் வேண்டியிருப்போம்! அத்தனைக்கும் பதில் தலைவன்.

 KING ♚

‏ஆரம்பத்தில்

எனக்கு தோனிய பிடிக்காது

அதுக்கு காரணம்

நான் senior playerமேல

வச்சிருந்த ஓவர் love but

வெற்றி இலக்கு முக்கியம்னு வரும்

போது தெரிஞ்சது

தன்னையே அர்ப்பணித்த

ஒரு ஆள்

இவ்வளவு பிரச்சினைகளையும்

சந்திச்சு வெற்றி பெற்ற மனிதன்

திருபாய் VFX ✍

‏என்னைக்கும் டோனி ஆகணும்னு நினைக்காதீங்க ஏன்னா அவர் சச்சின் ஆகணும்னு நெனச்சிருந்தா டோனி ஆகிருக்க மாட்டார்.

இடியட்

‏நல்ல கேப்டன்  

நல்ல விக்கெட் கீப்பர்  

ℳՏⅅ லெஜன்டு

‏பவுலர்களுக்கு சிம்ம சொப்பனம்

பேட்ஸ்மேன்களே பார்த்து பயப்படும் பவுலர்களையே திணற வைக்கும் வல்லவன்

நிதானத்தை இழக்காத, தன்னலமற்ற தலைவன்

அனிஸ்(CJ)

வெற்றிக்காக ஆடியிருக்கிறார் களத்தில்,வெற்றி பெற்றபின் ஆடியது இல்லை எப்போதும்

வெற்றியோ,தோல்வியோ ஒன்றாக பார்க்கும் பக்குவம்,அதுதான் பல கோடி ரசிகர்கள் பின்னால் இருக்க காரணம் போல..

HBD Dhoni

‏கிரிக்கெட் வரலாற்றில் ஒரு பேட்ஸ்மேன் வின்னிங் ஷாட்டாக சிக்ஸ் அடிக்கும் வரைக்கும் தோனியின் புகழ் நீடித்திருக்கும் என்பதில் ஐயமேதுமில்லை.

திவாகரன்

‏குடும்ப சுமை,பொருளாதார நிலை,கிடைத்த வேலைக்கும் நெஞ்சில் சுமக்கும் கனவுக்குமான போராட்டம், அவமானம்,இகழ்ச்சி,தோல்வி

என தன் மீது எறியப்பட்ட ஒவ்வொரு தடையையும் உடைத்து உடைத்து உளி கொண்டு செதுக்கி "உன்னால் முடியும்" என்ற நம்பிக்கை நாயகனே வாழ்த்துக்கள்

Kutty

‏மொத்த இந்தியாவுக்கும் தேவையாக இருந்தது ஒரு பிரமாண்ட வெற்றி! 'In the air...sreeshanth takes it!' - இந்தக் கமென்ட்ரியின் முடிவில் மொத்த இந்தியாவும் குதித்தெழுந்தது! கிரிக்கெட் வரலாற்றின் முதல் டி20 சாம்பியன் இந்தியா! முக்கியக் காரணம் கேப்டன் தோனி!

ayanth_Offl

‏எனக்கும் இன்ஸ்பிரேசன் தோனி தாங்க 

அர்ஜுன் ரெட்டி

‏சச்சின் என்ற சாகப்தம் இருந்த போதே...

தோனி என்ற தனிமனித சாம்ரஜியத்தை நடத்தி காட்டியவர்

இளைய தளபதி   ®™

‏இந்தியா கிரிக்கெட்ல ஒரு கெளரவமான இடத்துக்கு வந்ததுல முக்கிய பங்கு #தோணிக்கு இருக்கு, மறுக்க முடியாத உண்மை.

Brasillia          கவிஞன்

‏இந்தியா கண்டெடுத்த ஒரு சரித்திர

நாயகன்      

Ranjith RaNa

‏சச்சின், விராட் லாம் உலக அளவில் அவங்க காலகட்ட நம்பர் 1 பேட்ஸ்மேன்காக அவங்களுக்கு இரசிகர்கள்.

ஆனா தோணிக்கு அப்டி இல்ல தன்னோட அதீத போராட்டத்தாலயும், விளையாட்டில் ஊரிப்போன அறிவும்,விட்டுக்குடுக்காத மன தைரியமும்தான் இரசிகர்களை உருவாக்குச்சு வெற்றி தோல்வி இல்ல

http://tamil.thehindu.com/opinion/blogs/article24357961.ece?utm_source=HP&utm_medium=hp-sports

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.