Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பனைமரக்காடு 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

சிட்னியில் இன்று யாழ் அரங்கில் ஈழமண்ணில் தயாரிக்கப்பட்ட பனைமரக்காடு என்ற திரைப்படத்தினைப்பார்த்தேன்.  எம்மவர்களின் படைப்புக்களை நாங்கள் பார்க்காவிட்டால் வேறு யார்பார்ப்பார்கள் , ஆதரிக்கவேண்டும் என்றநோக்கத்திற்காகவே சென்றேன்.  ஆனால் படம் பார்த்தபின்பும்  அப்படத்தில் வந்த பாத்திரங்கள்,நிகழ்வுகள் இப்பொழுதும் என் மனதினை விட்டு அகலாமல் இருக்கிறது.   ஈழமண்ணில் இப்படம் ராஜா திரையரங்கில் காலை 10.30  பிற்பகல் 2.30 , மாலை 6.00 மணிக்கு காண்பிக்கபட்டுக்கொண்டிருக்கிறது.  பூர்விகநிலத்திற்காகப் போராடும் எம்மவர்கள், சிங்கள சிறையில் இருந்து விடுதலையாகிவரும் முன்னாள் போராளியின் தற்போதையநிலமைகள்,  தற்போதைய தமிழ் அரசியல்வாதிகள் நாற்காலிக்காக வழங்கும் பொய்வாக்குறுதிகள்..என்பவற்றை அழகாகக் காண்பித்திருக்கிறார் இயக்குனர் திரு கேசவராஜன். இவரின் முந்தைய படைப்பான அம்மாநலமா என்ற திரைப்படத்தினை 10 வருடத்துக்கு முன்பு திரையரங்கில் பார்த்திருக்கிறேன். கட்டாயம் யாழ்கள உறுப்பினர்கள் பாருங்கள். உங்கள் கருத்தினைத் தாருங்கள்.

Edited by கந்தப்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

“பனைமரக்காடு” ?

