Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கின் முதல்வராக தமிழர் ஒருவரே வருவார் ; ஸ்ரீகாந்தா

Featured Replies

கிழக்கின் முதல்வராக தமிழர் ஒருவரே வருவார் ; ஸ்ரீகாந்தா

 

 

கிழக்கின் முதல்வராக தமிழர் ஒருவரே வருவார் அதுவும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து   தான் வருவார் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார் .

srikantha.jpg

நேற்று மடடக் களப்பு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மாவட்ட  செயலக அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்துக்குள் தீர்வு இல்லை என்றால் நாங்கள் தீர்க்கமாக பேசி நல்லதொரு முடிவினை எமது மக்களுக்கு தெரிவிப்போம் ஆகவே மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

கிழக்கை பொறுத்த வரையில் தமிழ் கட்சிக்குல் அறுதி பெரும்பாண்மையை பெற்று கொண்டதில்லை ஆகவே இங்கு ஆட்சி அமைப்பது என்பது மிகவும் ஒரு பாரிய சவலாகத்தான் இருக்கும்.

எனவே எமது கட்சி மக்களின் நலன் சார்ந்து எதிர்கால நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் செல்வம் அடைக்கலநாதன் ,வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜி லிங்கம் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

http://www.virakesari.lk/article/40511

  • தொடங்கியவர்

தீர்வுத்திட்டம் வந்துவிடக்கூடாது என்பதில் தமிழர் தரப்பில் சில சுயநல சக்திகள் செயற்படுகின்றன – சிறிகாந்தா

 

IMG_4220-720x450.jpg

அரசியல் தீர்வினை வென்றெடுப்பதினை தடுப்பதில் சிங்கள தரப்பில் இருந்து மட்டுமல்லாமல் தமிழர் தரப்பில் இருந்தும் திரைமறைவில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக டெலோ அமைப்பின் பொதுச்செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையென்பது சம்பந்தனை மட்டும் தலைமைத்துவம் அல்ல. அதில் மூன்று அங்கத்துவ கட்சிகள் பிரதானமாக இருக்கின்றது. சம்பந்தன் கூட்டமைப்பின் தலைவராக இருந்தாலும்கூட கூட்டுப்பொறுப்பு இருக்கின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை தமிழ் மக்களுக்கு துரோகமிழைக்காமல் கொடுத்த வாக்குறுதியை மீறாமல் நேர்மையுடன் நம்பிக்கையுடன் செயற்பட்டுவருகின்றது.

85 வயதிலும் சம்பந்தன் தனது உடல்நிலையினையும் கருத்தில்கொள்ளாது அரசியலில் உள்ளார் என்பதனை அவரை விமர்சிப்பவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பில் தனியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையோ சம்பந்தனோ மாத்திரம் கையாண்டு தீர்வுகாணும் பிரச்சினையில்லை.

இந்த நாடு சுதந்திரமடைந்த காலம் தொடக்கம் இந்த பிரச்சினை இருந்துவருகின்றது. புரையோடிப்போயுள்ளது. இந்த பிரச்சினையின் விளைவாக பாரிய யுத்ததினை முழு நாடும் சந்தித்துள்ளது. இந்த பின்னணியில் ஒரு அரசியல் தீர்வினை காண்பது என்பதும், தென்னிலங்கையில் சிங்கள பௌத்த இனவாதம் என்பதும் இன்னும் தனது தீவிரத்தினை மட்டுப்படுத்தக்கூட இல்லாத நிலையில் தீவிரம் காணும் நிலையில் அரசியல் தீர்வு என்பது இலகுவானது அல்ல.

இந்த நிலையில் தமிழ் கட்சிகளிடையே ஒற்றுமை காணப்படவேண்டும். தமிழ் மக்களின் பேரால் அரசியல் நடாத்தும் கட்சிகள் ஒற்றுமைப்படவேண்டும்.  அந்த ஒற்றுமை இங்கு இல்லை. அனைவரும் கூட்டமைப்பினை கூறை கூறிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர்கள் இந்த பிரச்சினைக்கு தீர்வாக தங்களால் என்ன செய்யமுடியும் என்ன செய்து காட்டமுடியும் என்பதை இதுவரையில் தெரிவிக்கவும் இல்லை, தெரிவிக்க முயற்சித்ததும் இல்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது பாதையில் உறுதியுடன் பயணிக்கும். எமது தமிழீழ விடுதலை இயக்கம் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சி என்ற அடிப்படையில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை உள்ளடக்கும் வகையிலான அரசியல் தீர்வினை வென்றெடுப்பதற்கு ஏதுவாக தங்களது பங்களிப்பினை வழங்கும்.

அரசியல் தீர்வுத்திட்டம் இழுத்தடிக்கப்படக்கூடாது, இந்தஆண்டுக்குள் அது வழங்கப்படவேண்டும் என நாங்கள் வலியுறுத்திவருகின்றோம். இந்த முயற்சிகள் தோல்விகாணுமாக இருந்தால், இந்தஆண்டுக்குள் ஓரு தீர்வினை இந்த சிங்கள தேசியம் வழங்க நடவடிக்கையெடுக்காவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட்டாக தீர்மானிக்கும்.

கிழக்கு மாகாண முதலமைச்சராக தமிழர் ஒருவர் வரவேண்டும் என்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுதியாகவுள்ளோம். ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு தனியாக ஆட்சியமைக்கமுடியாத நிலையே கிழக்கில் உள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் நீண்டகால அனுபவம் உள்ளவர்கள், சிலர் போராட்ட அரசியல் களத்தில் இருந்து ஜனநாயக அரசியல் களத்திற்கு வந்து நீண்டகால அரசியல் அனுபவம் கொண்டவர்களாக உள்ளனர். எங்களுக்கு எதிராகவுள்ள சவால்களை நாங்கள் அறிவோம்.

மக்கள் எங்கள் மீது சுமத்தியுள்ள பொறுப்புகளை நாங்கள் நிறைவேற்றுவோம். ஒரு அரசியல் தீர்வினைவென்றெடுப்பதில் சிங்கள தரப்பில் இருந்து மட்டுமல்ல தமிழர் தரப்பில் இருந்தும் திரைமறைவில் இருந்து ஏவப்படுகின்ற எதிர்ப்புகளையும் நாங்கள் நன்றாக உணர்ந்துகொண்டுள்ளோம்.

ஒரு தீர்வுத்திட்டம் வந்துவிடக்கூடாது என்பதில் தமிழர் தரப்பிலும் சில சுயநல சக்திகள் செயற்பட்டுக்கொண்டுள்ளது. இந்த பின்னணியில் எங்கள் பொறுப்பினை நாங்கள் நிறைவேற்றுவோம்.

http://athavannews.com/தீர்வுத்திட்டம்-வந்துவி/

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா ஆமா அதுவும் ரெலோவில் இருந்து தான் வருவார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.