Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் போரைக் கொச்சைப்படுத்தும் அரசியல்வாதிகள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் போரைக் கொச்சைப்படுத்தும் அரசியல்வாதிகள்!

_16145_1532842030_E45A145E-4FB6-4F0E-A415-D5FEC77A506B.jpeg

(தயாளன்)

புரிந்துணர்வு என்பது அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை எந்தக் காலத்திலும் உணர முடியாத விடயம். இதனை எம்.கே.சிவாஜிலிங்கம், சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகிய மூன்று அரசியல் வாதிகளும் நிரூபித்துள்ளனர்.


விடுதலை உணர்வு என்றால் என்ன வென்று இவர்களுக்கு சில விடயங்களைச் சுட்டிக் காட்டவேண்டியுள்ளது. ஏனெனில் அரசியல்வாதி என்ற சட்டை இவர்கள் உடம்போடு ஒட்டிவிட்டது . அதனை பிய்த்து எடுப்பது என்பது முடியாத காரியம்.


முதலில் பரமதேவா விடயம் - கிழக்கில் அவருக்கென்று தனி வரலாறு உண்டு. அவரும் அரசியல் கைதியாக இருந்தார். அவர் விடுதலையாவதற்கு மிகக் குறுகிய காலமே இருந்தது. அப்படி இருந்தும்  23.09.1983 அன்று மட்டக்களப்பு சிறையிலிருந்து ஏனைய தமிழ்க் கைதிகள் தப்பிப் போகத் தேவையான ஏற்பாடுகளைச் செய்தார். இம் முயற்சியின் பிரதான பங்காளர் அவரே. ஆனால் ஆறு கடக்கும் வரையே அண்ணன் தம்பி என்ற வகையில் புளொட், ஈ.பி.ஆர்.எல். எப் . மற்றும் தம்பாப்பிள்ளை மகேஸ்வரனின் தமிழீழ இராணுவம் ஆகிய மூன்று இயக்கங்களும் தனித் தனியாகத்  தாங்களே இந்தச் சாதனையைப் புரிந்து கொண்டதாகத் தம்பட்டம் அடித்தன. பரமதேவாவோ வெறும் புன்னகையுடன் கடந்து போனார்.


கும்பகோணத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப் பினர் ஒரு கண்காட்சியை நடத்தினர். ( சிறையுடைப்புப் பற்றி ) சிறையின் பெரிய வரைபடங்கள், தாங்கள் வெளியேறிய பாதை, காவலரண்கள் என்பவற்றையெல்லாம் குறிப்பிட்டு வாயால் விளாசித் தள்ளினர். அந்தக் கண்காட்சிக்குப் பரமதேவா போனார் உடனே ஒரு ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர் ஓடிவந்து அவரது கையைப் பிடித்தார். "தோழர் ! நிதிசேகரிக்கத்தான் இப்படிச்செய்கிறோம். தயவுசெய்து விளக்கமளிப்பவர்களிடம் கேள்வி எதுவும் கேட்டு விடாதீர்கள்" என வேண்டினார்.  சிரித்துக்கொண்டே சிறிது நேரத்தில் அங்கிருந்து அகன்றார் பரமதேவா.