 
43666890_10217743695489470_1464298739416956928_n.jpg
 
“அப்போது கிளி நொச்சி மண் ஶ்ரீலங்கா இராணுவத்திடம் வீழ்ந்த பின் அந்த மண்ணில் இருந்து வெளிக்கிட்ட கடைசி வாகனம் எங்களுடைய “நிதர்சனம்” இனுடையது. நிதர்சனம் பொறுப்பாளர் சேரலாதன், தளபதி ஒருவர் அவருடைய மெய்ப்பாதுகாவலர் ஆகியோருடன் பயணம் செய்து கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் வட்டக்கச்சி வீதி வழியாக வெளியேறிக் கொண்டிருந்தோம்.
வட்டக்கச்சி அருகே வரும் போது
“விடை கொடு எங்கள் நாடே” என்ற பாடல் றேடியோவில் வந்து கொண்டிருந்தது. அந்த இடத்திலே எல்லோரும் அழுது விட்டோம் தளபதி உட்பட.
அதில் வந்த “பனைமரக்காடே பறவைகள் கூடே” என்ற வரிகள் எனக்குச் சரியான தாக்கத்தை ஏற்படுத்தி விட்டது.
அதுவரை யாழ்ப்பாணத்தான் என்று பெருமை பேசிக் கொண்டிருந்த எனக்கு ஒரு பாடம் கற்பித்தது முள்ளைவாய்க்கால்.
மன்னர் முல்லைத்தீவு, கிளி நொச்சி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு என்று எல்லோரும் முள்ளிவாய்க்கால் என்ற குறுகிய நிலப்பரப்புக்குள் நின்று எந்தவித பாரபட்சம் பார்க்காது அந்த அந்த மக்கள் எல்லோருமே ஆளாளுக்கு உதவினார்கள்.
அதன் பின் இறுதிப் போர் வரை ஷெல்லடிகள், விமானத் தாக்குதல்கள் என்று சாவின் இறுதி வரை போய்த் தப்பிப் பிழைத்திருக்கிறேன். சாவதற்குச் சாத்தியமில்லாதவர்கள் கூட இந்த யுத்தத்தில் கொல்லப்பட்டிருக்க, இத்தனை இடர்களைக் கடந்து இறைவனோ, இயற்கையோ இவ்வளவு தூரம் என்னைக் காப்பாற்றியது எதற்காக என்ற சிந்தனை எழுந்தது.
என்னிடம் கொடுப்பதற்கு ஒன்றே ஒன்று தான் உள்ளது அது தான் கலை”
இவ்வாறு இயக்குநர் மற்றும் அன்புச் சகோதரர் திரு ந.கேசவராஜன் அவர்கள் தன்னுடைய “பனைமரக்காடு” படம் பிறந்த கதையை என்னோடு நேற்றுப் பகிர்ந்து கொண்டிருந்தார். அந்தப் பேட்டியின் முழு ஒலி வடிவம்
இதோ
அது ஒரு காலம் இருந்தது. எங்களுக்கான அடையாளம், எங்களுக்கான செய்திகள், எம் மக்களின் குரல்கள் இவற்றை முன்னுறுத்தியே எம் மக்களும், போராளிகளுமாகத் தாமே இசைத்துப், பாடி, இயக்கி, நடித்து, பேசி செய்தி ஒளிப் பகிர்வுகள், குறும்படங்கள்
“ஒளி வீச்சு” என்றும், பெருந்திரைப் படங்களாகவும் வெளிவந்து கொண்டிருந்தன. அந்தச் சூழலில் தாயகத்திலும் சரி, புலம் பெயர் சூழலிலும் சரி ந.கேசவராஜன் என்ற படைப்பாளியோடு அணுக்கமான உறவை ஏற்படுத்தி வைத்திருந்தன அவர் யாத்த ஈழத்துத் திரை இலக்கியங்கள். திசைகள் வெளிக்கும், அம்மா நலமா, கடலோரக் காற்று போன்ற படைப்புகளோடு எண்ணற்ற திரை முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்.
தொண்ணூறுகளில் இந்திய சினிமாவுக்கு நிகராக யாழ்ப்பாணம் ஶ்ரீதர் தியேட்டர், ஆரிய குளம் சந்தி எங்கும் பெரும் கட் அவுட் வைத்து அந்தப் படங்களைத் திரையிட்ட காலத்தை நினைத்துப் பார்க்கிறேன்.
நேர்மையாக எழுந்த ஈழத்துத் திரை முயற்சிகளை எங்கள் வரலாறு பேசும் ஆவணங்களாகவே கொள்வேன். இன்னும் பத்து இருபது ஆண்டுகள் கடந்து இந்தத் திரை இலக்கியங்களைப் பார்க்கும் போது எவ்வாறானதொரு போரியல் வாழ்வில் எம் மக்கள்
சாவுக்கு முகம் கொடுத்து வாழ்ந்து கழித்திருக்கிறார்கள் என்பதைக் காட்டக் கூடிய காலக் கண்ணாடிகள் அவை.
அதில் ந.கேசவராஜன் படைப்புகள் தனித்துவமானவை. ஈழத்துச் சினிமா இயக்கத்தில் அவரின் பெயரை விலத்தி எழுத முடியாத அளவுக்கு வரலாற்றில் ஒன்றாக இடம்பிடித்திருக்கிறார்.
ஆனால் நடப்பது என்ன?
இறுதி யுத்தம் முடிந்த காலத்தில் அதே இராணுவ நெருக்கடிகள், பாதுகாப்பு அச்சுறுத்தல்களையெல்லாம் சந்தித்து இன்று “பனைமரக்காடு” என்ற ஒரு படத்தை எடுத்து விட்டு எட்டு ஆண்டுகளாக அதைத் தலை மேல் சுமந்து கொண்டிருக்கிறார். இவ்வளவுக்கும் அவர் தயாரிப்பாளர் அல்ல. ஒரு படைப்பாளியாகத் தன்னுள் கருவுற்ற் அந்தப் படைப்பெனும் குழந்தையைத் தம் மக்களுக்குக் காட்ட வேண்டும் என்று அவர் எடுத்த முயற்சிகள், சவால்கள், சங்கடங்களை வைத்தே இன்னொரு சினிமா எடுக்கலாம். அந்தக் காலத்தில் ஒளிவீச்சு படங்களையெல்லாம் புலம் பெயர் மக்களுக்காகப் பொது வெளியில் காட்சியிடும் ஆரோக்கியமான சூழல் இருந்தது. இன்று அந்தச் சூழலைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை மீண்டும் எழுகிறது. எங்கள் படைப்பாளிகள் வழியாக ஈழத்தின் சொல்லப்படாத கதைகள் பேச வேண்டுமென்றால் அந்தப் படைப்புகளை வெளியிடும் பொருளாதார நெருக்கடிகளை அவர்களின் தலையில் ஏற்றக் கூடாது.
பனைமரக்காடு வழியாக இனியேனும் உலகத் தமிழருக்கான வலையமைப்பு பலமாக நிறுவப்பட்டு இம்மாதிரிப் படைப்புகள் அரங்கேற வேண்டும் என்ற ந.கேசவராஜன் அவர்களின் ஆதங்கத்தை மெய்ப்படுத்த நாம் எல்லோரும் இணைய வேண்டும்.
அவுஸ்திரேலியாவில் கடந்த சனிக்கிழமை மெல்பர்னில் திரையிட்ட போது “33 வருடங்களுக்குப் பின் என் தாய் மண்ணைப் பார்க்கிறேன்” என்று ஒரு அன்பர் நெகிழ்ந்தார்.
இதோ இந்த வார இறுதியில் சம காலத்தில் ஈழத்திலும் அவுஸ்திரேலியாவிலும் திரையிடப்படும் பனைமரக்காடு திரைப்படக் காட்சிக்கு இங்குள்ளோரும், அங்குள்ளோரும் சென்று பார்த்து ஆதரவை நல்குவோம்.
சிட்னியில் ஒக்ரோபர் மாதம் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 10 மணிக்கும், பின்னர் மாலை 5 மணிக்கும் என இரண்டு காட்சிகளாக திரையிடப்படவுள்ளது.
சிட்னி திரையிடலுக்கான facebook அழைப்பு
https://www.facebook.com/events/295077637943237/
யாழ்ப்பாணத்தில் ராஜா தியேட்டரில் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி காலை 10.30, முற்பகல் 2.30 மற்றும் மாலை 6.30 மணி காட்சிகளாகத் திரையிடப்படுகின்றது.
எங்களுக்கான சினிமாவை ஆதரிப்போம்.
43787621_10217743696169487_1919002554767769600_n.jpg
 

