Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இழுத்தடிக்கப்பட்டு வரும் மாகாண சபைத் தேர்தல்

Featured Replies

இழுத்தடிக்கப்பட்டு வரும் மாகாண சபைத் தேர்தல்

 

மாகாண சபை­க­ளுக்­கான தேர்தலை நடத்­து­வது தொடர்பில் பிர­தான கட்­சி­க­ளுக்கும் சிறு­பான்மை கட்­சி­க­ளுக்­கு­மிடையே ஏற்­பட்­டுக்­கொண்­டி­ருக்கும் முரண்­பா­டான கருத்­துக்கள் மாகாண சபை­க­ளுக்­கான தேர்தலை கால­வ­ரை­ய­றை­யின்றி நீட்டிச் செல்லும் போக்­கையே காட்டி நிற்­கி­றது. பிர­தான கட்­சி­கள் ­தேர்தல் எவ்­வாறு நடத்­தப்­ப­ட­வேண்டும் என்­பதில் அக்­கறை காட்­டு­வ­தை­விட தேர்தலை எப்­படி ஒத்­தி­வைக்­கலாம் என்­ப­தி­லேயே கரி­சனை காட்­டு­கின்­றன.

இதேநேரம் தேர்தலை உரிய காலத்தில் நடத்­து­வ­தற்­கு­ரிய ஏற்­பா­டு­களை அர­சாங்கம் மேற்­கொள்­ளாமல் ஏதா­வது கார­ணங்­களை காட்டி ஒத்­தி­வைக்­கப்­பார்க்­கி­றது அர­சாங்­க­மென கூட்­டு­க்கட்­சி­களும் சிறு­பான்மை கட்­சி­களும் தமது அதி­ருப்­தி­களை தெரி­வித்து வரு­கின்­றன. தேர்தலை கால தாம­தப்­ப­டுத்­து­வது ஜனநாய­கத்­துக்கு விரோ­த­மான செய­லெ­னவும் அவர்கள் கருத்து தெரி­வித்து வரு­கி­றார்கள்.

இதே­வேளை சிறு­பான்மை கட்­சி­க­ளைப் ­பொ­று­த்­த­வரை புதிய முறையில் தேர்தலை நடத்­து­வதை எப்­ப­டி­யா­வது தடுத்து பழைய முறையில் நடத்­தப்­பண்­ணு­வ­தி­லேயே ஆர்வம் காட்­டு­கின்­றன. அர­சாங்­கத்­தைப்­பொ­றுத்­த­வரை இவ்­வ­ருட இறு­திக்குள் தேர்தலை நடத்­தி­மு­டிக்­கப்­போ­வ­தா­கவும் புதிய முறை­யி­லேயே தேர்தல் நடத்­தப்­படும். பழைய முறையில் நடத்­து­வ­தற்கு வாய்ப்­பே­யில்­லை­யென அடித்துக் கூறி­யுள்­ளன.

ஒரு­போதும் பழைய தேர்தல் முறையில் இனி­வ­ருங்­கா­லங்­களில் எந்த தேர்தலும் நடத்­தப்­ப­ட­மாட்­டாது என்ற உறு­தியில் தேசிய அர­சாங்கம் உறு­தி­யா­க­வுள்­ளது. சிறு­பான்­மைக்­க­ட­சி­களை காரணம் காட்டி சில தரப்­பினர் அர­சியல் நோக்­கங்­க­ளுக்­காக ஜன­நா­யக முறை­யினை மீறு­வ­­தற்கு உடந்­தை­யாக இருக்க விட­மாட்­டோ­மெ­னவும் தொகு­தி­வா­ரி­யான தேர்தல் முறை கார­ண­மாக முஸ்லிம் மக்­களின் பிர­தி­நி­தித்­துவம் குறை­வ­டை­யு­மென்­பது தர்க்­க­ரீ­தி­யற்ற கருத்­தாகும் என மாகா­ண­ச­பைகள் மற்றும் உள்ளூராட்சி விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் பைசர் முஸ்­தபா தெரி­வித்­தி­ருந்தார்.