சிறையிலிருந்து தப்பிய விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களை இவரே பொறுப்பெடுத்தார். பின்னர் அவர்களுடன் சேர்ந்து வந்து புலிகளுடன் இணைந்தார். முன்னரே பரமதேவா பற்றிய நல்லபிப்பிராயம் இருந்தது பிரபாகரனுக்கு. கிழக்கிலிருந்து ஒரு தலைமை உருவாக வேண்டும் என்ற கனவு அவருக்கு இருந்தது. தனது கனவை நனவாக்கப் பொருத்தமானவராக      இவர் இருப்பாரென முழுமையாக நம்பினார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து விலகுவோர் புதிதாக எந்த இயக்கத்தையும் தொடங்கவோ வேறு இயக்கத்தில் இணையவோ கூடாது என்றொரு கட்டுப்பாடு உண்டு. ஆனால் பரமதேவாவுக்காக இக் கட்டுப்பாட்டைத் தளர்த்த விரும்பினார் பிரபாகரன். 'நீங்கள் மட்டக்களப்புக்குப் போய்ச் சேர்ந்த பின் ஓரிரு தாக்குதலின் பின் தனியாக இயக்கம் தொடங்கலாம். உங்களுக்குத் தேவையான ஆயுதங்கள், ரவைகள், நிதி போன்றவற்றைத் தருகிறோம். அங்குள்ள சூழலுக்கேற்றவாறு போராட்டக் களங்களை, வடிவங்களை அமைத்துக் கொள்ளுங்கள் " என்று பரமதேவாவிடம் சொன்னார் அவர். அதற்குப் பரமதேவா 'எனக்கும் உங்களுக்குமான   புரிந்துணர்வு என்பது தனித்துவமானது. நாளைக்கு நான் தனியாக இயக்கம் நடத்தும்போது என்னோடு சேர்ந்து கொள்பவர்களுக்கு இதே புரிந்துணர்வு இருக்குமென்பது நிச்சயமில்லை. எதிர்காலத்தில் பெரும் இரத்தக்களரிக்கு இது வழி வகுக்கலாம். என்னைப்பொறுத்தவரை என்றைக்கும் நீங்களே எனது தலைவராக இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். தயவு செய்து என்னை இப்படியே இருக்க விடுங்கள்" எனக் கூறி பிரபாகரனின் வேண்டுகோளை அன்புடன் மறுத்தார். எனினும் மட்டக்களப்புக்குத் தலைமை தாங்கச்  சென்றவரிடம் பரமதேவா தனியாக இயக்கம் நடத்த விரும்பினால் தேவையான சகல உதவிகளும் செய்து கொடுங்கள் என வலியுறுத்தினார் பிரபாகரன்.

_16145_1532841918_jfh.jpg


தமிழரின் துரதிர்ஷ்டம் மட்டக்களப்பு மண்ணில் அவர் சந்தித்த முதல் களத்திலேயே வீரச்சாவடைந்தார். காயமடைந்திருந்த  ரவி என்ற போராளி காயமடைய  நேர்ந்தபோது நம்பிக்கை யூட்டிக்கொண்டிருந்தார். ஆனால் நிலைமை மோசமானது. வெற்றியின்றிப் பின்வாங்கவேண்டி ஏற்பட்டது. எனவே இவர்கள் இருவரையும் தூக்கிக்கொண்டு போக வேண்டுமே
பரமதேவாவை அணுகிய போராளியிடம் தாங்கள் இருவருமாகத் தீர்மானித்து சயனைட் உட்கொண்டு விட்டதாகவும் தங்களைத் தூக்கப்போய் ஆபத்தில் சிக்காமல் அனைவரும் தப்பிப்போக வேண்டும் என வேண்டினார். அத்துடன் 'அம்மாவிடம் போய்ச் சொல்லுங்கள் நான் களத்தில்தான் இறந்தேனென்று. அண்ணன் (வாசுதேவா) உமாமகேஸ்வரனின் இயக்கத்தில் இருப்பதால் வேறு கதைகள் வந்துவிடும்" எனக் கூறித் தனக்கு இயக்கத்தின் மீதும் போராட்டத்தின் மீதும் உள்ள பற்றை வெளிப்படுத்தினார்.


தான் போராளியானதன் பின் தனது தாய் தன்னை ஒரு கைதியாகவே பார்த்திருக்கிறார். போர் வீரனாகப் பார்க்கவில்லை. எனவே மட்டக்களப்பில் நடக்கும் தாக்குதலொன்றில் தான் பங்குபற்றி அதில் கைப்பற்றப்பட்ட ஆயுதத்துடனேயே தனது அன்னையைச் சந்திக்க விரும்பினார். தனது மகன் வீரன் என்று அன்னை பெருமைப்பட வேண்டுமெனத் தீர்மானித்தார். அந்தக்கனவெல்லாம் உடைந்த நிலையிலும் இயக்கத்தின் மீதும் போராட்டத்தின்மீதும்  உள்ள விசுவாசத்தை வெளிப்படுத்தினார்.


