Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புத்தரின் போதனைப்படி நியாயமானதாய் செய்தால் நிரந்தரத் தீர்வினை அடையலாம் - சம்பந்தன்

Featured Replies

தாய்லாந்து தலைமை அமைச்சருடன்- கூட்டமைப்பு சந்திப்பு!!

 

Dh9l7MAUEAA1j2p-750x430.jpg

 
 
 
 

இரண்டு நாள்கள் உத்தியோகப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள தாய்லாந்து தலைமை அமைச்சர் ப்ரயூத் சான் ஓசாவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இன்று சந்திப்பை மேற்கொண்டனர்.

இது தொடர்பில் கூட்டமைப்பு தனது உத்தியோகபூர்வக் கீச்சகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

சந்திப்பில் எதிர்க்கட்சிச் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

http://newuthayan.com/story/13/தாய்லாந்து-தலைமை-அமைச்சருடன்-கூட்டமைப்பு-சந்திப்பு.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

புத்தரின் போதனைப்படி நியாயமானதாய் செய்தால் நிரந்தரத் தீர்வினை அடையலாம் - சம்பந்தன் 

 

 
 

எழுபது ஆண்டுகள் கடந்தும் இன்னமும் தேசிய பிரச்சினை தீர்க்கப்படாமல் இருக்கின்றதுடன் இப் பிரச்சினைக்கு புத்தபெருமானின் போதனைகளின் பிரகாரம் நியாயமானதாய் சரியாக செய்வதன் மூலம் நிரந்தர தீர்வினை அடைந்து கொள்ளலாம் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டடைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

TNA.jpg

இலங்கை வந்துள்ள தாய்லாந்தது பிரதமர் இன்று கொழும்பில் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த கலந்துரையாடலின் போதே எதிரக்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

82938e05-d414-4578-aa2b-b0f29e77319d.jpg

இருவருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் வருமாறு,

இருநாட்டிற்குமிடையில் உள்ள நீண்டகால உறவினை எடுத்துக்காட்டிய இரா சம்பந்தன், கடந்த காலங்களில் தாய்லாந்து அடைந்துள்ள முன்னேற்றங்களுக்கு தனது பாராட்டுதல்களை தெரிவித்தார். 

431cc8f3-99be-4753-9de5-b7860287620c.jpg

கடந்த காலங்களில் இடம்பெற்ற யுத்தத்தின் நிமித்தம் இலங்கை பாரிய முன்னேற்றங்களை அடைய முடியவில்லை என்பதனை சுட்டிக்காட்டிய இரா. சம்பந்தன், எழுபது ஆண்டுகள் கடந்தும் இன்னமும் தேசிய பிரச்சினை தீர்க்கப்படாமல் இருப்பதனையும் சுட்டிக் காட்டினார். 

சமகால அரசாங்கம் இது தொடர்பில் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்திய இரா சம்பந்தன், சுய கெளரவம் மற்றும் சமத்துவம் அடிப்படையிலான ஒரு புதிய அரசியல் யாப்பினூடாக சமாதானமான ஒரு தீர்வினையே நாம் எதிர்பார்க்கிறோம் எனவும் தெரிவித்தார். 

01bdb724-d23e-4172-ade3-fbaee5f41e75.jpg

மேலும் அத்தகைய ஒரு அரசியல் அதிகாரப்பகிர்வினை கொண்டுவருவதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு நாம் ஒத்துழைப்பினை வழங்குவோம் எனவும், இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை புத்த பெருமானின் போதனைகளின் பிரகாரம் நியாயமானதாய் சரியாக செய்வதன் மூலம் அடைந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

பாரிய முதலீடுகள் தொடர்பில் கருத்து தெரிவித்த இரா சம்பந்தன், வடக்கு கிழக்கு பிரதேசங்களில் காணப்படும் தேவையை வலியுறுத்திய அதேவேளை தாய்லாந்து தனியார் முதலீட்டாளர்களை வடக்கு கிழக்கில் முதலீடுகளை மேற்கொள்ளும் நோக்கில் ஊக்கப்படுத்த வேண்டும் எனவும் பிரதமர் அவர்களை கேட்டுக்கொண்டார். 

மேலும் வடக்கு கிழக்கில் உள்ள மக்களுக்கு வேலைவாய்ப்புக்கான தேவை அதிகமாக உள்ளதனையும் அவர்களது பொருளாதார நிலைமை சீர் செய்யப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