அவர் ­மேலும் இது­பற்றி கருத்து தெரி­விக்­கையில், ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் புதிய தேர்தல் முறை­ய­ினை தோற்றுவிக்­க­வேண்டும் என்­பதில் உறு­தி­யுடன் செயற்­பட்டு­ வ­ரு­வ­தா­கவும் 2015 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின்­போது இந்த ஆணை­யையே மக்­க­ளி­ட­மி­ருந்து அவர்கள் பெற்­றுள்­ளனர் என அவர் மேலும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

மாகா­ண­சபை தேர்தலை உரிய காலத்தில் நடத்தாமல் அர­சாங்கம் இழுத்­த­டிக்­கப் ­பார்க்­கி­றது. இதற்கு பல கார­ணங்கள் உண்டு. அதில் முக்­கிய காரணம் தேர்தலை நடத்­தினால் மாகாண சபைகள் தங்­க­ளி­ட­மி­ருந்து பறி­போய்­விடும். இதன் விளை­வாக 2020 ஆம் ஆண்டு நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதி தேர்தலிலும் மற்றும் பொதுத் தேர்தலிலும் தோல்­வி­ய­டைந்­து­வி­டு­வோ­மென்ற பயத்தின் கார­ண­மா­கவே தேர்தலை நடத்­தாமல் இழுத்­த­டிப்பு செய­்கி­றார்­க­ளென பொது எதி­ர­ணி­யினர் அர­சாங்­கத்­தின்­மீது குற்றம் சுமத்­திக்­கொண்­டி­ருக்­கி­றார்கள். அவர்கள் அரசின் நிலைப்­பா­டு ­பற்றி விமர்­சிக்­கையில் அர­சாங்கம் மாகா­ண­சபை தேர்தலை தமிழ்த்­ தே­சி­யக்­கூட்­ட­மைப்பை பயன்­ப­டுத்­தி­ பிற்­போட முயற்­சிக்­கி­றது. தேர்தலை நேர­டி­யாக சந்­திக்க முடி­யாத நிலையில் கூட்­ட­மைப்பை பயன்­ப­டுத்தி தமது நோக்­கங்­களை நிறை­வேற்ற முயற்­சிக்­கி­றார்கள். தமது பல­வீ­னத்தை மறைக்­கவே அர­சாங்கம் முயற்­சித்து வரு­கி­றது என கூட்டு எதி­ர­ணி­யினர் கடு­மை­யாக விமர்­சித்து வரு­கி­றார்கள்.

உண்­மை­யைக்­கூ­றப்­போனால் கூட்டு எதி­ர­ணி­யி­னரின் கருத்­துக்­களும் விமர்­ச­னங்­களும் ஆத்­தி­ரத்­திலும் பொறா­மை­யி­னாலும் கூறப்­ப­டு­வ­தாக இருந்­தாலும் அவர்கள் கூற்றில் கசப்­பான உண்மை இருக்­கி­ற­தென்­பதை மறுத்­து­விட முடி­யாது. ஏலவே கிழக்கு மாகாண சபை, வட­மத்­தி­ய ­மா­கா­ண­சபை, சப்­ர­க­முவ மாகாண சபை ஆகிய மூன்று மாகாண சபை­களின் ஆயுட் காலம் கடந்த ஒக்­டோ­பரில் முடி­வ­டைந்தும் வடக்கு மாகாண சபை, மத்­தி­ய­ மா­கா­ண­சபை, வட­மத்­திய மாகாண சபை ஆகி­ய­வற்றின் முதிர்ச்­சிக்­காலம் எதிர்­வரும் ஒக்­டோபர் மாதத்­துடன் முடி­வ­டைய இருக்­கின்ற நிலையில் இந்த ஆறு சபை­க­ளுக்­கான தேர்தலை நடத்­த­வேண்­டு­மென கட்­சி­களின் தலை­வர்கள் கோரிக்கை விடுத்து வரு­கின்ற நிலையில் எதிர்­வரும் டிசம்­ப­ருக்குள் தேர்தலை நடத்­தி­மு­டிப்­போ­மென அர­சாங்கம் கூறிக்­கொண்­டி­ருக்­கி­றது. அனைத்து மாகாண சபை­க­ளுக்­கான தேர்தலையும் ஒன்­றாக நடத்­து­வதன் மூலம் செல­வு­களை மட்­டுப்­ப­டுத்த முடி­வ­துடன் தேர்தலில் ஒரு­மித்த கால அளவும் இலகு தன்­மையும் காணப்­ப­டு­மென்­ப­தனால் கலைத்­த­வற்­றையும் கலைய இருப்­ப­தையும் ஒன்­றாக்கி ஒரே தினத்தில் நடத்­தப்­ப­ட­வேண்­டு­மென்­பதே அரச தரப்­பி­னரின் கருத்­தாக இருந்து வந்­துள்­ளது.

