Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டெனிஸ்வரனுக்கு மீண்டும் அமைச்சுப் பதவி வழங்க வடக்கு முதல்வர் இணக்கம்

Featured Replies

டெனிஸ்வரனுக்கு மீண்டும் அமைச்சுப் பதவி வழங்க வடக்கு முதல்வர் இணக்கம்

 

Untitled-1qz.jpg

வழக்குகளை வாபஸ் பெறுவது தொடர்பிலும் பேச்சு

வடமாகாண முன்னாள் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரனை அமைச்சுப் பதவியில் மீண்டும் உள்வாங்குவதற்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இணக்கம் தெரிவித்துள்ளதாக நம்பகரமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வடக்கு மாகாண சபையின் 131 ஆவது அமர்வு கடந்த செவ்வாய்க்கிழமை(11) நடைபெற்றிருந்த நிலையில் அன்றிலிருந்து வடக்கு மாகாண சபையின் அமைச்சரவை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கு வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் நேற்றும் நேற்று முன்தினமும் இந்த விவகாரம் தொடர்பில் வடக்கு மாகாண அவைத்தலைவர் வடக்கு மாகாண முதலமைச்சருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.

நேற்றைய தினம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் போது இரு தரப்புக்களாலும் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளை மீளப் பெற்றுக் கொள்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. அத்துடன் வடமாகாண அமைச்சுப் பதவியில் டெனிஸ்வரனை மீண்டும் உள்வாங்குவதற்கு வடமாகாண முதலமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயம் நேற்றைய தினம் வடக்கு மாகாண அவைத்தலைவரால் தொலைபேசி மூலம் பா. டெனிஸ்வரனுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனின் இந்த முடிவுக்கு வடமாகாண முன்னாள் அமைச்சர் டெனிஸ்வரன் தனது சம்மதத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

 

 
 

இதேவேளை, டெனிஸ்வரனைப் பதவியிலிருந்து நீக்கியது செல்லாதெனவும், அவரைத் தொடர்ந்தும் பதவியில் நீடிக்க அனுமதிக்குமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்கால உத்தரவை முதலமைச்சர் விக்னேஸ்வரன் நடைமுறைப்படுத்தாத நிலையில் அவருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதிமன்ற அவமதிப்பு மனுவொன்றை டெனிஸ்வரன் தரப்புச் சட்டவாளர் தாக்கல் செய்திருந்தார்.

எதிர்வரும் 18ஆம் திகதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் போது முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் ஏனைய எதிர்மனுதாரர்களான அமைச்சர்கள் அனந்தி சசிதரன், சிவநேசன் ஆகியோரையும் மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 18 ஆம் திகதிக்கு முன்னர் இந்த விவகாரத்தில் சுமுகமானதொரு நிலை எட்டப்படுமாயின், மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய கட்டளையைச் செயற்படுத்துவாராயின் வழக்குகளை மீளப் பெற்றுக் கொள்ளத் தயாராகவுள்ளதாக பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.

http://www.thinakaran.lk/2018/09/15/உள்நாடு/26973/டெனிஸ்வரனுக்கு-மீண்டும்-அமைச்சுப்-பதவி-வழங்க-வடக்கு-முதல்வர்-இணக்கம்

  • தொடங்கியவர்

வட மாகாண அமைச்சரவை விவகாரம் -முதலமைச்சர் தரப்பு இணக்கம்?

 
 
cv-2-680x405.jpg
 
 

வடக்கு மாகாண அமைச்சரவைச் சிக்கலைத் தீர்ப்பதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தரப்பு இணங்கிவரும் சாத்தியம் உள்ளது என்று தெரியவருகின்றது.

தற்போது அமைச்சரவையிலுள்ள ஒருவரை நீக்கி, அவருக்குப் பதிலாக டெனீஸ்வரனை  அமைச்சராக நியமிக்க முதலமைச்சர் தரப்பு இணங்கியுள்ளது என்று அறியமுடிகின்றது.

வடக்கு அமைச்சரவை தொடர்பில் மூன்று மாதங்களாக இழுபறி நீடித்துக் கொண்டிருக்கின்றது.

மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்காலக் கட்டளையை வடக்கு மாகாண முதலமைச்சர் நிறைவேற்றவில்லை எனத் தெரிவித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் 18ஆம் திகதி இந்த வழக்கு விசாரணை எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. அன்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராகக் குற்றப் பத்திரம் வாசிக்கப்படவுள்ளது.

குற்றப் பத்திரம் வாசிக்கப்பட்ட பின்னர், வழக்குத் தாக்கல் செய்த தரப்பால் கூட வழக்கை மீளப் பெற முடியாது. அதற்கு முன்னதாக 18ஆம் திகதிக்கு முன்னர் இணக்கப்பாடு எட்டப்படுவதன் ஊடாகவே நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலிருந்து முதலமைச்சர் தன்னை விடுவித்துக் கொள்ள முடியும்.