                                                                  ***
03.04.1985 அன்று ஈரோஸ் இயக்கத்தினர் மட்டக்களப்பு கொடுவாமடுவில் ஒரு பாரிய தாக்குதலை விசேட  அதிரடிப்படையினரின் வாகனத் தொடரணி மீது மேற்கொண்டனர். படையினர் மிகக் கடுமையாகப் போரிட்டனர் அதனால் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுக்கு போதுமான ரவைகள் கிடைக்கவில்லை. இவற்றுக்கு 5.56 ரவைகள் தேவைப்பட்டன. ஈரோஸ் தலைமை பிரபாகரனை அணுகியது. மட்டக்களப்பு த் தலைமைக்கு அவர் அறிவித்தார். ஆபத்துக்கள் மத்தியில் கடல்வழியாகக் கொண்டுவரப்பட்டு, காடு வழியாகத் தலைச் சுமையாகக் கொண்டுவரப்பட்ட ரவைகளில் கணிசமான பகுதியை ஈரோஸ_க்கு வழங்கினர் புலிகள். அதிரடிப்படை உயர் அதிகாரி வீரதுங்க உட்பட 20 படையினர் இத் தாக்குதலில் கொல்லப்பட்டனர். அத்துடன் கோப்பாவெளிப்பகுதியில் படையினரால் கைது செய்யப்பட்டு கொண்டுவரப்பட்டிருந்த இரு புலிகள் இயக்க உறுப்பினர்களான அதே இடத்தைச் சேர்ந்த சி.தவராஜா, ராஜன் ஆகியோரும் இதில் கொல்லப்பட்டனர். அப்படி இருந்தும் யதார்த்தத்தை உணர்ந்து   செயற்பட்டார் பிரபாகரன்.
                                                                    ***
இது போன்றதே தங்கண்ணா - குட்டிமணி போன்றோருக்கும் பிரபாகரனுக்கும் இருந்த புரிந்துணர்வு. இவர்கள் பரஸ்பரம் ஒருவரையொருவர் மதித்தனர். புதிய தமிழ்ப் புலிகள் இயக்கத்தை ஆரம்பித்த பிரபாகரன் 5 மே 1976 அன்று அதனைத் தமிழீழ விடுதலைப் புலிகள் எனப் பெயர் மாற்றம் செய்தார்.  விடுதலை என்ற சொல் வரவேண்டும் என்பதற்காகவே இந்த மாற்றம். அத்துடன் தனிநபர் ஒழுக்கம், கட்டுப்பாடு போன்றவற்றை முதன்மைப் படுத்துவதும் அவரது நோக்கமாக இருந்தது. முன்னர் ஒழுக்க ரீதியாக இதனைப் பேண முடியாதிருப்போரைத் தவிர்த்துவிடுவதும் இப் பெயர் மாற்றத்துக்கான காரணங்களில் ஒன்றாக இருந்தது.


தாங்கள் மேற்கொண்ட சில நடவடிக்கைகளுக்கு உரிமைகோர முற்பட்டனர் புலிகள்.

1. அல்பிரட் துரையப்பா ( யாழ். மேயர், வடபகுதி சுதந்திரக் கட்சி அமைப்பாளர் சுட்டுக் கொலை - 27.07.1975)
2. என். நடராஜா (எரிபொருள் விற்பனை நிலைய உரிமையாளர், உரும்பிராய்; கோப்பாய் சுதந்திரக் கட்சி அமைப்பாளர், குண்டு வீச்சு -  02.07.1976)
3. ஏ.கருணாநிதி, (இரகசியப் பொலிஸ், காங்கேசன்துறை, சுட்டுக்கொலை - 14.05.1976)
4. திரு. சண்முகநாதன் (இரகசியப் பொலிஸ், காங்கேசன்துறை - 18.05.1977)
(அதே நாளில் சுட்டுக்கொலை)
5. சண்முகநாதன் (இரகசியப் பொலிஸ் வல்வெட்டித்துறை)
6. சி.கனகரத்தினம்  தமிழர் விடுதலைக் கூட்டணி - பொத்துவில் எம்.பி. - 27.01.1978)
7. பஸ்தியாம்பிள்ளை (இரகசியப் பொலிஸ் இன்ஸ்பெக்டர் - 07.04.1978)
8.பேரம்பலம் (இரகசியப் பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர்)
09. பாலசிங்கம் (இரகசியப் பொலிஸ் சார்ஜன்ட்)
10. சிறிவர்த்தன (இரகசியப் பொலிஸ் சாரதி)
மேற்படி சம்பவங்களே அவையாகும்.