ஆனால், கடந்த பெப்­ர­வரி மாதம் நடந்த உள்­ளூரா­ட்சி தேர்தல்­ மு­டி­வுகள் அர­சாங்­கத்­துக்கு பாரிய படிப்­பி­னை­யொன்றை தந்­ததன் கார­ண­மாக அதா­வது பாரிய தோல்­வியை ஆளும் அரசு கண்­டதன் நிமித்தம் மாகாண சபைத்தேர்­தலை உரி­ய­கா­லத்தில் நடத்­து­வ­தற்கு அரசு பின்ன­டித்து வரு­கி­றது. அரசாங்கம் வாக்­கு­றுதி நல்­கி­ய­துபோல் உரி­ய­ கா­லத்தில் மாகா­ண­சபை தேர்தலை நடத்­தப்­போ­வ­தில்லை. இதற்கு காரணம் கூட்டு எதி­ர­ணி­யினர் தங்­களை தோற்­க­டித்து விடு­வார்கள். அவ்­வா­றா­ன­தொரு நிலை உரு­வா­கு­மாக இருந்தால் அது ஆளும் அர­சாங்­கத்­துக்கு சவா­லா­கி­விடும். அது­மட்­டு­மன்றி எஞ்­சிய அர­சாங்க காலத்தை இழுத்துச் செல்­வ­தென்­பது சவா­லா­கவும் முடி­யாத காரி­ய­மா­கவும் ஆகி­விடும் என்­ப­த­னா­லேயே அர­சாங்கம் காலங்­க­டத்­து­கி­றது. அல்­லது இழுத்­த­டிக்­கப்­பார்க்­கி­ன்ற­தென்­பது கூட்டு எத­ிர­ணி­யி­னரின் கருத்­தாக காணப்படுகின்றது.

மாகா­ண­சபை தேர்தலை புதிய முறையில் நடத்­து­வதா அல்­லது பழைய விகி­தா­சார முறையில் நடத்­து­வதா என்­பது தொடர்பில் பிர­தான கட்­சி­க­ளுக்கும் சிறு­பான்மை கட்­சி­க­ளுக்­கு­மி­டையில் ஒரு இழு­பறி நிலை காணப்­ப­டு­வதை கட்சி தலை­வர்­களின் கருத்­துக்­க­ளி­லி­ருந்தும் அர­சாங்­கத்தின் தக­வல்­க­ளி­லி­ருந்தும் அறி­யக்­கூ­டி­யதாக உள்­ளது. பிர­தான தேசி­யக் கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யைச் ­சேர்ந்த அமைச்­சர்கள் மற்றும் மூத்த பிர­தி­நி­திகள் புதிய முறையின் மூலமே மாகாண சபை தேர்தல் நடத்­தப்­பட­வேண்­டு­மென்­பதில் அதிக உறு­தி­யு­டை­ய­வர்க­ளாக காணப்­ப­டு­கி­றார்கள். இந்­த­ வி­ட­யத்தில் மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினர் அதிக ஆத­ர­வு­டை­ய­வர்­க­ளாக பேசி­வ­ரு­கி­றார்கள். இதே­வேளை, ஐக்­கி­ய­ தே­சி­யக்­கட்சி, கூட்டு எதிர்க்­கட்சி, தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பு, அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், தமிழ் முற்­போக்கு கூட்­டணி, இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ், முஸ்லிம் காங்­கிரஸ் ஆகிய கட்­சிகள் மாகாண சபை தேர்தலை பழைய முறை­யி­லா­வது நடத்­தும்­படி வலி­யு­றுத்தி வரு­கி­றார்கள்.

புதிய முறை தொடர்பில் அதனை ஆத­ரிக்­கின்ற கட்­சி­க­ளான ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி மற்றும் மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினர் புதிய தேர்தல் முறை தொடர்பில் முன்­வைக்கும் கருத்­துக்கள் பழைய முறைக்கு விடை கொடுத்து மக்கள் அங்­கீ­காரம் தந்த புதிய முறையில் தேர்தலை நடத்­து­வோ­மென உறு­தி­படக் கூறு­கி­றார்கள். மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினர் இது­பற்றி கருத்துத் தெரி­வி­க்­கையில், எக்­காரணம் கொண்டும் புதிய முறையில் மாற்றம் செய்­யக்­கூ­டாது. அந்த முறை­யி­லேயே தேர்தல் உடன் நடத்­தப்­ப­ட­வேண்­டு­மென வலி­யு­றுத்தி வரு­கி­றார்கள்.

