Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வறுமையிலும் சாதனை: சர்வதேச மட்ட விளையாட்டுப் போட்டிகளுக்கு வடக்கின் 3 வீராங்கனைகள் தெரிவு

Featured Replies

 
வறுமையிலும் சாதனை: சர்வதேச மட்ட விளையாட்டுப் போட்டிகளுக்கு வடக்கின் 3 வீராங்கனைகள் தெரிவு

வறுமையிலும் சாதனை: சர்வதேச மட்ட விளையாட்டுப் போட்டிகளுக்கு வடக்கின் 3 வீராங்கனைகள் தெரிவு

 
 

வறுமையின் பிடியிலும் விளையாட்டுத்துறையில் சாதிக்கும் பலர் எம் சமூகத்தில் இருக்கவே செய்கின்றார்கள்.

அவ்வாறு சாதித்து, சர்வதேச மட்ட விளையாட்டுப் போட்டிகளுக்கு மூன்று வீராங்கனைகள் தெரிவாகியுள்ளனர்.

6 நாடுகள் பங்கேற்கும் 15 வயதிற்குட்பட்டோருக்கான சர்வதேச கால்பந்தாட்டத் தொடர் பூட்டானில் எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதற்கான இலங்கை அணிக்கு வட மாகாணத்திலிருந்து ஜெகநாதன் ஜெதுன்ஷியா, சிவசுதன் தவப்பிரியா, உருத்திரகுமார் யோகிதா ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.

அளவெட்டியைச் சேர்ந்த ஜெகநாதன் ஜெதுன்ஷியாவின் தந்தை அன்றாட கூலித்தொழிலின் மூலம் தன் குடும்பத்தைக் கவனித்து வருகின்றார்.

வலிகாமம் வடக்கு – கொல்லங்கட்டியில் வசிக்கும் சிவசுதன் தவப்பிரியாவின் தந்தை விவசாயி என்பதுடன், வறுமைக்கு மத்தியிலேயே இவர் கால்பந்தாட்டத்தில் ஈடுபடுகின்றார்.

வலிகாமம் வடக்கு – அளவெட்டி பிரதேசத்தைச் சேர்ந்த யோகிதாவின் தந்தை உருத்திரகுமார் உடற்பலவீனம், சோர்வு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதால், உறவினர்களின் உதவியில் தங்கியுள்ளார்.

வறுமை பின்தொடர்ந்தாலும் கால்பந்தாட்ட அரங்கில் சாதிக்க வேண்டும் என்பதே இந்த மூன்று வீராங்கனைகளினதும் இலட்சியக் கனவாகும்.

 

https://www.newsfirst.lk/tamil/2018/07/வறுமையிலும்-சாதனை-சர்வத/

  • தொடங்கியவர்

தேசிய கால்­பந்­தாட்ட அணி­யில்- யாழ். வீராங்­க­னை­கள் ஏழு பேர்!!

இலங்­கை­யின் தேசிய 14 வய­துப் பெண்­கள் கால்­பந்­தாட்ட அணி­யில் யாழ்ப்­பாண மாவட்ட வீராங்­க­னை­கள் ஏழு பேர் இடம்­பி­டித்­துள்­ள­னர். பண்­டத்­த­ரிப்பு பெண்­கள் உயர்­த­ரப் பட­சா­லை­யைச் சேர்ந்த நால்­வர், மகா­ஜ­னக் கல்­லூரி மாண­வி­கள் மூவர் என்­ற­வா­றாக அமைந்­துள்­ளது அந்­தப் பிர­தி­நி­தித்­து­வம்.

பண்­டத்­த­ரிப்பு பெண்­கள் உயர்­த­ரப் பாட­சா­லை­யைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்த ச.கிரி­சாந்­தினி, பா.சேந்­தினி, அ.கொன்­சிகா, க.பிருந்­தா­யினி ஆகி­யோ­ரும், தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூ­ரி­யைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்த ஜெ.ஜெதுன்­சிகா, உ.சோபிதா, சி.தவப்­பி­ரியா ஆகி­யோ­ருமே அவ்­வாறு தேசிய அணி­யில் இடம்­பி­டித்­துள்­ள­னர்.

