Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு அமைச்சரவை -மறு அறிவித்தல் வரை ஒத்திவைப்பு- ஆளுநர் விடுத்துள்ள உத்தரவு!!

Featured Replies

வடக்கு அமைச்சரவை -மறு அறிவித்தல் வரை ஒத்திவைப்பு- ஆளுநர் விடுத்துள்ள உத்தரவு!!

 

 

HG_Reginald-696x400.jpg

 
 

 

 

வடக்கு மாகாண அமைச்சரவையினை எனது மறு அறிவித்தல் வரும் வரை கூட்டக் கூடாது என வடக்கு மாகாண பிரதம செயலாளருக்கு வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் அமைச்சரவையில் பா.டெனீஸ்வரனும் ஓர் சட்டப்படியான அமைச்சராவார் என மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் 29 ஆம் திகதி இடைக்கால உத்தரவு பிறப்பித்த நிலையில் அமைச்சர் வாரியக் கூட்ட ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை வழங்குமாறு பிரதம செயலாளர் ஆளுநருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

குறித்த கடிதத்துக்குப் பதில் அளித்துள்ள ஆளுநர் இன்றைய நிலையில் வடக்கு மாகாண சபையில் 6 அமைச்சர்கள் இருப்பதனைக் கருத்தில் கொண்டு அமைச்சர் வாரியக் கூட்ட விடயத்தில் தனது அனுமதியின்றி எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாம் என வடக்கு மாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதனுக்கு கடந்த 12ஆ ம் திகதிய கடிதம் மூலம் உத்தரவிட்டுள்ளார்.

 

இதன் காரணமாக தற்போதைய சூழலில் அமைச்சர் வாரியக் கூட்டம் எவையும் இடம்பெறுவதற்கான சாத்தியம் அற்ற நிலமை கானப்படுவதனால், வடக்கு மாகாண சபையின் ஊடாக முன்னெடுத்த பல திட்டங்களில் தாமதம் ஏற்படலாம் என்ற அச்சம் தெரிவிக்கப்படுகின்றது. –

http://newuthayan.com/story/00/வடக்கு-அமைச்சரவை-மறு-அறிவித்தல்-வரை-ஒத்திவைப்பு-ஆளுநர்-விடுத்துள்ள-உத்தரவு.html

  • தொடங்கியவர்

அமைச்சர் சபைக் கூட்டம் கூட்ட ஆளுநர் குரே தடா! – சிக்கலுக்குள்ளாகின்றது வடக்கு மாகாண நிர்வாகம்

 

 

download-15.jpg

 
 
 

வடக்கு மாகாண அமைச்­சர் சபை­யின் கூட்­டத்தை தனது அறி வித்­தல் வழங்­கப்­ப­டும் வரை கூட்­டக் கூடாது என்று அமைச் சர் சபை­யின் செய­ல­ரும், வடக்கு மாகாண தலை­மைச் செய­ல­ரு­மான அ.பத்­தி­நா­த­னுக்கு, வடக்கு மாகாண ஆளு­நர் குரே உத்­த­ரவு பிறப் பித்­துள்­ளார் என்று தெரி­ய­வ­ரு­கின்­றது.

மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத் தீர்ப்புத் தொடர்­பாக வடக்கு மாகாண நிறை­வேற்று நிர்­வா­கத்­தில் எழுந்­துள்ள அசா­தா­ரண சூழ்­நிலை தொடர் பில், வடக்கு மாகாண சபை­யில் நேற்­று­முன்­தி­னம் விவா­தம் நடத்­தப் பட்­டி­ருந்­தது. வடக்­கில் நிர்­வாக நட­வ­டிக்­கை­கள் முடங்­கும் சூழ்நிலைக்­கான ஏதுக்­கள் காணப்­ப­டு­கின்­றன என்று மாகாண சபை அமர் வில் கூறப்­பட்­டி­ருந்த நிலை­யில், வடக்கு மாகாண ஆளு­ந­ரால் இந்த உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

வடக்கு மாகாண அமைச்­சர் சபை­யில் பா.டெனீஸ்­வ­ர­னும் அமைச்­ச­ரா­கத் தொடர்­கின்­றார் என்று மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் கடந்த மாதம் 29ஆம் திகதி இடைக்­கால கட்­ட­ளை­யைப் பிறப்­பித்­தி­ருந்­தது. இடைக்­கால கட்­ட­ளைக்கு அமை­வாக பா.டெனீஸ்­வ­ர­னுக்கு அவர் வகித்த அமைச்­சுப் பொறுப்­புக்­கள் மீள வழங்­கப்­ப­ட­வில்லை.

 

நீதி­மன்­றத்­தின் கட்­ட­ளை­யால் அமைச்­சர் சபை செயற்­பட முடி­யாத நிலமை தோன்­றி­யுள்­ளது. கடந்த மாதம் 6ஆம் திக­திக்­குப் பின்­னர் அமைச்­சர் சபை கூட்­டப்­ப­ட­வில்லை. அமைச்­சர் சபை­யைக் கூட்­டும், அமைச்­சர் சபை­யின் செய­ல­ரும் வடக்கு மாகாண தலை­மைச் செய­ல­ரு­மான அ.பத்­தி­நா­தன், இது தொடர்­பில் வடக்கு ஆளு­ந­ருக்கு கடி­தம் அனுப்­பி­யுள்­ளார்.

அமைச்­சர் சபைக் கூட்­டத்தை தனது அனு­ம­தி­யின்றி கூட்­ட­வேண்­டாம் என்று ஆளு­நர் பதில் வழங்­கி­யுள்­ளார்.
இந்த விவ­கா­ரம் தீர்க்­கப்­ப­ட­மை­யால் வடக்கு மாகாண நிர்­வா­கம் நாளுக்கு நாள் சிக்­க­லுக்கு உள்­ளாகி வரு­கின்­றது என்று சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றது.

http://newuthayan.com/story/08/அமைச்சர்-சபைக்-கூட்டம்-கூட்ட-ஆளுநர்-குரே-தடா-சிக்கலுக்குள்ளாகின்றது-வடக்கு-மாகாண-நிர்வாகம்.html

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.