Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு வீட்டுத்திட்டம் சீனாவுக்கா - இந்தியாவுக்கா இதோ பட்டிமன்றம் ஆரம்பமாகிறது

Featured Replies

எதை எடுத்தாலும் ஏதோவொரு பிரச்சினை யைக் கிளறிவிடுகின்ற நிலைமைதான் காணப் படுகிறது.

இதற்குக் காரணம் யார் என்பதற்கு அப் பால், இப்படியான பிரச்சினைகளை ஏற்படுத்தி தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டியவற்றை இல்லாமல் செய்வது அல்லது காலதாமத மாக்குவது என்ற நோக்கத்தின் அடிப்படையி லேயே மேற்படி பிரச்சினைகள் நடந்தாகின்றன.

வடக்கின் குடிநீர் விநியோகம் என்ற விடயம் வந்தபோது, இரணைமடுக்குளத்திலிருந்து குடி தண்ணீர் வழங்குவது என்ற விவகாரம் சூடு பிடித்து கடல்நீரைச் சுத்திகரிப்பது என்றளவில் நிலைமை அப்படியே இருக்கிறது.

இருந்தும் நிலத்தின் கீழ் குடிநீர்க் குழாய்களைப் பொருத்துகின்ற பணி நடைபெறுவது ஓரளவுக்கு மன ஆறுதலைத் தருகிறது எனலாம்.

இதற்குப் பின்னர் வீட்டுத்திட்டத்தில் பொருத்து வீடா? கல்வீடா? என்ற பட்டிமன்றம் நீண்ட காலம் நீடித்தது.

அமைச்சர் சுவாமிநாதன் தரப்பு பொருத்து வீடு என்று வாதிட; வடக்கு மாகாண முதல மைச்சர் தரப்பு கல்வீடு என்று எதிர்வாதம் புரிய; நடுவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த விடயத்தில் தலையிட்டார் எனினும் அவரின் தீர்ப்பு என்ன என்பது இன்னும் அறியப்படாததாக உள்ளது.

இதுதான் என்றால், வடக்குக்கான பொரு ளாதார மையம் என்ற புதியதொரு விவகாரம் தலைதூக்கியது.
பொருளாதார மையத்தை வவுனியாவில், ஓமந்தையில், தாண்டிக்குளத்தில் எங்கே? நிறுவ வேண்டும் என்ற பட்டிமன்றம் மூன்று அணியாகப் பிரிந்து நடந்தது.

இப்போது பொருளாதார மையத்துக்கு என்ன நடந்தது என்பதே தெரியாமல் போய் விட்டது.

இவை தவிர, இப்போது வடக்குக்கான வீட் டுத்திட்டத்தை இந்தியாவிடம் கொடுப்பதா? சீனாவிடம் கையளிப்பதா? என்ற பிரச்சினை எழுந்துள்ளது.

மாரிகாலம் ஆரம்பமாகின்ற இக்கட்டத்தில் மக்கள் தகரக்கொட்டகைக்குள் முடங்கிக் கிடக் கின்ற நேரத்தில்; எவ்வளவு விரைவாக வீடுகளைக் கட்டி மக்களைக் குடியமர்த்த முடியுமோ அந்தளவுக்கு வேலையை விரைவுபடுத்துவ தென்றால், இங்கோ வீட்டுத்திட்டத்தை இந்தி யாவிடம் கொடுப்பதா? சீனாவிடம் வழங்கு வதா? என்ற பட்டிமன்றம் நடக்கத் தொடங்கி விட்டது.

இந்தப் பட்டிமன்றம் இப்போதைக்கு தீர்ப் பைத் தருமா என்பது கேள்விக்குறிதான்.

என்ன செய்வது எங்களுக்குள் ஒற்றுமை இல்லை; எங்களுக்குள் புரிந்துணர்வு இல்லை; அரசிடம் ஆணித்தரமாகப் பேசுகின்ற துணிவு நம்மிடம் அறவே இல்லை.

இந்நிலையில் இவ்வாறானவாதப் பிரதி வாதப் பிரச்சினைகள் மேலெழுகின்றன.

இவற்றுக்கெல்லாம் முடிவு காண்பது பற்றி நம் அரசியல் தலைவர்கள் சிந்திக்கப் போவது மில்லை.

இவ்வாறான நிலையில், வடமராட்சி கிழக்கில் கடல் அட்டை பிடிப்பதில் சிங்களக் கடற் றொழிலாளர்கள் நுழைவு; முல்லைத்தீவில் சட்டவிரோத சிங்களக் குடியேற்றம்; தமிழர் தாயகத்தில் புத்த விகாரைகள் அமைப்பு என்ற புதிய பிரச்சினைகள் முளைவிடுகின்றன.

நாங்கள் எங்களுக்குள் மோதிக் கொண்டால் இதுதான் நடக்கும் என்பதற்கு இதை விட்ட வேறு எடுத்துக்காட்டுகள் வேண்டாமே.

http://www.valampurii.lk/valampurii/content.php?id=16813&ctype=news

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Athavan CH said:

விரைவுபடுத்துவ தென்றால், இங்கோ வீட்டுத்திட்டத்தை இந்தி யாவிடம் கொடுப்பதா? சீனாவிடம் வழங்கு வதா? என்ற பட்டிமன்றம் நடக்கத் தொடங்கி விட்டது.

