Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனியும் தாமதிப்பதென்பது கூட்டமைப்புக்கு நல்லதல்ல

Featured Replies

இனியும் தாமதிப்பதென்பது  கூட்டமைப்புக்கு நல்லதல்ல

 
vikkines-2-600x382.jpg

 

 

 

கூட்டமைப்பைப் பல வீனப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு தமிழினத்தின் இலக்கைச் சிதைக்க வேண்டாமென வடக்கு முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார் மாகாணசபை உறுப்பினரான பா.டெனீஸ்வ ரன். ஒரு சட்டத்தரணியான இவர் முதலமைச்சர் தம்மைப் பதவி நீக்கம் செய்தமைக்கு எதிராக நீதிமன்றத்தை நாடி இடைக்காலத் தடையுத்தரவையும் பெற்றுக் கொண்டவர்.

இவரது விடயத்தில் முதலமைச்சர் தவறு விட்டுள்ளார் என்பதே பலரதும் கணிப்பாகும். ஆனால் முதலமைச்சருக்கு ஆதரவான வர்கள் அதை மூடி மறைப்ப தற்கே முயற்சி செய்கி ன்றனர். தற்போது டெனீஸ்வரன் முதல மைச்சருக்கு புத்திமதி கூறும் அளவுக்கு நிலமை மாறிவிட்டது.

கூட்டமைப்பைப் பலவீனப்படுத்த செயற்படும் பல்வேறு சக்திகள்

கூட்டமைப்பைப் பலவீனப்படுத்த வேண்டு மென்பதற்காக அதற்கு எதிரானவர்கள் வரிந்து கட்டிக் கொண்டு செயற்பட்டு வருகின்றனர். தேர்தல்கள் அடுத்தடுத்து இடம்பெறவுள்ளதால் தம்மைப் பலப்படுத்திக் கொள்வதில் இவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதையும் காணமுடிகின்றது.

ஆனால் கூட்டமைப்பினுள் இன்னமும் ஒட்டியிருந்துகொண்டு அதற்கு எதிரான நடவடிக்கைகளில் விக்னேஸ்வரன் ஈடுபட்டுள்ளார். தம்மை முதலமைச்சராக நிய மித்தமைக்கு கூட்டமைப்புக்குச் செய்கின்ற நன்றிக் கடன் இதுதானா? அல்லது உண்ட வீட்டுக்கு இரண்ட கம் செய்கின்ற காரியத்தில் அவர் இறங்கியுள்ளாரா? செய் நன்றி கொன்றவர்களுக்கு உய்வில்லை என்பதை நன்கு அறிந்த அவர் நன்றி மறந்து நடந்து கொள்வது ஏற்கத்தக்க விடயமல்ல.

தினமும் கூட்டமைப்பையும் அதன் தலைமையையும் தாக்கி அறிக்கை விடுகின்ற காரியத்தில் விக்னேஸ்வரன் ஈடுபட்டுள்ளதைக் காணமுடிகின்றது. அவர் கூட்டமைப்பிலிருந்து விலகி இருந்துகொண்டு இந்தக் காரியத்தில் ஈடுபடுவதே அவருக்குப் பெருமை சேர்ப்பதாக இருக்கும்.
வன்னி மாவட்டங்களில் முஸ்லிம் மக்களைக் குடியமர்த்தும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள தாக பிரபாகணேசன் சுட்டிக் காட்டியது முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலருக்குக் கடுப்பை ஏற்படுத்தி விட்டது.

ஆனால் உண்மையான நிலவரத்தைத்தான் அவர் போட்டுடைத்துள்ளார். இலங்கையின் சன விகிதாசாரத்தில் தமிழர்கள் மூன்றாவது இடத்துக்குப் பின்தள்ளப்படப் போகின்றனரெனக் கூறப்பட்டு வரும் நிலையில் பிரபாகணேசனின் அறிவிப்பு வெளியா கியுள்ளது. இது தொடர்பாக விக்னேஸ்வரன் உட்பட ஏனைய தமிழ் அரசியல்வாதிகள் மௌனம் காத்து வருகின்றனர். தமிழர் நலன்களில் அக்கறை யுள்ளவரெனத் தம்மைக் காட்டிக் கொள்ளும் விக்னேஸ்வரன் இது தொடர்பாக வாயே திறக்காமல் இருப்பதன் மர்மம்தான் என்ன?

பெரும் எதிர்பார்ப்பில் மாகாணசபைத் தேர்தல்

மாகாணசபைத் தேர்தல் இம்முறை கடுமையான போராட்டக்களமொன்றை ஏற்படுத்தப் போகின்றது. ஈபிடிபியின் தலைவரான டக்ளஸ் தேவானந்தா முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்கவுள்ளமை ஒரு சிறப்பு அம்சமாக அமையப் போகின்றது. ஏனென்றால் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் அவரது கட்சிக்கு அதிகளவில் ஆதரவு கிடைத்தது.
புதிய தேர்தல் முறை காரணமாக அதிகளவு ஆசனங்களையும் பெறமுடிந்தது.