பனைமரக்காடு ? திரைப்பார்வை

போருக்குப் பின்னான வாழ்வியலில் ஈழத்துச் சமூகம் முகம் கொடுக்கும் பண்பாட்டுச் சிக்கல்கள், பூர்வீக நிலங்கள் மீதான வாக்குறுதிகள், நம் தமிழரின் பிரதிநிதிகள் என்று சொல்லக் கூடிய அரசியல் தலைமைகளின் வெற்று வாக்குறுதிகள் இவற்றை மையப்படுத்தி எழுந்திருக்கும் திரைச் சித்திரமே “பனைமரக்காடு”

ஒரு சிறந்த படைப்பாளி எனப்படுவர் தன் படைப்புகளின் வழியாகச் சமகாலத்தைப் பேசக் கூடிய காலக் கண்ணாடியாகத் திகழ வேண்டும். அதன் வழியாகப் பெறப்படும் படைப்புகளே காலம் தாண்டிப் பேசப்படக் கூடியவைகளாக அமையும் என்ற வகையில் திரு கேசவராஜன் அவர்களின் இயக்கமென்பது போரியல் வாழ்வில் அவர் சந்தித்து எடுத்த படைப்புகளோடு இப்போது பனைமரக்காடு வெளிப்படுத்தியிருக்கும் கதைப் பின்புலமும் அவரின் வாழ்வியலோடு இணைந்து அவர் தம் படைப்புலகமும் இயங்கி வருவதை மீள நிறுவியிருக்கிறது.