என்னை கேட்டால் வருங்கால வல்லரசு பங்காளதேசிடம் கொடுப்பது சால சிறந்தது ?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Athavan CH said:

வடக்கின் குடிநீர் விநியோகம் என்ற விடயம் வந்தபோது, இரணைமடுக்குளத்திலிருந்து குடி தண்ணீர் வழங்குவது என்ற விவகாரம் சூடு பிடித்து கடல்நீரைச் சுத்திகரிப்பது என்றளவில் நிலைமை அப்படியே இருக்கிறது.

இருந்தும் நிலத்தின் கீழ் குடிநீர்க் குழாய்களைப் பொருத்துகின்ற பணி நடைபெறுவது ஓரளவுக்கு மன ஆறுதலைத் தருகிறது எனலாம்.

இதற்குப் பின்னர் வீட்டுத்திட்டத்தில் பொருத்து வீடா? கல்வீடா? என்ற பட்டிமன்றம் நீண்ட காலம் நீடித்தது.

அமைச்சர் சுவாமிநாதன் தரப்பு பொருத்து வீடு என்று வாதிட; வடக்கு மாகாண முதல மைச்சர் தரப்பு கல்வீடு என்று எதிர்வாதம் புரிய; நடுவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த விடயத்தில் தலையிட்டார் எனினும் அவரின் தீர்ப்பு என்ன என்பது இன்னும் அறியப்படாததாக உள்ளது.

இதுதான் என்றால், வடக்குக்கான பொரு ளாதார மையம் என்ற புதியதொரு விவகாரம் தலைதூக்கியது.
பொருளாதார மையத்தை வவுனியாவில், ஓமந்தையில், தாண்டிக்குளத்தில் எங்கே? நிறுவ வேண்டும் என்ற பட்டிமன்றம் மூன்று அணியாகப் பிரிந்து நடந்தது.

இப்போது பொருளாதார மையத்துக்கு என்ன நடந்தது என்பதே தெரியாமல் போய் விட்டது.

இவை தவிர, இப்போது வடக்குக்கான வீட் டுத்திட்டத்தை இந்தியாவிடம் கொடுப்பதா? சீனாவிடம் கையளிப்பதா? என்ற பிரச்சினை எழுந்துள்ளது.

ஈழத்தமிழ் மக்களுக்கு இப்படியான நிலை புதியது இல்லை.

தமிழீழம் அல்லது எதுவும் இல்லை என்ற நிலைப்பாடு முதல், மேலே சொல்லப்பட்ட வீட்டுத்திட்டம், பொருளாதார மையம் போன்ற விடயங்கள் வரை  அனைத்தும் எமது தலைவர்களின் அடிப்படையான பலவீனத்தின் பாதிப்பின் விளைவுகளே.

  1. எந்த ஒரு விடயத்தை எடுத்துக்கொண்டாலும் அது பல தரப்பையும் பாதிக்கும் என்பதை ஆரம்பத்திலேயே எமது தலைவர்கள் கவனத்தில் கொள்வதில்லை. தமது தரப்புக்கு என்ன பாதிப்பு என்ன நன்மை என்பது பற்றியே எமது தலைவர்கள் கவனத்தில் கொள்வார்கள்.ஆகவே பாதிக்கப்பட்ட மற்ற தரப்புகள் தீவிர நடவடிக்கை எடுக்க ஆரம்பித்ததும் எந்த முன்னேற்றமும் சாத்தியம் இல்லாமல் போகிறது. ஆங்கிலத்தில் இப்படி பாதிக்கப்படக்கூடிய தரப்புகளை stakeholders   என்பார்கள்.
  2. பல தரப்புகளும் பாதிக்கப்படும் நிலை இருப்பதால் எந்த விடயத்தை தீர்க்க விரும்பினாலும், முதலில் ஏனைய தரப்புகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை எப்படி குறைப்பது என்று பார்த்து, அனைவருக்கும் பாதிப்பு குறைவான  தீர்ப்பை முன்வைக்க எமது தலைவர்கள் முன்வர வேண்டும். இதை ஆங்கிலத்தில் mitigation என்று கூறுவார்.
  3. பாதிக்கபடும் தரப்புகளுக்கு நன்மை தரத்தக்க விட்டுக்கொடுப்புகளை வேறு விடயங்களில் செய்வது மூலம் அவர்களுக்கு பாதிப்புகள் உண்டானாலும் அவர்கள் தீர்வுக்கு சம்மதிக்கும் நிலையை உருவாக்க வேண்டும். இதை  deal making என்று ஆங்கிலத்தில் அழைப்பர்.

சிங்கப்பூரின் பிதா லீ குவான் யு இந்த விடயங்களில் சிறந்து விளங்கினார். இந்த விடயங்களில் சிறந்த ஆற்றல் கொண்ட காரணத்தாலேயே சுந்தர் பிச்சை (சுந்தரராஜன் பிச்சை) கூகிள் நிறுவனத்தின் தலைவர் ஆனார். எல்லா சிறந்த வணிக நிறுவனங்களின் தலைவர்களும் இந்த விடயங்களில் சிறந்து விளங்குபவர்களே. தூரதிஷ்டவசமாக ஈழத்தமிழ் மக்களின் தலைவர்கள் இந்த விடயங்களை புரிந்து கொள்ளவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.