இக் காலகட்டத்தில் தங்கண்ணா, குட்டிமணி குழுவினர் ஒரேயொரு நடவடிக்கையையே வெற்றிகரமாக முடித்திருந்தனர்.
கோண்டாவிலில் முன்னாள் நல்லூர் சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான அருளம்பலத்தின் காரியதரிசி தங்கராஜா மீதான நடவடிக்கையே இதுவாகும். எனவே தமது உரிமைகோரும் நோக்கத்தை தங்கண்ணாவுக்கு வெளிப்படுத்திய பிரபாகரன். தங்கராஜா சம்பவம் தொடர்பாக அவர்களது உத்தேசம் என்ன  என்று கேட்டார்.
'நாங்கள் உங்களைப்போல கட்டுப்பாடாக இருக்க முடியாது. எங்களது தொழிலையும் பார்த்துக்கொண்டு உணர்வுரீதியாக எம்மால் முடிந்தவற்றைச் செய்கிறோம். எனவே தங்கராஜா மீதான நடவடிக்கையையும் உங்கள் பெயரிலேயே உரிமை கோருங்கள்" எனக் கூறினார் தங்கத்துரை. இதுதான் உணர்வுரீதியாக விடுதலைப் போராடடத்தை நேசிக்கும் இருவருக்கிடையிலான புரிந்துணர்வு.


அப்படியே தங்கராஜாவின் சம்பவத்தையும் குறிப்பிட்டு   வீரகேசரியில் புலிகளின் உரிமைகோரும் செய்தி வெளியானது. விடுதலைப் புலிகள் இயக்கத்தினுள் நிகழ்ந்த பிளவைத் தொடர்ந்து தங்கண்ணா, குட்டிமணி ஆகியோரும் பிரபாகரனும் இணைந்து செயற்படத் தீர்மானித்தனர். இக் காலப்பகுதியில்தான் ஏற்கெனவே பிரபாகரனுக்கு அறிமுகமானவரும் பின்னர் காட்டிக் கொடுப்பாளராகவும் மாறிய செட்டி (தனபாலசிங்கம் - கல்வியங்காடு) மீதான நடவடிக்கையை பிரபாகரன் மேற்கொண்டார். குட்டிமணியும் இவரும் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும்போதே இந்த நடவடிக்கையை மேற்கொண்டார் பிரபாகரன். குட்டிமணி இதனைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. நீர்வேலியில் மக்கள் வங்கிக்குச் சொந்தமான (சுமார் 80 லட்சம் ரூபாவை)  பணத்தை கொண்டு சென்ற வாகனத் தொடரணியை மறித்து பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதும் இக் காலப்பகுதியில்தான். ஓடிக்கொண்டிருந்த பொலிஸ் வாகனத்தின் வேகத்தை இன்னொரு இன்னொரு வாகனத்தின் மூலம் குறைக்கச் செய்து இந்த இடைவெளிக்குள் இன்னொரு வாகனத்திலிருந்த பொலிஸாரை சுட்டுக் கொன்றார் பிரபாகரன். (நகரும் வாகனத்தில் இருந்தோரை இன்னொரு நகரும் வாகனத்திலிருந்து சுட்டுக்கொன்றமை அக்காலத்தில் பிரமிப்பாகப் பார்க்கப்பட்டது.)