இந்த நிலையில் மாகாணசபைத் தேர்தலில் ஈபிடிபி தலைவர் போட்டியிடுகின்றமை பல திருப்பங்களை ஏற்படுத்தப் போகின்றது. இந்த நிலையில் கூட்டமைப்பைப் பலவீனப்படுத்தி அதன் வெற்றி வாய்ப்பை இல்லாமல் செய்வதற்கு விக்னேஸ்வரன் முயற்சி செய்வதை ஏற்க முடியாது.

ஒரு ஜனநாயக நாட்டில் அரசியலில் சுதந்திரமாக ஈடுபடுவதற்கு எவருக்குமே உரிமை உண்டு. ஜனநாயகம் சீர்குலைந்து பயங்கரவாதத்தின் பிடிக்குள் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் நாட்டில்கூட கிரிக்கெட் வீரர் ஒருவர் ஆட்சித் தலைமையைக் கைப்பற்றியிருக்கிறார். இராணுவத்தின் உதவியுடன் அவர் வெற்றிபெற்றதாக அவருக்கு எதிரானவர்கள் கூறிக்கொண்டாலும் அவரது வெற்றியைக் குறைத்து மதிப்பிட முடியாது.

இந்த நிலையில் புதிய கட்சியொன்றை அமைப்பதற்கும் அதன் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கும் விக்னேஸ்வரனுக்குப் போதிய உரிமை உள்ளது. அல்லது வேறொரு கட்சியில் இணைந்து செயற்படவும் அவரால் முடியும்.

ஆனால் கூட்டமைப்பினுள் இருந்துகொண்டு இவற்றைச் செய்வதற்கு இவரால் முடியாது. முதலில் அங்கிருந்து அவர் தம்மை பூரணமாக விலக்கிக்கொள்ள வேண்டும். ஒரே வேளையில் இரண்டு படகுகளில் கால்களை வைத்து அவரால் பயணிக்க முடியாது. பயணிக்கவும் கூடாது.

விக்னேஸ்வரன் விடயத்தில் தீர்க்கமான முடிவு வேண்டும்

விக்னேஸ்வரன் விடயத்தில் கூட்டமைப்பின் தலைமை காட்டுகின்ற பொறுமையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அந்த அமைப்புக்குத் தொடர்ந்து களங்கத்தை ஏற்படுத்தி வருகின்ற ஒருவரைத் தக்க வைத்துக் கொள்வது அந்த அமைப்பைப் பலவீனப்படுத்துவதற்கே உதவு மென்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தனது ஆட்சிக்குள் இருக்கின்ற வடக்கு மாகாண சபை சீராக இயங்க முடியாத நிலையில் இருப்ப தையும், குழப்பங்களின் கூடாரமாகத் திகழ்வ தையும் கூட்டமைப்பின் தலைமை தொடர்ந்து சகித்துக்கொண்டிருப்பது அந்த அமைப்பின் அத்திபாரத்தையே அசைத்துப் பார்த்துவிடும். ஆகவே குழப்பங்களுக்கு மூல காரணமாகக் காணப்படுகின்ற விக்னேஸ்வரன் விடயத்தில் தீர்க்கமானதொரு முடிவு எட்டப்பட்டே ஆக வேண்டும்.

கூட்டமைப்பு என்றதொரு பெருவிருட்சத்தில் அமர்ந்துகொண்டு அதன் கிளைகளை வெட்டுவதற்கு முயற்சி செய்கின்ற வடக்கு மாகாண முதலமைச்சர் அந்த விருட்சத்தை பிறரின் உதவியுடன் அடியோடு தறித்து வீழ்த்தமாட்டா ரென்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. கூட்டமைப்பின் தலைமை இனியாவது விழிப்படைந்து அவர் தொடர்பாகத் தீர்க்கமான முடிவொன்றை எட்ட வேண்டும்.

https://newuthayan.com/story/14/இனியும்-தாமதிப்பதென்பது-கூட்டமைப்புக்கு-நல்லதல்ல.html

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

ஆனால் கூட்டமைப்பினுள் இன்னமும் ஒட்டியிருந்துகொண்டு அதற்கு எதிரான நடவடிக்கைகளில் விக்னேஸ்வரன் ஈடுபட்டுள்ளார். தம்மை முதலமைச்சராக நிய மித்தமைக்கு கூட்டமைப்புக்குச் செய்கின்ற நன்றிக் கடன் இதுதானா? அல்லது உண்ட வீட்டுக்கு இரண்ட கம் செய்கின்ற காரியத்தில் அவர் இறங்கியுள்ளாரா? செய் நன்றி கொன்றவர்களுக்கு உய்வில்லை என்பதை நன்கு அறிந்த அவர் நன்றி மறந்து நடந்து கொள்வது ஏற்கத்தக்க விடயமல்ல.

சும்மாயிருந்த விக்னேஸ்வரனை மக்களுக்கு சேவை செய்யவே முதலமைச்சராக்கப்பட்டார்.கூட்டமைப்புக்கு சேவை செய்வதற்காக அல்ல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.