திடீர் இடப் பெயர்வுகளில் வழியாக அப்பன், பாட்டன், முப்பாட்டன் வழி வழியாக வந்த நிலங்களை விட்டு நகரும் மக்கள் மீளவும் திரும்பி அந்த நிலங்களுக்கு உரித்தானவர்களாக நிலை நாட்ட எவ்வளவு தூரம் போராட வேண்டியிருக்கிறது, தம் மக்களுக்காக, தம் நாட்டுக்காகப் போராடி வதை முகாம்களில் இருந்து மீளும் போராளிகளின் இன்றைய நிலை என்ன? ஒரு கட்டுக் கோப்பாக நெறி முறையோடு வாழ்ந்த சமூகத்தில் புரையோடியிருக்கும் போதைப் பழக்கத்தால் எழும் சீர்கேடுகள் இவற்றையெல்லாம் விலாவாரியாகக் காட்சியமைப்புகளின் வழி நகர்த்தியிருக்கிறது பனைமரக்காடு. ஒரு முழு நீள சினிமாவாக அமைந்திருப்பதால் ஒரு குறிப்பிட்ட சிக்கலை மட்டும் மையப்படுத்தாது விரிவானதொரு பார்வையில் விரிகிறது இந்தப் படம்.

பனைமரக்காடு திரைப்படத்தின் அத்தனை கதை மாந்தர்களும் தம் பிரதேச வழக்கில் இருந்து வழுவாத மொழி பேசுவதால் அந்நியப்படாத நம் ஈழத்தமிழ் பேச்சு வழக்கு வெகு சிறப்பாகக் கையாளப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தை வணிக நோக்கிலான சமரசத்துக்கு இடம் கொடுக்காததால் உரையாடல்களில் இருந்து பாடல்கள் வரை ஈழத்துத் திரை மொழிக்குண்டான பக்குவத்தோடு பயன்பட்டிருக்கின்றன. படத்தின் ஓட்டத்துக்கு ப்ரியனின் இசையமைப்பு பெரும் பலம். குறிப்பாக வஞ்சகர்களின் நகர்வுகளில் ஒலிக்கும் பின்னணி இசை படம் முடிந்த பின்னாலும் நினைவில் தங்கி ஒலியெழுப்புகிறது. படத்தின் இரண்டு பாடல்களையுமே நாம் எப்படி வாழ்ந்திருந்தோம், எதைத் தொலைத்தோம் என்ற ஏக்கம் தொனிக்கும் வரிகளாக ஷாலினி சார்ள்ஸ் கொடுத்திருக்கிறார். அவையும் தேவை கருதிய பட ஓட்டத்துக்கே துணை புரிந்திருக்கின்றன.

நம்முடைய தாயக மண்ணில் காலடி வைத்ததும், அங்கு மட்டுமே கேட்கக் கூடிய இயற்கைச் சூழல் ஒலிகள், பறவைகளின் ரீங்காரம் போன்றவற்றைக் கொண்டே பின்னணி இசையை நகர்த்தியிருப்பது படத்தின் யதார்த்தத்தை அழகுபடுத்துகிறது.

இந்தப் படம் தயாரிக்க இரண்டு கோடி வரை போயிருக்குமே? என்னு சிங்கள இயக்குநர்கள் கேட்ட போது அதில் கால்வாசி கூட வராது என்று தான் பதிலுக்குச் சொன்னதாக பேட்டியில் நினைபடுத்திப் பேசியிருந்தார் இயக்குநர் கேசவராஜன். படத்தைப் பார்க்கும் போது அவ்வாறானதொரு பிரமிப்பு எழாமலில்லை. குறிப்பாக போர் மூண்ட சூழலில் எழும் வெடி குண்டுக் கணைகளின் காட்சி அமைப்புகள் உள்ளிட்ட சிறப்பு ஒளி வெளிப்பாடுகள். இங்கே துஷிகரனின் பங்கையும் மெச்ச வேண்டும்.

பனைமரக்காடு படத்தில் யாரை உயர்த்திச் சொல்வது? யாரை விலக்குவது?