இந்தப் பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்துக் கொள்வதற்காக முயற்சிகளை வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஏற்கனவே ஆரம்பித்திருந்தார். வழக்குடன் தொடர்புடைய சகல தரப்புக்களையும் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.

நேற்றுக் காலையில் இந்த விவகாரத்தில் முன்னேற்றமான நிலைப்பாடு எட்டப்பட்டதாக இந்த விவகாரத்துடன் தொடர்புடைய தரப்புக்கள் ‘உதயனுக்குத்’ தெரிவித்தன.

‘தற்போதுள்ள அமைச்சரவையில் ஓர் அமைச்சரை நீக்கி அவருக்குப் பதிலாக டெனீஸ்வரனை அமைச்சரவையில் இணைத்துக் கொள்ளத் தயார்.

ஆனால் அதனை 18ஆம் திகதிக்கு முன்னர் செய்து முடிக்க முடியாது. 18ஆம் திகதி வழக்கு விசாரணையின்போது டெனீஸ்வரன் தரப்புச் சட்டத்தரணிகள், அன்றைய தினம் குற்றப் பத்திரம் வாசிக்காமல் பிறிதொரு தவணையை மன்றில் கோரவேண்டும்’ என்று முதலமைச்சர் தரப்பால் கூறப்பட்டுள்ளது.

‘முதலமைச்சரின் சட்டத்தரணி 18ஆம் திகதி மன்றில் தோன்றி, நீதிமன்றம் வழங்கிய இடைக்காலக் கட்டளை செயற்படுத்தப்படும் என்று தெரிவிக்க வேண்டும். அதன் பின்னர் குற்றப் பத்திரிகை பிறதொரு தவணையில் மன்றில் வாசிப்பதற்கு கோரிக்கை விடுவதற்குத் தயார்’ என்று டெனிஸ்வரன் தரப்புச் சட்டத்தரணிகளால் பதிலளிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கைக்கும் முதலமைச்சர் தரப்பு இணங்கிவருவதற்கான வாய்ப்புக்களே அதிகம் காணப்படுகின்றது என்று தெரியவருகின்றது.

https://newuthayan.com/story/10/வட-மாகாண-அமைச்சரவை-விவகாரம்-முதலமைச்சர்-தரப்பு-இணக்கம்.html

  • தொடங்கியவர்

பதவியைக் கொடுத்து உடன் பறிக்க யோசனை- வடக்கு ஆளுநர் நிராகரிப்பு!!

 
 
cmmmm-e1534419579844-1-780x405.jpg
 

வடக்கு அமைச்­ச­ர­வைப் பிரச்­சி­னை­யைத் தீர்ப்­ப­தற்­காக டெனீஸ்­வ­ர­னுக்கு அமைச்­சுப் பதவி வழங்கி உட­னேயே அவ­ரைப் பத­வி­யி­லி­ருந்து நீக்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரால் வடக்கு மாகாண ஆளு­ந­ருக்­குக் கடி­தம் மூலம் யோசனை தெரி­விக்கப்­பட்­டது.

ஆனால் ஆளு­நர் அதனை ஏற்­றுக் கொள்­ள­வில்லை என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

வடக்கு அமைச்­ச­ரவை தொடர்­பில் மூன்று மாதங்­க­ளாக இழு­பறி நீடித்­துக் கொண்­டி­ருக்­கின்­றது.

மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் வழங்­கிய இடைக்­கா­லக் கட்­ட­ளையை வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் நிறை­வேற்­ற­வில்லை எனத் தெரி­வித்து நீதி­மன்ற அவ­ம­திப்பு வழக்­குத் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

இந்த விட­யத்தை சுமு­க­மா­கத் தீர்ப்­ப­தற்­கு­ரிய முயற்­சி­கள் ஒரு­பு­றம் எடுக்­கப்­பட்டு வரு­கின்ற நிலை­யில், வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சில தினங்­க­ளுக்கு முன்­னர் வடக்கு மாகாண ஆளு­ந­ருக்கு கடி­தம் மூலம் யோசனை முன்­வைத்­துள்­ளார்.

பா.டெனீஸ்­வ­ர­னுக்கு அமைச்­சர் பதவி வழங்கி உட­னேயே அவரை அந்­தப் பத­வி­யி­லி­ருந்து நீக்­கு­வதே அந்த யோச­னை­யா­கும். வடக்கு மாகாண ஆளு­நர் அதனை நிரா­க­ரித்­துள்­ளார். நீதி­மன்­றம் இடைக்­கால கட்­டளை வழங்­கி­யுள்ள விட­யத்­தில் அவ்­வாறு செயற்­பட முடி­யாது என்று குறிப்­பிட்­டுள்­ளார்.

https://newuthayan.com/story/10/பதவியைக்-கொடுத்து-உடன்-பறிக்க-யோசனை-வடக்கு-ஆளுநர்-நிராகரிப்பு.html

இருவரும் இறங்கி வந்தால் நல்லது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.