சுதந்­தி­ரக்­கட்சி­யினர் இது­பற்றி கூறு­கையில், புதிய தேர்தல்­ மு­றையை கொண்­டு­வர வாக்­க­ளித்து மூன்றில் இரண்டு பெரும்­பான்மை ஆத­ர­வுடன் நடை­மு­றைப்­ப­டுத்த ஆத­ரவு தந்­த­வர்கள் இன்று சில வரை­ய­றுக்­கப்­பட்ட விட­யங்­களை காரணம் காட்டி புதிய தேர்தல் முறையை எதிர்ப்­பது ஆச்­ச­ரி­ய­மான விட­ய­மாக காணப்­ப­டு­கி­றது. புதிய முறையில் நடத்­தப்­ப­டு­வது எந்த இனத்­துக்கும் கட்சிக்கும் தீமை ஏற்­ப­டாது. குறிப்­பாக இம்­மு­றையின் மூலம் முஸ்லிம் மக்கள் கடு­மை­யாக பாதிக்­கப்­ப­டு­வார்கள் என்­பது வெறும் கற்­பனையென மாகா­ண­ச­பைகள் மற்றும் உள்ளூராட்சி விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் பைசர் முஸ்­தபா அடித்­துக்­கூ­றி­யுள்ளார்.

இதன் எதிர்­கால நன்மை தொடர்பில் விளக்­கு­கையில் புதி­ய­மு­றையில் தேர்தலை நடத்­து­வதன் மூலம் இன­வாதம் மீண்டும் தலைதூக்க வாய்ப்­பா­கி­விடும். பழை­ய­ மு­றை­யா­னது மோச­டி­மிக்­கது. அதை மீண்டும் கொண்­டு­வ­ரு­வது துரோ­க­மான செய­லாகும். புதிய முறை அமை­தி­கொண்­டது. புதிய முறையில் நடத்­து­வ­தற்கு கால தாமதம் ஏற்­படும் என்­ப­தற்­காக பழைய முறைக்கு செல்ல முடி­யா­தென கருத்து முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.

மாகா­ண­சபை தேர்தலை புதிய முறையில் நடத்­து­வ­தற்கு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தமது கடும் எதிர்ப்பை காட்டி வரு­கி­ன்றார்கள். பாராளுமன்றில் கடந்த 6 ஆம் திகதி 6.6.2018 மாகா­ண­சபை தேர்தல் முறைமை தொடர்­பான சபை ஒத்­தி­வைப்­பு­வேளை பிரே­ர­ணையை தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பு கொண்டு வந்த போது இந்த விவா­தத்தில் கலந்து கொண்ட சிறு­பான்மை கட்­சி­களின் தலை­வர்கள் மற்றும் மலை­யக கட்­சி­யினர் தமது எதிர்ப்பை வெளிக்­காட்­டி­யி­ருந்­தனர். குறிப்­பாக முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தமது கருத்தை வெளியிட்­ட­போது புதி­ய­முறை தேர்தல் முறைமை அநீதி விளை­விப்­பதால் அதை ஓர­மாக ஒதுக்கி வைத்­து­விட்டு பழைய முறையில் தேர்தலை நடத்­தும்­ப­டியும் 2012 ஆம் ஆண்டு புதிய தேர்தல் முறை­யொன்று முன்­வைக்­கப்­பட்­ட­போது அது பொருத்­த­மற்­றது எனக்­கூ­றப்­பட்­டது. அதை­விட மோச­மான முறையே தற்­போது அறி­மு­கப்­ப­டு­த­்­தப்­பட்­டுள்ள முறை. எனவே, பழைய முறையில் நட­த்த நட­வ­டிக்கை எடுங்கள் என ஹக்கீம் கோரி­யுள்ளார்.

இதே­போ­லவே பிரதி அமைச்சர் முத்து சிவ­லிங்கம் கருத்­து­ வெளியி­டு­கையில் தேர்தல் புதி­ய­மு­றையில் நடத்­தப்­ப­டு­மானால் மலை­யகம் தவிர்ந்த ஏனை­ய­ ப­கு­தி­களில் வாழும் தமிழ் மக்­களின் பிர­தி­நி­தித்­துவம் குறைந்­து­விடும். உதா­ர­ண­மாக இரத்­தி­ன­புரி, கேகாலை, களுத்­துறை போன்ற பிர­தே­சங்­களில் வாழும் மலை­யக தமிழ் மக்கள் நேர­டி­யா­கவே பாதிக்­கப்­ப­டு­வார்கள். இப்­பி­ரதே­சங்­களில் அவர்­க­ளுக்­குரிய பிர­தி­நி­தித்­துவம் இல்­லாது போய்­விடு­மென சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