குட்டிமணி, தங்கத்துரை கைதானதும் மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டது. இவர்களுக்குத் தெரிந்த சகல இடங்களுக்கும் பொலிஸாரும், இராணுவத்தினரும் சென்றனர். பொன்னம்மான், கே.பி. ,கிட்டு ஒபரோய் தேவன், சின்னபறுவா, தேவர் அண்ணா, ரவீந்திரதாஸ் (நேசன்) முதலானோர் தேடப்படும் சூழ்நிலை ஏற்பட்டது. அந்தக் காலத்தில் 100 ரூபாய்தான் ஆகக்கூடிய பெறுமதியான நோட்டு. அதிலும் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டவையில் கணிசமானவை இரண்டு ரூபாய் நோட்டுக்கள். பொலிசாரும் இராணுவத்தினரும் வருவதற்கிடையில்  இவற்றையும் காப்பாற்றியாக வேண்டும். எல்லாத்தொடர்புகளும் பெரும்பாலும் இனங்காணப்பட்டு விட்டாலும் மூன்று லட்சம் ரூபாயைத் தவிர ஏனையவை காப்பற்றப்பட்டன. குறிப்பாகச் சொல்வதானால் குட்டிமணி, தங்கத்துரைக்கு தெரியப்படுத்தப்படாத புதிய தொடர்புகள் மூலமாகவே பிரபாகரனால் இதனைச் செய்யமுடிந்தது.


1981 ஐப்பசி 15ம் நாள் யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறை வீதியில் சிறிலங்கா இராணுவத்தினர் மீதான முதலாவது வெற்றிகரமான தாக்குதல் சீலன்தலைமையில் புலேந்திரன் .லாலா ரஞ்சன் ஆகியோர் மேற்கொண்டதும் இக்காலப் பகுதியிலேயே .
தமிழகத்தில் திருப்பரங்குன்றத்தில் இரு பகுதியினரும் ஒரு திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து பயிற்சிகளை மேற்கொண்டனர். புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ராகவனே இருபகுதியினருக்கும் பயிற்சிகளை வழங்கினார் .  


இக்காலகட்டத்தில் - '1982 தைப்பொங்கல் நாளன்று தமிழீழம்" என்ற கிருஷ்ணா வைகுந்தவாசன் என்பவரது பிரகடனத்தைக் கண்டித்து 'நாடு கடத்தப்பட்ட  நிலையில் தமிழீழ அரசு" என்ற அறிக்கை புலிகளின் சின்னத்துடன் வெளியானது. இயக்க ஆயுதத்துடன் வெளியேறி புது இயக்கத்தைத் தொடங்கிய சுந்தரம் என்பவர் மீதான நடவடிக்கை பற்றி 'துரோகத்துக்குப் பரிசு" என்ற தலைப்பில் இன்னொரு பிரசுரமும் வெளியானது. இவற்றை விநியோகித்ததில் அப்போதைய தீவிர ஆதரவாளரான பொட்டம்மானும் ஒருவர்.
இக்காலகட்டத்தில் ரெலோ உறுப்பினர்களாக பந்தண்ணா  (ராசப்பிள்ளை), சிறிசபாரத்தினம், முரளி, ரூபன், ஒபரோய் தேவன், அவரது தம்பி சின்ன பறுவா, சுதன்,ரமேஷ்(சாரதி)ஆகியோர்தமிழகத்திலும்நாட்டில்செல்வமும்,திருமலையைச் சேர்ந்த மற்றொரு உறுப்பினருமே இருந்தனர்.


சிவாஜிலிங்கம் என்ற பெயரை அக்காலத்தில் போராட்டம் சம்பந்தமாக ஒருவரும் அறிந்திருக்கவில்லை.
இன்று ரெலோவில் இருந்து பிரிந்தவர் பிரபாகரன் என்று சொல்கின்றனர் செல்வம்சிவாஜிலிங்கம் ஆகியோர். வேலிக்கு ஓணான் சாட்சி போல சிவசக்தி ஆனந்தனும் இதனை வழி மொழிகிறார். அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும்  என்ன சம்பந்தம்?