மண்ணின் மூத்த மைந்தனாக வைராக்கியத்தோடு தன் நிலத்தில் இருந்து எழும்பாத மாமனிதர் அரசு தொடங்கி, சமூகத்தால் ஒதுக்கப்பட்டு இயலாமையால் குமுறும் நாயகன், கழுகுகளின் கண்களில் இருந்து தப்பி வாழ எத்தனிக்கும் நாயகி, வரட்டுக் கெளரவத்துக்காகத் தன் சொந்தத்தைத் தொலைத்துப் பின் தன் பூர்வீக மண்ணுக்காகப் போராடும் நாயகியின் தந்தை முல்லை யேசுதாசன், நிகழ்கால அரசியல்வாதிகளையும் அவர்களின் அடிப்பொடிகளையும் ஞாபகப்படுத்தும் வில்லன்கள் , அந்தப் பல்லு மிதப்பான நாயகனின் அம்மா , சமூகம் வஞ்சித்தாலும் நானிருக்கிறேன் என்று தோள் கொடுத்து வேலை கொடுக்கும் குணசித்திரம் என்று நீண்டு கொண்டே சொல்லிக் கொண்டே போகும் பாத்திரங்கள் எல்லோருமே அவரவர் பாத்திரமுணர்ந்து மிளிர்ந்திருக்கிறார்கள். இதுவரை திரையில் பாத்திராத முகங்கள் எல்லாம் இந்தப் படைப்பின் வழியாக ஒரு சினேகபூர்வமான தொடர்பைக் கொடுத்ததாக உணர்கிறேன்.

அதிலும் அந்த நாயகியின் அச்சொட்டான குழந்தை முகத்தில் ஒரு சிறுமியை எப்படித் தேடிப் பிடித்தார்கள் என்று வியந்தேன். நாயகியின் மகளாக நடிக்கும் சிறுமியும் இயல்பான நடிப்பில் கவர்கிறார்.

உட்புறப் படப்பிடிப்பில் இன்றைய சூழலில் இடம் பெயர்ந்து தம் நிலபுலன்களை இழந்து வாழும் மக்களின் ஓலைக் கொட்டில் வாழ்வியல் அப்படியே உள்ளதை உள்ளவாறு காட்சிப்படுத்தியது போல, வெளிப்புறப் படப்பிடிப்பில் வேலிகளும், பற்றைக்காடுகளும், நீரோடையுமாக விரிகிறது. இந்த மாதிரி ஒரு வறண்டதொரு சமுதாயச் சிக்கலைத் திரை வடிவம் கொடுக்கும் போது காட்சி வடிவம் எவ்வளவு தூரம் முக்கியமானது என்பதற்கு இவை சான்று பகிர்கின்றன. பனைமரக்காடு படத்தை அது சொல்ல வந்த செய்திக்காக மட்டுமன்றி இன்றைய ஈழத்தமிழர் தாயகத்தின் வாழ்வியலையும் கண்டு தரிசிக்கவும் ஒரு வாய்ப்பு.

நமது ஈழத்தமிழ் திரைக்கெனத் தனி இலக்கணமுண்டு. அதை எதனோடும் பொருத்தி ஒப்பிட்டு ரசிக்க முயற்சிக்கக் கூடாது. அவ்வாறானதொரு ஒப்பிடல் எவ்வளவு தூரம் நாம் வாழ்ந்த வாழ்க்கையோடு இன்னொரு சமூகத்தோடு ஒப்பிட்டு நோக்கும் முரணுக்கு நிகரானது. அந்த வகையில் “பனைமரக்காடு” ஈழத் தமிழ் சினிமாவுக்கான தனித்துவமான நெறியைக் கைக் கொண்டிருக்கும் சிறப்பானதொரு படைப்பு.

கானா பிரபா

14.10.2018

http://www.madathuvaasal.com/2018/10/blog-post_50.html

  • கருத்துக்கள உறவுகள்

சந்தர்ப்பம் கிடைக்கும்போது இந்தப் படம் பார்ப்பேன்.....!  tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

14.10.2018

  1. img_2248.jpg

S.S.Complex பருத்தித்துறையில் 

27-10-2018  பிற்பகல் 2.30,  மாலை 6.30

28-10.2018 முற்பகல் 10.30, பிற்பகல் 2.30,  மாலை 6.30

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.