புதிய முறையில் தேர்தல் எவ்­வாறு நடத்­தப்­ப­ட­வி­ருக்­கின்­ற­து. பழைய முறை­யென்றால் என்­ன­ என்­பது பற்றி சிறிது நோக்­க­வேண்டும். இங்கு புதிய முறை­யென்­பது 50 வீதம் தொகுதி முறை­கொண்­ட­தா­கவும் 50 வீதம் போனஸ் ஆச­னங்­களை கொண்­ட­தா­கவும் ஒரு­க­லப்பு முைறையை கொண்­ட­தாக அது நடத்­தப்­ப­ட­வி­ருக்­கி­றது. குறிப்­பிட்டுக் கூறு­வ­தானால் கடந்த உள்ளூராட்சி தேர்தலில் பின்­பற்­றப்­பட்ட நடை­மு­றையை அது கொண்­டி­ருக்­கலாம். உதா­ர­ண­மாக கிழக்கு மாகாண சபை 37 உறுப்­பி­னர்­களை கொண்­ட­தாயின் அதில் மாகாண சபை­க­ளுக்­கான தொகுதி முறையில் 50 வீதத்­தையும் கட்­சி­கள் ­பெ­று­கின்ற வாக்குவீதத்தின் அடிப்­ப­டையில் 50 வீத உறுப்­பி­னர்­களும் தெரி­வு­செய்­யப்­ப­டலாம். மொத்­த­மாக தொகுதி போனஸ் என்ற கலப்­பு­ம­ுறையின் இரட்­டைத்­தன்மை இங்கு காணப்­படும். ஆனால், பழைய முறை­யென்­பது விகி­தா­சார முறை­யென்­பது யாவரும் அறிந்த விடயம் . 1978 ஆம் ஆண்டு அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட மாவட்ட அடிப்­ப­டை­யி­லான வாக்கு முறை மற்றும் விருப்பு வாக்கு முறை கொண்­டது பழைய முறை­யாகும்.

ஐம்­ப­துக்கு ஐம்­பது என்­பது சிறு­பான்மை கட்­சி­க­ளுக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­ய­வி­டயம். எனவே, இந்த தீர்­மா­னத்தில் மாற்­றத்­தைக்­கொண்­டு­வந்து 70, 30 வீத­மாக மாற்­றப்­ப­ட­வேண்­டு­மென கூட்­ட­மைப்பின் பிர­தி­நிதி எம். ஏ சுமந்­திரன் கருத்­துத்­தெ­ரி­வித்­தி­ருந்தார். அவர் கலப்பு முறை பற்றி கருத்து தெரி­விக்­கையில், ஐம்­பது ஐம்­பது வீதத்தில் மாகாண சபை தேர்தலை நடத்­தினால் எந்­த­வொரு கட்­சிக்கும் ஸ்திர­மான ஆட்சி அமைக்க முடி­யாமல் போய்­விடும். மாகாண சபைபோல் தொங்கு நிலையே காணப்­படும். ஆகவே, 70, 30 என்ற வீதத்தில் நடத்­தப்­ப­ட­வேண்டும் என தனது கருத்தை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தார்.

அவர் மேலும் சில தக­வல்­களை தெரிவித்­தி­ருந்தார். மாகா­ண­சபை சட்­டத்தில் 17 ஆவது ஷரத்தை நீக்­கினால் மட்­டுமே பழைய முறையில் தேர்தலை நடத்­த­முடியும். உள்ளூராட்சி தேர்தலில் 60, 40 என்ற வீதம் கார­ண­மாக எந்த கட்­சிக்கும் ஸ்திர­மான ஆட்­சி­ அ­மைக்­க­ மு­டி­யாமல் போனது. இந்­நி­லையில் 50, 50 வீத முறைக்கு மாகாண சபை கொண்­டு­செல்­லப்­பட்டால் ஸ்திர­மான ஆட்சி அமைக்­க­மு­டி­யாமல் போய்­விடும் என சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

புதிய தேர்தல் முறை­மூலம் சிறு­பான்மை கட்­சி­க­ளுக்கு எத்­த­கைய பாதிப்­புக்கள் ஏற்­ப­ட­லா­மென அவர்கள் கரு­து­கி­ன்றார்­க­ளென்­பதை சுருக்­க­மாக பார்ப்போம்.

1. மாகாண சபை தேர்தலை நடத்­து­வ­தற்­காக வகுக்­கப்­பட்­டி­ருக்கும் எல்லை நிர்­ண­யத்தில் பாரிய குறை­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன. அது சரி­யாக பிரிக்­கப்­ப­ட­வில்லை. இதன்­கா­ர­ண­மாக சிறு­பான்மை சமூ­கத்­துக்கு அதி­க­ளவு பாதிப்பு ஏற்­ப­டப்­போ­கி­றது.