1981 இன் பிற்பகுதியில் 'நாங்கள் தனித்தனியாக இயங்குவோம் என பிரபாகரன் முடிவெடுத்தார். குட்டிமணி அண்ணா, தங்கண்ணா போன்றோருடன் இருந்த புரிந்துணர்வு இல்லாமற் போனதே இதற்கான காரணம் குட்டிமணி அண்ணா முதலானோரை நீதிமன்றத்துக்கு கொண்டுவரும் போது தற்கொலைப் படையாகச் சென்று அவர்களை மீட்போம் என்று பிரபாகரன் சொன்னதை இவர்கள் ஏற்கத் தயங்கினர். இதனைவிட மேலும் சில காரணங்களும் இருந்தன.
இதன் பின்னரே தமிழீழ விடுதலை இயக்கம் என்ற பெயர் அடிபட்டது. இந்தப் பெயரே கடனாக அல்லது இரவலாக வாங்கப்பட்டதுதான்.
முத்துக்குமாரசாமி என்பவரே இப்பெயரில் ஒரு இயக்கத்தை நடத்தி வந்தார். அது செயலிழந்த நிலையில் அப்பெயரை இவர்கள் பயன்படுத்தப் தொடங்கினர்.

 

_16145_1532841918_dghfg.jpg
கருணாநிதி அடிக்கடி முதல்வர் எம்.ஜி.ஆரைக் கடுப்பேற்றுவார் முதல்வருக்கு ஈழத்தமிழர் விடயத்தில் அக்கறையில்லை என்று. பொறுமையிழந்த எம் .ஜி.ஆர். குட்டிமணியை இலங்கை அரசிடம் ஒப்படைத்தவர் கருணாநிதிதானே என்று கேட்டார். இதனால் கருணாநிதி வெலவெலத்து விட்டார். உடனே இவர்களைத் தேடிப்பிடித்து ஒரு அறிக்கை விடச்செய்தார். அந்த இயக்கத்தின் பெயரும் செயலதிபர் சிறீ சபாரத்தினம் என்பதும் உலகத்துக்கு தெரிய வந்தது அப்போதுதான். இதன் மூலம் சிறீசபாரத்தினம் - கருணாநிதி நட்பு தொடர்ந்தது. சிறீ சபாரத்தினத்தின் மறைவுக்குப் பின் பாலைவனத்து ரோஜாக்கள் என்ற படத்தில்    சபாரத்தினம் என்ற கதாபாத்திரத்தைப் படைத்தார் கருணாநிதி.
                                                           ***
இன்று தீருவிலில் குமரப்பா புலேந்திரனின் நினைவிடத்தில் எல்லா இயக்கத்தவருக்குமென பொது நினைவுச் சின்னத்தை அமைக்க ஏற்பாடு  செய்துள்ளார் சிவாஜிலிங்கம். ரெலோ உறுப்பினர்களும் ஈ.பி.டி.பி. உறுப்பினர்களும் கூட்டாக வல்வை நகரசபையில் இதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.
தங்கத்தையும் கிலிற்றையும் சமமாகக் கருதுகின்றனர்.
கரும்புலிகளும் வவுனியா மலர் மாளிகையில் நடந்த சித்திரவதைகளை மேற்கொண்ட மாணிக்கம்தாசனும் ஒன்றாம். பெண் மாவீரர்களும் ஆரையம்பதியில் விஜி என்ற மாணவியைக் கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர் சடலமாக ஆற்றில் வீசி எறிந்தவர்களும் ஒரே தராசிலாம். இப்பாதகத்தைச் செய்தவர்களில் ஒருவரான ராமுவும் இக்குழுவை வழிநடத்திய  ஜனாவும் இன்னும் உயிர் வாழ்கின்றனர். இறுதி யுத்தம் வரை போராடிய போராளிகளும் படையினருடன் ஒத்துழைத்த புளொட்டினரும் சமமானவர்களாம். இதனைவிடக் கேவலம் வேறென்ன உள்ளது?