தாய்லாந்து முதலீட்டாளர்களினால் வடக்கில் நிறுவப்படவுள்ள சீனித்தொழிற்சாலை தொடர்பிலான முன்னேற்பாடுகளை வரவேற்ற இரா. சம்பந்தன், இந்த வகையிலான முதலீடுகள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இப்பிரதேசங்களுக்கு அதிகமாக கொண்டுவரப்படவேண்டும் என்பதனையும் வலியுறுத்தினார். மேலும் மிக கடினமான உழைப்பாளிகளை கொண்ட இப்பிரதேசங்களின் அபிவிருத்தியில் யுத்தம் பாரிய பின்னடைவினை ஏற்படுத்தியதனை எடுத்துரைத்த இரா சம்பந்தன் புதிய முதலீடுகள் வடக்கு கிழக்கில் மாத்திரமல்லாது முழு நாட்டு மக்களினதும் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் எனவும் தெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த தாய்லாந்து பிரதமர், நிச்சயமாக தாய்லாந்து தனியார் முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடுகளை செய்வதற்கு ஊக்கப்படுத்துவேன் என உறுதியளித்த அதேவேளை எதிர்காலத்தில் இந்த முதலீடுகள் நடைமுறைக்கு வருவதனை உறுதி செய்து அவற்றிக்கு ஆதரவு நல்குமாரும் எதிர்க்கட்சி தலைவர் அவர்களை வேண்டிக்கொண்டார்.

எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தனோடு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனம் கலந்துகொண்டிருந்தார்.

http://www.virakesari.lk/article/36519

  • கருத்துக்கள உறவுகள்

அவரை கனடா காரர் வந்து கதைச்சால் இந்த ரெண்டுக்கும் பொறுக்காது பேர் தெரியாத செவ்வாய்கிரக ஏலியன்சுடனும் தமிழர் பிரச்சனை பற்றி கதைப்பினம் பாருங்கோ ஏனென்றால் பாருங்கோ அரசியல் பலன்ஸ் குறையக்கூடாது அதுரெம்ப முக்கியம் .

  • தொடங்கியவர்

வடக்கு, கிழக்கில் முதலீடுகளை ஊக்குவிக்க சம்பந்தனிடம் தாய்லாந்து பிரதமர் உறுதி

 

thailand-prime-minister-met-sampanthan-1தாய்லாந்தின் தனியார் முதலீட்டாளர்களை வடக்கு, கிழக்கில் முதலீடு செய்யுமாறு ஊக்குவிக்கும்படி, தாய்லாந்துப் பிரதமர் ஜெனரல் பிரயுத் சான் ஓ சாவிடம்,  எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள தாய்லாந்து பிரதமர் ஜெனரல் பிரயுத் சான் ஓ சா, இன்று கொழும்பில் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இந்தப் பேச்சுக்களின் போது இரா.சம்பந்தன், ”போரினால், சிறிலங்கா பாரிய முன்னேற்றங்களை அடைய முடியவில்லை. எழுபது ஆண்டுகள் கடந்தும் இன்னமும் தேசிய பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது.

சுய கெளரவம் மற்றும் சமத்துவம் அடிப்படையிலான ஒரு புதிய அரசியலமைப்பின் ஊடாக சமாதானமான ஒரு தீர்வினையே நாம் எதிர்பார்க்கிறோம்.

அத்தகைய ஒரு அரசியல் அதிகாரப் பகிர்வினைக் கொண்டு வருவதற்கு சிறிலங்கா அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு நாம் ஒத்துழைப்பு  வழங்குவோம்.

தாய்லாந்து தனியார் முதலீட்டாளர்களை வடக்கு,கிழக்கில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு ஊக்கப்படுத்த வேண்டும்.

வடக்கு, கிழக்கில் உள்ள மக்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகம் தேவையாக உள்ளது. அவர்களது பொருளாதார நிலைமை சீர் செய்யப்பட வேண்டியது அவசியம்.

thailand-prime-minister-met-sampanthan-1

thailand-prime-minister-met-sampanthan-2தாய்லாந்து முதலீட்டாளர்களினால் வடக்கில் சீனித் தொழிற்சாலை நிறுவப்படவுள்ளமை வரவேற்கத்தக்கது.

இந்த வகையிலான முதலீடுகள் போரினால் பாதிக்கப்பட்ட இப்பிரதேசங்களுக்கு அதிகமாக கொண்டு வரப்படவேண்டும்.

மிக கடினமான உழைப்பாளிகளை கொண்ட இப்பிரதேசங்களின் அபிவிருத்தியில் போர் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

புதிய முதலீடுகள் வடக்கு, கிழக்கில் மாத்திரமல்லாது, முழு நாட்டு மக்களினதும் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்” என்று தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த தாய்லாந்து பிரதமர், நிச்சயமாக தாய்லாந்து தனியார் முதலீட்டாளர்களை சிறிலங்காவில் முதலீடுகளை செய்வதற்கு ஊக்கப்படுத்துவேன் என்று உறுதியளித்தார்.

எதிர்காலத்தில் அத்தகைய முதலீடுகளுக்கு ஆதரவு வழங்குமாறும் அவர், இரா.சம்பந்தனிடம் கேட்டுக் கொண்டார்.

இந்தச் சந்திப்பில்,  தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் பங்கேற்றிருந்தார்.

http://www.puthinappalakai.net/2018/07/13/news/31858

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.