2. மோச­டிகள் நிறைந்த­வொ­ரு­மு­றையை அறி­மு­கப்­ப­டுத்­த­ மு­யற்­சிக்­கி­றார்கள்.

3. இன­ரீ­தி­யான நன்­மை­களை பெறும் நோக்கில் இம்­மு­றை­யின்­மூலம் கொண்­டு­வ­ரப்­பார்க்­கி­றார்கள்.

4. 50, 50 வீத கலப்பு முறையில் சில குறை­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன.

5. இம்­மு­றை­மூலம் முஸ்லிம் மக்கள் நேர­டி­யா­கவே பாதிக்­கப்­ப­டு­கி­றார்கள். உதா­ர­ண­மாக பழைய முறையின் மூலம் மாகாண சபை­க­ளுக்கு மொத்­த­மாக 455 பேர் தெரிவு செய்­யப்­பட்­டி­ருந்­தனர். இவர்­களில் 43 பேர் முஸ்லிம் பிர­தி­நி­திகள். ஆனால் புதி­ய­மு­றையில் 222 பேர் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். அவர்­களில் 24 பேருக்கு அதி­க­மாக முஸ்லிம்கள் தெரிவு செய்­யப்­ப­ட­வேண்டும். ஆனால் 13 பேர் நேர­டி­யாக தெரிவு செய்­யப்­ப­டுவர். ஆகவே, இது தமிழ், முஸ்லிம்­க­ளுக்கு பெரும் அநீ­தி­யான முறை­யாகும் என அமீர் அலி சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். இதே கருத்­தையே முஜிபுர் ரகுமான் கூறும்­போது தற்­போது மாகாண சபை­க­ளுக்கு முஸ்லிம்கள் 43 பேர் தெரிவு செய்­யப்­ப­டு­கின்­றனர். ஆனால் புதிய முறையில் 17 பேர் மட்­டுமே தெரிவு செய்­யப்­ப­ட­வாய்ப்­புள்­ளது என அவர் குற்றம் சாட்­டி­யுள்ளார்.

இதில் மாகாண சபை­க­ளுக்­கான எல்லை நிர்­ணயம் தொடர்பில் பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்கள் முன் வைக்­கப்­பட்டு வரு­கின்றன. குறிப்­பாக வட­கி­ழக்­குப்­ப­கு­தியில் இனக்­கலப்­புள்ள பிர­தே­சங்­களில் உள்ள பிரிப்­புக்­க­ளுக்கு பல கண்­ட­னங்­கள் ­தெ­ரி­விக்­கப்­பட்டு வரு­கின்­றன. அர­சாங்கம் ஒரு இனத்தின் நன்­மையை முன்­னு­ரி­மைப்­ப­டுத்தி தொகு­தி­களை வகுத்­துள்­ளது. அப்­பி­ர­தே­சத்­தி­லுள்ள ஏனைய சமூ­கங்­க­ளுக்கு கடு­மை­யான பாதிப்­புக்­களை கொண்­டு­வ­ர­வுள்­ளது. என குற்றம் சாட்­டி­யுள்­ளனர்.எல்லை நிர்­ணய அறிக்­கை­யா­னது தமிழ் மக்­க­ளுக்கு பாத­க­மா­கவுள்­ளது என்ற குற்­றச்­சாட்டும் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. இது தவிர, எல்லை நிர்­ணய விட­யத்தில் அர­சாங்கம் அச­மந்தப் போக்கு கொண்­ட­தா­கவே காணப்­ப­டு­கி­றது. எல்லை நிர்­ணய அறிக்கை பாரா­ளு­மன்றில் சமர்ப்­பிக்­கப்­பட்டு 5 மாதங்கள் கடந்த நிலை­யிலும் அது இன்னும் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை என சுமந்­திரன் பாராளுமன்றில் தெரி­வித்­துள்ளார். இது பற்றி கருத்து தெரி­வித்த அர­சாங்க தரப்­பினர் எல்லை நிர்­ண­யத்தில் குறை­பாடு இருந்தால் அது­பற்றி பாரா­ளு­மன்ற உப­கு­ழுக்­கூட்­டத்தில் விவா­திக்­க­மு­டியும். அனைத்து கட்­சி­களும் ஆத­ரவு தந்தால் எல்லை நிர்ணய ஏற்­பா­டு­களை ஒரு­மா­தத்­துக்குள் முடித்து தேர்தலை நடத்த முடி­யு­மென குறிப்­பிட்­டுள்­ளனர்.