                                    ***
பிரபாகரன் ரெலோவிலிருந்து பிரிந்தார் என்று சொல்பவர்களுக்கு ஐயரின் (கணேசன்) 'ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்" என்ற நூலிலிருந்து சில பகுதிகளைத் தருகிறோம்.
'இந்தக் காலகட்டத்தில் குட்டிமணி, தங்கத்துரை போன்றோர் இந்தியாவிலிருந்து திரும்பி வருகிறார்கள். அவர்களது தொடர்புகளும் எமக்கு மறுபடியும் கிடைக்கிறது. அவர்கள் எமக்கு வெளியில் தாமே திட்டமிட்டு சில நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். அவையெல்லாம் முழு வெற்றியளிக்கவில்லை. இந்த நிலையில் அவர்களுடைய நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தும் நோக்கோடு அவர்களில் இருவருக்கு துப்பாக்கி சுடக் கற்றுக் கொடுப்பது என்ற முடிவுக்கு வருகிறோம். இந்த முடிவின் அடிப்படையில் எமது புளியங்குளம் முகாமில் தங்கத்துரை மற்றும் ராசப்பிள்ளை ஆகியோருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்குகிறோம். இவர்கள் புதிய புலிகள் அமைப்பில் இல்லாதிருந்தாலும் நட்பு சக்தி என்ற அடிப்படையில் இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது. அவர்கள் அப்போது ரெலோ (TELO ) என்ற அமைப்பை உருவாக்கியிருக்காவிட்டாலும் தனியான ஒரு குழுவாகச் செயற்பட்டனர்." (பக்கம் 33)
'பிரபாகரனோ, புதிய புலிகள் அமைப்பிலிருநத எவருமோ அவர்களை எம்முடன் இணைத்துக் கொள்ள விரும்பவில்லை. அவர்கள் வேறுபட்டவர்களாக இருப்பதையே நாம் அனைவரும் விரும்பினோம். தங்கத்துரை, குட்டிமணி போன்றோர் பிரதானமாகக் கடத்தல் தொழிலையும் வன்முறை எதிர்ப்பு நடவடிக்கைகளைப் பகுதி நேரமாகவுமே மேற்கொள்கின்றனர். இதனடிப்படையில் அவர்களை உள்வாங்காமல், நட்பு சக்தி என்ற அடிப்படையில் அவர்களுக்கு உதவிகளை வழங்கினோம்." (பக்கம் 34)
நீண்ட காலம் அரசியலில் ஈடுபடுவதால் சில விடயங்கள் சிலருக்கு மறந்து விட்டன. எனவே புலம்பெயர் உறவுகள்  இணையத்தளத்தில் இவ்வாறான நாடாளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களின் மின்னஞ்சல் முகவரியைப் பெற்று எமது விடுதலைப் போராட்ட வரலாற்றை எடுத்தியம்பும் 'விடுதலைத் தீப்பொறி" எனும் ஒளிப்படத் தொகுப்பை அனுப்பி வையுங்கள் எம்.பிக்களாக இம் மூவரும் தலைவரைச் சந்தித்த காலங்களில் தெரிவிக்காத கருத்துக்களை இப்போது தெரிவிக்கும் நிலைமை இருக்கிறதென்றால் தலைவர் எமது மக்களின் மனங்களில் மட்டும் வாழ்கிறார் என்பதை உணர வேண்டும்.
வரலாற்றை மாற்றமுனையும் கடைந்தெடுத்த அயோக்கியத்தனத்தை மக்கள் இனங்காண வேண்டும் இதேவேளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் சிவசோதி நவகோடி பொது நினைவுச் சின்னப் பிரேரணையை எதிர்த்து வாக்களிக்க முன் வரவில்லை  இவருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுப்பதென்பது குறித்து அக்கட்சி முடிவு செய்யட்டும்.

 

http://www.battinaatham.net/description.php?art=16145

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.