இந்த அணி எதிர்­வ­ரும் ஓகஸ்ட் 8ஆம் திகதி பூட்­டா­னில் ஆரம்­பிக்­கும் ஆசிய கால்­பந்­தாட்­டத் தொட­ரில் பங்­கு­பற்­ற­வுள்­ளது.

http://newuthayan.com/story/10/தேசிய-கால்­பந்­தாட்ட-அணி­யில்-யாழ்-வீராங்­க­னை­கள்-ஏழு-பேர்.html

Edited by நவீனன்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

இலங்கை 15 வயதின் கீழ் தேசிய கால்பந்து அணியில் 6 யாழ். மாணவிகள்

u15-national-womens-football-696x464.jpg
 

பூட்டான் தலைநகர் திம்புவில் இம்மாதம் ஆரம்பமாகவுள்ள தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ((SAFF)), 15 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் சம்பியன்ஷிப் தொடருக்கான இலங்கை குழாத்தில், யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு மாணவிகள் இடம்பிடித்துள்ளனர்.

 

தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின், 15 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் சம்பியன்ஷிப் தொடர் இம்மாதம் 9ஆம் திகதி முதல் 18ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

இந்த போட்டித் தொடரில் தெற்காசிய நாடுகளான இலங்கை, இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், பூட்டான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய ஆறு நாடுகள் ஏ (A) மற்றும்  பி (B) என இரண்டு குழுக்களாக பிரிந்து போட்டியிடுகின்றன. இதில் ஏ குழுவில் அங்கம் வகிக்கும் இலங்கை அணி, தங்களுடைய குழுவில் (A) இந்திய மற்றும் பூட்டான் அணிகளுடன் மோதவுள்ளது.

போட்டித் தொடருக்காக எதிர்வரும் 7ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்படவுள்ள இலங்கை அணி, தங்களுடைய முதல் குழுநிலைப் போட்டியில், 9ஆம் திகதி இந்திய அணியை எதிர்கொள்ளவுள்ளது. பின்னர், 11ஆம் திகதி பூட்டான் அணியை எதிர்த்தாடவுள்ளது. இந்த நிலையில், தொடருக்கு செல்லவுள்ள 23 பேர்கொண்ட குழாத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள வீராங்கனைகளின் பெயர் விபரங்களை இன்று (06) இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் அறிவித்துள்ளது.

 

இதில் முக்கிய அம்சம் என்னவென்றால், அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை குழாத்தில் யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலையைச் சேர்ந்த மூன்று மாணவிகளும், யாழப்பாணம் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியின் மூன்று மாணவிகளும் என மொத்தமாக யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு பேர் அணிக்குழாத்தில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இதில் பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலையைச் சேர்ந்த  முன்கள வீராங்கனைகளான ரகுதாஸ் கிருஷாந்தினி, ஏ.டி.மேரி கொன்சிகா மற்றும் பின்கள வீராங்கனையான பாஸ்கரன் செயந்தினி ஆகியோரும், மகாஜனக் கல்லூரியின் பின்கள வீராங்கனையான எஸ்.தேவப்பிரியா, மத்தியகள வீராங்கனை யு.ஜோகிதா மற்றும் கோல் காப்பாளரான ஜெகநாதன் ஜெதுன்சிகா ஆகியோரும் பெயரிடப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை 15 வயதுக்குட்பட்டோர் மகளிர் அணியின் தலைவியாக குருணாகல் கவிஸ்கமுவ மகா வித்தியாலயத்தின் பின்கள வீராங்கனை உத்பல கவிந்தி ஜெயகொடி நியமிக்கப்பட்டுள்ளதுடன், உப தலைவியாக பொலன்னருவை பெந்திவெவா மகா வித்தியாலயத்தின் பின்கள வீராங்கனை நிமேஷா எஸ். பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.

 

இந்த தொடருக்கான இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக ஏற்கனவே இலங்கை 16 வயதின் கீழ் ஆண்கள் தேசிய அணியை பயிற்றுவித்த அனுபவம் கொண்ட அப்காஸ்கான் மொஹமட் அஜவத் அவர்களும், கோல் காப்பு பயிற்றுவிப்பாளராக இலங்கை தேசிய அணியின் முன்னாள் கோல் காப்பாளரும், இலங்கை பொலிஸ் விளையாட்டுக் கழகத்தின் கோல் காப்பாளருமான மஹிந்த கலகெதர அவர்களும் படமையாற்றுகின்றனர்.

பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் நடைபெற்ற தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின், 15 வயதுக்குட்பட்டோர் இறுதிப்போட்டியில் இந்திய அணியை 1-0 என வீழ்த்தி பங்களாதேஷ் அணி சம்பியன் கிண்ணத்தை வென்றிருந்தது. எனினும், குறித்த தொடரில் இலங்கை அணி பங்கேற்றிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி குழாம்

உத்பல கவிந்தி ஜெயகொடி (தலைவி), அனுருத்திகா டில்ருக்ஷி, ரகுதாஸ் கிருஷாந்தினி, ஏ.டி.மேரி கொன்சிகா, பாஸ்கரன் செயந்தினி, எஸ்.தேவப்பிரியா, யு.ஜோகிதா, ஜெகநாதன் ஜெதுன்சிகா, இந்துனி நிமேஷரா குமாரி, காவ்யா நெத்மி குணரத்ன, அமவி அனுத்தரா கஹடபிடிய, மலீகா சேஹானி, சந்துனி நிசன்சலா குமரிஹாமி, கவிஷா மாலிந்தி, நிமேஷா எஸ். பண்டார (உப தலைவி), சென்கலனி பண்டார, பசிந்து மதுபாஷினி திசாநாயக்க, அமானி எம். சேனாதீர, தஷானி ஜயகடு, மதுஷானி குமாரி, டபுள்யூ.ஏ.ஐ.வீரஷதீர, கீத்மா செனூரி பண்டார, தசுனி ஹன்சிகா

http://www.thepapare.com/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

தாயகத்தின் வீராங்கனைகளுக்கு யாழ் நகரில் மகத்தான வரவேற்பு!

 

பூட்டானில் இடம்பெற்ற சர்வதேச கால்பந்தாட்டப் போட்டியில் இலங்கைத் தேசிய கால்பந்தாட்ட அணி சார்பாக பங்குபற்றித் தாயகம் திரும்பிய பண்டத்தரிப்பு மகளிர் உயர்தரப் பாடசாலை வீராங்கனைகளுக்கு யாழ்.நகரில் நேற்று மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.

தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் பூட்டான் தலைநகர் திம்புவில் இடம்பெற்ற 15 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் கால்பந்தாட்டப் போட்டிக்கு இலங்கை தேசிய மகளிர் அணி தெரிவுசெய்யப்பட்டிருந்தது.

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளத்தினால் தெரிவுசெய்யப்பட்ட 23 பேர்கொண்ட தேசிய அணியில் வடக்கு மாகாணத்தில், யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு தமிழ் வீராங்கனைகள் இடம்பெற்றனர்.

பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலை மாணவிகளான பா.செயந்தினி, ஏ.டி.மேரி கொன்சிகா, ர.கிருசாந்தினி மற்றும் தெல்லிப்பழை மகாஜன கல்லூரி மாணவிகளான எஸ்.தவப்பிரியா, யு.ஜோகிதா, ஜெ.ஜெதுன்சிகா ஆகியோர் மேற்படி அணியில் இடம்பெற்றனர்.

கடந்த வாரம் பூட்டான் தலைநகர் திம்புவில் இடம்பெற்ற போட்டிகளில் இந்திய மற்றும் பூட்டான் அணிகளுடன் இவர்கள் விளையாடினர்.

போட்டிகள் முடிவடைந்து தாயகம் திரும்பிய பண்டத்தரிப்பு மகளிர் உயர்தரப் பாடசாலை வீராங்கனைகளில் ஒருவர் கொழும்பில் தங்கிநின்ற நிலையில் சாந்தை பண்டத்தரிப்பைச் சேர்ந்த பா.செயந்தினி, மாதகலைச் சேர்ந்த ஏ.டி.மேரி கொன்சிகா ஆகியோர் இன்று பிற்பகல் 5 மணியளவில் யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்தனர்.

இவர்களுக்கு சாந்தையில் உள்ள சமூகமட்ட அமைப்புக்களின் ஏற்பாட்டில் யாழ்.நகரில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.

டென்மார்க் டெமக்கிரட்டிவ் கட்சியின் உறுப்பினரும் டென்மார்க் உயர்நீதிமன்ற ஜூரருமான தருமன் தருமகுலசிங்கம் வீராங்கனைகளுக்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து சாந்தை விநாயகர் சனசமூக நிலையத் தலைவர் அ.பாலச்சந்திரன், விநாயகர் விளையாட்டுக் கழகத் தலைவர் ந.ரசிகரன், வெண்கரம் செயற்பாட்டாளர்களான மு.கோமகன், ந.பொன்ராசா ஆகியோரும் மாலை அணிவித்தனர்.

தொடர்ந்து பண்டத்தரிப்பு மகளிர் உயர்தரப் பாடசாலை வரை அழைத்துச் செல்லப்பட்ட அவர்கள் பாண்ட் இசையுடன் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பிரதேச மக்கள் மலர் மாலை அணிவித்து அவர்களை வரவேற்றனர்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

https://www.ibctamil.com/srilanka/80/104753

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.