புதிய முறை­யா­னது மோசடி நிறைந்­த­வொரு முறை. இதனை நேர­டி­யா­கவே உள்ளூராட்சி தேர்தலில் கண்­டி­ருக்­கி­றோ­மென சில கட்­சி­களின் தலை­வர்கள் நேர­டி­யா­கவே குற்­றப்­ப­த்திரம் வாசித்­துள்­ளனர். பண இறைப்­புக்கள் குறிப்­பாக தொகு­தி­களை கைப்­பற்ற இந்த மோச­டிகள் உரு­வாக்­கப்­படும்.

மற்றும் கட்­சி­களை குறிப்­பாக செல்­வாக்­கு­டைய கட்­சி­களை பல­மற்­ற­தாக்கி தேர்தல் முடிந்­த­வுடன் ஆட்சி அமைப்­ப­தற்­காக பிச்­சை­யெ­டுக்கும் நிலையை உரு­வாக்கி­ வி­டு­கி­றது. இந்த அனு­ப­வத்தை கடந்த உள்ளூராட்சி தேர்தலில் பெற்­றி­ருக்­கி­றோ­மென அவர்கள் குறிப்­பிட்­டுள்­ளனர்.

இவை­ய­னைத்தும் சிறு­பான்மை கட்­சி­களின் தலை­வர்க­ளாலோ அல்­லது அக்­கட்சி சார்ந்­த­வர்க­ளாலோ கூறப்­பட்ட விட­ய­மாக இருந்­தாலும் இவற்றில் மறை­மு­க­மான உண்­மைகள் இருக்­கத்தான் செய்­கின்­றன என விமர்­சன ரீதி­யாக ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டு­கி­றது. மேற்­படி கலப்பு முறை­யா­னது 50:50 வீத­மா­கவோ அல்­லது 70:30 வீத­மா­கவோ கலப்பு முறையில் நடத்­தப்­பட்­டாலும் இவற்றில் இன­ரீ­தி­யான கெடு­திகள் இருப்­பது பற்றி விலா­வா­ரி­யா­கவே பேசப்­ப­டு­கி­றது. குறிப்­பாக வட­கி­ழக்கில் குறித்த இனத்­தினர் அல்­லது குறித்த கட்­சி­யினர் பிர­தி­நி­தித்­து­வத்தை பெறாத நிலையில் அவற்றை மாற்­றி­ய­மைத்து தமக்கு சாத­க­மாக்கும் சூட­சு­மமே இதன் மூலம் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்­ளது என்­பது மறு­த­லிக்­க­மு­டி­யா­த­வுண்மை.

அடுத்த விட­ய­மாக சில பொதுக்­க­ருத்­துக்­க­ளைப்­பார்ப்­போ­மானால் மாகாண சபை தேர்தலுக்கு முன்பு அர­சியல் யாப்பை உரு­வாக்கி தீர்வை முன்­வை­யுங்கள் என கூட்­ட­மைப்­பினர் வலி­யு­றுத்­திக்­கொண்­டி­ருக்­கி­றார்கள். இந்த கோரிக்கை ஒரு முக்­கி­யத்­துவம் வாய்ந்த கோரிக்­கை­யாகும். கடந்த 70 வரு­டங்­க­ளுக்கு மேலாக தமிழ் மக்கள் தமது அரசியல் உரி­மைக்­காக பல யுக்­தி­களை கையாண்டு போராடி வந்த போதும் அவற்­றுக்­கான பெறு­மதி மிக்க பலன் கிடைக்­க­வில்லை. ஏமாற்­றங்­க­ளையும் இழுத்­த­டிப்­புக்­க­ளை­யுமே சந்­தித்­தி­ருக்­கி­றார்கள் தமிழ் மக்கள்.

இந்த அர­சாங்கம் பத­விக்கு வந்த போது முன்­வைக்­கப்­பட்ட கோரிக்கை நிரந்­த­ர­மான அர­சியல் தீர்வை கொண்டு வந்து தமிழ் மக்­களின் நீண்­ட­கா­லப்­பி­ரச்­ச­ினைக்கு தீர்வு காணுங்­க­ளென கோரிக்கை விடப்­பட்­டது. அர­சியல் சாச­ன­மொன்றை வரைந்து அத­னூ­டாக நிரந்­தர தீர்வு கொண்­டு­வ­ரப்­ப­டு­மென அர­சாங்கம் வாக்­கு­றுதி நல்­கி­ய­போதும் தொடங்­கப்­பட்ட அர­சி­யல்­சா­சன முயற்­சிகள் ஊறுகாய் போடப்­ப­ட்­டி­ருக்­கி­ற­தென்­பதை அனை­வரும் அறிவர். தேசிய அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்து மூன்று வரு­டங்கள் தாண்­டி­விட்­ட­போதும் முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­ப­டாமல் இழுத்­த­டிப்பு செய்­யப்­ப­டு­கி­ற­தென்­பதை கூட்­ட­மைப்­பினர் ராஜதந்­தி­ரி­க­ளுக்கும் சர்­வ­தே­சத்­துக்கும் முறை­யிட்டுக் கொண்­டி­ருப்­ப­தைக் ­கா­ணு­கின்றோம். தேசிய அர­சாங்­க­மொன்றை உரு­வாக்­கு­வ­தற்கு தமிழ் தலை­மை­களும் மக்­களும் எவ்­வ­ளவு பங்­க­ளிப்பை செய்­தார்­கள்­ என்­பதை உல­க­ம­றியும்.

ஆனால், ஜனா­தி­ப­தி­ய­வர்­களோ அர­சியல் தீர்வுக்­குப்­பின்பே அபி­வி­ருத்­திகள் என்று குறிப்­பிட்­டுக்­கொண்­டி­ருந்­தாலும் அதற்குரிய அரசியல் சூழலை கொண்டுவருவதற்கு பல பிரயத்தனங்களை எடுத்தாலும் தேசிய அரசாங்கத்துக்குள் உள்ள முரண்பாடுகள். வெளி நின்று இயங்கிக்கொண்டிருக்கும் தீவிரவாத சக்திகள் ஜனாதிபதியின் முயற்சிக்கு குந்தகம் விளைவிப்பவர்களாகவே காணப்படுகிறார்கள்.

மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு முன்னுள்ள மற்றொரு பிரச்சினை மாகாண சபைகளுக்கான அதிகாரப்பகிர்வு தொடர்பான விடயமாகும். மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் பூரணமாக பகிர்ந்தளிக்கப்படவேண்டுமென வட கிழக்கு மாகாண சபைகள் பல்வேறு போராட்டங்களை நடத்தியிருக்கின்றன. மறுபுறம் கோரிக்கைகளை விடுத்து வந்துள்ளபோதும் அவற்றின் மீது கவனம் செலுத்தப்படவில்லை. அரசாங்கம் மாகாண சபைகளுக்கு ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களுக்குமேல் வழங்குவதற்கு தயக்கம் காட்டிவருகிறது. பொலிஸ் அதிகாரம் காணி அதிகாரம் வழங்கப்படவேண்டும். நிதிப்பிரமாணங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்படவேண்டுமென மாகாணசபை முறைமை ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தபோதும் அது பற்றி அரசு இம்மியளவும் கரிசனை காட்டாமலே இருந்து வருகிறது. அண்மையில் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஒரு விடயத்தை குறிப்பிட்டிருந்தார். அதிகாரங்களைத் தாருங்கள் வடக்கில் நிகழும் சமூக கொடுமைகளை இல்லாது ஆக்குகின்றோமென உணர்வுபூர்வமாக தெரிவித்திருந்தார். தமிழ் மக்களின் நீண்ட காலப்போராட்டத்தின் காரணமாக இடைக்காலத் தீர்வாகவே மாகாணசபை முறைகள் கொண்டுவரப்பட்டன. அவ்வாறு கொண்டுவரப்பட்டபோதும் தமிழ் மக்களின் நீண்டகால போராட்டத்துக்கான தீர்வாக மாகாண சபை முறை ஏற்ற­தல்ல. இது யானைப்பசிக்கு சோளப் பொரி போட்ட கதையென தமிழ் தலைமை­களும் விடுதலைப்போராளிகளும் விமர்ச­­ித்து வந்ததுடன் தமது கனவுகள் இதுவாகவே இருக்கமுடியுமென கூறி வந்துள்ளனர். ஆனால் விடுதலைப­்­­போர் மௌனித்துப்போன நிலை­­யில் மாகாண சபை முறையில் இடைக்­­கால நன்மைகளையாவது பெறு­வோமென்ற நோக்கிலேயே பாய்ச்சல் நிலைக்காலத்துக்கான தீர்வாக அங்கீகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது தமிழ் மக்களுக்கு. ஆனால் நடந்ததென்ன--? பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கு பிடித்த கதையாக மாகாண சபைகளோடு சங்கமித்துப்போகின்ற நிலைமைகளை தமிழ் மக்களுக்கு அரசாங்கம் உண்டு பண்ணிக்கொடுத்ததே தவிர அதற்குரிய பெறுமதி மிக்க அதிகாரங்களை வழங்கு­வதில் போக்கு காட்டியே செல்கிறது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-07-14#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.